என் மன்னவன் நீ தானே டா..4

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே..இதோ அடுத்த பதிவு..

என் மன்னவன் நீ தானே டா...4

காலங்கள் உருண்டோடின திவ்யா பொறியியல் கடைசி வருடத்திலும், வர்ஷி பத்தாம் வகுப்பும் படித்துக்கொண்டு இருந்தார்கள்.திவ்யா தந்தையின் மாற்றத்திர்க்கு சகுந்தலா தான் காரணம் என்பதை அறிந்தாள்,அதனால் தனது அத்தையை கண்டாலே ஆகாது.கலைவாணி வேறு திவ்யா பெரியவர்கள் விஷயங்களில் தலையிடாதே என்று சற்று கோபமாக கூறிய நாளில் இருந்து அவரிடமும் பேச்சை குறைத்துக்கொண்டாள்.அவளது சிந்தனை முழுவதும் தானும் தனது தாத்தா போல் ஆக வேண்டும் என்பதிலேயே இருக்கும்.வீட்டு சூழ்நிலை சரியில்லை என்பதால் வீட்ற்கு வருவதையே குறைத்தாள்,கலைவாணிக்கு மகளின் மாற்றம் கவலை அளித்தாலும்,எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார்.

கலைவாணி எவ்வளவு முயன்றும் சுகுமாரை குடியில் இருந்து மீட்க முடியவில்லை.உண்மையில் கலைவாணியின் முயற்சியை சகுந்தலா முறியடித்தார் என்று சொல்லவேண்டும். சகுந்தலா சுகுமாரை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர குடிபழக்கம் உதவியது,அதனால் அவர் கலைவாணியின் முயற்சிகளை முறியடித்தார்.ஆனால் சகுந்தலா அறியாத ஒன்று சுகுமார் போதை பொருள்களுக்கும் அடிமையாகி இருந்தார்.இதை தனது உதவியாளர் மூலம் தெரிந்து கொண்ட ராம் மோகன்,சுகமாரின் அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்கி இருந்தார்.

தனது தொழிலை விரிவுபடுத்த வெளிநாட்டில் இருந்தவர்,தனது உதவியாளர் கூறிய செய்தியில் அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்,இருந்தும் இது தான் முடங்கும் சமயம் அல்ல என்று உணர்ந்தவர் அனைத்து அலுவலக வேலைகளையும் துரிதபடித்திருந்தார்.

வீட்டில் உள்ளவர்கள் அறியும் முன் இதை தாம் தடுக்க வேண்டும் என்று எண்ணியே அவர் சுகுமாரின் வங்கி கணக்கை முடக்கியது ஆனால் அவர் எதிர்பாராத விதமாக அனைத்தும் நடந்தேரியது.

காலையில் இருந்தே தலை வின் வின் என்று தெரிப்பதை போல உணர்ந்தார் சுகுமார்.தனது சட்டை பாக்கெட்டை துழாவியவர் அதில் இருந்த சிறு பாக்கேட்டில் போதை பொடி இருக்கிறதா என்று தேடினார்,அதில் போதுமான அளவு இல்லை என்ற உடன் தனது ஏட்டிஎம் கார்டை எடுத்துக்கொண்டு போதை பொருள் வாங்க சென்றார்.அங்கே வங்கியின் அனைத்து கணக்குகளையும் தனது தந்தை முடக்கியது தெரிந்தவுடன்,எதுவும் வாங்க முடியாமல் அடக்கப்பட்ட கோபத்துடன் வீடு வந்தார்.

தனது தம்பியை காண வந்த சகுந்தலா,அவன் கோபத்தில் உள்ளதைக் கண்டு என்னவென்று விசாரித்துவிட்டு உள்ளுகுள் கலைவாணியை விரட்ட இதுதான் சமயம் என்று கணக்கிட்டு,தனது தம்பியிடம் இது அனைத்தையும் செய்தது கலைவாணி தான் என்றார்.அதில் ஆத்திரத்துடன் கலைவாணியிடம் சென்றார் சுகுமார்.சகுந்தலாவோ தனது சகுனி வேலையை நல்ல முறையில் செய்த திருப்தியுடன் தனது அறைக்கு சென்றார்.

அன்று திவ்யா சற்று சந்தோஷ மனநிலையில் வீட்ற்குள் அடியெடுத்துவைக்கும் நேரம்,

"அம்மா....ஆ..."என்ற வர்ஷியின் அலறல் குரலும்,

"விடுங்க..எல்லாரும் பாக்குறாங்க விடுங்க.."என்று ஈனசுரத்தில் கலைவாணியின் குரலும் கேட்டது.வீட்டில் வேலை செய்பவர்கள்,

"விட்டுடுங்க சின்ன ஐயா.."என்று கெஞ்சிக்கொண்டும் இருந்தார்கள்.

ஏதோ விபரீதம் உள்ளே ஓடினாள் திவ்யா,அங்கு கண்ட காட்சியில் உறைந்து நின்றாள்,அங்கே சுகுமாரின் கை கலைவாணியின் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை இழுத்துக்கொண்டு,போதையில் உளறிக்கொண்டும் இருந்தார். வர்ஷியோ கீழே விழுந்து கிடந்தாள்.தந்தை தான் அவளை தளிவிட்டுருப்பார் என்று ஊகித்தவள்,கண்கள் கோபத்தில் சிவந்தது,இருந்தும் இது கோபத்தை காட்டும் நேரமில்லை என்று உணர்ந்து.

முதலில் கலைவாணியை காப்பாற்ற என்ன செய்வது என்று பார்வையை சுழலவிட்டாள் அப்பொது அவள் கண்களில் தெரிந்தது அந்த பூ ஜாடி,அதை எடுத்துக்கொண்டு சுகுமாரின் பின்பக்கம் சென்றாள்.திவ்யா வருவதை அறியாத சுகுமார் போதையில் உளறிக்கொண்டே மாங்கல்யத்தை பிடுங்க முயன்று கொண்டு இருந்தார்.தக்க சமயம் பார்த்து பூ ஜாடியால் சுகுமாரின் கைகலில் அடித்தாள் திவ்யா.

சுகுமார் இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.கலைவாணியோ மடங்கி அழத்தொடங்கினார்.திவ்யா வேலையாள் ஒருவரை அழைத்து சுகுமாரை அழைத்து போக சொன்னாள்.பின் தனது அறையில் இருந்து இக்காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த சகுந்தலாவை கண்டவள் அதே ஆவேசத்துடன் தனது கையில் இருந்த பூ ஜாடியை அவரை நோக்கி சுவற்றில் அடித்தாள்,அதில் மிரண்ட சகுந்தலா கதவை அடைத்துவிட்டாள்.அதே இடத்தில் மடிந்து அமர்ந்தவள் இலக்கில்லாமல் வெறிக்க தொடங்கினாள்.

விஷயம் அறிந்த ராம் மோகன் அடுத்த விமானத்தில் ஊர் வந்து சேர்ந்தார்.ராம் மோகன் வரும் வரையிலும் திவ்யாவின் நிலை மாறவில்லை அதே வெறித்த பார்வையுடன் தான் இருந்தாள்,யாரையும் பக்கத்தில் அனுமதிக்கவில்லை.வீடு வந்த ராம் பேத்தியின் நிலை கண்டு பயந்து போனார்.பின் ஒருவாரு தன்னை தேற்றிக்கொண்டு திவ்யாவின் அருகில் அமர்ந்து தோள் தொட்டார்,திவ்யா அவரைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்துவிட்டாள்.

ராம் தடுமாறியது ஒரு நிமிடம் தான் பின் அனைத்து விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டவர்,சுகுமாரை ஒரு நலவாழ்வு மையத்தில் சேர்த்தார்.பின் திவ்யாவின் மனநிலை மாற்றும் பொருட்டு உயர் கல்விக்கு வெளிநாடு அனுப்பிவைத்தார்.கலைவாணி மிகவும் மனதுடைந்து போனார்,இதில் திவ்யாவின் ஒதுக்கம் அவரை மேலும் கலங்க வைத்தது,அவரை வர்ஷினி தான் பார்த்துக்கொண்டாள்.

சகுந்தலா தனது திட்டம் அனைத்தும் தவுடுபடி ஆனதை எண்ணி வருந்தினார்.திவ்யா மூலம் சகுந்தலாவும் சுகுமாரின் இந்நிலைக்கு காரணம் என்று அறிந்த ராம்,சகுந்தலாவை தனியே வேறு வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.சகுந்தலா எவ்வளவு அழுதும் அவர் மசியவில்லை.மெல்ல வீடு பழைய நிலைக்கு திரும்பும் நேரம், இடி போல் வந்தது சுகுமார் சிகிச்சை பேற்ற நலவாழ்வு மையத்தில் இருந்து வந்த செய்தி.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அம்பாள் மேடம்

அச்சோ
சுகுமாரனுக்கு என்ன ஆச்சு?
இறந்து விட்டாரோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top