கற்பூர முல்லை Episode 23

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 23
அடுத்த நாள் காலையிலேயே பவித்ரா தமிழுக்கு கால் செய்தாள். என்ன பவி ,காலையிலேயே கால் செய்து இருக்கிறாய், ஏதாவது விஷயமா என்று கேட்டாள் தமிழ். ஆமா விஷயம் தான் என்றாள் ‌. நாளை ஞாயிற்றுக்கிழமை. குமார் வேறு வீட்டில் இருக்க மாட்டார். குழந்தையை வைத்துக்கொண்டு நாளை முழுவதும் தனியாக இருக்க வேண்டும். கொஞ்சம் வர முடியுமா எனக்கு உதவியாக இருக்கும் என்று கேட்டாள்.

தமிழும் சற்றும் யோசிக்காமல் சரி வருகிறேன் என்று கூறினாள். நீ வேறு ஞாயிற்றுக்கிழமை தான் வீட்டில் இருப்பாய்...எனக்காக வருவதில் கஷ்டம் இல்லையே என்று கேட்டாள். அதெல்லாம் ஒன்றும் இல்லை நான் கட்டாயம் வருகிறேன் என்று கூறினாள்...

இதை குமாரின் முன்னாடியே பேசினாள்... அவனும் இவள் ஏதோ பிளான் செய்கிறாள் என்று நினைத்துக் கொண்டான்.

காலையில் டிபனை முடித்துக் கொண்டு பவி என் வீட்டுக்கு சென்றாள். அங்கே பவையின் மீது யாரும் இருக்கவில்லை. பவி மட்டுமே பிள்ளையை தூங்க வைத்துக் கொண்டு சமையல் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவள் சென்றவுடன் வரவேற்று உபசரித்தாள். அவள் சமையல் செய்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தவுடன் ஏதாவது ஹெல்ப் வேண்டுமா பவி என்று கேட்டாள். இல்லை இல்லை அதெல்லாம் வேண்டாம் நான் முடித்து விட்டேன் என்றாள் அவள்...

அப்புறம் ....என்ன.... திடீரென்று என்னை வரச் சொல்லி இருக்கிறாய் என்றாள் தமிழ்... அதெல்லாம் ஒன்றும் இல்லை சும்மாதான் என்றாள் பவி...

காயத்ரிக்கு போன் செய்தாயா? நன்றாக இருக்கிறார்களா என்று கேட்டாள் பவி... நன்றாக இருக்கிறாள் என்று கூறினாள்.

அனேமாக அடுத்த மாதம் கோயம்புத்தூர் போக வேண்டி இருக்கும் ஏனென்றால் அங்கு இன்னொரு பிரான்ச்சும் புதிதாக தொடங்க வேண்டி இருக்கிறது என்றாள் தமிழ்...

வாவ்.... சூப்பர் என்றாள் பவி..

அப்புறம்.... உனக்கும் அண்ணாவுக்கும் என்ன பிரச்சனை என கேட்டாள் பவி.... அது வந்து.... என்று ஏதோ சமாளிக்க பார்த்தாள் தமிழ்... எதுவும் சமாளிக்க வேண்டாம் உண்மையை மறைக்காமல் சொல் என்றால் பவி....

ஏன்... காயத்ரி மாதிரி ஒரு தோழியிடம் தான் உண்மையை சொல்வாயா? என்னை மாதிரி ஒரு தங்கை இடம் சொல்ல மாட்டாயா? என்றாள் பவி....
இவர் திடீரென்று இப்படி கேட்பாள் என்று தமிழ் எதிர்பார்க்கவே இல்லை....
அவள் உடனே அப்படியே எல்லாம் ஒன்றும் இல்லை பவி. உன்னிடம் சொல்வதற்கு என்ன என்று கூறி சொல்லலானாள்.

உன் அண்ணா என்னிடம் வந்து காதலை சொன்னதும் மற்ற பெண்களை போல் என்னால் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை... ஏனென்றால் எனக்கு என்று யாரும் இல்லாத போது என் சொந்தம் என்று யாரை அவருக்கு காண்பிப்பது.... அதனால்தான் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்றாள் தமிழ்...

என் தமிழ் இதெல்லாம் ஒரு காரணமா ....?காக்கா... குருவி எல்லாம் என்ன சொந்த பந்தம் வைத்துக்கொண்டா காதலித்துக் கொண்டிருக்கிறது என்று கேட்டாள்..
அதற்கு தேவை இல்லை தான் ஆனால் மனிதருக்கு தேவையாய் இருக்கிறது...

சரி என்றாவது ஒருநாள் அண்ணா உன்னிடம் வந்து உன் சொந்த பந்தங்களை கேட்டு இருப்பாரா என்று கேட்டாள் பவி... கண்டிப்பாக இல்லை ஆனால் என் மனசாட்சி தான் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது....

சரி அப்பொழுது உன் மனதுக்குள் அண்ணா மேல் இருக்கும் காதலை இல்லை என்று சொன்னால் மட்டும் உன் மனசாட்சி உறுத்தாதா என்ன.... உனக்கு சொந்த பந்தம் இல்லை என்ற காரணத்திற்காக உன்னை தேடி வரும் இத்தனை சொந்தங்களை ஏன் இழக்கிறாய் தமிழ் என்றாள்.... ஏன் உனக்காக நாங்கள் எல்லாம் இல்லையா...

அண்ணா மேல் காதல் இருந்தும் நீ உன்னையும் கஷ்டப்படுத்தி கொண்டு அவரையும் ஏன் கஷ்டப்படுத்துகிறாய் தமிழ் என்று கேட்டாள் பவி..

திரும்பவும்.... பவித்ரா பேசினாள்...உனக்கு சொந்த பந்தங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை முக்கியமே அல்ல தமிழ். உன்னை தேடி வரும் சொந்தங்களுக்கு நீ எவ்வளவு மதிப்பளிக்கிறாய் என்பதுதான் வாழ்க்கை....

எனக்குத் தெரிந்து கண்டிப்பாக அண்ணா உன்னை விடுத்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றாள்...

ப்ளீஸ் தமிழ்.... இல்லாத சொந்த பந்தங்களை நீ நினைக்காதே....உன்னை தேடி வரும் இத்தனை சொந்த பந்தங்களை ஏற்றுக் கொள்ள பழகு... என்று கூறினாள் பவி... இருக்கிற சொந்த பந்தங்களுக்கு உணர்வு கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்றும் கூறினாள்...

அவள் கடைசியில் கூறிய வார்த்தை தமிழை யோசிக்க செய்தது...

உண்மையிலேயே நான் அகிலனை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன் பவி. என்னை தேடி வரும் போதெல்லாம் உதாசீனப்படுத்தி, அவன் காதலை ஏற்க மறுத்து அதை நிராகரித்து மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன் என்று நொறுங்கி அழுதாள். உண்மையிலேயே அவர் மனம் காயம் அடைந்ததை விட பல மடங்கு என் மனம் காயம் அடைந்து இருந்தது..

இதெல்லாம் அவர் மேல் காதல் இருக்க போய்தான் இவ்வளவு தூரம் உன்னையும் கஷ்டப்படுத்தி இருக்கிறாய் என்றாள் பவி..

தமிழ் பதில் ஏதும் சொல்லாமல் கண்ணீரை மட்டுமே பதிலாக கொடுத்தாள்...

சரி விடு கண்டிப்பாக உன் காதல் நிச்சயம் கை கூடும்...

அது எப்படி பவி.... என்னை தேடி வந்த காதலை உதாசீனப்படுத்தி விட்டேன். நான் தேடும் போது அது எப்படி கிடைக்கும் என்றாள்...

நிச்சயமாய் கிடைக்கும் தமிழ் என்றாள்...

அது எப்படி என்ற தமிழின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தமிழுக்கு பின்னாடி கை காட்டினாள்...

அவள் காட்டிய திசையில் திரும்பி பார்த்தபோது அகிலன் கண்ணீரோடு நின்றிருந்தான்... அவன் பின்னாலேயே குமாரும் நின்று இருந்தான்...

இவ்வளவு காதலை வைத்துக் கொண்டா என் மேல் அப்படி எரிந்து விழுந்தாய் என்று கேட்டான் அகிலன்...

அடுத்த நிமிடம் அகிலனின் அணைப்பில் இருந்தாள் தமிழ்... அவள் கண்ணீர் அவன் நெஞ்சை ஈரமாக்கியது.

அந்த நொடி குமாரும் பவியும் இவர்களுக்கு தனிமை கொடுத்து அங்கிருந்து சென்று விட்டனர்...

போதும் தமிழ் இனிமேல் உன் கண்களில் இருந்து கண்ணீர் வரக்கூடாது என்றவாறு கண்களை துடைத்துக் விட்டான் அகிலன்...

அவள் சாரி அகில் என்றாள்...

ஏய்....நீ என் காதலை உணர்ந்து கொண்டாயே அதுவே போதும் என்றவாறு இன்னும் அவளை இறுக்கி கொண்டான்.

பிறகு கண்களை துடைத்தவாறு பவியை தேடினாள்...

இதெல்லாம் பவியின் ஏற்பாடு தான் இதற்கு பவிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றான் அகிலன்.

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றவாறு அங்கே வந்தார்கள் பவியும் குமாரும்....

நான் யார் என்று தெரியாமல் தமிழ் செய்த உதவிக்கு முன் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே அல்ல என்று கூறினாள் பவி...

சரி இருவரும் கை கழுவி விட்டு வாருங்க சாப்பிடலாம் என்றாள் பவி...

இருவரும் சாப்பிட்டு முடிந்ததும் கிளம்பினர்....

கிளம்பும் முன் இந்த விஷயத்தை முதலில் ராசாத்தி அக்கா, மாமாவிடம் சொல்லுங்கள் என்றாள் பவி...
கண்டிப்பாக.... இப்பொழுது அங்கே தான் செல்கிறோம் என்று சொல்லி சென்றனர்....
இனிமேல் என்னை டிராப் செய்ய சொல்ல மாட்டாய் அல்லவா எ
ன்று கூறினான் குமார்....

போடா..... என்று சிரித்தவாறு கூறி சென்றான் அகிலன்


மலரும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top