என் மன்னவன் நீ தானே டா...22

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...22

தனது அறையில் நடை பயின்று கொண்டிருந்தாள் அஞ்சலி அவளது நினைவுகள் கிருஷ்ணனை முதன் முதலில் கண்ட தினத்தை எண்ணி பார்த்தது.அஞ்சலி ஆர்.ம் கார்மெண்ட்ஸில் செயலாளராக சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடியிருந்தன எப்பொழுதும் துறுதுறுவென சுத்தும் கிருஷ்ணனை அவளுக்கு பார்த்துமே பிடித்திருந்தது அதனால் வலிய போய் அவனிடம் நட்பு பாராட்டினாள்.அவனும் அவளது நட்பை ஏற்று அவளிடம் பழகினான்.அவனது பேச்சுகள் அனைத்தும் நட்பு என்ற வட்டத்திற்குள் தான் இருக்கும் அவனது கந்நிய பேச்சும் நடவடிக்கையும் மேலும் அவளை அவன்பால் இழுத்தது.

தன் மனதில் உள்ளதை அவனிடம் தன் பிறந்தநாள் அன்று கூறலாம் என்று நினைத்தவள் அவனை தனது பிறந்தநாளுக்கு அழைத்தாள்.

"கிருஷ்ணா நீங்க கண்டிப்பா நாளைக்கு என்னோட பிறந்தநாளுக்கு வரனும்..."என்று அழைப்புவிடுத்தாள்.முதலில் மறுத்தவன் பின் அவளது வற்புறுத்தலின் பெயரில் வர சம்மதித்தான்.சிறிய ஹோட்டலில் தன் பிறந்தநாள் கொண்டாட்தை வைத்திருந்தாள் அவளுக்கு நட்பு வட்டாரம் மிகவும் குறைவு கிருஷ்ணனுடன் சேர்த்து மொத்தமே ஏழு பேர் தான்.கொண்டாட்ங்கள் அனைத்தும் முடிந்து அனைவரம் கிளம்பும் நேரம் கிருஷ்ணனை மட்டும் இருக்க சொன்னாள்.அனைவரும் சென்றவுடன்,

"என்ன அஞ்சலி எதுக்கு என்ன இருக்க சொன்ன..."என்றான் கிருஷ்ணன்.

"உங்க கிட்ட கொஞ்சம் பேசுனும் கிருஷ்ணா..."என்றாள்.

"என்ன சொல்லு..."

"அது வந்து..."என்று தயங்கினாள்.

"என்ன சொல்லு அஞ்சலி..."

"அது நான் உங்கள விரும்புறேன் கிருஷ்ணா..."

"என்ன என்ன சொல்லுர அஞ்சலி..."

"ஆமா கிருஷ்ணா நான் உங்கள விரும்புறேன்..."

"அஞ்சலி நான் உன்ன என்னோட நல்ல தோழியா நினைச்சு தான் பழுகுனேன் என்னோட எந்த செயல் உன்ன இது மாதிரி யோசிக்க தூண்டுச்சுனே எனக்கு தெரியல...ஐ ம் சாரி..."என்றான் கிருஷ்ணா.

"இருந்தாலும் கிருஷ்ணா..."என்று மேலும் கூற வந்தவளை தடுத்தவன்,

"அஞ்சலி எனக்கு இந்த காதல் இது மேல எல்லாம் நம்பிக்கையில்ல...சாரி..."என்று கூறிவிட்டு அவளது பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டான்.போகும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள் தான் வலிய போய் தன் காதலைக் கூறியும் அவன் மறுத்தது அவளுக்கு அவமானமாக இருந்தது.

அதில் இருந்து கிருஷ்ணன் மேல் ஒரு வன்மம் எங்கு சென்றுவிடுவான் பார்த்துகலாம் கொஞ்சம் கொஞ்சமா பேசி அவனை வழிக்கு கொண்டுவரலாம் என்று நினைத்தவள்.அடுத்த நாள் தான் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு வேண்டியவள் நாம் எப்பொழுதும் போல் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறி அவனிடம் நட்பு கரம் நீட்டினாள் அவனும் சரி என்றவன் முன் போல் பேசுவது இல்லை என்றாலும் பார்க்கும் பொழுது சில நலவிசாரிப்புகளுடன் நிறுத்திக் கொள்வான்.அஞ்சலியும் அவனை தொந்தரவு செய்யாமல் விட்டுபிடிக்கலாம் என்ற எண்ணத்துடன் விட்டுவிட்டாள்.

ராம் மோகன் இறந்து திவ்யா பதவியேற்ற பின் திவ்யாவின் பார்வை கிருஷ்ணன் மேல் விழுவதைக் கவனித்தாள் ஆனால் அவன் எப்பொழுதும் இருப்பதால் சற்று சாதாரணமாக விட்டுவிட்டாள்.ஆனால் அடுத்த மாதமே திவ்யா கிருஷ்ணன் கல்யாண செய்தி கேள்விபட்டு அவளது வன்மம் மேலும் வளர்ந்தது.கிருஷ்ணனை சந்திக்க முயன்றாள் ஆனால் அனைத்து வழிகளையும் திவ்யா அடைத்திருந்தாள்.அவர்களது திருமணத்தில் இருவரையும் ஒன்றாக பார்க்கும் பொழுது அஞ்சலிக்கு கிருஷ்ணனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.திவ்யாவின் திருமணத்தில் சகுந்தலாவின் பார்வை வன்மாக படிவதை பார்த்தவள்.அவரிடம் வலிய சென்று அவரிடம் நட்பு கரம் நீட்டி நண்பர்கள் ஆனாள்.

சகுந்தலாவின் பேச்சில் திவ்யாவின் மேல் இருந்த வன்மத்தைக் கண்டவள்.அவருடன் இணைந்து கிருஷ்ணனை பழிவாங்க திட்டம் தீட்டினாள்.அதன் முதல் படி தான் சரக்குளை டேமேஜ் செய்தது அதற்கு உதவியது செல்வராஜ்.செல்வராஜ் ஒருமுறை தனக்கு கீழ் வேலை செய்யும் ஒருவரை மிகவும் கேவலமாக பேசவும் கிருஷ்ணன் அவனை வார்னிங் செய்து இருந்தான்.செல்வராஜுக்கு அனைவர் முன்னும் கிருஷ்ணன் தனக்கு கீழ் வேலை செய்பவரிடம் மன்னிப்புக்கு கேட்க சொன்னது அவமானமாக இருந்தது.அதிலிருந்து கிருஷ்ணனை எப்படியாவது அவமானபடுத்த வேண்டும் என்று கம்பெனி டிரைவருடன் பேசிக்கொண்டிருந்ததை தற்செயலாக கேட்ட அஞ்சலி அவனை தங்களுடன் இணைத்துக்கொண்டாள்.

அவளது சிந்தனையை கலைத்தது கைபேசி செல்வராஜ் தான் அழைத்திருந்தான்.அழைப்பை ஏற்றவள்,

"சொல்லுங்க செல்வராஜ் நான் சொன்னது வாங்கிட்டீங்களா...சரி நாளைக்கு காலையில நான சொல்ர இடத்தில கொண்டுவந்து கொடுங்க..."என்றவள் தனது வேலைக் காண பணத்தைக்கேட்கவும்,

"அதுதான் நாளைக்கு நம்ம பார்க்கும்போது தரேன்...நீ பணத்தை பத்தி கவலைபடாத அதுக்கு என் கிட்ட ஆள் இருக்காங்க...நீ எப்பொதும் போல இரு அப்ப தான் உன்மேல சந்தேகம் வராது..."என்று கூறிவிட்டு நாளைக்கு வர வேண்டிய இடத்தைக் கூறிவிட்டு வைத்தாள்.

சகுந்தலாவுக்கு அழைத்தவள்,

"ஹலோ ஆன்ட்டி எப்படி இருக்கீங்க..."என்றாள் குழைவாக எல்லாம் என் நேரம் கிழவியெல்லாம் ஆன்ட்டினு கூப்பிடவேண்டி இருக்கு என்று நினைத்தவள்,

"என்ன ஆன்ட்டி நம்ம முதல் பிளான் சக்சஸ்..."

"என்ன சக்சஸ்...நீ என்னமோ பெரிய நஷ்டமாகனும் சொன்ன அவ புருஷன் எல்லாத்தையும் சமாளிச்சுட்டான்..."என்றார் கடுகடுவென்று.கிழவி இதெல்லாம் கரெக்டா கேட்கும் என்று நினைத்தவள்,

"என்ன தான் சமாளிச்சலாலும் கம்பெணிக்கு இது பிளாக் மார்க் தான் ஆன்ட்டி நீங்க கவலையவிடுங்க அடுத்து வரப்போர பெரிய டெண்டர் அது இவங்கலுக்கு கிடைக்காது அதக்கான ஏற்பாடு பண்ணிட்டேன் ஆனா என்ன கொஞ்சம் பணம் தேவைபடுது..."என்றாள் சோகமாக.

"பணத்தை பத்தி யோசிக்காத அதுக்கு நான் பொறுப்பு..."என்று கூறியவர் மேலும் சிறிது நேரம் அவருடன் பேசி வைத்தாள்.

"ப்பா பணம் கிடைச்சிடும்..."பணத்துக்கு தான் உன்ன வச்சுக்கிட்டதே..எவ்வளவு கேள்வி கேட்குது கிழவி என்று தன் மனதில் சகுந்தலாவை திட்டிவிடினாள்.

இரண்டு நாள் கடந்து இருந்தது வர்ஷினி வீடு வந்து.கலலைவாணி மகளை கவனித்துக் கொண்டு தான் இருந்தார் முன் போல் அவளிடம கலகலப்பு இல்லை ஏதோ ஒன்றை இழந்தது போல் இருந்தவளைக் கண்டு அவருக்கு கவலை பிறந்தது.அன்றும் சாப்பாட்டில் கவனம் இல்லாமல் ஏதோ யோசனையில் இருந்தவளைக் களைத்தது கலைவாணியின் குரல்,

"என்னடி சாப்பிடாம என்ன யோசனை உனக்கு...நீ டூர் போய் வந்தது இருந்து ஏன் ஒருமாதிரியா இருக்க..."என்று தன் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்விகளைக் கேட்க தொடங்கினார்.அவருக்கு ஏதோ சரியில்லை என்று மனது எடுத்துறைத்தது அதானல் வர்ஷியை கேள்விகளால் துளைத்தார்.

"போதும் அம்மா...சும்மா சின்ன பிள்ளை மாதிரி கேள்வி கேட்டுடே இருக்காதீங்க தலைவலிக்குது...இந்த வீட்ல நிம்மதியா சாப்பிட கூட முடியல..."என்று கலைவாணியிடம் கத்திவிட்டு வேகமாக சென்றுவிட்டாள்.அவள் கத்தலில் அதிர்ந்து நின்றுவிட்டார் கலைவாணி.மாடியில் இருந்து வந்து கொண்டிருந்த கிருஷ்ணன் வர்ஷியின் செயலில் துணுக்குற்றான்.அவனும் இரண்டு நாட்களாக வர்ஷியை கவனித்துக்கொண்டுதானே இருக்கிறான்.ஏதோ யோசனையுடன் சுற்றிக்கொண்டிருக்கும் வர்ஷியை கண்டவன் பிரண்ட்ஸ் கூட ஏதோ பிரச்சனைப் போல என்று முதலில் சாதாரணமாக இருந்தவன் இப்பொழுது விஷயம் வேறாக இருக்குமோ என்ற எண்ணம் பிறந்தது.அவளிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தவன்.கலைவாணியிடம் சென்று தான் பார்த்துக்கொள்வதாக என்று அவரை சமாதான படுத்திவிட்டு சென்றான்.

காரில் செல்லும் போது வர்ஷியை பற்றிக் கூறலாமா என்று யோசித்தவன் அவள் ஏற்கனவே கார்மெண்ட்ஸ பத்தின கவலையில இருக்கா இத சொன்னா இன்னும் டென்ஷன் தான் ஆவா என்று நினைத்தவன் அவளிடம் கூறவேண்டாம் என்று முடிவெடுத்தான்.

அன்றைய நாள் முழுவதும் புது டெண்டர் பற்றி கொட்டேஷன்களை படிப்பதிலேயே அவனுக்கும் திவ்யாவுக்கும் நேரம் சென்றது அதில் வர்ஷியைக் கூட மறந்துவிட்டான் கிருஷ்ணன்.டெண்டரை பற்றிய மீட்ங்கில் கலந்துவிட்டு வீடு வரவே வெகு நேரம் ஆனது அவர்களுக்கு அது கவர்மெண்ட் டெண்டர் என்பதால் போட்டியும் அதிகம் இருந்தது.அதை பற்றி பேசிக்கொண்டே தங்கள் அறைக்கு வந்தார்கள்.திவ்யா தன்னை சுத்தபடுத்திக்கொண்டு லெப்டாப்பை எடுக்கவும் அதை வேகமாக பிடுங்கானான் கிருஷ்ணா,

"வேலை இருக்கு கிருஷ்ணா..."என்று கூறியவளை காதில் வாங்காமல் தங்களுக்கான உணவை மேல வைத்துவிடும் படி கலைவாணியிடம் முன்பே கூறியிருந்தான் அதன்படி அவரும் உணவை அவர்களின் அறையில் வைத்திருந்தார்.

"முதல்ல சாப்பிடு அப்புறம் வேலை..."என்றவன் தட்டை அவளிடம் நீட்ட அவளோ வாங்காமல் ஊட்டிவிடும் படி வாய் திறந்து செய்கை செய்தாள்.அவளது செய்கையில் குறுநகை பூக்க அவனும் அவளுக்கு ஊட்ட தொடங்கினான். இரண்டு வாய் அவன் ஊட்டினால் இரண்டு வாய் இவள் அவனுக்கு ஊட்டினாள் ஒருவாறு சாப்பிட்டு முடித்தவர்கள் கைகழுவி வந்து திவ்யா லெப்டாபின் முன் அமர்ந்தாள்.

"சாப்பிட்டு தண்ணி கூட குடிக்க மாட்ட..."என்று அவளை அதட்டியவன் அங்கு இருந்த ஜக்கில் தண்ணீர் இருக்கிறாதா என்று பார்த்தான்.

"அத்தை எடுத்து வைக்க மறந்துட்டாங்க போல...இரு நான் போய் எடுத்துட்டு வரேன்..."என்று சொல்லிவிட்டு சென்றான்.சமையலறைக்கு வந்தவன் அங்கு கண்ட காட்சியில் உறைந்து நின்றுவிட்டான்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

எவ அவ அஞ்சலி பதஞ்சலி கிழிஞ்ச வேட்டி பனியன்னு புதுசா ஒரு வில்லி?
இவ லவ்வு சொன்னா உடனே கிருஷ்ணனும் லவ்வு பண்ணணுமோ?
கையாளுகளுக்கு கொடுக்கும் அளவுக்கு சகுந்தலாவிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா?
சமையலறையில் கிருஷ்ணன் என்ன பார்த்தான்?
கிட்சனில் வர்ஷி என்ன செய்து கொண்டிருந்தாள்?
வர்ஷினிக்கு என்ன பிரச்சனை?
டூர் போன இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டதா?
வர்ஷினி பாவம்ப்பா
அவளுக்கு கெடுதல் ஒண்ணும் வரக் கூடாது
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

எவ அவ அஞ்சலி பதஞ்சலி கிழிஞ்ச வேட்டி பனியன்னு புதுசா ஒரு வில்லி?
இவ லவ்வு சொன்னா உடனே கிருஷ்ணனும் லவ்வு பண்ணணுமோ?
கையாளுகளுக்கு கொடுக்கும் அளவுக்கு சகுந்தலாவிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா?
சமையலறையில் கிருஷ்ணன் என்ன பார்த்தான்?
கிட்சனில் வர்ஷி என்ன செய்து கொண்டிருந்தாள்?
வர்ஷினிக்கு என்ன பிரச்சனை?
டூர் போன இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டதா?
வர்ஷினி பாவம்ப்பா
அவளுக்கு கெடுதல் ஒண்ணும் வரக் கூடாது
நன்றி தோழி...தன் அப்பா கொடுத்த பணத்தை வாரி இறைக்கிறார் சகுந்தலா...வர்ஷி ஒரு சிறிய சிக்கலில் மாட்டியுள்ளால்...கிருஷ்ணன் இருக்க பயம் ஏன்...மீட்டுவிடுவான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top