என் இதய விழி நீயே-Episode 3

Advertisement

achuma

Well-Known Member
hi friends 3 rd episode potutaen , read n pls comments,
stay safe bye.





என் இதய விழி நீயே-Episode 3




"மாமா, மண்டபத்துக்கு எல்லாரும் வந்தாச்சு , இன்னும் ஆதி வரல, பிரேமா சித்தி வேற கேட்டுட்டே இருக்காங்க , நீங்க போன் போட்டு வர சொல்லுங்க மாமா , என்று சிவநேசனிடம் கூறினாள் ஸ்ரீ .

"ஆதி பூரணி போனதும் வாழ்க்கையே வெறுத்து இருக்கான் , அவனுக்கு எல்லாத்துக்கும் பூரணி வேணும், ஏதோ நம்ப வற்புறுத்தவே இப்போ இறங்கி வந்திருக்கானு, உனக்கு தெரியாத மா," என்று மருமகளிடம் புலம்பினார் சிவநேசன் .

"இப்போ அவன நம்ப ரொம்ப புடிச்சா எங்க எதுவும் வேண்டான்னு சொல்லிடுவானோனும் , பயமா இருக்கு மா,
சின்ன பசங்க இல்ல வர தெரியும் , நேரத்துக்கு வருவான் , நீ கவலைய விடு மா , நான் எதுக்கும் சந்தீப்க்கு (ஆதி நண்பன்), போன் போடுறேன் ," என்று கூறினார். ..ஸ்ரீயம் கவலை அகன்றவளாக சென்றாள் .

சந்தீப் ஆதியின் நண்பன் . சந்தீப்பின் மனைவி திவ்யா.
இருவரும் ஆதியின் மருத்துவமனையில் பணிபுரிகின்றனர் .
சிவநேசன் சந்தீபீடம், நேரம் ஆகிற்று என்றும், நண்பனை அழைத்து வருமாறும் கூறினார்






"இவனுக்கு நண்பனா இருக்குறதுக்கு , எமனுக்கு எரும மாடா இருக்கலாம், " என்று ஆதியை மனதளவில் திட்டிக் கொண்டிருந்தான் , சந்தீப்.

"டேய் எரும "

"யாரு நம்ப மனசுல நெனச்சத தெளிவா சொல்றது , இந்த குரலை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே, " என்று தன்னுள் கேட்டு கொன்டே திரும்பினால் , சந்தீப்பின் மனைவி திவ்யா (மகப்பேறு மருத்துவர் ) சந்தீப்பை கிண்டலாக நோக்கிக் கொண்டிருந்தாள் ...

"ஹே! திவ்யா டார்லிங், மாமாவ இப்டி வெளில எல்லார் முன்னும் மரியாத இல்லாம கூப்பிடலாமா ?"
என்று பாவமாக கேட்டு வைத்தான் சந்தீப் .

திவ்யா எதுவும் அலட்டிக் கொள்ளாமல் "இப்போவே நேரம் ஆச்சு, ஒழுங்கா மண்டபம் வந்து சேருங்க ரெண்டு பேரும், நான் கிளம்புறேன் , அங்க போய்ட்டு ஸ்ரீ அண்ணிக்கு உதவி செய்யணும் ," என்று வெளியேறினாள் திவ்யா .

"சரி பாதி சொல்றாங்க ! ஆனா சிங்கத்து குகையில சிங்கிளா மாட்டி விட்டுட்டு போறாளே," என்று புலம்பினான் சந்தீப் .
அதன் பிறகு ஆதியின் அறை நோக்கி சென்றான் .
cleardot.gif

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? நோயாளிங்க மனசு புரிஞ்சி நடக்குறது தான் நம்ம முதல் கடமை அதுக்கு தான் உங்களுக்கு இங்க வேல , நம்ப முன்ன இருக்குற நோயாளிங்கள கடவுளா பாருங்க ,




இந்த வேலையில செல்ப் கண்ட்ரோல் முக்கியம்னு உங்களுக்கு தெரியாத ," என்று எதிரில் இருக்கும் மருத்துவரை திட்டிக் கொண்டிருந்தான் ஆதி ...


"சாரி சார் ," ஏதோ டென்ஷன்ல ,

"டென்ஷன்ல ஹான் சொல்லுங்க டென்ஷன்ல, "

ஆபரேஷன் பயமா இருக்குனு சொன்ன பெரியவர்ட்ட, பயம்னா , இப்போவே எழுந்து போ வேண்டி தானே ", " ஏன் என் உயிர வாங்குறனு , நீக்க சொல்லிடுவீங்களா ...

"நம்ம கோவத்த வெளில மத்தவங்க மேல காட்றதே முதல தப்பு, நீங்க வைத்தியம் பாக்க வரவங்க மேல கோவத்த வெளி படுத்தி இருக்கீங்க" ...
"இட்ஸ் நாட் குட்"...

"டோன்ட் ரிப்பீட் அகைன் "...

அதற்குள் அம் மருத்துவர் மீண்டும் ஆதியிடம் மன்னிப்பு வேண்டினார்...

"இனி கவனமா இருங்க," என்று கூறி ஆதி அவரை அனுப்பி வைத்தான்...

இவை அனைத்தும் கேட்டபடியே சந்தீப் ஆதியின் அறையினுள் நுழைந்தான் .
cleardot.gif








"டேய் டாக்டர் , ஒழுங்கா என்னோட வந்துடு, " இல்ல உன் ஹாஸ்பிட்டல, நீயே ஒரு பெட்ல படுக்க வேண்டி தான்
என்று கொலை வெறியுடன் கூறினான் சந்தீப் ...

"ஹே என்ன டா " என்று சலித்துக் கொண்டான் ஆதி .

"கேம்ப் முடிஞ்சி ரெண்டு நாள் முன்ன இங்க வந்த , வந்ததுல இருந்து இங்கயே இருக்க ,
பொண்ண பாத்துட்டு வா, சொன்ன , நீ கேக்கல "...

"சரி ! டென்ஷன் ஆகாத, நான் வரன் ,"

" உனக்கு வேற எதாவுது ஹெல்ப் வேணுமா ?" என்று கேட்டான் ஆதி ...

"இவன் கல்யாணம் செய்றது எனக்கு உதவியா, " என்று மனதினில் புலம்பி , "ஆமா டா ,
நீ ஈவினிங் reception வேண்டான்னு சொல்லிட்ட, ஒவொன்னுத்துக்கும் என்ன கூப்பிடாதீங்கனு வேற சொல்லிட்ட , " கேம்ப் போனும் சொன்ன
3 மாசம் கழிச்சி வர...





இப்போ நிச்சயமும் , நாளைக்கு காலையில் 7 மணிக்கு முகூர்த்தம் ,

நீ நிஷா கழுத்துல தாலி கட்டணும் ,"

"இந்த உதவி மட்டும் செஞ்சிடு டா "

"நான் உங்க குடும்பத்து சங்காத்தமே வேண்டானு ஏன் திவியோட ஊரு பக்கம் போய்டுறேன் என்று வேண்டி கேட்டு கொண்டான் சந்தீப் .

அவன் கூறிய விதத்தில் சிரித்து விட்டான் ஆதி , நண்பனின் முகத்தில் சிரிப்பினை கண்டவுடன் வாஞ்சையுடன் ஒரு பார்வை பார்தத்தான் சந்தீப்.
பிறகு இருவரும் மண்டபம் சென்றனர் .
cleardot.gif






இருவரும் ஐயர் கூறும் பொருட்களை சரி பார்த்துக் கொண்டிருந்தனர் ...

"யூ டோன்ட் ஒர்ரி அண்ணி , சந்தீப் அழைச்சிட்டு வருவான் , கேம்ப் முடிஞ்சு ரெண்டு நாள் தான் ஆகுது,

ஆதிக்கு நேரம் சரியாய் இருக்கு அண்ணி ...
ஆதியோட ஆபரேஷன் டேட்ஸ் , அப்பாய்ண்ட்மென்ட் , தென் ஓபி பாக்குறது , அட்மின் ஒர்க்ஸ் செக் பண்றதுனு, நேரம் சரியாய் இருந்துது ...."

"ஆதி , நான் தான் டீன்! அப்டினு இல்லாம அவனும் மத்த டாக்டர்ஸ் கூட சேர்ந்து வேல செய்வான்னு தெரியாத அண்ணி," என்று நண்பனுக்காக பரிந்து பேசினாள் திவ்யா ...

பிறகு ஆதி சந்தீப்புடன் மண்டபத்தினுள் வந்தான் .
அங்கு தெரிந்தவர் அனைவர்க்கும் ஒரு புன்னகையுடன் தலையசைத்து, தன் தந்தை மற்றும் அண்ணன் இருக்கும் இடம் நோக்கி சென்றான்.

இருவரிடமும் பொதுவாக நேரம் ஆகியதுற்கு மன்னிப்பு வேண்டி , மணமகன் அறையினுள் சென்றான் ...

லெமன் எல்லோ ஷர்ட் மற்றும் டார்க் பிரவுன் பாண்ட் அணிந்து பார்க்க மிகவும் ஸ்டைலாக தெரிந்தான் ஆதி...

"டேய் மச்சி ," நான் ஏன் பொண்ண பொறக்கலனு , ரொம்ப பீல் பன்றேன் டா ...

நீ செமயா இருக்க மச்சான் என்று பாராட்டினான் சந்தீப்...

அதன் பிறகு நல்ல நேரத்தில் , ஐயர் அழைக்க நிஷா பெரியவர்களிடம் , ஆசி பெற்று ஆதியின் வீட்டில் குடுத்த புடவை பெற்றுக்கொண்டு சென்றாள் ...

சேலை மாற்றிய பிறகு மன மேடையில் இருவரும் தனது நெருங்கிய உறவுகளுடன் அமர்ந்தனர்.

பிறகு ஐயர் நிச்சய லக்னம் , வாசித்தார்...
அதன் பிறகு இருவருக்கும் சந்தனம் மற்றும் குங்குமம் பூசி பெரியவர்களால் வாழ்த்து பெற்றுக்கொண்டனர்
அப்பொழுது தான் நிஷா மற்றும் ஆதி பல வருடம் கழித்து சந்தித்து கொண்டனர் ...
இருவரும் ஒரு ஹாய் , என்று கூறி அறிமுகம் ஆயினர் ...
பிறகு இருவருக்கும் ஆரற்றி எடுத்து திருஷ்டி கழித்தனர்...
இவை அனைத்தும் முடிய இரவு 9 மணி ஆகிற்று ...

இரவு உணவு மண்டபத்திலே மிகவும் பிரம்மண்டபமாக தயார் செய்ய பட்டது...
அர்ஜுன் மற்றும் சந்தீப் உணவு நடக்கும் இடம் சென்று அங்குள்ள வேலையை பார்த்தனர்...
பெரியவர்கள் அனைவரும் ஒரு இடத்தில அமர்ந்து நாளை வேலை பற்றி சிந்தித்தனர்...
ஆரவ் உறங்கும் நேரம் என்பதால் , ஸ்ரீ குழந்தையுடன் இருந்தாள் ...

திவ்யா உடன் இருந்தாள் ...
நிஷா அவள் தோழிகளுடன் அவள் அறையில் இருந்தாள் ...
ஆதி தன் தொலைபேசியில் உள்ள தன் தாயின் புகைப்படத்தினை பார்த்துக்கொண்டு, " ஏன் மா என்ன விட்டு போன ?", என்று மனதுடன் தன் அன்னையுடன் உரையாடி கொண்டிருந்தான்
cleardot.gif






"திவி , உன்னோடயே , ஆதியை அழைச்சிட்டு , வந்து இருக்கலாம் , " என்றாள் ஸ்ரீ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top