ஒரு காவ(த)லனின் கதை 4

Advertisement

Suguna Thangavel

Well-Known Member
#ஒரு_காவ(த)லனின்_கதை_4
#episode_4

எப்போதும் குடும்பத்தினரை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் வேலையே நகராது என்பதை உணர்ந்து தன்னை முற்றிலும் பிஸியாகவே வைத்துக்கொண்டான் அத்விக். அவர்களுக்கு மாதத்தில் அரை நாள் வீதம் ஒதுக்கியவன் அந்த நினைவலைகளை அசை போடுவதற்கு இந்த பீச்சை தேர்ந்தெடுத்தான். ஆரம்ப காலத்தில் அத்விக்குடன் இந்த பீச் யோகாவில் (அப்படித்தான் பெயர்சூட்டி இருந்தான்... சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பது தானாக சிரிப்பது எப்போதாவது தென்படும் கண்ணீர்....) பங்கேற்ற ராகுல் மாதத்திற்கு ஒருநாள் முழு சந்திரமுகியாக மாறி இருக்கிற உன்னை பார்த்தேன் என்றால் மாதம் முழுவதும் நான் வேட்டையனாக நேரிடும் என்ற சுய ஆலோசனைக்கு பிறகே அவனோடு பீச்சுக்கு வருவதை கை விட்டான்.

அத்விக்கின் குடும்ப சூழ்நிலையை மிஸ் பண்ணாமல் பார்த்துக் கொள்வதில் ராகுலின் நட்பு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஆயினும் அவனிடம் அவர்கள் பற்றி பகிர்ந்து கொண்டதில்லை.

அன்பான அம்மா ரூபா. ஹிட்லரான அப்பா ஜெகன். கால்வாசி நேரம் தன் பேச்சைக் கேட்கும் தம்பி அத்ரிஷ். ஆம் கால்வாசி நேரம் தான் கேட்பான். அவனின் முக்கால்வாசி நேரம் அந்த பத்ரகாளியின் பிடியில். அவளது அண்ணன் விக்னவ் தன் உயர் தோழன்.

அவர்கள் தந்தை ஹரிஹரன். அவரால்தான் அந்த குடும்பத்தில் இருபது வருடங்கள் தான் இருந்ததே. தனக்கும் அப்பாவிற்கும் வாக்குவாதம் என்று தெரிந்தாலே ஃபாக்டரியில் முக்கியமான வேலைக்கு நிர்பந்தம் ஏற்பட்டு விடும் . அல்லது ஆபீஸில் திடீர் மீட்டிங் அறிவிக்கப்படும். பிருந்தா அத்தை உடனே மாமாவை அழைத்து விடுவார். தன் தங்கையின் பேச்சைக் கேட்கிறாரோ இல்லையோ மச்சான் ஆகிய ஹரிஹரனின் பேச்சை இதுவரை ஜெகன் தட்டியதில்லை.

அதுவே தமிழ்நாட்டின் டாப் இன்டஸ்ட்ரியல்ஸ் லிஸ்டில் ஹகன் இன்டஸ்ட்ரீஸ் இடம் பிடித்ததற்கான முக்கிய காரணம். அப்பாவும் மாமாவும் இணைந்து ஆரம்பித்ததுதான். அவர்களின் ஒட்டுமொத்த உழைப்பு. ஹரிஹரன் அவர்களது வருமானத்தை பெருக்குவதை விட அப்பா மகனின் (ஜெகன்-அத்விக்) சண்டையை குறுக்குவதையே முழுநேர வேலையையாக பார்த்துக் கொண்டார். அன்றும் மாமா சண்டையின்போது இருந்திருந்தார் என்றால் மென்மேலும் பிரச்சனையை வளர விட்டிருக்காமல் பேச்சினை தடுத்திருப்பார். தன்னை அவர்களிடமிருந்து பிரிந்து செல்ல அனுமதித்திருக்கமாட்டார்.

எங்கள் அனைவருக்கும் தூணாக மரகதம் அப்பத்தா. ஜெகன் பிருந்தாவை ஈன்றவர். மகன் மற்றும் மகளது வீடுகள் ஒரே காம்பவுண்டுக்குள் இருப்பதால் அவருக்கு அலைச்சல் குறைவு என்று யாரும் தப்பாக எடைபோட்டு விடமுடியாது. வாரத்தில் ஏழு நாட்களும் பிஸியாகவே இருப்பவர். வீட்டில் அனைத்து சுப காரியங்களிலும் முதன்மை வகிப்பவர். உறவினர் வீட்டு விசேஷங்களிலும் பங்கேற்காமல் இருக்கமாட்டார். பேரப்பிள்ளைகளிடம் கொள்ளை பிரியம். முக்கியமாக அவளிடத்தில்.

கடைக்குட்டியாக அந்த குட்டி சாத்தான் பிறந்தமையால் வீட்டில் அனைவரிடத்திலுமே எல்லாவற்றிலுமே செல்லம். ஹிட்லரின் டார்லிங்.... இல்லையில்லை அவளுடைய பெரிய டார்லிங் தான் அவர். அப்படித்தான் அவள் என் அப்பாவை அழைப்பாள். பி.டி (பெரிய டார்லிங்) . அவளது சி.டி (சிறிய டார்லிங்) அவளின் எடுபுடி அத்ரிஷ். அவர்களுக்கு இடைப்பட்டவனான தனக்கு அவள் வைத்திருக்கும் பெயர் தடிமாடு. கோபம் வரும் சமயங்களில் அப்படித்தான் கத்துவாள். அப்பத்தா தான் அவளை அதட்டும். சில நேரங்களில் "பிக் பிரின்சஸ் உன் பேரன் செய்த காரியத்திற்கு இவ்வளவு குறைவாக திட்டுகிறேன் என்று சந்தோஷப்படு" அமைதியாக எடுத்துரைப்பாள். பொறுமை பறக்கும் சமயங்களில் அவளது பிக் பிரின்சஸ் கிழவி ஆகிவிடுவார்.

அனைவரிடத்திலும் செல்லம் கொஞ்சுவதில் அவளுக்கு போட்டியாக இருப்பவன் டைகர். ஆனால் அவனும் அவள் சொல்லிற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பான். அவளது பத்தாவது பிறந்த நாளின்போது உனக்கு என்ன டார்லிங் வேண்டுமென்று ஜெகன் கேட்டதற்கு "போனவாரம் வண்டலூர் ஜூவில் பார்த்தோமே அந்த டைகர் வேணும் பி டி" என்றாள். அன்று மாலையே ஒரு டாபர்மேனை வாங்கி வந்தவர் அவள் கையில் திணித்து "ஹியர் இஸ் யுவர் டைகர்" என்றார்.
அவள் பிறந்தநாள் அன்று அவன் வீட்டிற்கு வந்ததால் இருவரும் வருடாவருடம் சேர்ந்துதான் கேக் வெட்டுவார்கள். அவளுக்கு ஏதாவது என்னிடம் வேண்டுமென்றாலும் டைகர் தான் முதலில் வந்து நிற்பான்.

எங்கு ஆரம்பித்தாலும் அவளது நினைவுகளில் தான் முற்றும். சில சமயம் முடிவுபெறாமல் காயும். தன்னை வேண்டாம், பிடிக்கவில்லை, திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று சொற்களால் அறைந்தவளின் மீது அளவுகடந்த ஆத்திரம். அத்தோடு நிறுத்தினாளா வேண்டாம் என்று எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காமல் தன்னை நிராகரிக்கும் பொருட்டு ஆர்யனின் லவ் லெட்டரை பெற்றுக்கொண்டாள். திருமணம் செய்து கொண்டார்களா என்ற கேள்விக்கு விடை தெரியாது ஆயினும் அந்த கேள்வி அடிக்கடி தன்னுள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

ஆரம்பத்தில் அம்மா அவளை பற்றி பேச வந்தபோது "அவள் பெயரை சொன்னாலே இனி நான் பேசமாட்டேன்" என்று போனை தூக்கி விசிறி அடித்ததில் அது இரண்டாக உடைந்தது. உடைந்த போனை எடுத்து அதை சரி செய்து என் கையில் கொடுத்து "இதை ஒட்ட வைக்கிறது ஈசி மச்சி ... ஆனால் இவ்வளவு கோபத்தினால் உடம்பிற்கு ஏதாவது ஏற்பட்டால் அதை சரி செய்வது அவ்வளவு சுலபமாக இருக்காது. என்னிடம் எதையும் நீ சொல்ல வேண்டாம். ஆனால் நான் சொல்வதை செய் ப்ளீஸ்" என்று யோகா பயிற்சியில் சேர்த்து விட்டான் ராகுல்.

அவனிடத்தில் எதையும் மறைக்க வேண்டும் என்று தன் குடும்பத்தை பற்றி சொல்லாமல் இருக்கவில்லை. அவனது பாயிண்ட் ஆஃப் வியூவில் ஒரு அப்பா மகனின் சண்டை. அதுவும் வாடிக்கையான ஒன்றிற்கு இத்தனை பெரிய பிரிவு தேவையற்றது. கண்டிப்பாக தன்னை ஊருக்கு செல்ல சொல்வான் அல்லது அவர்களுக்கு தகவல் கொடுப்பான். இரண்டிலுமே தனக்கு விருப்பம் இல்லாததால் எதைப்பற்றியும் கூறாமல் விட்டு விட்டான் அத்விக். ஆனால் ராகுலின் அம்மா ஜெயந்தியிடம் அத்விக் பேசாமல் இருக்க மாட்டான். எப்போது போன் செய்தாலும் அவரும் பேசாமல் விட்டதில்லை.

ராகுல் பிறந்த ஒரு வருடத்திலேயே அவன் அப்பா தவறிவிட்டார். சொந்த பந்தங்கள் ஊர் நிறைய இருந்தும் ஒருவரின் உதவியுமின்றி சிங்கிள் பேரண்டாக ராகுலை வளர்த்து இன்று ஒரு பெரிய பதவியில் அமர்த்தியிருக்கிறார். அவர்மேல் அளவுகடந்த மரியாதையும் பாசமும் தானாக உருவாகி விட்டது. வேலைப்பளுவை பற்றி நன்கு அறிந்திருந்ததால் ராகுல் பிஸியாக இருக்கும் சமயத்தில் தன்னிடம் மட்டும் பேசிவிட்டு வைப்பார். அப்படி ஒரு சமயம் பேசும்போது "ராகுலின் கல்யாண விஷயம் பற்றி தான்பா அவனுக்கு புரியும் விதத்தில் நீ சொன்னால் கேட்டுக் கொள்வான்" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ராகுல் போனை பறித்துக்கொண்டு சென்றுவிட்டான். அதன்பின் அவரும் அந்த பேச்சினை எடுக்கவில்லை தானாக கேட்டபோதும் அவர் பேச்சை மாற்றியதிலிருந்து தெரிந்தது இது ராகுலின் வேலை என்று. அவனிடம் இது பற்றி கேட்டபோது "அதை நாங்க பாத்துக்குறோம் சார் நீங்க ஆபீசுக்கு கிளம்பும் வழியைப் பாருங்கள்" என்று இரவு 11 மணிக்கு பதிலளித்தான். அம்மாவிடம் நான் அமெரிக்காவில் இருப்பதாக நாடகமாடி கொண்டிருப்பதால் அவனுக்கு பிடிக்காததை எப்போதாவது சொன்னால் இப்படி நக்கலாக பேசி வைப்பது ராகுலின் வழக்கம்.

அப்படி ராகுலின் வழக்கப்படி இன்றைய இந்த நான்கு மணி நேரத்தில் பீச் வருகைக்காக அத்விக்கிற்கு 40 முறையாவது அழைத்திருப்பான் என்று எண்ணியவாறு சைலன்ட் மோடில் போட்டு வைத்திருந்த தன் மொபைலை எடுத்துப் பார்த்தவனது விழிகளுடன் சேர்ந்து இதழ்களும் சிரித்தன. 42 மிஸ்டு கால்ஸ். சாதாரண நாட்களிலேயே இது வாடிக்கையாக இருக்கும்போது இன்றைய முக்கிய கான்ஃபரன்ஸ் மீட்டிங்கை விட்டுவிட்டு வந்தமையால் அவன் கோபம் அறிந்து அழைத்தான். ஹலோ கூட சொல்லாது "எங்கடா போன?" என்ற குரலில் இருந்தது வருத்தமா ஆவேசமா என்று பகுத்தறிய முடியவில்லை. ஆனால் சந்தோஷ மனநிலையில் கேட்பது போலவும் தெரிந்தது. அந்த தைரியத்தில் "வேற எங்கடா பீச் யோகாவிற்கு தான்" என்று சொன்னதுதான் தாமதம். ராகுலுக்கு தெரிந்த அனைத்து மொழிகளிலும் திட்டி தீர்த்து விட்டான்.

" இன்று என்ன நடந்தது தெரியுமாடா?" என்று ஆவலாக வினவினான் ராகுல்.

" யூ நோ மச்சி அங்கு என்ன நடப்பது என்பதை மனக்கண்ணில் காட்டும் அளவிற்கு பீச்யோகாவில் நான் முன்னேறவில்லை"

" டேய் என்ன கொலைகாரன் ஆக்காத ...இட்ஸ் சாம்திங் சூப்பர் ஸ்பெஷல்... கெஸ் மேன்"

சற்று யோசித்த அத்விக் ஆச்சரிய குரலில் "வெஜ் பப்ஸ்க்கு பதிலாக எக் பப்ஸ் கொடுத்தாங்களா" என்றான் .

"டேய்ய்ய்ய்ய்" என்ற அலறலில் "ஓகே மச்சி ரிலாக்ஸ் இப்போ கரெக்டா கெஸ் பண்றேன் பாரு" என்றான் சமாதானப்படுத்தும் விதமாக.

" ஒரு ஆணியையும் புடுங்க வேணாம். உன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சர்ப்ரைஸ். ஐ லவ் யூ மச்சி ரொம்ப பெருமையா இருக்கிறது" என்று தழுதழுத்த குரலில் கூறினான்.

"என்னடா சரக்கு அடிச்சிருக்கியா"

"இல்ல மச்சி ஆனால் கண்டிப்பாக இன்று ஒரு பெக் அடிப்பேன் நோ சொல்லக்கூடாது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன்"
......
இதுநாள் வரை அத்விக் குடித்து ராகுல் பார்த்ததில்லை. ராகுலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவன் அல்ல. எப்போதாவது ஏதாவது கேசில் மன சங்கடம் ஏற்பட்டால் சில கிராண்ட் பார்ட்டி அட்டென்ட் செய்தால் எடுத்துக் கொள்வான்.

" அவ்வளவு நல்லவனா டா நீ" என்று ராகுல் அத்விக்கை முன்பு ஒரு சமயம் கேலி செய்ததற்கு "டெஃபனட்லி நோ மச்சி . அந்த சரக்கு என்னிடம் வர கொடுத்து வைக்கவில்லை என்று நினைத்துக்கொள். குடியை நிறுத்து என்று சொல்ல மாட்டேன் ஆனால் குறைத்துக் கொள். பெரிய இடத்து பார்ட்டி எல்லாம் ஒரு போதை மச்சி. போனோமா வேலையை பார்த்தோமா வந்தோமா என்று இருக்கணும். தென் சம் ராங்லி மூவ்ட் கேசஸ் எல்லாவற்றையும் ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் என்பது விதி. இதையும் தாண்டி பார்க்கப்போகிறோம் அதற்குண்டான சுய கட்டுப்பாட்டை நீ உன்னிடம் தேடு மச்சி குடியிடமில்லை" என்றான்.

" இதற்கு நீ குடிக்கவே கூடாது என்று சொல்லியிருக்கலாம் "என்று கூறியதோடு முடிந்த மட்டும் குறைத்துக் கொண்டான் ராகுல்.
.........

" இன்று நீ அந்த பீச்சில் எந்த போதி மரத்துக்கு அடியில் அமர்ந்து புத்தி சொன்னாலும் அதைக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை"

நண்பனது மகிழ்ச்சி அத்விக்கையும் தொற்றிக்கொள்ள "அப்படி என்ன சந்தோஷத்துலடா தலை கால் புரியாமல் ஆடி கொண்டிருக்கிறாய்" என்றான்

" நேரில் வா சொல்கிறேன் உன்னை பார்த்து சொல்லவேண்டும் உடனே புறப்பட்டு வா அல்லது நான் அங்கே வருவேன்"

" ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது மச்சி. சரி இரு கமிஷனர் லைன்ல வர்றாரு நான் அப்புறம் கூப்பிடுகிறேன்" என்றவனை ராகுலின் அதிவேக "நோ" தடுத்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top