கற்பூர முல்லை Episode 21

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 21

அன்று தமிழுக்கு அலுவலகத்தில் அதிகப்படியான வேலை இருந்தது. சென்னையிலேயே புதிதாக ஒரு பிரான்ச் ஓபன் செய்ய இருப்பதால் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து அவளை பார்க்க இருவர் வந்தனர். அவர்கள் ராசாத்தி அக்காவும் அவள் கணவர் மயில்சாமியும்.

அவர்கள் அனுமதி பெற அறைக்கதவை திறந்த போது இவர்களை பார்த்தது முகம் மலர எழுந்து நின்று வரவேற்றாள். அந்தப் பண்பு அவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

வாருங்கள்... இருவரும் நலமா.... முதலில் என்ன சாப்பிடுகிறீர்கள் என பாசமாக விசாரித்தாள்... அதெல்லாம் வேண்டாம் என அவர்கள் மறுக்கவே முடியவே முடியாது நீங்கள் முதன் முதலாக வந்திருக்கிறீர்கள் கண்டிப்பாக ஏதாவது சாப்பிட்டே ஆகவேண்டும் என்று கூறினாள்.... அவர்களிடம் கேட்டுவிட்டு இரண்டு காப்பியை வரவழைத்தாள்...

பிறகு அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.... வேலை அதிகமாக இருக்கிறதா? சிறிது நேரம் பேசலாமா...? என்று கேட்டார்கள்.
எவ்வளவு வேலை இருந்தாலும் உங்களுக்கு நான் எப்பவும் ஃப்ரீ தான் என்று கூறினாள்.

தம்பியைத்தான் முதலில் கூப்பிட்டோம் அவனுக்கு வேலை இருப்பதால் வர முடியாது என்று எங்களை மட்டும் அனுப்பி வைத்தான் என்று கூறினாள் . ராசாத்தி அக்கா.. சரி அவனுக்கு என்ன... எப்பொழுது நினைத்தாலும் வருவான் என்று சிரித்தவாறு கூறினாள்... ஏனென்றால் அகிலன் அடிக்கடி வருவது அவளுக்கும் தெரிந்திருந்தது... அவளும் சிரித்தவாறு தலையாட்டினாள்..

இப்பொழுது இவர்கள் வந்த விஷயத்தை மயில்சாமி கூற ஆரம்பித்தார்.... எங்கள் பிள்ளைகளுக்கு காதுகுத்து வைத்திருக்கிறோம் கண்டிப்பாக நீ வரவேண்டும் அதற்காக அழைக்கவே நாங்கள் இருவரும் வந்தோம் என்று கூறினார் மயில்சாமி.

இருவருக்கும் இன்னும் சிறுவயதிலேயே காது குத்தி விடலாம் என்று தான் தீர்மானித்தோம் ...ஆனால் அப்பொழுது இருவர் வீட்டிலும் துக்க சம்பவங்கள் நடக்கவே அது முடியாமல் போய்விட்டது இப்பொழுது தான் அதற்கான நேரம் வந்திருக்கிறது அதனால் இப்பொழுது குத்திவிடலாம் என முடிவெடுத்து இருக்கிறோம் என்று கூறினாள்.

ஓ அப்படியா.... சரி சரி என்றாள்.
ஞாயிற்றுக்கிழமை தான் வைத்திருக்கிறோம் நமது வீட்டு பக்கத்தில் இருக்கும் கோயிலிலேயே காலையில் காது குத்தி விட்டு பிறகு நமது வீட்டில் விருந்து கண்டிப்பாக நீ வரவேண்டும் என்று கேட்டாள்....
அவளும் கண்டிப்பாக வருவதாக கூறினாள்...
ஆனால் இருவருக்கும் அகிலன் தமிழை விரும்புவது மட்டுமே தெரியும் அதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே நடந்தது எதுவும் அவர்களுக்கு தெரியாது.

அவர்கள் வந்து சென்ற பிறகு அலுவலகத்தில் வேலையில் ஈடுபட்டாள்...

ஆனால் அன்றைய இரவு தான் யோசித்தாள். இவர்கள் அழைப்பை ஏற்காமல் இருக்கவும் முடியாது ஆனால் இவர்கள் அழைப்பை ஏற்று அங்கே சென்றால் அகிலனை காண நேரிடுமே என்று யோசித்தாள்... ஆனால் என்ன செய்வது.... கண்டிப்பாக போய் தானே ஆக வேண்டும்.

காதுகுத்து ஃபங்ஷனுக்கான நாளும் வந்தது. சமையல் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கேப் புக் பண்ணி சென்றாள். போகிற வழியிலேயே குழந்தைகளுக்கு கொடுக்க கிப்ட் வாங்கிக் கொண்டாள்.

அங்கே சென்றதும் வாசலிலேயே மயில்சாமி ராசாத்தியும் வரவேற்றனர். காலையிலேயே பங்க்ஷன் முடிந்திருந்தது. தமிழ் வேண்டுமென்றே சிறிது லேட்டாக சென்றாள். தற்போது அங்கு மொட்டை மாடியில் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. குமார், பவி, அகிலனின் தம்பி தங்கைகள் என அனைவரும் இவளை வரவேற்று உபசரித்தனர். ஆனால் தமிழின் கண்கள் அகிலனையே தேடிக் கொண்டிருந்தது.

மிகவும் நெருக்கமானவர்களை மட்டும் அழைத்திருப்பார்கள் போலும். அவ்வளவாக கூட்டம் ஏதும் இல்லை.

குமார் பவி இருவரும் இவரை ஹாலில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருந்தனர் அகிலனின் தம்பி தங்கைகளும் இவளை விடவில்லை. அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அகிலன் வந்தான். வந்தவன் கண்களில் தென்பட்டாள் தமிழ். வந்தவன் தமிழை பார்த்ததும், பார்க்காத மாதிரி குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டு மேலே சென்று விட்டான்.

பவிக்குத் தான் ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் இவர்கள் இருவருக்கும் நடந்தது எதுவுமே யாருக்கும் தெரியாது.
ஆனால் பவிக்கு இதில் ஏதோ விஷயம் இருப்பதாகவே தோன்றியது. அதை அகிலனிடமே கேட்டு விட்டாள் அவனும் ஏதோ சமாளித்தவாறு பதில் சொன்னான்.
இது வரும் பேசிக்கொள்ளவே இல்லை அது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது.

அந்த சமயம் ராசாத்தி அக்கா வந்து அவளை சாப்பிட அழைத்தார்.. அவள் இப்பொழுது வேண்டாம் இன்னும் சற்று நேரம் கிடைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று கூறவும்,சரி கம்பல்செய்ய வேண்டாம் என விட்டுவிட்டார்.

பிறகு சிறிது நேரம் கழித்து சொந்த பந்தங்கள் எல்லாம் சாப்பிட்டு சென்றுவிட ராசாத்தி அக்கா வந்து தமிழை சாப்பிட அழைத்தார் கூடவே அகிலனையும் அழைத்தார். ராசாத்தி அக்கா வேண்டுமென்றே அகிலனையும் தமிழையும் அருகில் அருகில் அமர வைத்து பரிமாறினார் ஆனாலும் அகிலன் கண்கள் தமிழின் மீது படவே இல்லை.

சொந்த பந்தங்கள் எல்லாம் சென்றுவிட குமாரும் பவியும் மட்டும் இருந்தனர்.
அனைவரும் ஹாலில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அப்பொழுது குமார் தான் கேட்டான் தமிழிடம் பிசினஸ் எல்லாம் எப்படி செல்கிறது என்று... அதற்கு தமிழ் எல்லாம் ரொம்ப நன்றாக போய்க் கொண்டிருக்கிறது இப்பொழுது இங்கேயும் இன்னொரு பிரான்ச் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் போய்க்கொண்டிருக்கிறது என்று கூறினான்.

அது சமயம் அகிலனும் அங்கு இருந்தான். ஆனால் மறந்தும் கூட தமிழிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

பின்னர் ராசாத்தி யின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க குமாரும் பவியும் இரவு உணவை முடித்துக் கொண்டே சென்றனர். அதேபோல தமிழும் இரவு உணவை முடித்துவிட்டு கிளம்ப தயாரானாள். ராசாத்தி அக்கா இரவு வெகு நேரம் ஆகிவிட்டது அவரும் எங்கோ வெளியில் சென்று இருக்கிறார் அதனால் நீ அகிலனுடன் சென்று கொள் என்று கூறினார்... அவள் மறுக்கவும் ராசாத்தி அக்கா விடவில்லை...

அகிலன் எந்த மறுப்பும் தெரிவிக்காது அதே சமயம் அவளிடமும் எதுவும் பேசாது அவளை கூட்டிக் கொண்டு கிளம்ப தயாரானான்.

பின்னர் அவனுடன் பைக்கில் ஏறிக்கொண்டாள்.. அனைவரும் அவளை வழி அனுப்பி வைத்தனர்.

அவளை கூட்டிக் கொண்டு சென்றவன் அவள் வீட்டின் வாசலின் முன் நிறுத்தினான். அப்பொழுதும் அவரளிடம் எதுவும் பேசாது அமைதியாக வந்து விட்டான்.

தமிழைப் பொறுத்தவரை அவன், அவனுடைய முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறான். ஆனால் தமிழ்
தான் மிகவும் நொருங்கி விட்டாள்.

மலரும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top