என்னை தீண்டிவிட்டாய் 4

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
தீண்டல் 4

காதலால்
காதலிப்பதை காட்டிலும்
கடினமானது
காதலை காதல்
மனதினுள்
பூட்டிவைப்பது....

ஹாஸ்டலுக்கு வந்த ஆதிரா தன்னறையினுள் சென்று கதவை பூட்டிக்கொண்டு கட்டிலில் விழுந்தாள்... அவளது அறைத்தோழி மோஹனா ஊரிற்கு சென்றிருந்தபடியால் இன்று அந்த அறையில் அவள் மட்டுமே.... கட்டிலில் விழுந்தவளுக்கு இவ்வளவு நேரம் அடக்கப்பட்டிருந்த கண்ணீர் அணைப்புடைந்து வெளிவரத்தொடங்கியது.... இவ்வளவு நாட்கள் எதனை மறைக்க கஷ்டப்பட்டாளோ அதை ஷாகர் தெரிந்து கொண்டான் என்ற உண்மை ஒருபுறம் அவளிடம் மகிழ்ச்சியை உண்டுபண்ணாலும் மறுபுறம் வேண்டாம் இது நடைமுறைக்கு சரிவராது என்ற கலக்கத்தை உண்டுபண்ண மனம் தவறவில்லை.... ஆனால் இவ்வளவு காலமாக ஷாகரின் கீழ் பணியாற்றியதில் அவள் அனுபவத்தால் உணர்ந்த விடயம் அவன் ஒரு முடிவெடுத்துவிட்டால் அதிலிருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டான்.... இந்த காரணத்தாலேயே அவன் தன் காதலை வெளிப்படுத்தியபோது மனதினுள் ஆசைகள் இருந்த போதிலும் அவள் அதை மனதினுள்ளே புதைத்துவிட்டு அவன் காதலை மறுத்தாள்.... ஆனால் அவ்வப்போது அவளது காதலையும் தாண்டிய அந்த உணர்வு அவளது விருப்பத்தை அவளுணராமலேயே அவன்முன் வெளிவர அதில் அவள் எண்ணத்தை அறிந்து கொண்ட ஷாகர் அவளது காதலை ஒப்புக்கொள்ள செய்துவிட்டான்..... ஆனாலும் அன்றொரு நாள் விதியின் சதியால் அவர்களுக்கு நடந்த அந்த சம்பவத்தை அவன் மறந்ததாக ஆதிரா எண்ணியிருக்க ஷாகரோ அதை தான் இன்னும் மறக்கவில்லை என்று கூறி இன்று அவனது காதலை உறுதிப்படுத்திக்கொண்டான்.... ஆனால் ஒரு இக்கட்டான நிலையில் தன்னை காப்பாற்றுவதற்காக நிகழ்ந்த அந்த சம்பவத்திற்கு அவனை பொறுப்பாளியாக்க விரும்பாததாலேயே ஆதிரா அவனது காதலை மறுத்தாள்...... வாய் வார்த்தைகளால் மறுத்த போதும் மனதினுள் தன்னிலையை எண்ணி வெறுத்தாள்...... ஆனால் ஷாகர் அவளை உரியமுறையில் அணுகி அவளை சம்மதம் சொல்ல வைத்துவிட்டான்..... அதன் பின் இது சரிதானா??? என்று சுய அலசலில் இறங்கியவளுக்கு பதில் பூச்சியமே... ஆனால் ஷாகரின்பால் ஒரு உரிமையுணர்வு மேலோங்கியிருப்பதை அவள் உணர்ந்தே இருந்தாள்......... அதனாலேயே அவள் இதுவரை காலம் அவனது பி.ஏ வாக பணியாற்றிக்கொண்டிருக்கிறாள்.. அதற்கு அவள் போர்வையிட்டிருக்கும் பெயர் நன்றிக்கடன்...... தன்னை அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியவனுக்கு இறுதிவரை சேவகம் செய்யவேண்டும் என்று தனக்குள் கூறிக்கொள்வாள்..... ஆனால் மனமோ “இறுதி என்பதில் நீ எதை கூற முற்படுகிறாய்???? அவன் ஜீவன் உள்ளவரை அவனுக்கு சேவகம் செய்யக்கூடிய ஒரே நபர் அவன் மனைவியாக மட்டுமே இருக்க முடியும்... அவ்வாறாயின் நீ அவனது மனைவியாய் இருக்க போகிறாயா????” என்று இடர் கேள்வி கேட்டு அவளை திண்டாடவைத்தது......
எதில் தொடங்கினாலும் எல்லாம் அந்த காதல் திருமணம் என்ற இரு வார்த்தைகளில் முடிவடைய அதில் மனமுடைந்தவளுக்கு கண்ணீரில் கரையவே முடிந்தது....
ஆனால் அவள் உணராத விடயம் ஷாகரை விட்ட விலக வேண்டும் என்று ஒருபோதும் அவளுக்கு தோன்றியதில்லை..... அதற்கான காரணத்தை அவள் தன் மனதிடம் கேட்டிருந்தாலே அவளுக்கு பதில் கிடைத்திருக்கும்..... ஆனால் ஷாகரின் உயரம் அவளை அதுபற்றி சிந்திக்கவிடமால் தடுத்தது...
இரவுமுழுவதும் கண்ணீரில் கரைந்தவள் அதிகாலை வேளையிலேயே கண்ணயர்ந்தாள்....
ஆதிரா இரவு முழுவதும் அழுகையில் கழிக்க அங்கு ஷாகரோ தன் பால்கனியில் நடை பயின்றான்.... ஆதிராவை ஹாஸ்டலில் இறக்கிவிட்டவன் தன் அன்னைக்கு அழைத்து தான் வர தாமதமாகும் என்றும் அதனால் தான் இன்று பாம் ஹவுஸில் தங்குவதாகவும் கூறியவன் தன் அன்னையின் சந்தேகக்கேள்விகளுக்கும் பதிலளிக்கவும் தவறவில்லை.... அன்னையுடன் பேசிமுடித்துவிட்டு தன் காரை கடற்கரை நோக்கி செலுத்தினான் ஷாகர்.....
அங்கு ஓரமாக காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி கடலை நோக்கி நடந்தவன் கரை மண்ணில் அமர்ந்துகொண்டு கடல்காற்றை சுவாசிக்க தொடங்கினான்...
இரவு வானில் வெண்ணிலவு ஒளி வீச அதே வானில் நட்சத்திரங்கள் ஆங்காங்கே சித்திரங்கள் வரைந்திருந்தது.... அதற்கு தாலாட்டு பாடிக்கொண்டிருந்தது கடலலைகள்.... கரையினை தொட ஆர்பரிக்கும் அலைகள் கரையை தொட்டதும் வந்த தடம் தெரியாமல் திரும்ப அதன் வருகையை பாறைகளை ஈரப்படுத்தி தெரிவித்திருந்தது..... அந்த ரம்மியமான வேளையில் இடையிடையே தன் இருப்பை அறிவித்தது உடலைத் தழுவிச்சென்ற கடல்காற்று..... சுற்றுப்புறமோ இத்தனையழகாய் இருக்க அதில் ஒன்றிக்க முடியாது அமர்ந்திருந்தான் ஷாகர்..... எப்போதெல்லாம் மன அமைதி வேண்டுமோ அப்போதெல்லாம் இரவு நேரம் கடற்கரையில் வந்து அமர்ந்துவிடுவான்.... அவனது மனது அமைதிப்படும் வரை கடலன்னையுடன் மனதால் உரையாடுவான்... அவ்வன்னையும் தன் மகனின் குழப்பங்களுக்கான பதிலை அலைகளின் மூலம் வெளிப்படுத்துவாள்...
அந்த கடலன்னையாலேயே இன்று தன் மகவின் குழப்பத்தை தீர்க்க முடியவில்லை.....
ஷாகரோ என்னசெய்வது என்று தெரியாது குழம்பி நின்றான்..... அவனால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.... ஆதிராவை எவ்வாறு சரிகட்டுவது என்று அவனுக்கு புரியவில்லை.... எத்தனையோ பிசினஸ் டீலிங்கை சர்வசாதாரணமாக முடித்தவனால் இன்று தன் காதலியை சரிகட்ட முடியவில்லை... எதிரிலிருப்பவரின் பார்வையிலேயே அவர் அனுமானங்களை புரிந்து கொள்பவனுக்கு தன் காதலியின் எண்ணவோட்டத்தை அனுமானிக்கமுடியாததை எண்ணி கவலையாய் இருந்தது..... அவனுள் பல கேள்விகள்...... ஆதிரா தன்னை கணவனாய் எண்ணும் பட்சத்தில் ஏன் விலகுவதிலேயே குறியாய் இருக்கின்றாள்??? அதற்கு தன் ஸ்டேட்டஸ் காரணம் என்றாலும் நான் அதனை சரிசெய்துவிடுவேன் என்று அவளுக்கு தெரியாதா????? தான் ப்ரோபோஸ் செய்தபோது கூட அவள் உடனேயே சம்மதிக்கவில்லையே.... அவளை சம்மதிக்க வைப்பதற்குள் நான் தலையால் தண்ணி குடிக்க வேண்டியதாகிவிட்டதே...... காதலை ஏற்ற போதும் அவள் விலகுவதிலேயே குறியாய் இருந்தாளே..... ஏன்???? மறைக்க முயன்ற காதல் அவளறியாமல் வெளிப்பட்டு சம்மதம் சொல்லிவிட்டதாலா....???? அதிலிருந்து தப்புவதற்காக தான் தன்னை விட்டு விலக முயல்கிறாளோ...????? ஆனால் இன்று காலை அவளல்லவா முதல் வாழ்த்து கூறினாள்????? பிரியம் இல்லாமலா இவ்வாறு நடந்து கொள்வாள்....?????? இல்லை....... இதில் வேறு ஏதோ ஒரு மர்மம் இருக்கின்றது...... அதை ஆதிரா நம்மிடம் சொல்லாமல் மறைக்கின்றாள்........ ஆனால் ஏன் மறைக்க வேண்டும்??????? எதனால் மறைக்கின்றாள்???????? கண்டுபிடிக்க வேண்டும்........ என்று முடிவெடுத்தவனுக்கு ஏதோ ஒரே தெளிவு பாதை கிட்டிய உணர்வு....... உள்ளம் தெளிந்தவன் அங்கிருந்து கிளம்பி தன் பாம் ஹவுசிற்கு சென்றான்... அங்கு சென்று படுக்கையில் விழுந்தவனுக்கு உறக்கம் வரவில்லை... தெளிவு கிடைத்த போதும் அதனை நடைமுறை படுத்தும் வழிதெரியாது மனம் குழம்பித்தவித்தது.... அந்த குழப்பம் அவன் உறக்கத்தை விழுங்கிக்கொள்ள உறக்கம் வராமல் பால்கனியில் நடை பயின்றவன் ஒரு கட்டத்தில் அயற்சியில் அங்கிருந்து பிரம்பு நாற்காலியில் அமர்ந்தவாறே உறங்கிவிட்டான்.....
அசந்த தூங்கிக்கொண்டிருந்த ஆதிராவின் உறக்கத்தை கலைத்தது கதவு தட்டும் சத்தம்.... மெல்ல கண் விழித்தவள் எழுந்து சென்று கதவை திறக்க வெளியே நின்றிருந்தாள் மோகனா.......
“ஆரா எவ்வளவு நேரம் கதவை தட்டுறது???? போன் பண்ணா போனை அட்டென்ட் பண்ணாம இப்படி தான் கும்பகர்ணி மாதிரி தூங்குவியா????? நான் உனக்கு ஏதோனு பயந்துட்டேன்.....” என்று நிறுத்தாமல் மோகனா வசைபாட அதை கேட்க ஆதிரா அங்கு இல்லை....
கதவை திறந்து விட்டவள் மீண்டும் கட்டிலிற்கு வந்து வீழ்ந்திருந்தாள்....
அவளது நடவடிக்கையில் இருந்து ஏதோ சரியில்லை என்றுணர்ந்த மோகனா அவளருகே வந்து அவள் உடலை தொட்டுப்பார்க்க அது அனலாக கொதித்தது....
“ஹேய் ஆரா இது என்ன உடம்பு இப்படி அனலாக கொதிக்குது???? என்னாச்சு மா.... நேற்றிலிருந்து இப்படி தான் இருக்கா???? வா டாக்டர்ட போகலாம்....” என்று ஆதிராவை மோகனா அழைத்து செல்ல முயல
“இல்லை மோகி.... லைட்டா பீவர் டாப்லட் போட்டுருக்கேன்.... இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓகே ஆகிரும்.... நீ போய் ப்ரெஸ் ஆகிட்டு வா....”
“ஏய் என்ன விளையாடுறியா???? இப்போ எல்லாம் புதுசு புதுசா ஏதேதோ காய்ச்சல்லாம் சொல்லுறாங்க.... நீ என்னடானா டாப்லட் போட்டிருக்கேன் சரியாகிரும்னு சொல்லுற???? முதல்ல நீ கிளம்பு....” என்று ஆதிராவை கட்டாயப்படுத்தி ஆஸ்பிடலுக்கு அழைத்து சென்றாள் மோகனா.... அங்கு அவளை பரிசோதித்த டாக்டர் மருந்தெழுதிகொடுத்துவிட்டு மேலும் சில டெஸ்டுகளை செய்யுமாறு அறிவுறுத்தினார்... அதை முடித்துகொண்டு இருவரும் ஹாஸ்டல் திரும்பினர்... ஹாஸ்டலுக்கு வந்த ஆதிரா அன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதாக கூறி மோகனா மறுக்க மறுக்க ஆபிசிற்கு கிளம்பினாள்....
ஆபிசிற்கு வந்தவள் காய்ச்சல் படுத்தியபோதும் அதை கண்டு கொள்ளாது அன்றைய மீட்டிங்கிற்கான வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாள்....
ஆபிசிற்கு வந்த ஷாகர் அவளது முகவாட்டத்தை வைத்து ஏதோ சரியில்லை என்று உணர்ந்து ஆதிராவிடம் விசாரிக்க அவளோ ஏதேதோ கூறி சமாளித்தாள்.....
மீட்டிங்கிற்கு தேவையான அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு அது தொடர்பான கோப்புக்களை ஷாகரிடம் ஒப்படைத்தவளிடம்
“ஆது ஆ யூ ஆல்ரைட்??? உன் முகம் ரொம்ப சோர்வாக இருக்கே??? உடம்புக்கு முடியவில்லையா??? ஹாஸ்பிடல் போவோமா???”என்று பரிவுடன் கேட்க
“இல்லை ஷாகர்... ஐயம் ஆல்ரைட்... லைட்டா தலைவலி அவ்வளவு தான்... நீங்க அந்த பைல்சை பாருங்க...” என்று அவனை சமாதானப்படுத்த முயன்றாள்...
ஆனால் அவளது சமதானம் அவனுக்கு முழுதும் திருப்தியளிக்காமல் இருக்க அவளின் மேல் ஒரு கண்ணும் பைலின் மேல் ஒரு கண்ணும் என்று தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தான்...
மீட்டிங்கினை வெற்றிகரமாக முடித்த ஷாகர் ஆதிராவை இன்டர்காமில் அழைக்க அதை அவள் எடுக்கவில்லை... அவளை தேடி அவளது கேபினுக்கு செல்ல அங்கு அவன் கண்ட காட்சி அவன் நெஞ்சை உறைய வைத்தது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top