கற்பூர முல்லை Episode 35

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 35

தமிழின் உடல்நிலை வேகமாக முன்னேறியதில் அவள் மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தாள். அலுவலக வேலையே பார்த்துக் கொண்டு இருந்த பொழுது அங்கு வந்து சேர்ந்தான் அகிலன். அவனைப் பார்த்ததும் வாங்க சார்....என்ன இந்த பக்கம்....? என்று கேலியாக கேட்டாள்...
அதற்கு அவன் என் உயிரை பார்க்க வந்தேன் என்று கூறினான். போதும் போதும்.....சொல்லுங்க எதுக்கு வந்தீங்க என்று கேட்டாள்..
சரி சரி....என்றவாறு ஈவினிங் ப்ரியா...
கொஞ்சம் வெளியே செல்ல வேண்டும் என்று கூறினான்.

ஃப்ரீ தான்.... சொல்லுங்க.....எங்கே போக வேண்டும்.....? என்று கேட்டாள்..
ஏன்? மேடம் எங்கே என்று சொன்னால் தான் வருவீர்களா....?என்று கேட்டான்
அதற்கு அவர் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை எங்கே என்று சொன்னால் அதற்கு தகுந்தவாறு வரலாம் அல்லவா? அதற்கு தான் கேட்டேன் என்று கூறினாள்.

இப்படியே வந்தால் கூட என் தமிழ் அழகுதான். அதனால் இப்படியே வந்தால் போதுமானது என்று கூறினான். போதும் . ரொம்ப ஐஸ் வைக்காதீங்க.... என்று கூறினாள்.

சரி இதை சொல்லத்தான் வந்தேன் நான் கிளம்புகிறேன் என்றவாறு கிளம்புகிறேன். இதை சொல்லவா வந்தீர்கள்? இதை போன்லயே சொல்லி இருக்கலாம் அல்லவா? என்று கேட்டாள் அவள். போனிலேயே சொல்லி இருக்கலாம் தான் ஆனால் போனில் சொன்னால் தேவி தரிசனம் கிடைக்காதே! என்று ஏக்கமாய் கூறினான்.

அவள் சிரிக்கவும், சரி என்றவாறு அவன் விடை பெற்றான்.

சொன்ன மாதிரியே மாலையில் வந்து சேர்ந்தான் அகிலன். அவன் வந்த நேரம் அலுவலகம் முடிந்திருந்தது. அலுவலகத்தில் யாரும் இல்லை.

அவள் அறையில் நுழைந்தவன், அவள் பைலை பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு இன்னும் வேலை முடியவில்லையா..... என்று கேட்டான்.
முடிந்துவிட்டது ஒரு ஐந்து நிமிடம் மட்டும் என்று கூறியவாறு பார்த்துக் கொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்தாள்...

சரி போலாமா..... என்று கேட்டான். இருங்க வாஷ் ரும் போய்ட்டு வருகிறேன் என்று கூறி சென்றாள். வாஷ் ரும் சென்றவள் பிரஷ் ஆகி வெளியே வந்தாள்.

அதைப் பார்த்து அகிலன் சட்டென அவள் பக்கத்தில் வந்து ஏற்கனவே என் தமிழ் அழகுதான். இப்பொழுது இன்னும் அழகு என்று கூறினான்.

அவ்வாறு கூறியவாறு கையில் இருந்த கவரை அவளிடம் நீட்டினான்.அப்பொழுதுதான் அவள் கவனித்தாள் . அவள் கையில் கவருடன் வந்திருப்பதை. இது என்ன என்று கேட்டாள். என்ன என்று பிரித்துப் பார்த்தால் தானே தெரியும் என்று கூறினான் அவன் அதைக் கேட்டதும் சிரித்துக் கொண்டே கவரை பிரித்தாள்.
அதில் அழகிய தங்க நெக்லஸும் மல்லிகை பூவும் இருந்தது.

எதற்கு இதெல்லாம்....என்று கேட்டாள் . இது எல்லாம் என் அழகு தேவதைக்கு என்று கூறினான் அவன்.

ம்ம்ம்ம்ம் ‌..... சரி நீங்களே இதை அணிவித்து விடுங்கள் என்று கூறி அதை அவனிடமே கொடுத்தாள். அவனும் தங்க நெக்லஸை அணிவித்து விட்டான். அவள் அணிந்திருந்த சேலைக்கும் அந்த நெக்லஸுக்கும் மிகவும் பொருத்தமாக இருந்தது. இப்பொழுது தமிழ் இன்னும் அழகாக தெரிந்தால் அவனுக்கு.
அதனுடனே மல்லிகைப்பூ அவளை மேலும் அழகாக்கியது.

அவள் அழகில் மயங்கியவன் அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவளை தன் மீது சாய்த்தான். தன் மீது சாய்த்துக் கொண்டவன் அவளை நெற்றியில் அழகாக முத்தமிட்டான்.

உடனே அவள் ஆரம்பித்து விட்டீர்களா... போகும் நேரத்தில் இது என்ன.... என்று கேட்டவாறு அவனை விளக்கினாள். என்ன பண்ணுவது...?என் தேவதை அவ்வளவு அழகாயிற்றே... என்று கூறினான்....
சரி போதும் வாங்க போகலாம்.... என்று அவள் கூறவே இருவரும் கிளம்பினர்.

அவன் வண்டியில் இருவரும் கிளம்பினர்.
இதுவரை அவள் பார்த்தறியா ஒரு வீட்டின் முன் வண்டி நின்றது.

வண்டியை நிறுத்திவிட்டு அவளை இறங்கு என்றான். அவளும் இது யார் வீடாக இருக்கும்...? என்ற சந்தேகத்தில் இறங்கினாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top