கடவுள் கொடுத்த வரங்கள்

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
படித்ததில் பிடித்தது

மன்னர்கள், சக்கரவர்த்திகள் அன்று வாழாத வாழ்வை நாம் இன்று சர்வசாதாரணமாக வாழ்கிறோம்...!

எங்கள் பாக்கெட்களில் உள்ள ATM காடுகள் பற்றி காரூன் அறிந்திருந்தால், பலசாலிகளால் கூட சுமக்க முடியாத பெருத்த சாவிகள் தேவைப்படாது என்று அவன் உணர்ந்திருப்பானே...!
மற்றும் கர்வம் கொண்டு அகத்தையாக அவன் வலம் வந்திருப்பானா...!?

எங்கள் வீடுகளில் உள்ள சோபா செட்டுகள் பாரசீக மன்னன் கிஸ்ராவின் அரியாசனத்தை விட மிக செகுசானது என்று அவனுக்குத் தெரியவந்தால் அவ்வளவு ஆட்டம் போட்டு அராஜகம் செய்திருப்பானா...!?

ரோம் சாம்ராஜ்ய மன்னன் கய்ஸர், நம்மிடமுள்ள சாதாரண ஏ ஸீ எயா கன்டிசனரை கண்டிருந்தால் கூட, மயில் இறகால் தனக்கு காற்றடித்துக் கொண்டிருந்த சேவகர்களை விரட்டியிருப்பார்...!
ஸ்பிலித் ஏ ஸி வசதியை கண்டிருந்தால் எப்படியிருக்கும்...!

மங்கோகலிய மன்னன் ஹோலோகோ முன்னால் நம்மிடம் இருக்கும் கோரோல்லா கார் வந்து நின்றால், அவன் குதிரை மேல் அமர்ந்து கம்பீரமாக பெருமிதம் கொண்டிருப்பானா...!?

ஹிரகல் மன்னன் மண்பாண்ட வடிகுழாயில் இருந்து குளிர்ந்த நீர் அருந்தி வந்தான், மன்னர் நுஃமான் மரத்தினாலான பாட்டிலில் குளிர்ந்த நீர் அருந்தி வந்தான். கூடியிருந்தவர்கள் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்...!
நம் வீட்டில் உள்ள குளிரூட்டியிலிருந்து அவர்கள் குடித்துப் பார்த்திருந்தால் எப்படியிருக்கும்...!?

கலீபா மன்ஸுரின் சேவகர்கள், அவர் சுடுநீர் குளியலுக்காக சுடு நீரை குளிர் நீரோடு கலக்கிக் ஊற்றுவதை பெருமிதத்தோடு பார்த்து நிற்பார்...! நம்மிடம் உள்ள நவீன குளியல் தொட்டிகளைக் கண்டால் எப்படியிருக்கும்...!?

ஹஜ் புனிதயாத்திரை செல்ல ஒட்டகத்தில், கப்பலில் பல மாதங்கள் பிடிக்கும்...! நாம் சில மணித்தியாலங்களில் குளிரூட்டப்பட்ட விமானங்களில் சென்று வருகிறோம்...!

மாமன்னர்கள் வாழாத வாழ்வெல்லாம் நாம் வாழ்கிறோம்...! ஆம், அவர்கள் கனவில் கூட காணாத வசதி வாய்ப்போடு நாம் வாழ்கிறோம்...! இருந்தும் நம்மில் பலர் தங்கள் பங்கு போதாது என்று வருத்தம் கொள்கின்றனர்...!

நீ விரிந்த பார்வையுடன் பார்க்கும் போதெல்லாம் உன் நெஞ்சம் சுருங்கிவிடும்...!

கணிப்பிட முடியாத பாக்கியங்களில் குளிக்கும் நாம் அந்த அல்லாஹ்வை புகழ்ந்தாகத்தான் வேண்டும்.....
 

I R Caroline

Well-Known Member
அருமை மிலா சிஸ், மனிதர்களுக்கு போதும் என்ற மனப்பான்மை எப்போதும் இருப்பதில்லை... போதும் என்று நினைத்து விட்டால் வறுமையில் வாடும் மக்களை பார்ப்பத்து அரிதாகிவிடும் சிஸ்...
 

Gomathianand

Well-Known Member
அருமை மிலா டியர்(y)(y)(y)
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று அந்த காலத்தில் சொல்லியிருக்கிறார்கள் ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top