ஒரு காவ(த)லனின் கதை 1

Advertisement

Suguna Thangavel

Well-Known Member
ஒரு காவ(த)லனின் கதை 2
episode_2

"எக்ஸ்கியூஸ் மி சார்"

" உள்ள வாங்க... வெல்டன் மை பாய்ஸ். ஐ அம் ரியலி பிரவுட் அஸ் ஆல்வேஸ்" என்றபடி இருவரையும் வாழ்த்திய ரமணன் "நேஹா சென்ட்ரல் மினிஸ்டருடைய பொண்ணுன்னு பயங்கர பிரஷர். சொன்னமாதிரியே காணாமல் போன ஒரு மணி நேரத்தில் கண்டு பிடித்துள்ளீர்கள். எலக்ஷன் டைம் என்பதால் அனைவரும் எதிர்க்கட்சியினர் மீது சந்தேக பார்வையை வீசிக் கொண்டிருக்க எப்போதும்போல சாமர்த்தியமாக சரியான அணுகுமுறையை பயன்படுத்தி காரியத்தை வெற்றிகரமாக முடித்துள்ளீர்கள். எல் . கே ஜுவல்லர்ஸ் பையன் இதை செய்திருக்கிறான் என்று மத்திய அமைச்சராலே நம்ப முடியவில்லை. உங்களுக்கு அவர் நன்றியை தெரிவிக்கும்படி சொன்னவர் நாளை நேரில் சந்திப்பதாகவும் கூறினார். எல் . கே ஜுவல்லர்ஸ் பிரச்சனை பண்ணுவார்கள். அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்கள் சந்தேகம் அவன்மீது எப்படி திரும்பியது" என்ற கேள்வியோடு நிறுத்தினார்.

"இந்த கேஸ்..." என்று ஆரம்பித்த ராகுலை நான் சொல்கிறேன் என்ற கையசைவில் தடுத்து "அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தோம் சார். மிகவும் நல்ல மாதிரி என்றும் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருப்பதாகவும் கிடைத்த தகவலின்படி மாப்பிள்ளை பற்றி அறிந்து கொள்ள நேர்ந்தது. விஷ்வாவை ஏற்கனவே இரண்டு சமயங்களில் கண்டுள்ளோம். அவனது குணத்தைப் பற்றி தவறான அபிப்பிராயம் இருந்ததால் அவனை பின் தொடர்ந்தோம். போனை ஹேக் செய்ததில் சந்தேகம் வலுப்பெற்றது. இன்று காலையில் நேஹாவிற்கு விஷ்வா பற்றி தெரிந்ததால் அவனை எச்சரித்துவிட்டு வீட்டில் சொல்லி திருமணத்தை உடனே நிறுத்த போவதாக சண்டையிட்டு இருக்கிறாள். அதற்கு விஷ்வா இந்த கெட்ட பழக்கம் தன் வீட்டில் தெரியாது என்றும் வேறு வகையில் இந்த திருமணத்தை தானே நிறுத்துவதாகவும் உறுதி அளித்துவிட்டு இப்படி செய்திருக்கிறான் சார்" என்று விளக்கினான் அத்விக்.

"இந்த காலத்தில் எவனையும் நம்ப முடியாது " ஆதங்கத்தை வெளியிட்டவாறு "நாளை சந்திப்போம்" என்று விடைபெற்றார் ரமணன்.

"அது ஏன்டா என்னைப் பார்த்து அப்படி சொன்னாரு?" என்றான் ராகுல்

"எப்படி சொன்னாரு?"

"அதான் கடைசியா சொன்னாருல நம்பமுடியவில்லை என்று. இந்த பால் வடியும் முகத்தைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை எப்படி சொல்ல முடிந்தது? உன்னை பார்த்து சொன்னாலாவது ஒரு நியாயம் இருக்கு. அம்மாவிடம் அமெரிக்காவில் வேலை செய்வதாக கப்ஸா அடித்துக்கொண்டு இங்கே மும்பையில் என்னுடன் குப்பை கொட்டி கொண்டிருக்கிறாய். சரிதானே டா?" நண்பனின் முறைப்பை கண்டு தன் பேச்சை நிறுத்திய ராகுல் பின் விடாமல் "என்ன மச்சி ரொம்ப கூலா இருப்பாய் போல ஒரு சாய் சொல்லட்டுமா?" என்று வெறுப்பேற்றினான்.

"உன்னை!" அத்விக் ராகுலை அடிக்க கை ஓங்கவும் அவனது மொபைல் சத்தம் போடவும் சரியாக இருந்தது .

"ஆண்டவன் இருக்கான்டா" என்று சிரித்துக்கொண்டே படிக்கட்டுகளில் வேகமாக இறங்கியவன் கேமராக்களின் கதிர்வீச்சுகளை எதிர்கொள்ளலானான். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு உரிய வகையில் பதிலளிக்கையில் அத்விக்கும் இணைந்து கொண்டான்.

விடைபெறும் சமயத்தில் "ஓகே கைஸ் தென் அஸ் எ ரெக்வஸ்ட் எங்க போட்டோவ யூஸ் பண்ண வேண்டாம்" என்றான் வாடிக்கையாக.

" ஏன் சார் உங்களுக்கு பப்ளிசிட்டி பிடிக்காதா?" என்ற கேள்விக்கு தன் சிரிப்பையும் "சார் லாஸ்ட் வீக் உங்களை சிட்டி வாக் இல் பார்த்தேன். அன்றே உங்களை தெரிந்திருந்தால் கண்டிப்பாக ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருப்பேன். ஸோ இப்போது யோசித்துப் பார்த்தால் உங்கள் ஃபேன் கிளப்பிற்கு பயந்துதான் உங்கள் அடையாளத்தை மறைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது அப்படித்தானா அத்விக் சார்?" மற்றொரு இளம்பெண்ணின் வினாவிற்கு சிரிப்போடு சேர்த்து "உங்கள் யூகத்தில் ஒரு சிறு பிழை விசிறிகளுக்கு பயந்து என்பதற்கு பதில் திருடர்களுக்கு பயந்து என்று மாற்றி விட்டால் சரியாக பொருந்தும்" என்றான்.

"திருடர்களுக்கு பயந்தா!!! நோ சான்ஸ்... டு பி ஃபிராங்க் இப்போது மும்பை மக்கள் பயப்படாமல் இருக்கிறோம் என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். ஆல்சோ திருடர்கள் தான் முகமறியாத உங்களை காணமுடியாமல் இன்னும் பயந்து உள்ளார்கள். ஹேட்ஸ் ஆப் சார்" என்று தன் முத்துப் பற்கள் தெரிய வாழ்த்தினாள் அப்பத்திரிகையாளினி .

பேட்டி முடிந்து அனைவரும் சென்ற பிறகும் ஏதோ யோசனையில் இருந்த ராகுலை உலுக்கினான் "ஏன்டா பாதியிலேயே சைலன்ட் ஆகிவிட்டாய்" என்றதற்கு தன் தலையை ஒரு ஆட்டு ஆட்டி விட்டு "நத்திங் வா போகலாம்" என்று சென்றான் ராகுல்.

"யுவர் நத்திங் சேஸ் சம்திங் மேன்" என்று மட்டும் கூறிவிட்டு ராகுலை பின்தொடர்ந்தான் அத்விக்.
எந்த ஒரு விஷயத்தையும் வற்புறுத்தி கேட்கக் கூடாது என்பது இரு நண்பர்கள் இடையும் எழுதப்படாத கொள்கை அதன்பொருட்டு இருவரும் தத்தம் வேலைகளில் மூழ்கினர்.

எல்கே ஜுவல்லர்ஸ் உரிமையாளர் தனபால் விஷயம் அறிந்து கடும் கோபத்தில் "என் பையன் மேல் கையை வைத்தவனின் கையை எடுக்காமல் விடமாட்டேன். எவ்வளவு தைரியம்! அந்த போலீஸ்காரனுடைய ஃபுல் டீடைல்ஸ் இப்போது எனக்கு வந்தாக வேண்டும்" தன் ஆட்களிடம் கத்திக் கொண்டிருந்தார்.

" ஐயா நம்ம தம்பிய காலையில் வெளியே எடுத்திடலாம். இப்போது எந்த பிரச்சனை செய்தாலும் அவர்களுக்கு சாதகமாக தான் முடியும். கொஞ்சம் ஆற போடுவோம் . அந்த போலீசுக்கு ஒரு பாடம் புகட்டாமல் விடமாட்டேன்" என்றான் அவருடைய அல்லக்கை என்றழைக்கப்படும் சுப்புராஜ்.

அது சரியாக பட அரைமனதுடன் ஒப்புக்கொண்டார். ஆயினும் அந்த போலீஸ்காரனை சாதாரணமாக ஒரு மிரட்டலாவது விடாவிட்டால் அவர் தனபால் இல்லையே. இந்தியாவின் பிக் ஷாட். மதிக்கத்தக்க ஒரு பிசினஸ்மேன் ஆனதற்கு அவர் கடந்து வந்த பாதையில் ரத்த கம்பளியை போற்றலாம். 17 வயதில் பிக்பாக்கெட் ஆக இருந்தவன் இன்று இந்தியாவில் மொத்தம் 103 நகை கடைகளுக்கு சொந்தக்காரர். தான் கடந்த வெட்டு குத்து நினைவுகளின் வாடை கூட தன் மகன் அறியாதவாறு பார்த்துக்கொண்டார். ஒரே மகன் அவனது உயிராகி போனான். அவன் பிறந்த பிறகுதான் இந்த உச்சம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு பெண்ணை கடத்துவது அவரைப் பொருத்தவரை ஒரு சாதாரண செயலாக இருந்தாலும் தன் மகன் இதை செய்தான் என்றறிந்தும் ஒரு தந்தையாக தோற்றுப் போனார் .

அடுத்த நாள் தன் மகனை நேரில் கண்டதும் "அப்பா என்னை அரெஸ்ட் பண்ணியவனை சும்மா விடக்கூடாது . அப்புறம் அந்த நேஹா அவளால் தான் எல்லாம்" என்று புலம்பிய மகனின் கன்னத்தை அவரது கரம் பதம் பார்த்தது. பிறந்ததிலிருந்து அடித்திராத அப்பா ஏன் என்ன கேட்டாலும் மறுத்திறாத அப்பாவின் இன்றைய அணுகுமுறையில் ஸ்தம்பித்து அப்படியே உறைந்து நின்றான் விஷ்வா.

"செய்வதையும் செய்துவிட்டு பேச்சை பார். என் வாழ்வில் முதன்முறையாக நான் தப்பானவன் தான். என் வளர்ப்பு தப்பானது என்று நிரூபித்ததற்கு நன்றி" என்று மொழிந்து விட்டு வெளியேறினார். காரினுள் ஏறியவருக்கு மகனின் கோலம் வெகுவாக பாதித்தது. என் மகனை என் கையால் அடிக்க வைத்து விட்டாய் அல்லவா உன்னை!!! என்று ஒட்டு மொத்த கோபமும் அத்விக்கிடம் சென்றிருந்தது. "எனக்கு அவன பார்த்தே ஆகணும்" என்று பிடிவாதமாக தன் அல்லக்கையின் வற்புறுத்தலையும் மீறி அத்விக்கை காணச் சென்றார்.

காவல் நிலையத்திலிருந்து எஸ்பி அலுவலகத்திற்கு ஒரு முக்கியமான மீட்டிங்கிற்காக புறப்பட ஆயத்தமானவனை எல் கே ஜுவல்லர்ஸின் ஹம்மர் வழிமறித்தது.
"வணக்கம் அத்விக் சார். நம்ம பையன்னு தெரிஞ்சும் இப்படி செய்திருக்கக் கூடாது என்னிடம் சொல்லியிருந்தால் அவனுக்கு கூறும் விதத்தில் எடுத்துச் சொல்லி இருப்பேன். இருந்தும் உங்கள் மன தைரியத்தை பாராட்டுகிறேன்.பலே.. இதற்கு கைமாறாக ஏதாவது செய்ய வேண்டுமே... அதான் உங்கள் குடும்பத்திற்கு ஒரு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். இதை மறக்க கூடாது சார் மறுக்கவும் முடியாது" என்று பேச்சில் வன்மத்தை கலந்து இதழ்களில் சிரிப்பை சுமந்து கூறினான்.

சற்றும் அசராதவனாக "ஐ அம் வ
 

Suguna Thangavel

Well-Known Member
ஒரு_காவ(த)லனின்_கதை_3
Episode_3

மாதம் ஒருமுறை இங்கு வருவது அத்விக்கின் வழக்கம். போனில் அம்மாவிடம் அவரது நல விசாரிப்புகள் தவிர அதிகம் பேசாமல் பார்த்துக்கொள்வான். வீட்டினர் பேச்சு குரல் கேட்டால் உடனே அணைத்தும் விடுவான். அதிலும் அன்று "யாரிடம் மா பேசிக்கொண்டு இருக்கிறாய்?" என்ற அத்ரிஷின் கேள்விக்கு "அத்வி தான்டா" என பேச்சு சுவாரஸ்யத்தில் அம்மா கூறி முடிக்கும் முன்னே "என்னம்மா!! அண்ணனா அண்ணனாம்மா?" என்று அழுகையுடனே ஒலித்தது எதிரொலி. பதற்றத்தில் எதையும் கூறிவிடும் முன்னே 'அத்வி பிரண்டு கிட்ட பேசிகிட்டு இருந்தேன்' என்று தம்பியிடம் சமாளியுங்கள் என போனை வைத்தான்.

எதற்காக இந்த ஒளிவு மறைவு... யாருக்காக இத்தனை ஓட்டம்... நினைக்க நினைக்க பன்மடங்காகப் பெருகி இருந்த வெறுப்பு வருத்தமாய் மாறி இருப்பதே நிஜம். எந்த வீட்டில் அப்பா மகன் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். வாக்குவாதத்தின் போது விசிறி அடிக்கிற வார்த்தைகள் எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. எத்தனை பேரின் வாழ்க்கையை சுழற்றிப் போட்டு வேடிக்கை பார்க்கிறது. அப்படிப்பட்ட கூர்மையான வார்த்தைகளுக்கு பின்பும் சிலர் அதே பாதையில் தங்களை தக்கவைத்துக் கொள்கிறார்கள். எல்லாம் இந்த மறப்போம் மன்னிப்போம் பாலிசி போல. அதிலும் சிலர் அனைத்தையும் துடைத்துவிட்டு போகும் ரகம். உண்மையில் இவர்களுக்கு அவ்வளவு எளிதில் பிபி சுகர் மாத்திரைகளை தொட நேராது. கண்டிப்பாக அத்விக் இந்த கடைசி வட்டாரத்துக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன். எள் என்றால் கோபம். கோபம் வந்தால் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது. அந்த மாதிரியான கோபமே இன்றைய அத்விக் ஐபிஎஸ் அவதாரம். இந்த அவதாரத்தில் கோபத்தை அவ்வபோது நிதானம் மிஞ்சி வருகிறது. அதற்கான முக்கிய பங்கினை யோகா கைப்பற்றுகிறது. இப்போதெல்லாம் அம்மா பேசும் சமயங்களில் ஒருமுறையாவது வீட்டிற்கு சென்று வரலாமா என்று மேலோங்கும் எண்ணங்களை தன்மானம் மறுக்கிறது. ஆரம்பகாலத்தில் தான் பேசுவது வீட்டினர் யாருக்காவது தெரிந்தால் தொடர்பு கொள்ள மாட்டேன் என்ற மிரட்டல்களை ஆவது அம்மாவிடமிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று பார்த்தால் இரு முட்டை கண்கள் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு வைத்திருக்கிறது. ஆம் அத்ரிஷிற்கு ரகசியம் என்பது யாதெனில் தனக்குத் தெரிந்து இருக்கிறதோ இல்லையோ அவளுக்கு அனைத்தும் சென்றிருக்க வேண்டும். அப்படி அவளுக்கு ஏதாவது தெரிந்தால் அப்பா காதிற்கு அச்செய்தி போவது மட்டுமில்லாமல் பெல்ட் அடியும் நிச்சயம்.

கல்லூரியில் முதலாமாண்டு ராகிங் என்ற பெயரில் சிகரெட் புகையை வட்டவட்டமாக விட சொன்ன போது 'எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாது' என்று சொன்னது எவ்வளவு அவமானமாக இருந்தது. அன்றிரவு எப்படியாவது நன்கு பழகி அடுத்த நாள் சீனியர்களிடம் கெத்து காட்டிவிடலாம் என்ற பயிற்சியில் மண்ணை வாரி இரைத்ததுமில்லாமல் அப்பாவின் பெல்ட் பிய்ந்ததற்கான காரணமும் அந்த குட்டி சாத்தான் தான். அவளைப் பற்றி நினைத்தால் தலைவலி தான் மிஞ்சும். ஏன் தான் இங்கு வந்ததற்கு அஸ்திவாரம் இட்டவளே அவள்தானே. தன்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு முழு ராஜ்யத்தையும் கைப்பற்றி இருப்பாள் அடங்காபிடாரி.

எப்படித்தான் ஒரு சமத்துப் பையனாகிய விக்னவிற்கு இப்பேர்பட்ட ராட்சசி தங்கையாக பிறந்தாளோ! என்று வியக்காத நாட்கள் இல்லை. மிஸ் யூ பேட்லி டா விக்கி... எனக்காக எத்தனையோ முறை நான் செய்த தவறுகளை ஏற்றுக் கொண்டவன். வீட்டில் யாருக்காவது ஏதாவது ஒன்று என்றாலும் முதலில் வந்து நிற்பவன்.
பத்தாவது ஹிஸ்டரி பொதுத் தேர்வின் போது அப்பத்தாவிற்கு உடம்பு முடியாமல் ஐசியூவில் இருந்த சமயத்தில் எவ்வளவு வற்புறுத்தியும் வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கி விட்டவன் அடுத்த நாள் தேர்வையும் தவறாமல் எழுதினான். இதில் எனக்கு ஏற்பட்ட கொடுமை என்னவென்றால் அந்தப் பரீட்சையில் என்னைவிட 32 மதிப்பெண்கள் அவன் அதிகம் பெற்றிருந்தது தான். அந்த ஹிஸ்டரி எக்ஸாம் என் ஹிஸ்டரியையும் புரட்டிப்போட்டது.

"என்னடா இது... பார்டரில் பாஸ் பண்ணி இருக்க அதுவும் திருத்தியவன் யாரோ உன் மேல இறக்கப்பட்டு ரெண்டு மூணு மார்க் போட்டு பாஸ் பண்ணி விட்டு இருப்பான்" என்று அப்பா எகிறியதற்கு "பாஸ் பண்ற அளவுக்கு மார்க் எடுத்து இருந்தாதான் அந்த ரெண்டு மூணு கிரேஸ் மார்க் கிடைக்கும்" என்று பன்மடங்காக குதித்தது நினைவில் ஆடியது. மேலும் "நானும் மனுஷன் தான். அன்று நைட் 11 மணி வரை அப்பத்தா கூட தான் இருந்தேன். வீட்டிற்கு சென்று படிப்பிலும் முழு கவனத்தை செலுத்த முடியலை. இரண்டு மணி நேரம் புரட்டியதற்கு இதுவே பெருசு" என்று சேர்த்து கூறியது அப்பாவின் ரத்த அழுத்தத்தை கூட்டிவிட்டது.

"ஹோ துரை சார் அன்றுதான் ஹிஸ்டரி புக்கை பார்த்தாரோ! இந்த ஒரு வருடமும் என்ன சார் பண்ணீங்க? அன்று இரவு முழுவதும் ஹாஸ்பிடல இருந்து விக்னவ் எப்படிடா ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணினான்? புள்ளனா அதுபுள்ள. எனக்கும் வந்து பொறந்திருக்கே" என்று வசை பாடினார் ஜெகன்.

"ஏன் பிறந்தேனா...." தன் வாக்கியத்தை முடிக்க விடாமல் தன்னைப் பற்றி இழுத்த பிருந்தா அத்தை "அண்ணா அமைதியா இரு.. அதுதான் மீதி எல்லா சப்ஜெக்ட்லயும் ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணி இருக்கான்ல விடு" என்று அவரை போக சொல்லிவிட்டு தன்னையும் அவரோட அழைத்துச் சென்றுவிட்டார்.

அப்பாவின் திட்டிற்கு பரிசாக அன்று மாலை மாயாஜால். "என்னால் தானடா உனக்கு இவ்வளவு திட்டும்" என்று அழுத விக்னவை இன்று நினைத்தாலும் புல்லரிக்கும். "டேய் திட்டு வாங்கிய தடிமாடே எனக்கு என்னவென்று கொட்டிக் கொண்டிருக்கிறான் நீ ஏன்டா அழுகிற" என்று சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு ஆயத்தமானாள் விக்னவின் பாசமலர்.

" ஏன்டி என் பேரனையா தடிமாடுனு சொல்ற.. வயசுல மூத்தவன் மரியாதையா அத்தான்னு கூப்பிடு என்றால் கேட்கிறாயா" என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்த மரகதத்திடம் "ஏய் கிழவி நீ சும்மா இரு உன்னால் தான் இவ்வளவு பிரச்சனையும். உன்னை யாரு வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க வந்தவர்கள் கொண்டுவந்த ஸ்வீட் பாக்ஸை ஆட்டைய போட சொன்னது. ஒன்னு ரெண்டு சாப்பிட்டாலே ஒத்துக்காது இதுல முழு பாக்ஸையும் காலி பண்ணி இருக்க. உனக்கு என்ன வயசாகுது தெரியுமா தெரியாதா ரொம்ப யூத்னு நெனப்பு என்னேரமும் அத்தையும் அம்மாவும் உன்னை கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா ஒழுங்கா என்கூட மல்லு கட்டுவாவது கட்டுப்பாடோட இரு இல்லாவிட்டால் நானே ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவேன்" என்று மூக்கை விடைத்துக்கொண்டு ஆத்திரமாய் பாய்ந்தாள்.

" வாய் ரொம்ப நீளுது அம்மாச்சியிடம் சாரி சொல்லுடி" என்று அவள் அம்மா பிருந்தா சொல்லியதை செவ்வனே செய்து கொண்டிருந்தான் விக்னவ். "அவள் பேசியதை மனசுல வச்சுக்காத அம்மாச்சி. அன்று எல்லோரையும்விட அவதான் ரொம்ப பயந்துட்டா. ஓவர் அழுகை. சாப்பிடக் கூட இல்லை. இனி இப்படி பேச மாட்டாள் நீயும் ஸ்வீட் சாப்பிடாத சரியா" என்று விக்னவ் கெஞ்சி கொஞ்சியதை ஒருவித வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்த அத்தையையும் அம்மாவையும் "ஓவர் செல்லம் உடம்புக்கு ஆகாது" என்று மொழிந்து விட்டு எழுந்து சென்றாள்.

" யானை இல்லாத இடத்தில் மணியோசைக்கு என்ன வேலை" என்பதற்கு ஏற்ப அத்ரிஷும் கிளம்பியிருந்தான்.

"ஏன்டா என் பேத்தியை யானைங்கிற?" என்று அத்விக்கிடம் அடுத்து பாய்ந்த மரகதத்திடம் "நானே உன் மேல கொலைவெறியில் இருக்கேன். அவ கொட்டிவிட்டு போய்ட்டா நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை அமைதியா இருந்துக்கோ" என்று அத்விக் எச்சரிக்க கப்சிப் ஆகி விட்டார்.

அரை மணி நேரம் ஆகியும் வந்து சேர்ந்திராத இளைய பேரனையும் பேத்தியையும் பார்த்து வருமாறு சொன்ன மரகதத்திடம் "சமாதானம் செய்ய அத்ரிஷ் போனான் தானே கூட்டி வருவான்" என்றான் விக்னவ்.

"இவ்வளவு நேரம் என்னத்த சொல்லிடா சமாதானம் செய்வான்"

"என்னத்த சொல்லி என்று கேட்காத அப்பத்தா என்னத்த கொடுத்துனு கேளு. அல்ரெடி பர்கரும் கோக்கும் ஃபஸ்ட் இன்னிங்ஸ்ல உள்ள போயிருக்கும் இப்போ இந்த கையில பீட்சாவும் அந்த கையில மாஸாவுமா உன் பேத்தி காட்சியளிப்பா பாரு" என்று அத்விக் கூறி முடிப்பதற்குள் அந்த காட்சி அவர்களுக்கு தென்பட்டதால் குபீரென சிரிப்பலை எழுந்தது. அந்த சிரிப்பு இப்போதும் அவன் உதடுகளில் உறைய தன் குடும்பத்தினரின் உவகை அன்று போல் என்றும் நிலைத்திருக்க வேண்டும் அவர்களை எவ்வழியிலும் எவனையும் நெருங்கி விடமாட்டேன் என்று சூளுரை போல வாய்விட்டே கூறினான்.

அத்விக் தன் இரு வருட சர்வீஸில் இதுபோன்ற இன்னும் பிற மிரட்டல்களை பார்த்திராதவன் அல்ல. ஆயினும் இந்த தனபால் கண்டிப்பாக ஏதேனும் செய்வானென்று உள்மனம் உணர்த்தியது. அதுவும் குடும்பத்திற்கு விருந்து என பல்லைக் காட்டிக்கொண்டு அழைத்த போது அந்த பற்களை அடித்து நொறுக்க ஆயத்தமானவன் கைகளை கட்டுப்படுத்தி அவனுக்கு பிரியாவிடை அளித்தான். இருந்தாலும் அவன் கிளறி விட்டு சென்ற குடும்த்தினரின் நினைவுகளுக்காக தற்போதைய ஜூஹா பீச் விஜயம்.
 

Suguna Thangavel

Well-Known Member
#ஒரு காவ(த)லனின் கதை 4
#episode_4

எப்போதும் குடும்பத்தினரை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் வேலையே நகராது என்பதை உணர்ந்து தன்னை முற்றிலும் பிஸியாகவே வைத்துக்கொண்டான் அத்விக். அவர்களுக்கு மாதத்தில் அரை நாள் வீதம் ஒதுக்கியவன் அந்த நினைவலைகளை அசை போடுவதற்கு இந்த பீச்சை தேர்ந்தெடுத்தான். ஆரம்ப காலத்தில் அத்விக்குடன் இந்த பீச் யோகாவில் (அப்படித்தான் பெயர்சூட்டி இருந்தான்... சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பது தானாக சிரிப்பது எப்போதாவது தென்படும் கண்ணீர்....) பங்கேற்ற ராகுல் மாதத்திற்கு ஒருநாள் முழு சந்திரமுகியாக மாறி இருக்கிற உன்னை பார்த்தேன் என்றால் மாதம் முழுவதும் நான் வேட்டையனாக நேரிடும் என்ற சுய ஆலோசனைக்கு பிறகே அவனோடு பீச்சுக்கு வருவதை கை விட்டான்.

அத்விக்கின் குடும்ப சூழ்நிலையை மிஸ் பண்ணாமல் பார்த்துக் கொள்வதில் ராகுலின் நட்பு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஆயினும் அவனிடம் அவர்கள் பற்றி பகிர்ந்து கொண்டதில்லை.

அன்பான அம்மா ரூபா. ஹிட்லரான அப்பா ஜெகன். கால்வாசி நேரம் தன் பேச்சைக் கேட்கும் தம்பி அத்ரிஷ். ஆம் கால்வாசி நேரம் தான் கேட்பான். அவனின் முக்கால்வாசி நேரம் அந்த பத்ரகாளியின் பிடியில். அவளது அண்ணன் விக்னவ் தன் உயர் தோழன்.

அவர்கள் தந்தை ஹரிஹரன். அவரால்தான் அந்த குடும்பத்தில் இருபது வருடங்கள் தான் இருந்ததே. தனக்கும் அப்பாவிற்கும் வாக்குவாதம் என்று தெரிந்தாலே ஃபாக்டரியில் முக்கியமான வேலைக்கு நிர்பந்தம் ஏற்பட்டு விடும் . அல்லது ஆபீஸில் திடீர் மீட்டிங் அறிவிக்கப்படும். பிருந்தா அத்தை உடனே மாமாவை அழைத்து விடுவார். தன் தங்கையின் பேச்சைக் கேட்கிறாரோ இல்லையோ மச்சான் ஆகிய ஹரிஹரனின் பேச்சை இதுவரை ஜெகன் தட்டியதில்லை.

அதுவே தமிழ்நாட்டின் டாப் இன்டஸ்ட்ரியல்ஸ் லிஸ்டில் ஹகன் இன்டஸ்ட்ரீஸ் இடம் பிடித்ததற்கான முக்கிய காரணம். அப்பாவும் மாமாவும் இணைந்து ஆரம்பித்ததுதான். அவர்களின் ஒட்டுமொத்த உழைப்பு. ஹரிஹரன் அவர்களது வருமானத்தை பெருக்குவதை விட அப்பா மகனின் (ஜெகன்-அத்விக்) சண்டையை குறுக்குவதையே முழுநேர வேலையையாக பார்த்துக் கொண்டார். அன்றும் மாமா சண்டையின்போது இருந்திருந்தார் என்றால் மென்மேலும் பிரச்சனையை வளர விட்டிருக்காமல் பேச்சினை தடுத்திருப்பார். தன்னை அவர்களிடமிருந்து பிரிந்து செல்ல அனுமதித்திருக்கமாட்டார்.

எங்கள் அனைவருக்கும் தூணாக மரகதம் அப்பத்தா. ஜெகன் பிருந்தாவை ஈன்றவர். மகன் மற்றும் மகளது வீடுகள் ஒரே காம்பவுண்டுக்குள் இருப்பதால் அவருக்கு அலைச்சல் குறைவு என்று யாரும் தப்பாக எடைபோட்டு விடமுடியாது. வாரத்தில் ஏழு நாட்களும் பிஸியாகவே இருப்பவர். வீட்டில் அனைத்து சுப காரியங்களிலும் முதன்மை வகிப்பவர். உறவினர் வீட்டு விசேஷங்களிலும் பங்கேற்காமல் இருக்கமாட்டார். பேரப்பிள்ளைகளிடம் கொள்ளை பிரியம். முக்கியமாக அவளிடத்தில்.

கடைக்குட்டியாக அந்த குட்டி சாத்தான் பிறந்தமையால் வீட்டில் அனைவரிடத்திலுமே எல்லாவற்றிலுமே செல்லம். ஹிட்லரின் டார்லிங்.... இல்லையில்லை அவளுடைய பெரிய டார்லிங் தான் அவர். அப்படித்தான் அவள் என் அப்பாவை அழைப்பாள். பி.டி (பெரிய டார்லிங்) . அவளது சி.டி (சிறிய டார்லிங்) அவளின் எடுபுடி அத்ரிஷ். அவர்களுக்கு இடைப்பட்டவனான தனக்கு அவள் வைத்திருக்கும் பெயர் தடிமாடு. கோபம் வரும் சமயங்களில் அப்படித்தான் கத்துவாள். அப்பத்தா தான் அவளை அதட்டும். சில நேரங்களில் "பிக் பிரின்சஸ் உன் பேரன் செய்த காரியத்திற்கு இவ்வளவு குறைவாக திட்டுகிறேன் என்று சந்தோஷப்படு" அமைதியாக எடுத்துரைப்பாள். பொறுமை பறக்கும் சமயங்களில் அவளது பிக் பிரின்சஸ் கிழவி ஆகிவிடுவார்.

அனைவரிடத்திலும் செல்லம் கொஞ்சுவதில் அவளுக்கு போட்டியாக இருப்பவன் டைகர். ஆனால் அவனும் அவள் சொல்லிற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பான். அவளது பத்தாவது பிறந்த நாளின்போது உனக்கு என்ன டார்லிங் வேண்டுமென்று ஜெகன் கேட்டதற்கு "போனவாரம் வண்டலூர் ஜூவில் பார்த்தோமே அந்த டைகர் வேணும் பி டி" என்றாள். அன்று மாலையே ஒரு டாபர்மேனை வாங்கி வந்தவர் அவள் கையில் திணித்து "ஹியர் இஸ் யுவர் டைகர்" என்றார்.
அவள் பிறந்தநாள் அன்று அவன் வீட்டிற்கு வந்ததால் இருவரும் வருடாவருடம் சேர்ந்துதான் கேக் வெட்டுவார்கள். அவளுக்கு ஏதாவது என்னிடம் வேண்டுமென்றாலும் டைகர் தான் முதலில் வந்து நிற்பான்.

எங்கு ஆரம்பித்தாலும் அவளது நினைவுகளில் தான் முற்றும். சில சமயம் முடிவுபெறாமல் காயும். தன்னை வேண்டாம், பிடிக்கவில்லை, திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று சொற்களால் அறைந்தவளின் மீது அளவுகடந்த ஆத்திரம். அத்தோடு நிறுத்தினாளா வேண்டாம் என்று எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காமல் தன்னை நிராகரிக்கும் பொருட்டு ஆர்யனின் லவ் லெட்டரை பெற்றுக்கொண்டாள். திருமணம் செய்து கொண்டார்களா என்ற கேள்விக்கு விடை தெரியாது ஆயினும் அந்த கேள்வி அடிக்கடி தன்னுள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

ஆரம்பத்தில் அம்மா அவளை பற்றி பேச வந்தபோது "அவள் பெயரை சொன்னாலே இனி நான் பேசமாட்டேன்" என்று போனை தூக்கி விசிறி அடித்ததில் அது இரண்டாக உடைந்தது. உடைந்த போனை எடுத்து அதை சரி செய்து என் கையில் கொடுத்து "இதை ஒட்ட வைக்கிறது ஈசி மச்சி ... ஆனால் இவ்வளவு கோபத்தினால் உடம்பிற்கு ஏதாவது ஏற்பட்டால் அதை சரி செய்வது அவ்வளவு சுலபமாக இருக்காது. என்னிடம் எதையும் நீ சொல்ல வேண்டாம். ஆனால் நான் சொல்வதை செய் ப்ளீஸ்" என்று யோகா பயிற்சியில் சேர்த்து விட்டான் ராகுல்.

அவனிடத்தில் எதையும் மறைக்க வேண்டும் என்று தன் குடும்பத்தை பற்றி சொல்லாமல் இருக்கவில்லை. அவனது பாயிண்ட் ஆஃப் வியூவில் ஒரு அப்பா மகனின் சண்டை. அதுவும் வாடிக்கையான ஒன்றிற்கு இத்தனை பெரிய பிரிவு தேவையற்றது. கண்டிப்பாக தன்னை ஊருக்கு செல்ல சொல்வான் அல்லது அவர்களுக்கு தகவல் கொடுப்பான். இரண்டிலுமே தனக்கு விருப்பம் இல்லாததால் எதைப்பற்றியும் கூறாமல் விட்டு விட்டான் அத்விக். ஆனால் ராகுலின் அம்மா ஜெயந்தியிடம் அத்விக் பேசாமல் இருக்க மாட்டான். எப்போது போன் செய்தாலும் அவரும் பேசாமல் விட்டதில்லை.

ராகுல் பிறந்த ஒரு வருடத்திலேயே அவன் அப்பா தவறிவிட்டார். சொந்த பந்தங்கள் ஊர் நிறைய இருந்தும் ஒருவரின் உதவியுமின்றி சிங்கிள் பேரண்டாக ராகுலை வளர்த்து இன்று ஒரு பெரிய பதவியில் அமர்த்தியிருக்கிறார். அவர்மேல் அளவுகடந்த மரியாதையும் பாசமும் தானாக உருவாகி விட்டது. வேலைப்பளுவை பற்றி நன்கு அறிந்திருந்ததால் ராகுல் பிஸியாக இருக்கும் சமயத்தில் தன்னிடம் மட்டும் பேசிவிட்டு வைப்பார். அப்படி ஒரு சமயம் பேசும்போது "ராகுலின் கல்யாண விஷயம் பற்றி தான்பா அவனுக்கு புரியும் விதத்தில் நீ சொன்னால் கேட்டுக் கொள்வான்" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ராகுல் போனை பறித்துக்கொண்டு சென்றுவிட்டான். அதன்பின் அவரும் அந்த பேச்சினை எடுக்கவில்லை தானாக கேட்டபோதும் அவர் பேச்சை மாற்றியதிலிருந்து தெரிந்தது இது ராகுலின் வேலை என்று. அவனிடம் இது பற்றி கேட்டபோது "அதை நாங்க பாத்துக்குறோம் சார் நீங்க ஆபீசுக்கு கிளம்பும் வழியைப் பாருங்கள்" என்று இரவு 11 மணிக்கு பதிலளித்தான். அம்மாவிடம் நான் அமெரிக்காவில் இருப்பதாக நாடகமாடி கொண்டிருப்பதால் அவனுக்கு பிடிக்காததை எப்போதாவது சொன்னால் இப்படி நக்கலாக பேசி வைப்பது ராகுலின் வழக்கம்.

அப்படி ராகுலின் வழக்கப்படி இன்றைய இந்த நான்கு மணி நேரத்தில் பீச் வருகைக்காக அத்விக்கிற்கு 40 முறையாவது அழைத்திருப்பான் என்று எண்ணியவாறு சைலன்ட் மோடில் போட்டு வைத்திருந்த தன் மொபைலை எடுத்துப் பார்த்தவனது விழிகளுடன் சேர்ந்து இதழ்களும் சிரித்தன. 42 மிஸ்டு கால்ஸ். சாதாரண நாட்களிலேயே இது வாடிக்கையாக இருக்கும்போது இன்றைய முக்கிய கான்ஃபரன்ஸ் மீட்டிங்கை விட்டுவிட்டு வந்தமையால் அவன் கோபம் அறிந்து அழைத்தான். ஹலோ கூட சொல்லாது "எங்கடா போன?" என்ற குரலில் இருந்தது வருத்தமா ஆவேசமா என்று பகுத்தறிய முடியவில்லை. ஆனால் சந்தோஷ மனநிலையில் கேட்பது போலவும் தெரிந்தது. அந்த தைரியத்தில் "வேற எங்கடா பீச் யோகாவிற்கு தான்" என்று சொன்னதுதான் தாமதம். ராகுலுக்கு தெரிந்த அனைத்து மொழிகளிலும் திட்டி தீர்த்து விட்டான்.

" இன்று என்ன நடந்தது தெரியுமாடா?" என்று ஆவலாக வினவினான் ராகுல்.

" யூ நோ மச்சி அங்கு என்ன நடப்பது என்பதை மனக்கண்ணில் காட்டும் அளவிற்கு பீச்யோகாவில் நான் முன்னேறவில்லை"

" டேய் என்ன கொலைகாரன் ஆக்காத ...இட்ஸ் சாம்திங் சூப்பர் ஸ்பெஷல்... கெஸ் மேன்"

சற்று யோசித்த அத்விக் ஆச்சரிய குரலில் "வெஜ் பப்ஸ்க்கு பதிலாக எக் பப்ஸ் கொடுத்தாங்களா" என்றான் .

"டேய்ய்ய்ய்ய்" என்ற அலறலில் "ஓகே மச்சி ரிலாக்ஸ் இப்போ கரெக்டா கெஸ் பண்றேன் பாரு" என்றான் சமாதானப்படுத்தும் விதமாக.

" ஒரு ஆணியையும் புடுங்க வேணாம். உன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சர்ப்ரைஸ். ஐ லவ் யூ மச்சி ரொம்ப பெருமையா இருக்கிறது" என்று தழுதழுத்த குரலில் கூறினான்.

"என்னடா சரக்கு அடிச்சிருக்கியா"

"இல்ல மச்சி ஆனால் கண்டிப்பாக இன்று ஒரு பெக் அடிப்பேன் நோ சொல்லக்கூடாது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன்"
......
இதுநாள் வரை அத்விக் குடித்து ராகுல் பார்த்ததில்லை. ராகுலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவன் அல்ல. எப்போதாவது ஏதாவது கேசில் மன சங்கடம் ஏற்பட்டால் சில கிராண்ட் பார்ட்டி அட்டென்ட் செய்தால் எடுத்துக் கொள்வான்.

" அவ்வளவு நல்லவனா டா நீ" என்று ராகுல் அத்விக்கை முன்பு ஒரு சமயம் கேலி செய்ததற்கு "டெஃபனட்லி நோ மச்சி . அந்த சரக்கு என்னிடம் வர கொடுத்து வைக்கவில்லை என்று நினைத்துக்கொள். குடியை நிறுத்து என்று சொல்ல மாட்டேன் ஆனால் குறைத்துக் கொள். பெரிய இடத்து பார்ட்டி எல்லாம் ஒரு போதை மச்சி. போனோமா வேலையை பார்த்தோமா வந்தோமா என்று இருக்கணும். தென் சம் ராங்லி மூவ்ட் கேசஸ் எல்லாவற்றையும் ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் என்பது விதி. இதையும் தாண்டி பார்க்கப்போகிறோம் அதற்குண்டான சுய கட்டுப்பாட்டை நீ உன்னிடம் தேடு மச்சி குடியிடமில்லை" என்றான்.

" இதற்கு நீ குடிக்கவே கூடாது என்று சொல்லியிருக்கலாம் "என்று கூறியதோடு முடிந்த மட்டும் குறைத்துக் கொண்டான் ராகுல்.
.........

" இன்று நீ அந்த பீச்சில் எந்த போதி மரத்துக்கு அடியில் அமர்ந்து புத்தி சொன்னாலும் அதைக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை"

நண்பனது மகிழ்ச்சி அத்விக்கையும் தொற்றிக்கொள்ள "அப்படி என்ன சந்தோஷத்துலடா தலை கால் புரியாமல் ஆடி கொண்டிருக்கிறாய்" என்றான்

" நேரில் வா சொல்கிறேன் உன்னை பார்த்து சொல்லவேண்டும் உடனே புறப்பட்டு வா அல்லது நான் அங்கே வருவேன்"

" ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது மச்சி. சரி இரு கமிஷனர் லைன்ல வர்றாரு நான் அப்புறம் கூப்பிடுகிறேன்" என்றவனை ராகுலின் அதிவேக "நோ" தடுத்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top