உயிரே உன் உயிரென நான் இருப்பேன் teaser 5

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
today Sunday so teaser ஓட வந்துட்டேன்.
:love:
9th June 1st epi தரேன் கியூட்டிபாய்ஸ்:)டீஸர் மட்டுமே போடுறேன்னு யாரும் கோவிச்சுக்காதீங்க

மாலை மரத்தடியில் இருந்து வேவு பார்த்த தீரமுகுந்தன் அந்த மதில் சுவரை லாவகமாக ஏறி குடியிருப்பு பக்கமாக குதிக்க இந்த பக்கமிருந்து பிங்கி கத்தலானாள்.



"டேய் நெட்ட கொக்கு, எங்கடா போற? திருட போறியா?" அவளின் கத்தலில் கடுப்பான தீரமுகுந்தன் மீண்டும் அவள் இருக்கும் பக்கம் தாவி



"இப்போ என்ன வேணும் உனக்கு" என்று பல்லை கடிக்க



ஹிஹிஹி என்று இளித்தவள் "நீ இங்க என்ன செய்ய வந்த? நானும் உன் கூட வரேன்" என்று கண்ணை சுருக்க



"நான் போலீஸ் டி, ஒரு கிட்ணப் கேஸ்க்காக வந்தேன். நீ உன் வேலைய பாத்து கிட்டு போ" என்று அவளை பிடித்து திருப்பியவாறே சொல்ல



அவன் புறம் திரும்பியவள், அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு "யாரு நீ போலீஸா? உன்ன பாத்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு, இல்ல நீ வேற ஏதோ பண்ண போற உன்ன நம்ப முடியாது, "ஐம் வாட்ச்சிங் யு" என்று இரு விரல்களை அவளின் கண்களின் புறம் கொண்டு வந்தவள் அவன் புறம் நீட்ட



தலையில் அடித்துக் கொண்டவன் "வந்து தொல, தொல்ல புடிச்சவ" என்று மதில் மேல் ஏறி இருக்க



"டேய் என்னால ஏற முடியாதுடா" என்று மீண்டும் கத்த



"அந்த பக்கம் கேட் இருக்கு வா" என்று சொல்ல



"குட் ஐடியா" என்றவள் "ஆமா நீ ஏன் கேட் பக்கம் வராம மதில் மேல் ஏறி தாவுற" அதி முக்கியமான சந்தேகத்தை கேக்க

Screenshot_20190329-234834_Instagram.jpg

அவளின் யோசிக்கும் பாவனையில் புன்னகை எட்டிப்பார்க்க, கீழே குதித்தவன் அவளின் இடுப்பில் கைவைத்து தூக்கி மதில் மேல் அமர்த்தி இருக்க அவனின் தொடுகையில் கூச்சத்தில் நெளிந்தவள்



"டேய் என்னடா பண்ணுற? எதுனாலும் சொல்லிட்டு செய்டா" என்று கத்த அந்த பக்கம் குதித்தவன் மீண்டும் இடுப்பை தொட்டு தூக்கி இறக்கி விட்டிருக்க இனம் புரியாத உணர்வுக்குள் கட்டுண்டவள் தீரனை இமைக்காது பாத்திருக்க அவளின் கையை பிடித்து இழுத்து அமர்த்தி இருந்தவன் "சத்தம் செய்யாதே" என்று அவளின் வாயில் விரலை வைத்திருக்க அவனின் தொடுகையில் தன்னிலை மறந்தாள் பிங்கி.





காவலாளியின் கண்களில் சிக்காது குடியிருப்புக்குள் புகுந்தவர்கள், தீரனை விசாரித்த பசங்க இருவரும் குடியிருப்புக்குள் செல்வதை கண்ட தீரமுகுந்தன் பிங்கியை இழுக்காத குறையாக அவர்களை பின் தொடர அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள் பிங்கி.



அவர்கள் மின் தூக்கியினுள் புகுந்து ஏழாவது மாடியின் எண்ணை அழுத்தி இருக்க படியில் தாவி ஏறலானான் தீரமுகுந்தன். ஹை ஹீல்சோடு ஏறிய பிங்கி மூன்றாவது மாடியிலேயே மூச்சு வாங்க

"ஏன்டா லிப்ட் மீண்டும் வந்த பின் லிபிட்டிலேயே போய் இருக்கலாமில்ல" என்று கேக்க



"அவனுங்க எந்த வீட்டுக்கு போனானுங்கனு பாக்கணும், லிப்ட்ல போனா கதவு திறக்குறப்போ அந்த சத்தத்துல நம்மள பாத்துட்டானுங்க உசாராவானுங்க" என்று சொல்ல



"நிஜமாவே நீ போலீஸா" என்று கேட்டவள் "நீ போ நான் இங்கயே இருக்கேன்" படியில் அமர்ந்து விட அவளை உப்பு மூட்டை தூக்கியவாறே படிகளில் ஏறலானான் தீரமுகுந்தன்.



படியில் அமர்ந்திருந்தவளின் பக்கம் குனிந்தவன் அவளின் இருகால்களையும் இழுத்து தனது இடுப்போடு மாட்ட அனிச்சையாக பிங்கியின் கைகள் அவனின் கழுத்தை பிடித்தருக்க அவளை சுமந்து கொண்டு படிகளை ஏற என்ன நடந்தது என்று பிங்கி ஒரு கணம் திகைத்தவள் , மறுகணம் அவனை இறுக பற்றியவாறே கண்களை மூடி அனுபவிக்க



"சவாரி முடிஞ்சதம்மா இப்போவாச்சும் கீழ இறங்கிரியா?" என்று அவளை இறக்கிவிட ஒரு கண்ணை திறந்து பார்த்தவள்



"அதுக்குள்ளே வந்திருச்சா? செம்ம ஜாலியா இருந்துச்சு. போகும் போதும் என்ன உப்பு மூட்ட தூக்கிட்டு போ" என்று சொல்ல



அவளை நன்றாகவே முறைத்தவன் "இம்ச இம்ச" என்று அவள் காது பட மூணு முணுத்தவன் "சத்தம் கித்தம் போட்டு அவனுங்கள வெளிய வரவச்சிடாத" கடுப்பாக சொன்னவன் ஏழாம் மாடிக்கான படிகளை மெதுவாக ஏறி மின் தூக்கியை நோட்டம் விட அது கீழே சென்று கொண்டிருக்க

images (15).jpg

"சே இந்த குட்டச்சியால........ அவனுங்க எந்த பிளாட்டுக்குள்ள போனாங்கன்னு தெரியலையே!" அவளை திட்ட முடியாமல் முணுமுணுக்க



"நா வேணா போய் எல்லா வீட்டுலயும் காலின் பெல்ல அழுத்திட்டு வரவா" சூழ்நிலை புரியாமல் குழந்தை போல கேப்பவளை உறுத்து விழித்தவன் மொட்டை மாடிக்கு செல்ல பிங்கியும் ஒன்றும் புரியாமளையே அவனை பின் தொடர்ந்தாள்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top