கற்பூர முல்லை Episode 4

Advertisement

மலர் 4


அன்று தேன் தமிழுக்கு அலுவலகத்தில் அதிகபடியான வேலை. அதற்கிடையே எம். டி சுந்தரிடமிருந்து அழைப்பு வரவே அவன் ரூமிற்குள் சென்றாள். மே ஐ கம் இன் சார் என்று கேட்கவே எஸ் என்று பதில் வரவும் உள்ளே நுழைந்தாள். கோப்பிலிருந்து தலையை நிமிர்த்தி சிட் டவுன் என்று கூறினான். அவளும் அமர்ந்தாள்.

நமக்கு சென்னையில் ஒரு பிரான்ச் இருக்கிறது தெரியுமல்லவா...? என்று கேட்டான். ஆமாம் சார், உங்களுடைய பிரெண்ட் திபக் தானே அதை நிர்வகித்து வருகிறார் என்றாள். ஆமாம் தற்போது அவன் பாரின் சென்று செட்டிலாக உள்ளதால் அதை நிர்வகிக்க திறமையான ஆள் தேவைபடுகிறது என்றான். அப்படியா சார் என்றவள் இப்போது என்ன பண்ணலாம் என்று கேட்டாள். எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது என்றான். என்ன சார் என்று கேட்டவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நீங்கள் ஏன் அங்கு சென்று அதை நிர்வகிக்க கூடாது...? என்று கூறினான். ஒரு நிமிடம் தமிழுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. சென்னை செல்வது, அங்கு பொறுப்பை ஏற்று நடப்பது எல்லாம் தமிழுக்கு ஒரு பிரச்சினையே அல்ல ஆனால் காயத்ரியை பிரிவது என்பது மிகவும் கடினமான காரியம். சுந்தர் இப்படி ஒரு இடியை தூக்கி தலையில் போடுவார் என்று தமிழ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. என்ன சார்... நான் எப்படி அங்கு செல்வது..... என்று தடுமாறியவளை இடைமறித்தான்.

அங்கு நீங்கள் ஏற்று நடத்துவது தலைமை பொறுப்பு என்பதால் அதற்கு புதியதாக ஓர் ஆளை நியமனம் செய்ய முடியாது. அனுபவம், திறமை, நம்பிக்கை இதெல்லாம் இருக்க வேண்டும். கம்பெனி நலன் கருதியே உங்களை அனுப்புகிறேன் அது மட்டுமல்லாது உங்களை அனுப்ப வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல என் அப்பாவின் விருப்பமும் கூட என்றான். அவன் சொல்லி முடிக்கவும் அறைகதவு திறக்கவும் சரியாக இருந்தது.


அறைக்கதவை திறந்து கொண்டு வரதராஜன் உள்ளே நுழைந்தார். உடனே மரியாதை நிமித்தமாக இருவரும் எழுந்து நின்றனர். தந்தை தான் என்றாலும் மரியாதையில் தவறுவதில்லை சுந்தர். என்னப்பா.... விஷயத்தை சொல்லிட்ட போல இருக்கே...? என்றார். சுந்தர் ஆமாம் டாடி என்றான்.


வரதராஜனுக்கு தமிழ் மேல் அளவில்லாத அன்பு உண்டு. தமிழை இன்னொரு மகள் போல் நினைப்பார். அவர் வீட்டு விசேஷங்களில் தமிழுக்கு எப்பொழுதும் ஸ்பெஷல் அழைப்பு உண்டு. சுந்தரின் மனைவி உமா கூட தமிழிடம் அலுவலகத்தில் வேலை செய்கிறவள் தானே என்கிற பேதம் இல்லாமல் பழகுவாள். குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.


என்னம்மா..... அவன் எல்லாம் சொன்னானா....? என்று கேட்டார். தமிழ், ஆமாம் என்று உரைக்கவே உன் விருப்பம் என்னவென்று கேட்டார். தமிழ் கொஞ்சம் தடுமாறவே ஒன்றும் அவசரமில்லையம்மா..... உன் பதிலை மெதுவாக கூறு என்றார். சரி என்று விடைபெற்று தன்னுடைய கேபினுக்கு வந்தவளுக்கு அன்று வேலையே ஓடவில்லை. இதை சொன்னால் காயூ ஒப்புக் கொள்வாளா......என்கிற யோசனையே மனதில் ஓடியது.

அலுவலகம் முடிந்த பிறகு காயூ அபிஸ்க்கு போக வேண்டும் என்று தீர்மானித்து கொண்டாள். அலுவலகம் முடிந்து கிளம்பும் முன் கைலாஷ் வந்தான். எம். டி அறைக்கு சென்று வந்ததிலிருந்து தமிழ் முகம் வாடி இருந்ததைக் கண்டு, ஏன் டல்லா இருக்கீங்க......? என்று கேட்டான். அவனிடம் நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் கூறினாள். உடனே அவன் அச்சச்சோ...... நீங்கள் போனால் நான் யாரிடம் பாடம் கற்பது என்று கிண்டலாக கேட்டான். உடனே உங்கள் ஆசை தோழியிடம் இந்த விஷயத்தை சொல்லியாச்சா என்று கேட்டான் இல்லையென்று இவள் தலையாட்டவே ம்ம்ம்.... என்று இழுத்தான்.


இப்பொழுது என்ன செய்ய போகிறீர்கள்....? என்று கைலாஷ் வினவ, முதலில் சென்று காயூவை பார்க்க வேண்டும் என்று கூறினாள். சரி வாங்க நானும் வருகிறேன் என்றான். இருவரும் கைலாஷின் பைக்கில் ஏறி புறப்பட்டனர்.

தேன்தமிழ் யாருடனும் பைக்கில் போவது கிடையாது ஆனால் கைலாஷ் உடன் மட்டும் செல்வாள். அவனும் யாரையும் அவ்வளவு எளிதில் ஏற்றிவிட மாட்டான். தேன் தமிழுக்கு மட்டும் எந்த கட்டுப்பாடும் கிடையாது. இருவரும் வரைமுறையோடு பழகுவதால் யாரும் தவறாக நினைக்க வாய்ப்பு இல்லாமல் போனது.

காயத்ரியின் அப்பா அழகு சாதன பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் கம்பெனி தயாரிப்புகளுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உண்டு. நிறுவனத்தை நல்ல முறையில் நடத்தி வருவதால் இன்று அந்த துறையில் கொடி கட்டி பறக்கிறார்.

படிப்பு முடிந்ததும் காயத்ரி தன்னுடைய கம்பெனியிலேயே வேலைக்கு வருமாறு அழைத்தும் தேன் தமிழ் மறுத்துவிட்டாள். சொந்த முயற்சியில் வேலை தேட வேண்டும் என்பது அவளின் விருப்பம்.

இருவரும் காயத்ரியின் கம்பெனிக்கு வந்தனர். தமிழை அனைவருக்கும் தெரியுமாதலால் சிறு புன்னகையுடன் அவளை கடந்தனர். நேராக காயூவின் அறைக்குள் சென்றனர். அங்கே லேப் டாப் ஐ தட்டிக் கொண்டு இருந்த காயத்ரி நிமிர்ந்து இவர்களை கண்டதும் வாட் எ சர்ப்ரைஸ்....! என வியந்தாள்.

மேடம் சும்மா வரமாட்டிங்களே.... என்ன விஷயம் என கேட்டாள். உடனே வந்திருந்த விஷயத்தை தமிழ் சொல்லவும் காயத்ரி க்கும் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. அவளது முக குறிப்பிலிருந்து காயூவிற்கும் இது பிடிக்க வில்லை என அறிந்தாள். காயத்ரியும் நீ என்ன முடிவு எடுத்து இருக்கிறாய் என கேட்கவே அவள் தெரியவில்லை என்றாள். என்ன செய்வது என்று இருவருக்குமே குழப்பம். இதற்கிடையே கைலாஷ் பேசாமல் நாளை இருவரும் எம். டி யிடம் பேசினால் என்ன? என்று கூறினான். இருவருக்குமே அது சரி என்று பட்டது.

மறுநாள் முதல் வேலையாக தமிழின் அலுவலகத்திற்கே வந்துவிட்டாள் காயத்ரி. நேராக எக்ஸ் கியூஸ் கேட்டுவிட்டு சுந்தர் அறைக்குள் சென்றாள். அவளை பார்த்து என்ன காயத்ரி மேடம் நலமா....? என விசாரித்தான். அதெல்லாம் அப்புறம் இருக்கட்டும் தோழிகள் இருவரையும் பிரிப்பது நியாயமா.....? என கேட்டாள். அச்சோ...... நான் பிரிக்கவில்லையே என சிரிப்பை அடக்கியவாறே கூறினான். கூறிவிட்டு போனில் தமிழை அழைத்தான். தமிழ் அங்கு வந்ததும் காயத்ரியை கண்டு ஆச்சரியமாகி போனாள். காயூ வருவாள் என்று தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை.

இப்பொழுது சுந்தர் பேச ஆரம்பித்தான். காயத்ரி மேடம், ஒரு கம்பெனியின் தலைமை பொறுப்பு என்பது எவ்வளவு முக்கியமானது என்று உங்களுக்கே தெரியும். அதில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திறமையான நபரை அமர்த்த வேண்டும் என்பதும் உங்களுக்கு தெரியாதது அல்ல. உங்களை போன்று உங்கள் தோழியும் ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் பிரகாசிக்க வேண்டாமா....? அவரின் திறமையை மெருகேற்ற இது ஒரு நல்ல வாய்ப்பல்லவா.... என்று எடுத்து கூறினான்.

அவன் சொன்னது அனைத்தும் காயூவிற்கு நியாயமாக பட்டது. உடனே சரியென்று ஒப்புக் கொண்டாள். தமிழும் அரைமனதாக சம்மதித்தாள். சென்னை செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் தானே செய்வதாகவும் அங்கு தங்குவதற்கும் உணவுக்கும் கூட தானே பொறுப்பு ஏற்பதாக கூறினான். சரியென்று தோழிகள் இருவரும் வெளியில் வந்தனர்.

தொடரும்

இனிமேல் வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கற்பூர முல்லை விரியும்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஞாயிற்றுக்கிழமைகளில் அப்டேட் தருவது சரிதான்
ஆனால் அப்டேட் சின்னதாக இருக்கே
குட்டியா அப்டேட் கொடுப்பதால் வாரத்துக்கு மூன்று அப்டேட்ஸ் கொடுக்க முயற்சி செய்யுங்கள், ஜீவிதா டியர்
 
ஞாயிற்றுக்கிழமைகளில் அப்டேட் தருவது சரிதான்
ஆனால் அப்டேட் சின்னதாக இருக்கே
குட்டியா அப்டேட் கொடுப்பதால் வாரத்துக்கு மூன்று அப்டேட்ஸ் கொடுக்க முயற்சி செய்யுங்கள், ஜீவிதா டியர்
நன்றி சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top