என்னை தீண்டிவிட்டாய் 5

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
ஆதிராவின் கேபினுள் சென்றவன் அவளது இருக்கையில் அவள் இல்லாமல் இருக்க தன் விழிகளால் தேடியவனுக்கு இருக்கைக்கு அருகில் மயங்கி சரிந்து கிடந்த ஆதிரா தென்பட்டாள்... அவளை பார்த்ததும் அதிர்ந்தவன் தாமதிக்காது அவளருகே சென்று அவளை மடியில் ஏந்தியவன் அவள் கன்னம் தட்டி எழுப்ப முயன்றான்...அவளது கன்னம் தட்டுகையில் அவனது கைகள் உணர்ந்த சூடு அவளுக்கு காய்ச்சல் என்பதை உணர்ந்த அவளை கையில் ஏந்தி அங்கிருந்த சோபாவில் படுக்கச்செய்தவன் அவளது தண்ணீர் போத்தலில் இருந்த தண்ணீரை முகத்தில் தெளிக்க அப்போதும் ஆதிராவிடம் எந்த அசைவும் இல்லை.... இனி தாமதிப்பது உசிதமல்ல என்று உணர்ந்தவன் டிரைவருக்கு அழைத்து வண்டியை எடுத்துக்கொண்டு என்ட்ரன்சுக்கு வருமாறு அழைத்தவன் ஆதிராவிற்கு தூக்கிக்கொண்டு செல்ல முயன்றவன் ஏதோ நியாபகம் வந்தவனாக ஆதிராவின் இன்டர்காமில் ரேகாவிற்கு அழைத்து விடயத்தை சுருக்கமாக கூறியவன் அவளை துணைக்கு வருமாறு அழைத்தான்... அப்போது மேசை மீது கிடந்த ஆதிராவின் மொபைலும் கண்ணில் பட அதையும் எடுத்துக்கொண்டவன் ஆதிராவை தூக்கிக்கொண்டு வாசலிற்கு விரைந்தான்...அவன் வந்து சேரும் போது ரேகாவும் வந்துவிட வாசலில் காத்திருந்த காரினுள் பின்புறம் ரேகாவை ஏறச்சொன்னவன் அவள் மடியிலே ஆதிராவை கிடத்திவிட்டு அவன் முன்புறம் அமர்ந்து கொள்ள அவனது கார் வேகம் எடுத்தது...
இருபது நிமிடத்தில் கார் ஆஸ்பிடலை அடைந்து விட மற்றைய அனைத்தும் விரைவாக நடந்தது..... ஆதிரா உடனடியாக அவசர சிகிச்சை பிரிவிற்குள் அழைத்து செல்லப்பட மற்றைய அனைவரும் வெளியே காத்திருந்தனர்...
இதுவரை நேரம் இல்லாத பயம் இப்போது ஷாகரை ஆட்டிப்படைத்தது... காலையில் அவளது சோர்வான முகத்தை பார்த்து போதே அவளை ஆஸ்பிடல் அழைத்து வந்திருக்க வேண்டும்.. அவளது பேச்சை கேட்டு அப்படியே. விட்டிருக்க கூடாது என்று அவன் மனதினுள் தன்னைத்தானே திட்டிக்கொண்டான்... அவள் மயங்கி மடிந்திருந்த தோற்றம் அவன் முன் வந்து அவனை கலங்கடித்தது... ஆதிராவிற்கு என்னவோ ஏதோ என்ற பயத்தில் அடுத்து செய்யவேண்டியது குறித்து ஷாகரின் மூளையோ சிந்திக்க மறுத்தது... ஆனால் அவனது சிந்தனையை கலைக்கவென ஒலித்தது ஆதிராவின் மொபைல்.. அதை எடுத்து பார்த்தவன் அதில் மோகி என்றிருக்க அழைப்பை எடுத்து காதில் வைத்த அடுத்த நொடி
“ஆரா நீ ஆபிசுக்கு லீவு சொல்லிட்டு உடனே ஜி.எச்சிற்கு வா... பஸ்ஸில் வராதா ஏதாவது கேப் புக் பண்ணி வா... இல்லை நீ வராதே... நானே வந்து உன்னை அழைச்சிட்டு போறேன்... ஏதும் ஸ்டெயின் பண்ணிக்காத... நான் இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் உன் ஆபிஸில் இருப்பேன்...” என்று எதிர் முனையில் மோகனா தன் பாட்டில் பேசிக்கொண்டே அவளை இடைநிறுத்த முயன்ற ஷாகர் அதுமுடியாமல் போகவே
“ஹலோ மிஸ்.... கொஞ்சம் கேப் விட்டு பேசுங்க.... எதிர்புறம் யாரு பேசாராங்கனு தெரியாமல் நீங்க பாட்டுக்கு பேசிட்டு போறீங்க....” என்று ஷாகர் குரல் கொடுத்ததும் சில கணங்கள் எதிர்புறம் எந்த சத்தமும் இல்லை... பின் மோகனா மீண்டும்
“இது ஆதிரா போன் தானே..??” என்று கேட்க அதற்கு ஆம் என்று கூறிய ஷாகர் அவள் யாரென்று விசாரித்துவிட்டு ஆதிராவை ஆஸ்பிடலில் அட்மிட் செய்திருப்பதை மோகனாவுக்கு தெரிவித்தான்...
“ரொம்ப தாங்ஸ் சார்... அவளை சரியான நேரத்தில் ஆஸ்பிடலில் சேர்த்தீங்க.... அவளுக்கு ஐ.ஜி.எம் அன்டிபாடி டெங்கு டெஸ்டில் பாசிடிவ் என்று ரிசல்ட் வந்திருக்கதா இப்போ தான் ஆஸ்பிடலில் இருந்து கால் பண்ணாங்க... அதோடு உடனடியாக வந்து அட்மிட் ஆகவும் சொன்னாங்க....”
“என்னது டெங்குவா???” என்று ஷாகர் உச்சக்கட்ட அதிர்ச்சியில் கேட்க மோகனாவோ
“ஆமா சார்... பிளட் கவுன்ட்டும் குறைவாக இருப்பதாக சொன்னாங்க....”
“சரி நீங்க இப்போ எங்க இருக்கீங்க..??”
“ நான் இப்போ தான் சார் என்னோட ஆபிஸில் இருந்து வெளியே வருகிறேன்...”
“சரி அப்போ நீங்க டெஸ்ட் எடுத்த அந்த ஆஸ்பிடலுக்கு போய் ஆதிராவோட ரிப்போட்சை கலெக்ட் பண்ணிட்டு இங்கு சிட்டி ஆஸ்பிடலுக்கு வாங்க... எனக்கு நீங்க டெஸ்ட் எடுத்த ஆஸ்பிடல் பெயரையும் நம்பரையும் ஆதிரா நம்பருக்கு டெக்ஸ்ட் பண்ணிவிடுங்க... நீங்களும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்க” என்றுவிட்டு போனை அணைத்தவன் அடுத்த வேலைகளை கவனிக்க தொடங்கினான்... மனது ஒருபுறம் பதைபதைத்தாலும் கைகளோ அதன் வேலைகளை செய்து கொண்டிருந்தது....
முதலில் ஆதிரா டெஸ்ட் எடுத்த ஆஸ்பிடலுக்கு அழைத்தவன் ஆதிராவை இப்படி அட்மிட் பண்ணியிருப்பதாகவும் அதனால் உடனடியாக ரிப்போட் தேவைப்படுவதாகவும் ஆதலால் தாமதிக்காது தன் மெயிலடிக்கு மெயில் செய்யுமாறு வேண்டினான்... நிர்வாகமும் நோயாளியின் நிலையை கருத்தில் கொண்டு அவனது வேண்டுதலை நிறைவேற்றியது.... ஆதிராவின் ரிப்போட் கிடைத்ததும் தாமதிக்காது அது தொடர்பாக டாக்கருக்கு தெரிவித்தவன் அவர்கள் ட்ரீட்மென்ட் தொடங்க தன்னாலான அனைத்தையும் செய்தவன் ஓய்ந்து போய் அமர்ந்தான்.. இதற்கிடையில் மோகனாவும் வந்துவிட ஆதிராவிற்கு துணையாய் அழைத்து வந்திருந்த ரேகாவை தனது காரிலேயே ஆபிஸிற்கு அனுப்பினான்... அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் மோகனா அமர்ந்திருக்க அவள் கொண்டுவந்திருந்த ஆதிராவின் ரிப்போட்சை டாக்டரின் ஒப்படைப்பதற்காக அவரது அறையை தட்டிவிட்டு உள்ளே சென்றான் ஷாகர்... அவனை வரவேற்றவர் அவனது கையில் இருந்த ரிப்போட்சை வாங்கியவர் அதை பத்திரப்படுத்திக்கொண்டிருக்கும் போது ஷாகர்
“டாக்டர் ஆதிரா இப்போ எப்படி இருக்கா?? அவளோட ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கு??”
“அவங்களுக்கு டெங்கு பீவர்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்... இது கொஞ்சம் சிவியரான பீவர்... மற்றைய வைரஸ் ப்ளூ மாதிரி இல்லை....இது பிளேட்லட்சை சடுனா குறைச்சிரும்.... அதோடு இவங்களுக்கு டெங்கு பீவர் மோர் தேன் த்ரீ டேஸ்ஸா இருக்குனு ரிப்போட்ஸ் சொல்லுது...”
“இல்லை டாக்டர்... அவ நல்லா தான் இருந்தா.... இன்னைக்கு மார்னிங் தான் சோர்வாக இருந்தா...”
“இது சாத்தியம் தான் மிஸ்டர் ஷாகர்.... சிலருக்கு சிம்டம்ஸ் முதலில் தெரியாது.... த்ரீடு போர் டேஸ்கு பிறகு தான் தெரியும்... மிஸ் ஆதிராவுக்கும் அப்படி தான் போல... ஆனா அது தான் அவங்களோட இந்த க்ரிட்டிக்கலான சிட்டுவேஷனுக்கு காரணம்... லேட் பண்ண லேட் பண்ண இந்த பீவர் சிவியர் ஆகிட்டே போகும்...”
“ஐயோ டாக்டர் என்ன சொல்லுறீங்க?? அப்போ ஆதிரா....”
“மிஸ்டர் ஷாகர் ஆதிராவை காப்பாற்றிடலாம்... ஆனா அவங்க ரிக்கவராக கொஞ்சம் டைம் எடுக்கும்... அதோடு அவங்களை தொடர்ந்து எங்களுடைய கண்காணிப்பில் தான் வைத்திருப்போம்.... அவங்களுடைய பிளட்கவுட்டை அதிகரிக்க வைத்துவிட்டால் அவங்க சீக்கிரம் குணமாகிருவாங்க... ஆனா நிமிஷத்துக்கு நிமிஷம் அவங்க பிளட் கவுண்ட் குறைந்துகொண்டே போகுது.. அதுதான் கொஞ்சம் கவலைக்குரியதாக இருக்கு....”
“டாக்டர்...”
“கவலைப்படாதீங்க மிஸ்டர் ஷாகர்... ஆதிராவை கியோர் பண்ணிரலாம்...... நான் இதை ஏன் உங்களிடம் சொல்றேனா நோயாளியோட நிலையை அவங்க வீட்டு ஆட்களுக்கு தெரியப்படுத்துறது ஒரு டாக்டரா என்னோட கடமை... அதான் அவங்களுடைய நிலையை உங்களுக்கு தெரியப்படுத்தினேன்...”
“டாக்டர் அப்போ ஆதிராவுக்கு ஏதும் பிராப்ளம் இல்லை தானே??”
“85% அவங்க உயிருக்கு உத்தரவாதம் தர என்னால் முடியும்... ஆனால் அவங்களோட பிளட் கவுண்ட் தொடந்து குறைந்துகொண்டே போனால் கொஞ்சம் ரிஸ்க் இருக்கு... சோ..” என்று டாக்டர் நிறுத்த அதற்கு பின் என்ன கேட்பதென்று ஷாகருக்கு தெரியவில்லை... அவரது வார்த்தைகள் அவனை மிகவும் கலவரப்படுத்தியிருந்தன.... டாக்டருக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்தவனுக்கு தன்னை சுற்றி நடப்பது எதுவும் கருத்தில் பதியவில்லை..... அங்கிருந்து நாற்காலியில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது... ஆண்பிள்ளை அழக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதாலோ என்னவோ அந்த அழுகை அவனது கண்களில் இருந்து வெளிவரவில்லை.... ஆதிராவை நினைக்கையில் அவன் மனம் படும்பாட்டை அவனால் தணிக்கமுடியவில்லை...
தான் இருந்தும் ஆதரவற்று தவிக்கும் நிலையில் அவளை தனியே விட்டது தவறு என்று அவன் மனம் அவனை சாடியது... அவளை விரும்பியதை தவிர வேறு எந்த மகிழ்ச்சியை அவளுக்கு கொடுத்தேன்??? அவளது நலன் அறிந்தேனா?? அவளது துக்கம் அறிந்தேனா???இல்லை அவளுக்கு பிடித்தது ஏதேனும் இதுவரை செய்துள்ளேனா??? எதுவுமே இல்லையே.... தினம் தினம் என்மேல் அவள் கொண்ட காதலை மறைக்க அவள் பிரம்மப்ரயத்தணப்பட்டு வேதனைப்படுவதை மட்டுமே என்காதல் பரிசாக அளித்தது.... நேற்று அந்த சங்கிலி அவள் கழுத்தில் இருப்பதை நான் பார்க்காவிடின் இப்போதும் அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ள தயங்கிதானே இருந்திருப்பேன்??? என்னை விலக்கிய முயன்றவள் அவள் மீதான என் உரிமையை மறைத்ததேன்??? ஆனால் பதில் தான் அவனிடம் இல்லை...
தன்னுள் மருகியபடி. இருந்தவனை கலைத்தது மோகனாவின் குரல்...
“சார் நீங்க வேணும்னா கிளம்புங்க சார்.... நான் ஆராவை பார்த்துக்கிறேன்....”
“பரவாயில்லை...மிஸ்...”
“மோகனா..”
“மோகனா... நான் உங்க துணைக்கு இருக்குறேன்... ஆதிரா கண்முழிச்சதும் கிளம்புறேன்...” என்றவன் தனது சிந்தனையிலேயே சுழன்றான்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top