என்னை சிரிப்பால் சிதைத்தவளே 4 (2)

Advertisement

Dharani dhara

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 4 (2)

என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

அஸ்வந்த் மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட்டினுள் நுழைந்து இரண்டாம் வருட மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகுப்பிற்கு சென்றான்.

“Excuse me sir”

“Yes, what do you want?”

“I’m a newly joined student”

“Get in”

அவனை உள்ளே அனுமதித்த ஆசிரியர், மற்றவர்களிடம் தன்னை அறிமுக படுத்தி கொள்ளுமாறு கூறினார்.

“Hi friends, I’m Aswanth” என்று ஆரம்பித்து எந்த ஒரு பதட்டமும் இன்றி தன்னை பற்றி கூறி முடித்தான்.

ஆனால் அங்கே வைதேகியோ, திக்கி திணறி ஒவ்வொரு ஆசிரியருக்கும் பதிலளித்து கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக மதிய இடைவெளி நேரமும் வந்தது. வகுப்பினை விட்டு வெளியில் வந்த வைதேகி, "அப்பாடா...." என்று இரண்டு கைகளையும் தூக்கி நெட்டி முறித்தாள்.

அவளை தொடர்ந்து வந்து கொண்டிருந்த சுவேதா, “hey what happened? Are you feel tired? But no classes are started na?”

வைதேகி மனதினுள், "இவ ஒருத்தி எப்ப பாரு நம்மள கேள்வியா கேட்டு சாகடிக்குறா.... கேள்விக்கு பொறந்தவளா இருப்பா போல.... சும்மா கூட ஒரு விஷயத்தை செய்ய முடியல" என்று மனதினுள் நினைத்து கொண்டு சுவேதாவினை பார்த்து சிரித்து வைத்தாள்.

“Hey, why are you smiling now? Am I joking?”

திரும்பவும் அவளது மனசாட்சி.... "யப்பா இவ கேள்வி கேக்குறத இப்பதிக்கு நிறுத்த மாட்டா போல.....பயங்கரமா பசிக்குது வேற....." என்று நினைத்து கொண்டு வெளியில் சிரித்து கொண்டே, "பசிக்குது டி, முதல்ல சாப்பிட போலாம் அப்பறமா உன் கேள்வியலாம் கேளுடி" என்று அவளை மெஸ்ஸிற்கு அழைத்து சென்றாள்.

“Anyway I would like to tell you one thing….You got beautiful smile d….when you are smiling, your face is completely changing. Your face looks very beautiful that time. Might be, I’m going to your fan of smile”.

வைதேகிக்கு ஆச்சர்யமாக இருந்தது. நிறைய பேர் அவள் சிரித்தால் இப்படி தான் அழகாக இருக்கு என்று கூறுகின்றனர். அவளும் எத்தனையோ தடவை கண்ணாடியின் முன் நின்று அப்படியென்ன வித்யாசமாக தெரிகிறது என்று சிரித்தெல்லாம் பார்த்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு எதுவும் வித்யாசமாக தோன்றவில்லை. அவளும் "சரி போ" என்று விட்டுவிட்டாள்.

ஆனால் இப்பொழுது சுவேதாவும் அதையே கூறவும், அவள் யோசிக்க ஆரம்பித்து விட்டாள். அவளுடைய யோசனையை கலைத்தது சுவேதாவின் குரல், “hey come let’s go”, என்று இருவரும் கிளம்பி மெஸ்சினை அடைந்தனர்.

மெஸ்ஸிற்குள் நுழைந்த மறு நொடி சுவேதா, “hey…. handsome guy” என்று வைதேகியிடம் கூறினாள். இல்ல இல்ல கிட்டத்தட்ட கத்தினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

சுவேதா காட்டிய திசையினில் பார்த்த வைதேகிக்கு அவன் எங்கும் தென்படவில்லை.

"எங்க டி"

“He is there only” என்று தேடிய சுவேதாவிற்கும் அதன் பிறகு அவன் தென்படவில்லை.

மெஸ்ஸில் கூட்டம் அதிகம் இருந்ததால், அவர்களால் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.

“Oh… again you missed him. Its k no problem. Come let’s eat.”

ஆனால் சாப்பிட்டு கொண்டிருந்த வைதேகியின் எண்ணம் முழுவதும் அஸ்வந்த்தே நிறைந்திருந்தான். "யாரது" என்றே நினைத்து கொண்டிருந்தது. அவளுக்கே தெரியாமல் அஸ்வந்த் அவளுடைய மனதினுள் மெது மெதுவாக பதிந்து கொண்டிருந்தான்.

இருவரும் உணவருந்தி விட்டு வகுப்பிற்கு சென்றனர். மதியம் நடந்த வகுப்புகளும் காலையில் இருந்ததை போல் தான் இருந்தது. எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

அஸ்வந்த்திற்கு காலையில் வகுப்பிற்கு வந்த போது இருந்த எரிச்சல் மதியம் இல்லை.

அவனுடையது மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட் என்பதால் அந்த அளவுக்கு அங்கு பெண்கள் இல்லை. அவனுடைய வகுப்பில் முழுவதும் ஆண்களே நிறைந்திருந்தனர்.

வகுப்பில் நண்பர்களும் செட் ஆகி இருந்தனர் அவனுக்கு. என்ன ஒன்று அவனுடன் நட்பு கொண்டிருந்த நண்பர்களில் கூட தமிழ் மட்டும் பேசும் மாணவர்களை ஏற்று கொள்ளவில்லை.

ஏன் என்று கேட்டதற்கு “எனக்கு தமிழ் புரியாது. சோ உனக்கு இங்கிலிஷ் தெரிஞ்சா பேசு. இல்லனா உன் பிரண்ட்ஷிப் எனக்கு ஒன்னும் தேவையில்லை” என்று கூறிவிட்டான்.

அவன் கூறியதில் கோபம் கொண்ட சில பேர் அவனிடம் சென்று கோபத்துடன் பேசியதற்கு, “It’s my wish, If you want my friendship, learn ‘English’ and come” என்று அவனது குரல் அதிகாரத்துடன் ஒலித்தது.

அவனை பார்ப்பதற்கு பெரிய பணக்காரனை போல் தோன்றியதில், அவனை நெருங்குவதற்கு மற்றவர்களுக்கு துணிவில்லாமல் போனது.

கல்லூரி முடிந்தது. வைதேகியும், சுவேதாவும் ஒருவருக்கொருவர் பை சொல்லிவிட்டு கிளம்பினர்.

மாலை வகுப்பில் இருந்த வரைக்கும் அஸ்வந்த்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் கல்லூரி பேருந்தில் ஏறுவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தவனுக்கு காலையில் ஏற்பட்ட அதே தொல்லை மறுபடியும் ஏற்பட்டது.

இந்த முறை அவனால் அமைதியாக செல்ல முடியவில்லை. அவனை காட்சி பொருளாக மற்றவர்கள் பார்ப்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அவனுக்கு கோபம் கட்டு கடங்காமல் ஏறியது.

அவர்களை திட்டுவதற்காக ஒரு அடி எடுத்து வைத்தான். அப்பொழுது அவன் செல்லும் பேருந்திலிருந்து கிளம்புவதற்கான ஹாரன் சவுண்ட் கேட்டது.

அவனால் அவர்களை எதுவும் செய்ய இயலாமல் கோபத்துடனே பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்றான்.

அவனுடைய ஒரு சுபாவம், அவனுக்கு எந்த ஒரு உணர்வையும் மனதினில் பூட்டி வைக்க தெரியாது. தனக்கு தோன்றியதை அடுத்த நிமிடமே செய்து விடுவான்.

அவனால் முடியாவிட்டால், ஒன்று மற்றவர்கள் இருந்தால் அவர்கள் மீது காட்டுவான், இல்லையேல் தன்னையே தண்டித்து கொள்வான் .

அந்த குணத்தை மாற்ற சகுந்தலா எவ்வளவோ முயற்சித்து பார்த்து விட்டாள். ஆனால் அவளால் முடியவில்லை. ஒருநாள் அவனே மாறிவிடுவான் என்று விட்டு விட்டார்.

இதுவரை எத்தனையோ பேரை அவனுடைய கம்பெனியில் இருந்து நீக்கி இருக்கிறான். ஏன் அவர்களே ரெஸிகுணேசன் லெட்டர் வாங்கிக்கொண்டு சென்றவர்களும் உண்டு.

அவனை போல் மற்றவர்களை பாராட்டவும் இன்னொருவரால் முடியாது. நன்றாக வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்தையும் அள்ளி கொடுத்திருக்கிறான்.

மிகுந்த கோபத்துடன் வீட்டினுள் நுழைந்தவன், “Grandma” என்று கத்தினான்.
கம்பெனிக்கு சென்றிருந்த சகுந்தலா இன்னும் வீட்டிற்கு திரும்பியிருக்க வில்லை.

அஸ்வந்த் கல்லூரியில் இருந்து வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் கம்பெனியில் இருந்து வீட்டு தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. போனை சகுந்தலா தான் எடுத்தார்.

அதில், புதிதாக ஒருவர் டாடா கம்மின்சுடன் காண்ட்ராக்ட் சைன் பண்ண வந்திருக்கார் என்றும், அவர் முதலாளியை பார்த்த பின்பே சைன் பண்ண முடியும் என்று கூறினார் என்றும் கம்பெனியின் மேனேஜர் சகுந்தலாவிடம் கூறினார்.

அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்ற கேள்விக்கு,”wipro” என்று பதில் வந்தது. விப்ரோவின் கான்ட்ராக்ட்டை மிஸ் பண்ண விரும்பாத சகுந்தலா ட்ரைவரை அழைத்து கொண்டு கம்பெனிக்கு புறப்பட்டார்.

அவர் திரும்பி வருவதற்குள்ளே அஸ்வந்த் வீட்டிற்கு வந்திருந்தான், அந்தோ பரிதாபம் அவன் கோபத்துடன் வந்தது தான்.

இன்று அவனுடைய பேச்சில் மாட்ட காத்திருந்தவர்கள் அவனுடைய வீட்டு வேலைக்காரர்கள்.

அவன் “க்ராண்ட்மா” என்று கோபமாக கத்திக்கொண்டு வந்ததை பார்த்து வேலைக்காரர்களுக்கு சர்வமும் நடுங்கியது.

இந்த ஒரு வருடத்தில் அஸ்வந்த்தின் கோபத்தினை நன்கு புரிந்து வைத்திருந்தனர். ஒவ்வொரு முறையும் அவன் கோபத்தில் இருந்து அவர்களை காப்பாற்ற சகுந்தலா தான் வருவார். அவர் ஒருவருக்கு மட்டுமே அவன் கட்டுப்படுவான்.

இன்று சகுந்தலாவும் இல்லாததால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் பயத்தில் வேர்த்தது. ஒருவர் மற்றொருவர் முகத்தை பாத்து "நீ போ.... நீ போ..." என்று கூறினர்.

இறுதியாக வயதில் மூத்தவராக இருந்த ரத்தினத்தை அனுப்பினர். ரத்தினம் நடுங்கி கொண்டே வந்தார், அவருடைய பயம் வெளி பார்வைக்கும் தெளிவாகவே தெரிந்தது.

அவர் அஸ்வந்த்தினை நெருங்கி, "அம்மா ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான்யா வெளில கெளம்பி போனாங்க".

கட்டுக்கடங்காத கோபத்தில் இருந்த அஸ்வந்த்திற்கு அவனுக்கு புரியாத அவருடைய தமிழ் அவனுடைய கோபத்துக்கு இன்னும் தூபம் வார்த்தது.
அவன் கோபத்தில் எதிரில் இருப்பவர் வயதில் மூத்தவர் என்பதையெல்லாம் மறந்து, திட்ட ஆரம்பித்தான். அவனுக்கு தேவை ஒரு வடிகால். பாவம் ரத்தினம் இன்று சிக்கி கொண்டார்.

அவன் திட்டியதில் இருந்த சாராம்சம் இது தான்….” இங்கிலிஷ் தெரியாதவர்களுக்கு இனிமேல் அந்த வீட்டில் வேலையில்லை”.

பாவம் அந்த பெரியவருக்கு அஸ்வந்த் என்ன திட்டுகிரான் என்று சுத்தமாக புரியவில்லை.

அவன் கடைசியாக,”today onwards, you have no job here….. So leave.”

அவன் கூறிய கடைசி வார்த்தையில் ரத்தினம் ஸ்தம்பித்து நின்றார். அவர் அந்த வேலையை விட்டு செல்வதற்கு ஒரு நிமிடம் ஆகாது, ஆனால் என்ன ஒன்று வெளியில் வேலை பார்த்து வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் சகுந்தலா அவர்களுக்கு வழங்கினார் .

அதனால் ரத்தினம் தயங்கி அதே இடத்தில் நின்றார். ஒரு இன்ச் கூட தான் நின்ற இடத்திலிருந்து நகரவில்லை.

அதனை கண்டு இன்னும் கோபமுற்ற அஸ்வந்த், “I say get out…. all of you who don’t know English” என்று கர்ஜித்தான்.

அங்கே வைதேகியோ ஹாஸ்டெலில் இருந்து கிளம்பி பாஸ்கெட்பால் கோர்ட்டிற்கு சென்றாள். இன்று அவர்களுடைய டீம் ஏற்கனவே இருந்த சீனியர்ஸுடன் போட்டி போட இருந்தது.

அங்கு அவர்களுடைய சீனியர்ஸுடைய தோரணையே வித்யாசமாக இருந்தது. அவர்களுடைய தோரணை வைதேகிக்கு உணர்த்தியது இது தான்," நீயெல்லாம் என் கால் தூசிக்கு பெறமாட்டே, நீ ஏன் கூட போட்டிபோட போறியா".

இதனை கண்டு ஆவேசமடைந்த வைதேகி பாஸ்கெட்பால் கோட்டினுள் வெறிக்கொண்டவளை போல விளையாடினாள். அவளை நெருங்கவே எதிர் அணியினர் பயந்தனர். இறுதியில் பத்திற்கு ஏழு என்ற பாய்ண்ட்ஸில் சீனியர்சை தோக்கடித்தனர்.

அதில் இந்து பாய்ண்ட்ஸினை வைதேகி மட்டும் தன் குழுவிற்காக ஸ்கோர் செய்திருந்தாள். தங்களது தோல்வியினை ஏற்றுக்கொள்ள முடியாத சில சீனியர்ஸ் வைதேகியை முறைத்து கொண்டே சென்றனர். அவளும் அவர்களை பதிலுக்கு திரும்ப முறைத்தாள்.

ஆனால் அவர்களில் இருந்து லாவண்யா என்ற சீனியர் மட்டும் வைதேகியை நெருங்கி வந்தாள். இவள் எதற்கு இங்கு வருகிறாள் என்று அவளை பார்த்தும் முறைத்து கொண்டிருந்த வைதேகியை நெருங்கி, “well play” என்று கை குலுக்கினாள்.

லாவண்யா கை குலுக்கியதும், வைதேகி அவளை பார்த்து ஸ்நேக புன்னகை வீசினாள்.

அதற்கு லாவண்யா "cute smile" என்று கூறிவிட்டு சென்றாள்.

அன்றய பயிற்சி அத்துடன் முடிந்தது, அனைவரும் கிளம்பி தங்களது அறைக்கு சென்றனர்.

அங்கு அஸ்வந்த்தின் வீட்டில் ரத்தினம் மற்றும் அனைவரையும் அஸ்வந்த் வெளியில் போக சொல்லிக்கொண்டிருந்த போது, வீட்டின் வாசலில் கார் வந்து நின்றது.

காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் நுழைந்த சகுந்தலாவிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது.

அவர் அஸ்வந்த்தினை பார்த்து, "என்னடா கண்ணா" என்று கேட்டார்.
இதுவே மற்ற நேரமாக இருந்திருந்தால் அவன் அவரிடம் செல்லம் கொஞ்சி இருப்பான்.

ஏனனில் அவனுக்கு சகுந்தலா அவ்வாறு கூப்பிட்டால் மிகவும் பிடிக்கும்.
ஆனால் அவன் அப்பொழுது இருந்த கோபத்தில், "Grandma… talk to me in english” என்று பல்லை கடித்தான்.

ஒரு நாள் இதே இங்கிலீஷால் அவன் படாத பாடு பட போகிறான் என்று தெரிந்திருந்தால், அவன் அன்றே இங்கிலிஷ் பேசுவதை விட்டிருப்பானோ?
ஹ்ம்ம் விதி யாரை விட்டது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top