அத்தியாயம் 3 (1)
என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்
அன்று காலேஜ் செல்லவேண்டிய முதல் நாள்.....என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்
பூதம் வரப்போகிறது வரப்போகிறது என்று பயந்து கொண்டிருந்த பூதமும் வந்துவிட்டது.
ஆம் வைதேகியின் நிலைமையும் அந்த நிலையில் தான் இருந்தது.
காலையில் எழுந்ததிலிருந்தே அவள் இப்பிடித்தான் இருக்கிறாள்.
அவள் முகம் முழுவதும் ஒரு விதமான பதட்டம் நிறைந்திருந்தது.
தன்னுடைய அறை தோழிகள் கேட்டதற்கும் எதுவும் இல்லை என்று சமாளித்து விட்டாள்.
அறையில் இருந்த அனைவரும் ஒன்றாக காலேஜிற்கு செல்வதாக முதல் நாள் இரவே முடிவெடுத்திருந்தனர். வைதேகியும் அதற்கு ஒத்து கொண்டிருந்தாள்.
ஆனால் அப்பொழுது அறையில் தன்னுடைய கட்டிலில் அமர்ந்திருந்த வைதேகியின் தோற்றத்தை பார்த்தால்....அன்று கல்லூரிக்கு செல்லும் உத்தேசம் இல்லாதவளை போல் தான் தோன்றியது.
இதனை கண்டு தான் அவளுடைய அறை தோழிகள் கேள்வி கணைகளை தொடுத்து கொண்டிருந்தனர். ஆனால் அவள் தான் அவை அனைத்திற்கும் அசைந்து கொடுத்தால் இல்லை.
நேரமும் அதன் போக்கில் யாருக்கும் காத்திராமல் சென்று கொண்டிருந்தது. வைதேகியை அழைத்து பார்த்த அறை தோழிகள்..... அவளிடம் பதில் வராததால் தாங்கள் உணவுன்ன மெஸ்ஸிற்கு புறப்பட்டனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வைதேகிக்கு தன் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது.
அதனை அட்டென்ட் செய்து காதினில் வைத்தாள்.
"வைதேகி....என்னமா காலேஜ்க்கு ரெடி ஆகிட்டு இருக்கியா"
"இல்லமா.....அது.... அது வந்து...... எனக்கு ரொம்ப பயமா இருந்தது அதான்……" என்று தான் கூற வருவதை முழுவதும் சொல்லாமல் இழுத்து கொண்டிருந்தாள்.
ஜெயந்திக்கா அவள் கூற வருவது புரியாது..... அவளை பெற்றவள் ஆகிற்றே..... இருந்தும் புரியாததை போல்.... "அதனால்...." என்று அந்த வார்த்தையில் ஒரு அழுத்தத்தை கொடுத்து நிப்பாட்டினாள்.
இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினாலும் தன் அன்னை கோபம் கொள்வாள் என்று அறிந்திருந்த வைதேகி, "இதோ கிளம்பிட்டேன் மா.... சாப்பிட்டு நேரா காலேஜ் தான் போறேன்."
ஜெயந்திக்கு ஒரு பழக்கம் இருந்தது... ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப கூற மாட்டார். ஒருமுறை கூறி முடித்துவிட்ட ஒன்றை…. மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தால் அவருக்கு கோபம் வந்துவிடும்.
அதனை நன்கு அறிந்து வைத்திருந்த வைதேகியும், ஜெயந்தியிடம் அதன் பிறகு எதுவும் கூறாமல் காலேஜ் போவதாக சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
அதன் பிறகு வைதேகி, வேக வேகமாக குளித்து, தன்னிடம் இருந்த உடைகளில் ஒன்றை அணிந்து கொண்டு கிளம்பி அறை தோழிகளை தேடி மெஸ்ஸிற்கு சென்றாள்.
அங்கு உண்டோம் என்ற பேருக்கு எதையோ கொரித்துவிட்டு, அவர்களுடன் இணைந்து காலேஜிற்கு புறப்பட்டாள்.
அன்று காலேஜே கோலாகலமாக காட்சி அளித்தது. தங்களுடைய வாழ்க்கையில் இன்றியமையாத பகுதியாய் அமைய போகின்ற கல்லூரி என்ற பகுதியில், முதல் வருடம் காலடி எடுத்து வைத்திருந்த மாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடி கொண்டிருந்தது.
அங்குள்ள மாணவர்களில் சிலர் ஒருத்தருக்கொருத்தர் தங்களை அறிமுக படுத்துவதிலும், அவர்களை பற்றி அறிந்து கொள்வதிலும் முனைந்திருந்தனர். சிலர் தங்களுடன் வந்த பெற்றோர்களிடம் பேசி கொண்டிருந்தனர். இன்னும் சில மாணவர்கள் அங்கிருந்த மாணவிகளை சைட் அடித்து கொண்டு இருந்தனர். அங்குள்ள சில பேரில் வைதேகியை போன்ற பயந்த சுபாவம் கொண்ட மாணவர்களும் அடங்கும்.
அன்று காலேஜில் புதிதாக தங்கள் குடும்பத்தில் நுழையவிருந்த மாணவர்களுக்காக இன்னாகுரேசன் பங்க்சன் (inauguration function) காலேஜ் மேனேஜ்மென்ட் ஆடிட்டோரியத்தில் கண்டக்ட் பண்ணிருந்தனர்.
மாணவர்கள் ஆடிட்டோரியத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். வைதேகியும் அவர்களுடன் இணைந்து தன்னுடைய அறை தோழிகளுடன் ஆடிட்டோரியத்திற்கு சென்றாள்.
ஆடிட்டோரியம் மிகவும் பிரமாண்டமாக, கண்ணை கவரும் வண்ணம் அலங்கரித்திருந்தது.
அங்குள்ள சேரில் அனைவரும் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் சேர்மன் அவருடைய ஸ்பீச்சினை கொடுத்தார். வைதேகிக்கு அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று எதுவும் புரியவில்லை.
அவள் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த கீதா என்ற தோழியினை அழைத்து கேட்டாள். கீதா தான் படித்தது அனைத்தும் ஸ்டேட்போர்டு (stateboard) இங்கிலீஷ் மீடியம் என்பதால்....அவர்கள் பேசுவது ஓரளவிற்கு அவளுக்கு புரிந்தது.
அவளும் வைதேகிக்காக மொழி பெயர்த்து கொண்டிருந்தாள்.
ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும்.... அவர்கள் அருகில் ஒரு ஆசிரியர் நெருங்கி வந்து "silence please" என்று முறைத்து கொண்டே கூறினார்.
அந்த ஆசிரியர் கூறிய பிறகு அவர்கள் இருவரும் பேசியிருப்பார்களா என்ன??? தனக்கு புரியா விட்டாலும் பரவாயில்லை என்று வைதேகி ஆடிட்டோரியத்தில் இருந்து வெளியே வர வரைக்கும் ஒரு வார்த்தை பேசினால் இல்லை.
வைதேகியின் பக்கத்தில் அமர்ந்திருந்த கீதாவும்.... வைதேகியால் தான் திட்டு வாங்கினோம் என்று.... அவள் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.
வைதேகிக்கு எப்படா அந்த பங்க்சன் முடியும் என்று இருந்தது. ஒரு வழியாக இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பங்க்சன் முடிவுற்றது.
ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்தவளுக்கு ஒரு பெரிய மலையையே புரட்டி போட்டது போல் இருந்தது.
வைதேகிக்கு இன்று இது போதும் என்று நினைக்க கூட முடியவில்லை. அடுத்து, ஆடிட்டோரியத்தில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் அனைவரையும் தங்களுக்கான டிபார்ட்மெண்டிற்கு போகுமாறு கூறினர்.
அவளுடன் வந்த தோழிகளில் EEE டிபார்ட்மெண்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லாததால்.... வைதேகி தனிமையில் விடப்பட்டாள்.
அவளுடைய மனநிலை திருவிழாவில் தொலைந்து போன குழந்தையை ஒத்திருந்தது.
வைதேகி தன்னை சுற்றி இருந்த இடத்தினை அண்ணாந்து பார்த்தாள். சத்யபாமா காலேஜ் முழுவதும் கட்டிடங்களாக நிறைந்திருந்தது. அதில் தன்னுடைய டிபார்ட்மெண்டை எப்படி கண்டு பிடிக்க போகிறோம் என்பதை நினைக்கவே மலைப்பாக இருந்தது.
ஒருவழியாக அறை மணி நேரம் தேடி அலைந்து தன்னுடைய டிபார்ட்மெண்டை சென்றடைந்தாள். அங்கு கிளாஸ்ரூமில் ஏற்கனவே சில மாணவர்கள் வந்து அமர்ந்திருந்தனர்.
இவளும் அங்கு சென்று ஒரு பெஞ்சில் அமர்ந்தாள். அன்று வகுப்புகள் எதுவும் நடக்கவில்லை. சிறிய அறிமுகப்படலம் மட்டும் நடந்தது…. “see you tomorrow students” என்று ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறிவிட்டு விடை பெற்றனர் . அதன் பிறகு அனைவரும் மதிய உணவிற்காக கிளம்பினர்.
கிளாஸ்ரூமில் இருந்து வெளியில் வந்த வைதேகி, “அய்யயோ....நாம இப்ப எப்படி மெஸ்ஸுக்கு போறது” ஏனெனில் அவளுக்கு தான் வந்த பாதை மறந்து விட்டிருந்தது. அது மட்டுமில்லாமல் அவள் எங்கங்கோ சுற்றி சுற்றி வேறு தேடி அலைந்து டிபார்ட்மெண்டிற்கு வந்திருந்தாள். அதனால் அவளுக்கு எந்த வழியும் ஞாபகத்தில் இல்லை.
அப்பொழுது கிளாஸ்ரூமில் இருந்து ஒரு பெண் வெளியில் வந்தாள். அவள் வைதேகியை நோக்கி சென்று “Hi I’m swetha….your name?”
சுவேதா ஆந்திர பிரதேசத்திலிருந்த விசாகப்பட்டினத்தில் இருந்து வந்திருந்தாள். அவளுக்கு எந்தவொரு வெளிப்பூச்சும் இல்லாமல் இன்னசன்டாக இருந்த வைதேகியை மிகவும் பிடித்திருந்தது.
ஏற்கனவே மெஸ்ஸிற்கு எப்பிடி செல்வது என்று பயந்து போயிருந்தவள்..... சுவேதா தன்னிடம் வந்து பேசியவுடன், அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.... புரிந்தவுடன் அவளை பார்த்து சிறிதாக சிரித்து வைத்தாள்.
சுவேதாவிற்கு வைதேகியின் அந்த சிரிப்பே அவளிடம் பேசுவதற்கு போதுமானதாக இருந்தது. அதனால் அவள் மறுபடியும் தன்னை வைதேகியிடம் அறிமுகப்படுத்தி கொண்டாள்.
“what’s your name?”
“வைதேகி”
“Nice name….Are you going to mess? If you don’t mind, I would like to join with you.”
சுவேதா வைதேகியிடம் இங்கிலீஷில் பேச ஆரம்பித்தவுடன் அவள் திரு திரு வென்று முழிக்க ஆரம்பித்து விட்டாள்.
சுவேதாவிற்கு வைதேகி ஏன் இப்படி முழிக்கிறாள் என்று புரியவில்லை, “Hey what happened?” என்று வேற கேட்டு வைத்தாள்.
அவ்வளவு தான் வைதேகிக்கு கண்ணீர் இதோ நான் வெளியில் வந்து விடவா என்று கண்களில் முட்டி கொண்டு நின்றது.
ஏற்கனவே அவள் வழியை மறந்து விட்டோம் என்று பயந்து போயிருந்தாள். இதில் சுவேதா வந்து இங்கிலீஷில் வேற பேசவும்.... அவளுக்கு அது வேறு எதுவும் புரியவில்லை.... இது எல்லாம் சேர்ந்து அவளுக்கு கண்ணீரை ஏற்படுத்தி கொண்டிருந்தது.
சுவேதா தனக்குளேயே எதுவும் வைதேகியை தவறாக பேசிவிட்டோமா என்று யோசித்து கொண்டிருந்தாள். அப்பொழுது தான் சுவேதாவிற்கு ஒரு விஷயம் ஸ்ட்ரைக் ஆனது “don’t you understand English” என்று நிறுத்தி நிதானமாக கேட்டாள்.
வைதேகி வேகமாக தலையாட்டவும் தான்....சுவேதாவிற்கு இது தானா என்றிருந்தது. சுவேதா, வைதேகியுடன் மெஸ்ஸுக்கு வர விரும்புவதை ஆங்கிலம் பாதியும் சைகை பாதியுமாக கூறினாள்.
வைதேகிக்கு தன்னை புரிந்து கொண்ட தோழி கிடைத்து விட்டதில் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவள் தனக்கு மெஸ் போகும் வழி தெரியாததை சுவேதாவிடம் பாதி தமிழிலும் மீதி சைகையிலும் கூறினாள்.
அவர்கள் இருவரும் அங்கிருந்தவர்களை கேட்டு கேட்டு மெஸ்சினை அடைந்தனர். ஒவ்வொரு இடத்திலும் மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு சைகையினை பயன்படுத்தினர். ஒரு கட்டத்தில் இருவருக்குமே சிரிப்பு வந்து விட்டது.
மெஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இவர்களும் அவர்களுடன் இணைந்து சாப்பிட்டனர். அன்று முதல் வருட மாணவர்களுக்கு மட்டும் காலேஜ் இருந்தது. மற்ற வருட மாணவர்கள் அனைவருக்கும் மறுநாளில் இருந்து காலேஜ் தொடங்குகின்றது.
வைதேகியும், சுவேதாவும் ஒருத்தருக்கொருத்தர் மறுநாள் சந்திப்பதாக “Bye” கூறிவிட்டு தாங்கள் தங்கி இருக்கும் இடத்தை நோக்கி சென்றனர்.
அன்று இரவு வைதேகி தனக்கு புது தோழி கிடைத்து விட்ட நிம்மதியுடன் தன்னுடைய பயம் நீங்கி தூங்கினாள்.
மறுநாளும் அதே போல் இருக்குமா????