என் மன்னவன் நீ தானே டா...19

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...19

தனது அறையில் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தாள் திவ்யா.கிருஷ்ணனோ ஆனந்தமாக கலைவாணி தந்த டீயை பருகிக்கொண்டும் அவ்வபோது மனைவியை பார்த்துக்கொண்டும் இருந்தான்.

"இப்ப என்ன தான் சொல்லவர கிருஷ்ணா..."என்றாள் கோபமாக.அவனோ,

"எனக்கு இந்த கோர்ட் சூட் எல்லாம் செட்டாகாது...."என்று அதே பல்லவியை படித்துக்கொண்டிருந்தான்.அதற்கு மேல் அவனுடன் வாதம் புரியாமல்,

"சரி போய் போட்டு வா...டையம் ஆச்சு..."என்றாள் பல்லைக்கடித்துக்கொண்டு.தொழில் சங்கத்தினற் வைத்திருந்த பார்டிக்கு செல்ல தான் இவ்வளவு ஆர்பாட்டம்.மாலை கார்மெண்ட்ஸில் இருந்து கிளம்பும் போதே கிருஷ்ணனிடம் கூறிவிட்டாள் இருவரும் ஒரு பார்டிக்கு செல்ல வேண்டும் என்று முதலில் வர மறத்தவன் பின் அவள் வற்வற்புற்த்தி அழைக்கவும் சம்மதித்தவன் அடுத்த பிரச்சனையை தான் அணியும் ஆடையில் கிளப்பியிருந்தான்.பார்டியில் பெரிய ஆட்கள் வருவார்கள் என்று திவ்யா கோர்ட் சூட் அணிய சொல்லிக் கேட்டாள் அவனோ சாதாரணமாக தான் வருவேன் அடம்பிடித்துக் கொண்டிருந்தான்.ஒரு கட்டத்தில் அவளுக்கு தான் தலைவலி வந்திருந்தது.

ஒருவழியாக இருவரும் கிளம்பி கீழே வந்தனர்.படிகளில் இருவரும் பேசிக்கொண்டே இறங்க அதைப் பார்த்த கலைவாணிக்கு தான் மனது நிறைந்திருந்தது.இறங்கி வந்தவர்கள் கலைவாணியிடம் சொல்லிவிட்டு சென்றனர்.காரில் அவள் பேசுவாள் என்று கிருஷ்ணன் நினைக்க திவ்யாவோ கிருஷ்ணன் பேசுவான் என்று அமைதியாக வந்தாள்.

காரில் நிலவும் அமைதி பிடிக்காமல் கிருஷ்ணன் காதல் பாடல்களை ஒலிக்கவிட்டான்.இளையராஜாவின் இசையில் அந்த மாலை நேரத்தைவண்ணமயமாக்கியது.இருவரும் அந்த ஏகாந்த நேரத்தை ரசித்தபடி ஒருவரது கையை மற்றொருவர் கோர்த்துக்கொண்டு பயணம் செய்தனர்.பார்ட்டி ஹாலை அடைந்தவுடன் அவர்களது சங்கத்தின் மூத்த உறுப்பினர் அவர்களை வரவேற்று அழைத்து சென்றார்.

பார்டி ஹாலில் அனைவருக்கும் கிருஷ்ணன் மற்றும் திவ்யாவை அறிமுகம் செய்தவர்.இருவரையும் மேடைக்கு அழைத்து கேக் வெட்டும் படி கேட்டுக்கொண்டார்.அவர் சொன்னபடி மேடை ஏறிய இருவரும் ஒருவர் கை ஒருவர் கோர்த்து கேக்கை கட் செய்தனர்.பின் பார்டி மெல்லிய இசையுடன் ஆரம்பம் ஆனது.சிலர் இருவரின் ஜோடியை மனதார வாழ்த்தினார்கள் என்றால் சிலர் கிருஷ்ணனை ஏளன பார்வை பார்த்துவிட்டு சென்றனர்.அவர்கள் பார்வை உணர்ந்த கிருஷ்ணனின் முகம் சற்று கடினமுரும் நேரம் எல்லாம் அவன் திவ்யாவை பார்ப்பான் அவளோ கண்களால் அவனை சமாதனம் செய்வாள்.

அப்பொழுது அங்கு வந்த தொழில் அதிபரின் மனைவி ரேஷ்மா திவ்யாவிடம்,

"என்ன திவி நீ இந்த மாதிரி ஒரு லோ கிளாஸ் ஆளை போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட...போயும் இவன் தான் உனக்கு கிடைச்சானா..."என்றார்.அவருக்கு திவ்யாவை அவர்களது மகன் ரோஹித்துக்கு திருமணம் செய்து வைக்க எண்ணம்.ரோஹித்தோ மது மாது என்று வாழ்பவன் அவனை பற்றி நன்கு அறிந்த திவ்யா நாசூக்காக மறுத்துவிட்டாள். அதனால் ரேஷ்மாவுக்கு திவ்யாவை எப்படியாவது நோகடிக்க வேண்டும் என்றே பார்டிக்கு வந்திருந்தார்.

ரேஷ்மா அவ்வாறு கேட்கவும் முதலில் தன் கணவன் எங்கு உள்ளான் என்று கண்களால் தேடினாள் அவனோ தூரத்தில் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தான்.அவன் அருகில் இல்லை என்றவுடன் ரேஷ்மாவிடம் திரும்பிய திவ்யா,

"ஆமா ஆன்டி அவர் லோ கிளாஸ் தான்....ஆனா உங்க பையன் மாதிரி கேடு கேட்டவன் கிடையாது..."என்று கூறிவிட்டு அவரின் பதிலை எதிர்பாராமல் தன் கணவனிடம் சென்றுவிட்டாள்.திவ்யாவிடம் தன் ஆட்டம் பலிக்கவில்லை என்றவுடன் அவர் கிருஷ்ணனைக் குறிவைத்தார் அவனை எப்படியாவது அனைவர் முன்பும் கீழ் இறக்க வேண்டும் என்று கருவியவர் அதற்கான சந்தர்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.

திவ்யாவோ ரேஷ்மா கண்டிப்பாக அடுத்து கிருஷ்ணனிடம் தான் வருவார் என்று உணர்ந்தவள் கிருஷ்ணனை விட்டு நகரவில்லை.கிருஷ்ணனுக்கு தான் சற்று அவஸ்தையாகி போனது அவளது நெருக்கத்தில்,

"என்ன தாரணி...ஏன் இப்படி பிடிச்சுக்கிட்டே நிக்குர...எல்லாரும் நம்மல தான் பாக்குராங்க பாரு கொஞ்சம் தள்ளி நின்னு..."என்றான் யாரும் அறியா வண்ணம்.

"நான இப்படி தான் நிப்பேன்...யார் பார்த்தாலும் எனக்கு கவலையில்ல.." என்றாள்.அவளுக்கு பயம் எங்கே விட்டு சென்றால் ரேஷ்மா ஏதாவது ஏடாகூடமாக செய்துவிடுவார் என்று. அவளது பதிலில் சிரித்தவன்,

"நீ ஏன் அப்பப்ப சின்ன பிள்ளையா மறிடுர..."அவனுக்கு திவ்யா சில விஷயங்களில் குழந்தை போல இருக்கிறாள் என்ற எண்ணம் அவளது தற்பொழுதைய பிடிவாதமும் அவ்வாறே இருந்தது.

கிருஷ்ணனின் பதிலில் அவனை முறைத்தவள்,

"அது என்னமோ உன்கிட்ட மட்டும் இப்படி தான் இருக்கனும்னு தோணுது..."என்றாள் உள்ளத்தை மறையாமல்.அவளை ஆச்சிரியமாக பார்த்தவன் அவள் கண்களில் தெரிந்த காதலில் மயங்கி தான் போனான்.இருவரின் மோன நிலையை கலைத்தார் அவர்களது மூத்த உறுப்பினர்.பின் அவருடன் பேசிக் கொண்டு உணவு உண்ண சென்றனர்.அது பவே உணவு முறை என்பதால் அனைவரும் அவரவருக்கு பிடித்த உணவு வகைகளை எடுத்து உண்ண தொடங்கினர்.அப்பொழுது அங்கு வந்த தொழில் துறை நண்பர் ஒருவர் இருவரிடமும் பேசிவிட்டு திவ்யாவிடம் ஏதோ கேட்டுக் கொண்டு இருந்தார் கிருஷ்ணனோ அவனுக்கு தேவையான உணவை எடுக்க நகர்ந்துவிட்டான் பேச்சின் மும்மரத்தில் திவ்யாவும் இதை கவனிக்கவில்லை.

ரேஷ்மா இதை கவனித்துவிட்டு கிருஷ்ணனின் பின் சென்றவர்.

"ஹலோ மிஸ்டர்.கிருஷ்ணன்..."

உணவு எடுக்க வந்தவன் யாரோ தன்னை அழைக்கவும் திரும்பினான்.அங்கே அறைகுறை ஆடையுடன் நின்றிருந்த ரேஷ்மாவைக் கண்டு முகம் சுளித்தான்.

"ஹலோ...ஐ ம் ரேஷ்மா..."என்று அவனுடன் கை குலுக்க கை நீட்டினார்.ஆனால் அவனோ,

"வணக்கம்"என்று கைகள் கூப்பினான்.அதைக் கண்டவர்,

"ஓ...ஐ ம் சாரி மிஸ்டர்.கிருஷ்ணன் உங்கள மாதிரி உள்ளவங்களுக்கு கை குலுக்க தெரியாது இல்ல..."என்று கூறிவிட்டு ஏளனமாக சிரித்தார்.அவரது பதிலில் எரிச்சலானவன் இவர்கள் போன்றவர்களுடன் பேசுவதே வீண் என்று நினைத்து தனது உணவில் கவனமானான்.அவன் ஏதாவது பதில் பேசுவான் அதைவைத்து அவனை அவமான படுத்தலாம் என்று நினைத்தவருக்கு சற்று ஏமாற்றமாக போனது.அப்பொழுது அங்கு வந்த ஹோட்டல் ஊழியர் அனைவருக்கும் குடிப்பதற்கு குளிர்பானம் வழங்கிக்கொண்டிருந்தார் அவர் இவர்களை நோக்கி வந்து,

"சர்...வூட் யூ வான்ட் எனித்திங்க..."என்று கிருஷ்ணனிடம் கேட்க அவன் பதில் அளிக்கும் முன் ரேஷ்மா,

"ஏய் சூடுபிட்...அவர் கிட்ட போய் இங்கிலிஷ் ல கேட்கர...அவருக்கு உன்னோட இங்கிலிஷ்லாம் புரியாது..."என்று கூறிவிட்டு.கிருஷ்ணனிடம் திரும்பி

"நீங்க இந்த மாதிரி ஹோட்டல் எல்லாம் வந்திருக்க மாட்டீங்க...நல்லா சாப்புடுங்க...எல்லாம் திவ்யாவாள வந்த வாழ்க்கை அனுபவிங்க.."என்று கூறிவிட்டு நகர்ந்தார்.அவரது பதிலில் கோபத்தின் உச்சதிற்கு சென்றவன் உணவை உண்ணாமல் வைத்துவிட்டு பார்டியில் இருந்து வெளியேறிவிட்டான்.

திவ்யாவோ பேச்சின் நடுவில் தான் கிருஷ்ணன் அருகில் இல்லாததை உணர்ந்து அவரிடம் சொல்லிக்கொண்டு கிருஷ்ணனை தேடினாள்.அவள் நினைத்த மாதிரி ரேஷ்மா ஏதோ கிருஷ்ணனிடம் பேசுவதும் அதில் அவனது முகம் மாறுவதும் உணர்ந்தவள் வேகமாக அங்கு செல்லும்முன்பு கிருஷ்ணன் அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

வெளியில் வந்தவன் தங்களின் காரின் முன் பகுதியை வேகமாக குத்தினான்.அவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை எவ்வளவு கேவலமாக நினைத்து பேசுகிறார்கள் என்று அவனுக்கு மனது நினைத்தது.இதுக்கு தான் வேணாம்னு சொன்னேன் கேட்டாளா அவ என்று திவ்யாவை திட்டியவன் வேகமாக மீண்டும் காரை உதைத்தான்.

"என் மேல உள்ள கோபத்தை அதுக்கிட்ட ஏன் காட்டுர கிருஷ்ணா..."என்றபடி வந்து மூச்சிரைக்க கேட்டாள் திவ்யா. தன்னைக் காணாமல் ஓடி வந்திருக்கிறாள் என்று உணர்ந்தவன் எதும் பேசாமல் திரும்பி நின்றான்.அவனின் தோளில் கைவைத்து தன்னை பார்க்கும் படி திருப்பியவள்,

"கிருஷ்ணா..ப்ளீஸ் அவ எல்லாம் ஒரு ஆள் அவ பேசுனானு நீங்க ஏன் வருத்தபடுறுங்க...அவ பையன கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கேட்டா நான் முடியாதுனு சொல்லிட்டேன் அந்த கோபத்துல தான் இப்படி பேசிட்டு போறா...பார்டில பத்திரிக்கைகாரங்கெல்லாம் வந்திருப்பாங்க அதனால தான் அவ மூக்க உடைக்க முடியல இல்லனா..."என்று பல்லைக்கடித்தாள் திவ்யா.

கிருஷ்ணனுக்கு திவ்யா கூறுவது புரிந்தாலும் இதேபோல தான் பலரும் நினைப்பார்கள் எல்லாம் இவளால என்று நினைத்தவன் அவளிடம் எதுவும் பேசாமல் காரை எடுத்தான்.காரில் இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே நிலவியது.தான் என்ன நினைத்து பார்டிக்கு வந்தோம் என்று நினைத்தவள் மனது கலங்கியது.அவளது கலங்கிய விழிகளைக் கண்டவனுக்கு மேலும் கோபம் அதிகமானது,

"இப்ப எதுக்கு நீ அழுவுற...நான் தான் அவங்க பேசினதுக்கு அழுவுனும்..."என்று கோபமாக கூறியவன்.

"இதுக்கு தான் சொன்னேன் உனக்கும் எனக்கும் செட் ஆகாதுனு நீ கேட்டியா..."என்று பழைய புரணத்தை ஆரம்பிக்கவும்.இவன் இதை விடபோது இல்லையா என்று நினைத்தவள் காரை ஓரமாக நிறுத்துபடி கூறினாள்.அவளது பதிலில் குழம்பி காரை ஓரமாக நிறுத்தியவன்.என்ன என்று புரியாமல் அவளை பார்த்தான்.அது ஒரு கிளை சாலை அங்கு வாகன போக்குவரத்து சற்று கம்மியாக தான் இருக்கும் அதிலும் இரவில் மிகவும் அரிது.அதை உணர்ந்து தான் அவள் காரை நிறுத்த சொன்னது அவன் காரை நிறுத்திவிட்டு திரும்பி என்ன என்று கேட்கும் முன் அவன் சட்டையை இருகைகளிலும் பற்றியவள் அவனை தன்னை நோக்கி இழுத்து அவனது வன்மையான உதடுகளை தன் மென்மையான உதடுகளால் மூடினாள்.அவள் தன்னை இழுக்கும் போதே எதற்கு என்று ஊகித்தவன் ஏய் என்று கூறும் முன் அவனது உதடுகள் அவளிடம் அடைப்பட்டு இருந்தது.கிருஷ்ணன் திணரியது என்னவோ சில நிமிடம் தான் பின் தன் மனைவியின் முத்ததில் கரைந்து கொண்டிருக்கும் போதே அவனை விட்டவள்.அவன் முன் விரல் நீட்டி,

"இன்னொரு தடவ உனக்கும் எனக்கும் ஒத்துவராது அப்படினு லூசு மாதிரி பேசுன இப்படி தான் உன் பேச்சை நிப்பாட்டுவேன் பார்த்துக்கோ..."என்றாள்.அவனோ அவளது முத்ததில் இருந்து வெளிவராமல் அவள் கூறியவற்றுக்கெல்லாம் தலையாட்டி பொம்மை போல தலையாட்டி விட்டு காரை எடுத்தான்.

அவர்களது பயணம் ஒருவகை இனிமையாக இருந்தது.இருவரும் ஒருவித மோன நிலையில் வீடு வந்தனர்.வீட்டில் நுழையும் போது வெட்க புன்னகை பூத்தபடி செல்லும் திவ்யாவையும் அவள் பின் பொம்மை போல செல்லும் கிருஷ்ணனையும் குரதமாக பார்த்துக்கொண்டு இருந்தார் சகுந்தலா.

சிரிக்கிறியா சிரி இது தான் சந்தோஷமா இருக்கபொர கடைசி நாள் என்று கூறியவர்.தன் கைபேசியை எடுத்து ஒருவருக்கு அழைப்பு விடுத்தார்.அவரிடம் சிலவற்றை பேசிவிட்டு வைத்தவர் வன்மாக சிரித்தார்.

கிருஷ்ணனும் திவ்யாவும் சகுந்தலாவின் சகுனி வளையில் விழுவார்களா??
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அடப் போங்கப்பா
இந்த லூசு கிருஷ்ணனே பணக்காரி திவ்யாவுக்கு தான் பொருத்தமில்லைன்னு தாழ்வு மனப்பான்மையில் ஒதுங்கி ஒதுங்கிப் போறான்
இதிலே ரேஷ்மாவும் சகுந்தலாவும் வில்லத்தனம் பண்ணிக்கிட்டே இருக்காங்க
இன்னும் வில்லியா எவளெவள் வருவாளோ?
இதிலே திவ்யாவும் கிருஷ்ணனும் சேர்ந்து சந்தோஷமா எப்போ வாழுவது?
எனக்கு நம்பிக்கையில்லை
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அடப் போங்கப்பா
இந்த லூசு கிருஷ்ணனே பணக்காரி திவ்யாவுக்கு தான் பொருத்தமில்லைன்னு தாழ்வு மனப்பான்மையில் ஒதுங்கி ஒதுங்கிப் போறான்
இதிலே ரேஷ்மாவும் சகுந்தலாவும் வில்லத்தனம் பண்ணிக்கிட்டே இருக்காங்க
இன்னும் வில்லியா எவளெவள் வருவாளோ?
இதிலே திவ்யாவும் கிருஷ்ணனும் சேர்ந்து சந்தோஷமா எப்போ வாழுவது?
எனக்கு நம்பிக்கையில்லை
நன்றி தோழி... திவ்யாக்கு கொஞ்சம் கஷ்டம் தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top