ஒரு காவ(த)லனின் கதை 1

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#ஒரு_காவ(த)லனின்_கதை_1
#episode_1

அம்மா அம்மா நீ எங்கே அம்மா? உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா!' என்ற பாடலின் கரோக்கி இசைக்க நொடிக்கும் குறைவான பொழுது அதிர்ந்தாலும் தன்னை நிதானித்து கொண்டு எதிரில் அமர்ந்திருப்பவனின் முறைப்பை சட்டை செய்யாது தன் கைப்பேசியை உயிர்ப்பித்தான் அத்விக்.

"ஹலோ . நல்லாயிருக்கேன் மா. நீங்க?"
......
"புது ப்ராஜெக்ட் மா அதான் கொஞ்சம் பிஸி"
......
" அதெல்லாம் ஆச்சு. நீங்க சாப்பிட்டீங்களா இல்லையா?"
......
"மணி பதினொன்று இன்னும் சாப்பிடலையா! ஏன் மா இப்போ எடுத்துக்கிற பிபி மாத்திரை டேஸ்ட் பிடிக்கலைன்னு நெக்ஸ்ட் பவருக்கு போகலாம்னு ஐடியாவா " கிண்டல் தொனிக்க கேட்டவனின் குரலில் வேதனை அப்பட்டமாக தெறித்தது .
......
"பின்ன என்னம்மா. நோ மோர் எக்ஸ்யூஸஸ் முதலில் போய் சாப்பிடுங்க . நான் நாளைக்கு கூப்பிடுகிறேன்"
......
"சரிம்மா. நான் ஆபிஸ் கிளம்பிட்டேன். பை குட்நைட் " போனை அணைத்ததும் கண்களை ஒரு முறை மூடி திறந்து நடப்புலகிற்கு தன்னை மீட்டு கொண்ட அத்விக் " தென் ராகுல்... நீ சொன்ன மாதிரி இதே வழியில் நாம் ப்ரொஸீட் பண்றது தான் பெட்டர் . இப்போது கிளம்பினால் சரியா இருக்கும் " என்றவாறு எழுந்தான்.

இருக்கையை விட்டு எழாது இன்னும் தன்னை முறைத்து கொண்டு அமர்ந்திருந்த ராகுலை கண்டு மீண்டும் உட்கார்ந்த அத்விக் நண்பனை சமாதானப் படுத்தி விடும் விதத்தில் "அம்மாடா " என்றான்.

" நான் என்ன சித்தப்பானு சொன்னேனா?"

"டேய்..."

"என்னடா டேய்... என்ன மாதிரி நிலையில் இருக்கிறோம். இப்போது இந்த போன் ரொம்ப முக்கியமாடா? போனை சைலண்ட்ல கூட போட தெரியாது? பொறிந்தான் ராகுல் .

"எந்த நிலையிலும் எனக்கு அம்மா தான் ஃபர்ஸ்ட் அண்ட் ஃபார்மோஸ்ட் "

"அப்படி ஃபர்ஸ்ட் அண்ட் ஃபார்மோஸ்ட் பார்க்கிறவன் நேரில் போய் பேச வேண்டியதுதானே. பேசுறது பூராவும் ஃப்ராடுதனம். என்ன சொன்னீங்க சாரு? நியூ ப்ராஜெக்ட்! நடத்துடா நடத்து. ஆனா ஒன்னு சொல்றேன்டா ஸான் ஃப்ரான்ஸிஸ்கோல இருக்கிறவன் கூட இப்படி டெய்லி டீடெய்ல்ஸ மம்மிக்கு சப்மிட் பண்ணமாட்டான். நீ பண்ணும் அலும்பு இருக்குதே!

"எதுக்குடா இப்படி சோடா குடிக்கும் அளவுக்கு விளக்குற.."

"டைம் கீப் அப் மச்சி டைம் கீப் அப். டைம் மேனேஜ்மெண்ட்னு ஒரு பேப்பர் எழுதிதான் இந்த லெவலுக்கு வந்துள்ளோம்"

"அந்த பேப்பரில் உன்னை பாஸ் பண்ணி விட்டவன் மட்டும் என் கையில் கிடைச்சான்!!!" நேரத்தை இப்போது ராகுல் வீணாக்கும் பொருட்டு அத்விக் கடுப்பானான்.

"டேய் கிண்டலா" என்றபடி ராகுல் பல்லை கடித்தான்.

"ஏன் மச்சி இப்படி கடிக்கிற உன் கிட்ட உருப்படியாக இருப்பதே அது ஒன்றுதான் அதற்கும் என் கையால் ஆப்பு வைத்து கொள்ளாதே "

"ஸ்டாப் இட் டாம்ன்"

" அதை தான்டா நானும் சொல்கிறேன். லெட் ஸ்டாப் திஸ். அங்கே சொன்னபடி அவர்கள் தோட்டத்தை சுற்றி வளைத்திருப்பர். இது தான் சரியான தருணமும் கூட " என்று உரைத்தவனின் கண்கள் கூர்மை பெற முகம் கடுமையை தத்தெடுக்க மிகுந்த தீவிரத்தோடு தன் பணியில் இறங்கினான் அத்விக் .

"ஆல் தி பெஸ்ட் மச்சி " என்று விட்டு தன் நண்பனை பிரிந்து எதிர் கட்டிடத்தின் பின் பக்க தோட்டத்திற்குள் எகிறி குதித்தான் ராகுல்.

காலிங் பெல்லின் சத்தம் கேட்டு லென்ஸ் வழியாக ஆராய்ந்து விட்டு கதவை திறந்தவன் " கோன் ஹை?" என்றான்.
"விஷ்வா ஜி தான் வர... " அத்விக் பேசி கொண்டிருக்கும் போது வாசலுக்கு வந்த மற்றொருவன் அத்விக்கின் மேல் ஆராய்ச்சி பார்வை ஒன்றை செலுத்தியதும் அவனது சீராக ட்ரிம் செய்யப்பட்டிருந்த பின்னந்தலை பயத்தை வரவழைக்க " போலீஸா இருக்குமாடா " என்று முன்னவனின் செவிகளில் பம்மினான்.

"இருக்காது. உன் முகமே போலீஸ கூப்பிடும் போல. நார்மலா இருடா " சமாதானம் கூறிவிட்டு " தமிழா ? சொல்லு ... விஷ்வாவுக்கு நீ யாரு?" என்று அத்விக்கிடம் கேட்டான் கதவை திறந்தவன்.

"ஹான் மாமியாரு" என்று கூறியவாறே அவனுடைய கைகளை பின்னுக்கு கட்டி ஓட முயன்ற மற்றொருவனின் கால்களை தட்டிவிட்டான் அத்விக்.

ராகுலிற்கு அழைத்தவன் "கன்ஃபர்ம் . நீங்க உள்ள வாங்க" என கூறிவிட்டு " பொண்ணு எங்கடா?" என்ற கேள்வியை நெருப்பு தனலை தன் கண்களில் கக்கியவாறு பாய்ச்சினான். அவனது ரௌத்திரத்தை கண்டு எதிராளி ஒருவனின் பேச்சு குழாய் சிக்கி கொள்ள மற்றொருவன் பதிலளிக்காவிட்டால் என்ன நடக்குமோ என்ற பீதியில் " நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை சார். விஷ்வா சொன்னதை மட்டும் செய்தோம். வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது " குளறி முடிப்பதற்குள் பளார்ர்ர்ர்ர் என ஒரு இடி அவன் கன்னத்தில் இறங்கியிருந்தது.

அதை கண்ட அடுத்தவனின் உடல் பயத்தால் நடுங்க தன்னை மீறி அத்விக்கின் பிடியில் சிக்கியிருந்த தன் கரத்தை விடுவித்து எதிர்புற அறையை திறந்து " பொண்ணு இங்க தான் சார் இருக்கு. மயக்கத்தில் இருக்கு. விஷ்வா கடத்த மட்டும் தான் சொன்னான். சத்தியமா நாங்க வேற எதுவும் செய்யலை சார்" என ஒப்புவித்தான்.

"அவன் என்ன சொன்னாலும் செய்வியா?" ஆக்ரோஷமாக தாக்கும்போது வீட்டின் பின் வழியாக ராகுல் இரு காவலாளிகளுடன் ஹாலிற்குள் நுழைந்தான்.

" பொண்ணு பற்றி ஏதேனும் தெரிந்ததா?" ராகுலின் கேள்விக்கு எதிர் அறையை காட்டினான் அத்விக்.
ராகுலும் தனது கோபத்தை அவர்கள் மீது சரமாரியாக காட்ட " விடுடா. பொண்ணு சேஃப். தொழிலுக்கு புதுசு போல. பான்ட் நனைஞ்சிருக்கானு பாரு" தடுத்தான் அத்விக் .

" ஐயையோ தொழில் எல்லாமில்லை சார். விஷ்வா எங்க ஃப்ரெண்டு. ஒரு ஹெல்ப்னு கேட்டதும் யோசிக்காமல் செய்துட்டோம். மன்னிச்சுருங்க சார் "

"ஃப்ரெண்டா ? ஃப்ரெண்டுனா என்னான்னு தெரியுமா? நண்பன்னா என்னான்னு தெரியுமா? அத்விக்னா என்னான்னு தெரியுமாடா? " பெண்ணிற்கு ஆபத்து ஏதுமில்லை என்றதும் தளபதி பாடலை பாடியபடி ராகுல் அத்விக்கின் தோள்களை பற்ற அதை தட்டிவிட்டவன் முகத்தில் கடுமை பரவ " கான்ஸ்டபிள்ஸ் முதலில் இவனை லாக்அப் உள்ள தள்ளுங்க. அடுத்து இவர்களை " என சீறினான்.

" நான் என்னடா செய்தேன்?" ராகுல் குறைபட " அதை தான்டா நானும் கேட்கிறேன் இப்போது நீ என்ன செய்தாய்?" திருப்பினான் அத்விக் .

யோசனை செய்வதாய் தன் நெற்றியை அழுந்த பற்றிய ராகுல் " பாட்டு பாடினேன் மச்சி. அதற்கா என்னை லாக்அப்ல போட சொன்ன?"

இவர்களின் பேச்சை ஆர்வமாக பார்த்த கான்ஸ்டபிள்ஸை தன் கண்களால் கீழே விழுந்து கிடந்தவர்களை வண்டியில் ஏற்றுமாறு கட்டளையிட்டு " வெரி சாரி மச்சி. தப்பா சொல்லிட்டேன். லாக்அப்பிற்கு பதில் என்கவுண்டரில் போடணும் " என்றான் சிரியாமல்.

ராகுலின் முறைப்பை சட்டைசெய்யாது கான்ஸ்டபிளின் பிடியில் இருந்தவர்களிடம் " விஷ்வா இப்போது எங்கே இருப்பான்?" என்றான் அத்விக்.

விஷ்வாவின் நண்பர்கள் இருவரும் பார்வையை பரிமாறிக் கொள்ள " டேய் அங்க என்ன லுக்கு " மிரட்டும் தொனியில் நெருங்கினான்.

"இன்னும் அரை மணி நேரத்தில் இங்க வருவதாக கூறினான் சார் " கோரசாக இருவரும் சொல்ல " பலியாடு இஸ் ஆன் தி வே " என்றான் ராகுல்.

அடுத்த அறைக்குள் சென்ற அத்விக்கை பின் தொடர்ந்த ராகுல் டேபிளிலிருந்த டப்பாவை ஆராய்ந்து "ஹை அனஸ்தட்டிக் ஸ்ப்ரே. இப்போது சுயநினைவு திரும்புவது கஷ்டம் " என்றான் கோப குரலில்
" ரிலாக்ஸ் மச்சி. நம்ம போனை எதிர் பார்த்து டி.சி.பி சார் காத்திருப்பார் " என்று கூறும் போதே " டி.சி.பி ரமணன் " என்ற பெயரை தாங்கியபடி அத்விக்கின் கைப்பேசி அழைத்தது.

பெண் பத்திரமாக இருப்பதாகவும் கடத்தியவன் எல் கே ஜுவல்லர்ஸ் பையன் விஷ்வா என்றான் .
மேலும் அவனைப்பற்றிய சிறு விளக்கவுரை அளித்துவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் டி ஐ ஜி அலுவலகத்தில் இறங்கினான் ஐபிஎஸ் ஆபீஸர் அத்விக்.
ஆரம்பமே அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top