என் மன்னவன் நீ தானே டா...20

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...20



தனது அறைக்குள் நுழைந்த திவ்யா மூச்சு திணறிபோனாள் அந்தளவுக்கு அவளை இறுக அணைத்திருந்தான் கிருஷ்ணன்.அவனது அணைப்பில் முதலில் தடுமாறியவள் பின்,

"என்ன சார்...இப்ப தான் உங்களுக்கு பொண்டாட்டி நியாபகம் வந்துச்சா..."என்றாள்.அவனோ எந்தவித பதிலும் கூறாமல் அவளது அணைப்பில் ஆழ்ந்து இருந்தான்.அவளோ விடாமல்,

"சொல்லுங்க சார்..."என்றாள் அவன் காதுகளை திருகியபடி.அவளை தன் புறம் திருப்பிய கிருஷ்ணா அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.கணவனின் முதல் முத்ததில் திளைத்தவள் அவனை ஆச்சிரியமாக பார்க்க,அவனோ அவளை பூ போல தூக்கியவன் கட்டிலில் கிடத்தி அவளை பின் புறமாக அணைத்து கண்களை மூடினான்.அவனது செயல் புரியாமல் திரும்பி கணவன் முகம் பார்த்தாள் திவ்யா.அவளது பார்வையை உணர்ந்தவன்,

"தரும்மா...ரொம்ப நாள் கழிச்சு இன்னக்கி தான் சந்தோஷமா இருக்கேன்...நம்ம இரண்டு பேரும் சேர்ந்து கொஞ்ச நாள் காதலிச்சுட்டு அப்புறம் வாழ்க்கையை தொடங்கலாம்..."என்று கூறியவன் மேலும் அவனே தொடர்ந்தான்,

"அதுமட்டும் இல்ல கல்யாணம் முடிஞ்சு உன் பக்கத்துல படுத்துலேந்து எனக்கு தூக்கமே இல்ல...சோ கொஞ்சம் தூங்கிக்கிறேன்...ப்ளீஸ் டா குட்டி..."என்று கூறிவிட்டு அவளை அணைத்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தான்.அவனது நீண்ட விளக்கத்தில் மகிழ்ந்தவள் தானும் அவனை அணைத்துக்குக் கொண்டு தூங்கினாள்.

காலையில் எப்பொழுதும் போல் எழுந்த திவ்யா தன்னை அணைத்துக்கொண்டு குழந்தை போல் உறங்கும் கணவனைக் கண்டு,

"சரியான பேபி டா நீ..."என்று கூறிவிட்டு சோம்பல் முறித்தாள்.நெடுநாட்களுக்கு பிறகு அவளும் நன்கு உறங்கியிருந்தாள்.

தனது தாத்தாவின் மறைவிற்கு பின் கார்மெண்ட்ஸ் பற்றிய சிந்தனை,பின் திருமணம் அதில் ஏற்பட்ட குளர்படிகள் அதோடு கிருஷ்ணனின் ஒட்டாத தன்மை என்று மன உளைச்சலில் இருந்தவளுக்கு நேற்றய கிருஷ்ணனின் அணைப்பும் அவனது பேச்சும் மனதை சற்று உற்சாகமூட்டியிருந்தது.அதே உற்சாகத்தோடு குளிக்க சென்றாள்.அவள் குளித்து முடித்து வரும் போதும் கிருஷ்ணன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.எப்பொழுதும் போல அவனை சீண்டி எழுப்பிவிட்டாள்.அவனோ அவளது சீண்டல்களை ஒதுக்கி அவளை தன் போர்வைக்குள் இழுத்தவன் விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.அவனது அணைப்பில் திணறிய திவ்யா,

"விடுங்க கிருஷ்ணா...நான் குளிச்சுட்டேன்...விடுங்க..."என்று இருகைகளாலும் தள்ளிக்கொண்டு இருந்தாள்.

"தள்ளாதடி இப்ப விடுறேன் திரும்பியும் தூங்கும் போது என்ன சீண்டக்கூடாது புரியுதா..."என்றான் மிரட்டுவது போல.

"நான அப்படி தான் சீண்டுவேன் என்ன டா பண்ணுவ..."என்றாள் வீராப்பாக.அவனோ பதில் கூறாமல் தன் கைகளை அவளது மேனியில் மேயவிட்டவன் அவளது இடுப்பை அழுந்த பிடித்தான் அவனது செயலில் தடுமாறிய திவ்யா,

"என்ன டா பண்ற.."என்றாள் வெளிவராத குரலில்.

"ம்ம்...நீ என்ன சீண்டினா நான லவ் பாயிலேந்து ஹஸ்பெண்டா மாறிடுவேன் அப்புறம்..."மேலும் கூறும் முன் அவனது வாயை மூடியவள்.

"போதும் நான் இனி சீண்ட மாட்டேன்...சீக்கிரம் கிளம்பு கார்மெண்ட்ஸுக்கு போகனும்..."என்று கூறிவிட்டு அவனது கைகளில் இருந்து விடுபட்டு அவனை பாராமல் சென்றுவிட்டாள்.செல்லும் அவளையே பார்த்தவன்,

"யாரடி பேபி னு சொல்லுர இரு உன்ன என்ன பண்றேன் பாரு..."என்று விஷமாக கூறிவிட்டு குளிக்க சென்றான்.

கலைவாணியிடம் தர்கம் செய்து கொண்டிருந்தாள் வர்ஷி,

"வர்ஷி...இது என்ன சின்னபிள்ள தனமா சாப்பிட மாட்டேனு அடம்பிடிக்கிற...இப்ப ஒழுங்கா சாப்பிட போரியா இல்லையா..."என்று கத்திக்கொண்டிருந்தார் கலைவாணி.

"முடியாது...முடியாது...நான் சொல்ரத நீங்க கேட்க மாட்டீங்கள்ல நானும் கேட்கமாட்டேன்..."என்று சிறுபிள்ளை போல் பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாள்.வர்ஷியின் கல்லூரியில் அனைவரும் சுற்றுலா செல்ல உள்ளனர்.அதற்கு போக வேண்டும் என்று மகள் நிற்க்க அனுப்பமாட்டேன் என்று கலைவாணி மறுத்தார்.எப்போதும் தாய் பேச்சை கேட்கும் மகள் இன்று கேட்க மறுத்தாள் அதனால் இருவருக்குள்ளும் சண்டைமுற்றிக்கொண்டிருந்தது.

தன் அறையை விட்டு வெளிவந்த திவ்யாவின் இதயம் தாருமாராக துடித்தது.கிருஷ்ணனின் கைகள் இன்னும் அவள் மேல் ஊருவது போல பிரம்மை.அவனது செயலில் கன்னங்கள் செம்மையுற,

"என்ன வேலை செய்யுறான் பேட் பாய்..."என்று செல்லமாய் திட்டியவள் கீழே சென்றாள்.அங்கு சோபாவில் தாய் ஒருபுறமும் தங்கை ஒருபுறமும் முகம் திரும்பி அமர்ந்திருப்பதைக் கண்டவள் அவர்களிடம் சென்றாள்.

"என்ன ம்மா...ஏன் இப்படி உக்காந்து இருக்கீங்க...வர்ஷி உனக்கு என்ன..."என்றாள் இருவரையும் பார்த்து.

"என்கிட்ட எதுவும் கேட்காத திவிமா...அவ கிட்ட கேட்டுக்கோ..."என்று கோபமாக கூறிவிட்டு சென்றுவிட்டார் கலைவாணி.கோபமாக செல்லும் அன்னையை பார்த்தவள் தங்கையிடம் திரும்பி,

"என்னடி உனக்கும் அம்மாக்கும் பிரச்சனை..."என்றாள்.

"இந்த அம்மா இன்னும் என்ன சின்ன பிள்ளையாவே பாக்குராங்க திவிக்கா..."என்று தன் தமக்கையிடம் புகார் வாசித்தாள்.மூக்கு சிவந்து லேசான அழுகையோடு பேசும் தங்கையை கண்டவள்,

"நீ குட்டி பாப்பா தான் டி..."என்று செல்லமாக தலைகோத.

"பார்த்தியா...நீயும் என்ன பாப்பா னு சொல்லுர...."என்று அதற்கும் மூக்கு விடைக்க கேட்டாள்.அவளை பார்த்து சிரித்த திவ்யா,

"சரி சொல்லு என்ன பிரச்சனை..."

பின் தான் கல்லூரி சுற்றுலா செல்ல கேட்டதையும் அதற்கு கலைவாணி மறுத்தையும் கூறியவள்.

"எனக்கு ஆசையா இருக்கு...என் பிரண்ட்ஸ் எல்லாரும் போறாங்க நானும் போகனும் ப்ளீஸ் நீ சொல்லு அம்மா கேட்பாங்க...ப்ளீஸ் திவிக்கா..."என்று கெஞ்சினாள்.

"சரிடி நான் அம்மாகிட்ட பேசுறேன் நீ தினமும் வீட்க்கு பேசிடனும் ஜாக்கிரதையா இருக்கனும்..."என்று பெரியவள் அறிவுரை வழங்க வர்ஷியோ அனைத்திர்க்கும் தலையாட்டினாள்.அவளுக்கு தெரியும் அக்கா சொன்னாள் அன்னை கேட்ப்பார் என்று.அவள் நினைத்தை போல் திவ்யா கலைவாணியிடம் பேசி சம்மதம் வாங்கினாள்.

"சூப்பர் அக்கா...தாங்க்ஸ்..."என்று கூறி திவ்யாவின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள்.மாடியிலிருந்து தனது ஷர்டை மடித்துவிட்டபடி வந்த கிருஷ்ணா இந்த காட்சியை பார்த்துவிட்டு புருவம் உயர்த்தினான்.கிருஷ்ணாவைக் கண்டவுடன் கலைவாணி,

"வாப்பா...சாப்பிடலாம்..."என்று அழைத்தார்.அவரது அழைப்பை ஏற்று அமர்ந்தவன் கலைவாணியிடம்,

"என்ன அத்தை இன்னிக்கி ஒரே பாச மழையா இருக்கு..."

நடந்தை கூறினார் அதைக் கேட்டவன்,

"இதுக்கு தான் இந்த பாச மழையா..."என்றான் கிண்டலாக.

"என்ன மாமா..உங்களுக்கு பொறாமையா இருக்கா..."என்றாள் வர்ஷி.

"ஆமா...கொஞ்சமா..."என்று திவ்யாவை பார்த்து விஷமமாக கூறினான்.அவனது செயலில் செம்மையுறும் கன்னங்களை மறைக்க முயன்று தோற்றாள் திவ்யா.அவள் வெட்கபடுவதை ரசித்தவன்.

"மாமா நாங்களும் இங்கதான் இருக்கோம்..."என்ற வர்ஷியின் குரலில் கலைந்தவன்.

"நீ இன்னும் டூருக்கு கிளம்பல..."என்றான்.

"அச்சோ...முத்திடுச்சி..."என்று கூறிவிட்டு ஓடினாள் வர்ஷி.

"வாலு..."என்று முனுமுனுத்தவன் மனைவியைக் கண்டான்.அவளோ இவனை முறைத்துக்கொண்டு இருந்தாள்.இவ எதுக்கு இப்ப முறைக்குறா என்று நினைத்தவன் என்ன என்று கண்களால் வினவினான்.அதற்குள் சமையல் அறையிலிருந்து கலைவாணி வரவும் கலட்டாவும் கிண்டலுமாக பேசி சாப்பிட்டு கிளம்பினர்.காரில் ஏறும் முன் வர்ஷியை அழைத்து அவளது கையில் ஒரு ஏடியம் கார்டைக் கொடுத்தான் கிருஷ்ணன்.வேண்டாம் என்று மறுத்தவிளடம் வற்புறுத்திக் கொடுத்தவிட்டு வந்து காரில் ஏறினான்.

காரில் ஏறியவுடன்,

"உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா...இப்படி தான் சின்ன பொண்ணு முன்னாடி நடந்துபிங்க..."என்று காரமாக கேட்டாள் திவ்யா.

"ஓ...இதுக்கு தான் என்ன முறைச்சியா..."என்றவன்.அவளிடம் வலவலத்துக்கொண்டே கார்மெண்ட்ஸை நோக்கி சென்றனர்.

தனது அலுவலக அறைக்கு வந்த திவ்யா அன்றைய வேலையில் மூழ்கி போனாள்.கிருஷ்ணனும் புது டென்டருகளுக்கு கொடுக்க வேண்டிய சரக்குகளை பட்டியல் ஈட்டுக்கொண்டிருந்தான்.தன் வேலையில் மூழ்கி இருந்தவனை கலைத்தது அலைபேசி,

"ஹலோ..."என்று அவன் கூறும் முன்,

"கிருஷ்ணா உடனே என் கேபினுக்கு வாங்க...."எனக் கூறி வைத்துவிட்டாள் திவ்யா.ஏதோ முக்கியமான விஷயம் என்று ஊகித்தவன்.அவளது கேபின் சென்றான்.

அங்கு மிகவும் பதட்டதுடன் நின்றிருந்தாள் திவ்யா.

"என்ன ஆச்சு தாரணி..."

"கிருஷ்ணா நம்ம HJ கம்பெனிக்கு அனுப்பியிருந்த சரக்குல நிறைய துணி டமேஜ் ஆகியிருக்குனு போன் வந்துச்சு..."

"என்ன டமேஜா எப்படி நான் தான் எல்லாம் கடைசி வரைக்கும் இருந்து பேக் பன்றத பார்த்தேனே அப்புறம் எப்படி..."என்றான் அவனும் பதட்டமாக.

"அதான் எனக்கும் புரியல..."என்றாள் யோசனையாக.கிருஷ்ணன் பதறியது சிறிது நேரம் தான் பின் வேகமாக செல்வத்தை அழைத்தவன் அவரிடம் எல்லா விபரங்களையும் கூறியவன் மேலும் சிலவற்றை கூறிவிட்டு அவரை அனுப்பினான்.பின் திவ்யாவிடம் திரும்பி,

"தாரணி...நீ அந்த கம்பெனிக்கு போன் போட்டு இப்ப எங்க கிட்ட ஏழு பாக்ஸ் உங்க கம்பெனி துணி இருக்கு மீதிய இன்னக்கி நைட் நாங்க டெலிவரி பண்றோம்னு சொல்லு..."

"ஆனா கிருஷ்ணா..."என்று யோசித்தவளின் கைகளை பற்றி ஆதரவாக,

"எப்போதும் நாம எந்த கம்பெனிக்கு ஆடர் ஒத்துக்கிட்டாளும் கொஞ்சம் அதிகமா தயாரிச்சு நம்ம கைல வச்சுப்போம் அது உங்க தாத்தா போட்ட ரூல்ஸ் மறந்துட்டியா..."என்றான் அவளுக்கு நியபக படுத்தும் விதமாக.

"ஆமா இல்ல இத எப்படி மறந்தேன்..."என்றாள் சற்று ஆசுவாசமாக இதுவே முதல் முறை சரக்கு டமேஜ் ஆவது என்பது.பல சோதனைகள் செய்தே அவர்கள் பேக்கிங் செய்வது எதில் தவறு நடந்தது என்று அவளுக்கு யோசனையாக இருந்தது.இப்பொழுது கிருஷ்ணன் கூறவும் தான் அவளுக்கு நியாபகம் வந்தது.

"தாங்க் காட்..."என்று கூறிவிட்டு அந்த கம்பெனிக்கு போன் செய்தாள்.அவர்களிடம் விபரம் கூறிவிட்டு அவர்கள் சரி என்று கூறுயவுடன் தான் சற்று நிம்மதியனவள்.கிருஷ்ணனிடம் திரும்பியவள்,

"தேங்க்ஸ் கிருஷ்ணா..."என்றாள்.

"லூசு இதுக்கெல்லாமா தேங்க்ஸ் சொல்லுவாங்க..."அவள் தலையில் செல்லமாக தட்டிவிட்டு தனது செக்ஷன் நோக்கி சென்றான்.

திவ்யாவோ பிரச்சனை தீந்தது என்று மனதில் கூறிக்கொண்டு அடுத்த வேலையில் ஆழ்ந்தாள்.இங்கு நடந்த அனைத்தையும் கவனித்த இரண்டு கண்கள் இது அனைத்தையும் சகுந்தலாவுக்கு கூறியது.

சகுந்தலா போன் பேசி வைத்தவுடன் "இது தான் உனக்கு ஆரம்பம் தான் திவ்யா"என்று கூறினார் வன்மாக.தனது மோபைலில் இருந்து வர்ஷியின் புகைபடத்தை ஒருவருக்கு அனுப்பியவர்.அவரிடம் அவளை பற்றி சில விபரங்களை கூறிவிட்டுவைத்தார்.சகுந்தலாவின் வளையில் வர்ஷி சிக்குவளா...திவ்யாவுக்கு வரப்போகும் அடுத்த பிரச்சனை என்ன??
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அனுப்பிய சரக்குகளை டேமேஜ் பண்ணும் அளவுக்கு சகுந்தலாவுக்கு அவ்வளவு புத்தி இருக்கிறதா?
இல்லை பின்னாடி பையன் இருக்கிறானா?
திவ்யாவின் கம்பெனியில் சகுந்தலாவுக்கு உளவு சொல்லும் கருப்பு ஆடு யாரு?
இவளுடைய சகுனி வேலையை எப்பொழுது தெரிந்து திவ்யா சகுந்தலாவை எப்போ துரத்துவாள்?
டூர் போகும் வர்ஷாவுக்கு சகுந்தலா என்ன கேடு பண்ணப் போறாளோ?
இப்போவும் வருண் வந்து இவளைக் காப்பாற்றுவானா?
 

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அனுப்பிய சரக்குகளை டேமேஜ் பண்ணும் அளவுக்கு சகுந்தலாவுக்கு அவ்வளவு புத்தி இருக்கிறதா?
இல்லை பின்னாடி பையன் இருக்கிறானா?
திவ்யாவின் கம்பெனியில் சகுந்தலாவுக்கு உளவு சொல்லும் கருப்பு ஆடு யாரு?
இவளுடைய சகுனி வேலையை எப்பொழுது தெரிந்து திவ்யா சகுந்தலாவை எப்போ துரத்துவாள்?
டூர் போகும் வர்ஷாவுக்கு சகுந்தலா என்ன கேடு பண்ணப் போறாளோ?
இப்போவும் வருண் வந்து இவளைக் காப்பாற்றுவானா?
ஒவ்வோரு முடிச்சாக அவிழும்.சகுந்தலாவுடன் இனைந்த ஆளுக்கு கொஞ்சம் புத்தியிருக்கு அதான் பிளானும் பெருசா இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top