என்னை தீண்டிவிட்டாய் 6

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
தீண்டல் 6

உன் இதழ்
சிரிப்பு
என்
உள்ளத்தவிப்பை
களையறுத்துவிட்டதடி...

தன்னுள் உழன்றபடி இருந்த ஷாகரை கலைத்தது அவனது அழைபேசி அழைப்பு...
அழைப்பை எடுத்தவன்
“சொல்லுங்க அம்மா..”
“கண்ணா எங்க இருக்க??”
“ஆஸ்பிடல்ல அம்மா..”
“என்னாச்சு பா.. உடம்புக்கு ஏதும் முடியலையா?? நேற்றும் கெஸ்ட் ஹவுசுல தங்கிட்ட.. அம்மா கவலை படுவேன்னு சொல்லாமா மறைச்சிட்டியா கண்ணா??”
“எனக்கு ஒன்றும் இல்லைமா.. உங்க மருமகளுக்கு தான்..”
“ஆதிராவுக்கு என்னாச்சு பா??” என்று அவனது அன்னை கேட்க அவள் மயங்கி விழுந்ததிலிருந்து அனைத்தையும் கூறியவன்
“அம்மா ரொம்ப பயமா இருக்குமா... அவளுக்கு ஏதும் ஆகிடாதுல்ல...” என்று அழுகையை அடக்கிக்ககொண்டு ஆறுதல் தேடும் மகனின் குரலை கேட்டவரின் உள்ளம் பதறி வருந்தியது..
ஆனாலும் அதை மறைத்தபடி
“கண்ணா அதெல்லாம் ஒன்றும் இல்லை.. என் மருமக சீக்கிரம் குணமாகி எழுந்து வந்து உன்கூட சண்டை போடுவா.. நீ கவலைபடாத கண்ணா.. டாக்டர்கள் இருக்காங்க... நாம வணங்குகின்ற பதினெட்டு பட்டி காவல்காரர் கருப்பர் என் மருமகளுக்கு காவலா இருப்பாரு.. நீ பயப்படாத கண்ணா.. துணைக்கு யாராவது இருக்காங்களா?? நான் கிளம்பி வரட்டுமா??”
“அவளோட ப்ரெண்டு இருக்காங்க அம்மா.. அதனால நீங்க அலைச்சல் படாதீங்க.. நான் பார்த்துக்கிறேன்...”
“சரி கண்ணா...நீ மருமகளை பார்த்துக்கோ...” என்றவர் அழைப்பை துண்டித்துவிட அதுவரை நேரம் அவனை அழுத்திய துக்கம் சற்று குறைந்தாற் போல் உணர்ந்தான் ஷாகர்..
ஒருவாறு மூன்று நாட்களுக்கு பின் காய்ச்சல் மட்டுப்பட கண் திறந்தாள் ஆதிரா...
அந்த மூன்று நாட்களும் பகல் நேரம் முழுவதும் ஷாகர் துணையாயிருக்க வேலை முடிந்து மோகனா வந்ததும் அருகில் உள்ள தன் நண்பனின் கெஸ்ட் ஹவுசிற்கு சென்று குளித்து உடைமாற்றி வருபவன் மீண்டும் ஹாஸ்பிடலே கதியென்று கிடந்தான்...
மோகனா அவளிருக்கும் நேரங்களில் ஷாகரின் வயிறு காயாமல் பார்த்துக்கொள்வாள்.... ஆதிரா மூலம் ஷாகரை அறிந்தவள் ஆதிராவிற்காக ஷாகர் ஏன் தன்னையே இத்தனை தூரம் வருத்துக்கொள்கிறான் என்று சந்தேகத்தோடு நோக்க அவனது கண்களில் தெரிந்து துக்கம், பரிதவிப்பு அவளுக்கு வேறு ஏதோவொன்றை உணர்த்தியது... ஆனால் அதை பற்றி ஆராய இது நேரமில்லை என்று உணர்ந்தவள் ஆராய்ச்சியை தற்காலிகமாக இடை நிறுத்திவிட்டாள்...
மூன்றாம் நாள் காலை காய்ச்சலின் வீரியம் குறைந்ததாலும் குருதி துணிக்கைகளின் எண்ணிக்கை சரியான மட்டத்திற்கு சீர்ப்பட்டதாலும் கண்விழித்தவள் சுற்றி யாரும் இருக்கின்றனரா என்று தேட அருகில் அமர்ந்திருந்த ஷாகர் அவளது கண்ணில் பட்டாள்.
மெதுவாக தன் இதழ் பிரித்து “ ஷாகர்” என்று அழைக்க அதுவரை பாதி தூக்கத்தில் இருந்தவன் அடித்துப்பிடித்துக்கொண்டு கண்விழித்தவன் எதிரேயிருந்த ஆதிரா கண்விழித்ததை கண்டு அவளருகே வந்தவன்
“ஆது... ஆது... எப்படி இருக்கமா?? உடம்புக்கு எப்படி இருக்கு...?? இரு டாக்டரை கூப்பிடுறேன்...” என்றவன் டாக்டரை அழைத்து வந்தான்..
ஆதிராவை பரிசோதனை செய்த டாக்டர் அவளது உடல்நிலை தற்போது தேறி உள்ளதாகவும் ஒருமாதத்திற்கு உடல்நலத்தில் அதிகப்படியான கவனம் தேவையென்றும் அறிவுறுத்திவிட்டு சென்றார்..
டாக்டர் சென்றதும் ஆதிரா அருகில் வந்த ஷாகர் அவளது தலையை தடவியபடி
“ஆதுமா... நீ ரெஸ்ட் எடு.. நான் உனக்கு சாப்பிட என்ன கொடுக்கலாம்னு டாக்டர்ட கேட்டு கான்டீன்ல ஆர்டர் பண்ணிட்டு வர்றேன்” என்று விலகிச்செல்ல முயன்றவனை கைபிடித்து தடுத்தவள்
“ஷாகர் எனக்கு என்னாச்சு?? எதுனால என்னை ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணீங்க... அன்னை என்னோட கேபின்ல இருக்கும்போது தலை சுத்துறமாதிரி இருந்துச்சி.... அதுக்கு பிறகு என்ன நடந்ததுனு எனக்கு நியாபகமில்லை...” என்று ஆதிரா கேட்க அவளுக்கு தேவையான பதிலனைத்தையும் கொடுத்தவன்
“ரொம்ப பயந்துட்டேன் ஆது.. நீ வேற ரொம்ப வீக்கா இருந்த.. டாக்டரும் அப்படி சொன்னதும் உடம்பெல்லாம் உதற ஆரம்பிச்சிடுச்சு. .அதை எப்படி சொல்லுறதுனு தெரியலை....”என்றவனை கையை ஆதரவாக பற்றியவள்
“நீங்க இப்போ வீட்டுக்கு போங்க.. ஆண்டி உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..”
“என்னை துரத்துறதுலயே குறியா இரு...”
“இல்லை ஷாகர்.. நீங்க இந்த மூன்று நாளா சரியா சாப்பிடலை தூங்கலனு உங்க முகத்தை பார்த்தலே தெரியிது. இப்போ வீட்டுக்கு போய் ப்ரஸ் ஆகிட்டு நல்லா சாப்பிட்டு தூங்கி எழும்பி ஈவினிங் வாங்க...” என்று அவனை வீட்டுக்கு செல்ல வற்புறுத்த அவனோ
“இல்ல ஆது.. உன்னை தனியா விட்டுட்டு என்னால வீட்டுக்கு போக முடியாது . அதோட டாக்டர் உன்னை ரொம்ப கவனமா பார்த்துக்க சொல்லியிருக்காரு.. உனக்கு வந்த பீவர் மறுபடியும் வர சான்ஸஸ் இருக்குனு சொல்லியிருக்காரு.. அதுனால உன்னோட ஹெல்த் பழைய நிலைமைக்கு திரும்புற வரைக்கும் நான் உன்னை தனியா விடவே மாட்டேன்..”
“என்னோட ஹெல்த்தை சரி பண்ண உங்க ஹெல்த்தை கெடுத்துக்க போறீங்களா?? ஷாகர் சொன்னா கேளுங்க ப்ளீஸ்.... நான் இப்போ நல்லா தான் இருக்கேன்.. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க... நர்ஸ் எனக்கு துணைக்கு இருக்காங்க... அதுனால நீங்க கிளம்புங்க...” என்று அவனை வற்புறுத்தியும் அவன் இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை..
திரும்பத்திரும்ப போராடியவளுக்கு தோல்வியே மிஞ்ச கோபித்துக்கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டாள் ஆதிரா. அவளது செல்லி கோபத்தில் சிரித்தவன்
“என்னோட பேபி கோபம வந்திடுச்சு போல...”
“ஆமா...”
“ஹாஹா.... கோவிச்சிக்காத பேபி..”
“நான் கோபப்படாம இருக்கனும்னா நீங்க வீட்டுக்கு கிளம்பனும்...”
“ம்ம்ம்...சரி கிளம்புறேன்..”
“கிளம்புறீங்களா...சரி ஓகே கிளம்புங்க...”
“ஹேய் இப்போ தான் கிளம்ப மாட்டேன்னு சொன்னதுக்கு கோபிச்சிக்கிட்ட.. இப்போ கிளம்புறீங்களானு சோகமா கேட்குற?? இப்போ நான் என்ன செய்யட்டும்??”
“நீங்க ஒன்னும் செய்ய வேணாம்...இப்போ கிளம்பி வீட்டுக்கு போயிட்டு ரெஸ்ட் எடுங்க..”
“அப்படினு என்னோட ஆரா பேபி வாய் சொல்லுது.... ஆனா கண்ணு வேற என்னமோ சொல்லுதே..”
“அதுவும் அதைதான் சொல்லுது.. நீங்க கதையை மாற்றாமல் கிளம்புங்க..” என்று இருவரும் உரையாடியபடி இருந்தபோது உள்ளே வந்தார் வசுமதி.
அவரை பார்த்த ஷாகர்
“வாங்க மா.. உங்களை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்..” என்றதும் அவனருகே கட்டிலில் படுத்தபடியிருந்த ஆதிராவை பார்வையிட்டபடி அவளருகே வந்தவர் தன் கையில் வைத்திருந்த விபூதிப்பொட்டலத்தை திறந்து விபூதியை எடுத்து அவளது நெற்றியில் பூசிவிட்டவர்
“அம்மாடி இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?? டாக்டர் வந்து பார்த்தாரா??” என்று கேட்க ஷாகரே அதற்கான பதிலனைத்தையும் கூறினான்..
“ஷாகர் உனக்கு இப்படினு சொன்னதும் நான் ரொம்ப பயந்து போயிட்டேன்.. இப்போ தான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.. கண்ணா நீ வீட்டுக்கு போயிட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. நான் ஆராவுக்கு துணையா இருக்கேன்..” என்றவரில் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காது கிளம்பியவனிடம்
“பாஸ்.. புல் ஷேவ் பண்ணிடுங்க... உங்களுக்கு தாடி செட்டாகல...” என்று ஆதிரா கூறி சிரிக்க அவளுடன் இணைந்து கொண்டார் வசுமதி...
“ஆமா கண்ணா... தாடி வச்சா நீ சேது பட விக்ரம் மாதிரி இருக்க..” என்று அவரும் வார ஷாகரோ
“நக்கலு... மாமியாரும் மருமகளும் என்னை வச்சா ஓட்டுறீங்க.. உங்க இரண்டு பேரையும் வந்து கவனிச்சிக்கிறேன்..” என்றபடி அவர்களிடம் விடைபெற்று விடைபெற்றவன் தன் இல்லம் நோக்கி சென்றான்..
மேலும் இரண்டு நாட்கள் ஆஸ்பிடலில் இருந்தவள் மூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட அவளை வற்புறுத்தி தம் இல்லத்திற்கு அழைத்து வந்தார் வசுமதி..
ஆதிரா எவ்வளவோ மறுத்தும் கூட அவர் கேட்கவில்லை... அவருக்கு துணையாக பிரகஸ்பதியும் அவளை உடல்நிலை சரியாகும் வரை தங்கள் இல்லத்தில் தங்கச்சொல்ல அவளால் மறுக்க முடியவில்லை..
ஆஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியவளை வசுமதியோடு தன் காரிலேயே தன் இல்லத்திற்கு அழைத்து சென்றான்...
மோகனா ஏற்கனவே அவளது உடைகளை பயணப்பொதியில் பாக் செய்து ஆஸ்பிடலிற்கு கொண்டு வந்துவிட அவள் தங்குவதற்கு எந்தவித இடையூறும் இருக்கவில்லை..
வீட்டிற்கு வந்திறங்கிய ஆராவை ஆராத்தி எடுத்து வீட்டிற்கு அழைத்து சென்ற வசுமதி அவளை விருந்தினர் அறையில் தங்க வைத்ததோடல்லாமால் அவளுக்கு தேவையான அனைத்தும் தானே கவனித்து செய்தார்...
வசுமதியின் கவனிப்பு ஆராவிற்கு தன் தாயினை நினைவுபடுத்த அவளது கண்கள் கலங்கியது.. ஆனாலும் அதனை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.. இவ்வாறு வசுமதியின் ஒரு வார கவனிப்பிலேயே நன்றாக தேறிவிட்டாள் ஆதிரா...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top