உயிரே உன் உயிரென நான் இருப்பேன் teaser 4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் எல்லாரும் நல்லா இருக்கீங்களா?

யாருக்கு யார் ஜோடி? மூனு teaser ரையும் பாத்துட்டு சரியா சொன்ன நம்ம பத்மா மோகன் sis கு ஒரு பெரிய விசில் அடிங்க

குட்டி டீஸர் தான் enjoy

"நான் உடனே டிஜிபி ய பாக்கணும்" கண்கள் கலங்கியவாறே பதட்டத்துடன் ஒரு குழந்தையையும் சுமந்து கொண்டிருந்த ஆரோஹியை கண்டு சிறிதும் மனமிளகாமல் இது போல் நிறைய பேர் இங்கே வருவது தான் என்ற பார்வையுடன் அந்த ஏட்டு



"என்ன இருந்தாலும் அங்கே போய் சொல்லுங்க" என்று ஒரு அமர்ந்திருக்கும் போலீசை கை காட்ட"



"நான் டிஜிபி யை தான் பாக்கணும்" பிடிவாதக் குரலில் கூற அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தான் விஷ்வதீரன்.



ஆரோஹியை கண்டு புருவம் சுருக்கியவன் கூலர் அணிந்திருந்த படியால் ஸ்விங்கத்தை மென்றவாறே கையால் என்ன வென்று கேக்க அவனை கண்டு சலியூட் வைத்தவர் பேச முன்



"நீங்க தான் டிஜிபி யா? சார் நான் உங்க கிட்ட தான் பேசணும்" என்றவள் கண்கள் கலங்கியவாறே அவனை நேருக்கு நேராக பார்க்க



"உள்ள வா" என்றவன் தனதறைக்கு செல்ல அவன் ஒருமையில் அழைத்தது அவளின் கருத்தில் பதியவில்லை.



கதிரையில் அமர்ந்தவன் அவளை அமரும் படி சொல்லவுமில்லை, அவள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லையா? இல்ல அறிந்தும் அறியாமல் நடிக்கிறாளா? என்ற குழப்பத்தில் விஷ்வதீரனிருக்க, அவள் கழுத்தில் தூங்கி கொண்டிருந்த விஜய்யை அங்கே இருந்த சோபாவில் கிடத்தியவள் அவன் முன் அமர்ந்து



"சார் என் பையன் அஜய்யை காணோம்" என்று குலுங்கிக் குலுங்கி அழ அவளின் கண்ணீரை துடைக்க கைகள் பரபரத்தாலும் கைகளை இறுக்கி தன் கட்டுக்குள் வைத்தவன் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது மேலே சொல்லும் படி சைகை செய்ய

download.jpgimages (17).jpg

"என் அத்தையோட பசங்க கடைக்கு போனாங்க யாரோ வண்டில வந்து அத்தைய அடிச்சி போட்டு அஜய்ய தூக்கிட்டு போய்ட்டாங்க, விஜய் ஓடிப்போய் கடைல இருந்தவங்கள கூட்டிட்டு வந்திருக்கான். அத்த இப்போ ஹாஸ்ப்பிட்டள்ள இருக்காங்க" என்று மீண்டும் கண்ணீர் வடிக்க



" அத்தயா?” என்று யோசித்தவன் அவளை பற்றிய கோப்பில் இருந்த மற்றுமொரு பெண்ணை பற்றி தான் தெரிந்து கொள்ள முனையாததை பற்றி நொந்து கொண்டவனாக “ஒருவேல அவ புருசனோட அம்மாவா இருக்குமோ?" என்று விஷ்வதீரனின் எண்ணம் போக ஆயிஷாபேகம் எந்த ஹாஸ்பிடலில் அனுமதிக்க பட்டிருக்கிறார் என்று கேட்டறிந்தவன் ஒரு இன்ஸ்பெக்டரை அழைத்து அவர் கண் முழித்ததும் வாக்கு மூலம் பெற்று கொள்ளும் படி உத்தரவிட்டவன் தன் புறமுள்ள தண்ணீர் கிளாஸை ஆரோஹியின் புறம் நகர்த்த அவள் அதை எடுத்து பருக்கலானாள்.



நெடுநாள் கழித்து காணும் காதலியை அருகிலேயே பார்த்ததில் அவளின் ஒவொரு சைகையையும், அசைவையும் அணுஅணுவாய் ரசித்து பாத்திருந்தவன் அக்கணம் அவள் அவனை தூக்கி எரிந்து விட்டு சென்றதை மறந்தான்.



"கடத்தினவங்களோட மோட்டிவேஷன் என்னனு தெரியல பணத்துக்காக கடத்தி இருந்தா இந்நேரம் போன் பண்ணி இருப்பானுங்க" என்று சொல்ல



"எவ்வளவு பணம் கேட்டாலும் நான் தரேன் என் பையன் எனக்கு வேணும்" ஆரோஹி மீண்டும் அழ



"பணம் தான் கேப்பாங்கனு என்ன நிச்சயம் வேறேதாவது கேட்டா?" விஷ்வதீரன் ஒரு எள்ளல் புன்னகையை உதிர்த்தவாறே சொல்ல



அவளின் இரு கைகளையும் நீட்டி விஷ்வதீரனின் வலது கையை பற்றியவள் "அவங்க என்ன கேட்டாலும் நான் தரேன், எனக்கு என் பையன திருப்பி கொடுங்க" என்று அவனின் கண்களை பார்த்தவாறே சொல்ல



அவள் தொட்டதில் உள்ளுக்குள் மனம் உடைந்து உருகிக் கரைந்தாலும், பொய்த்து போன காதலி தொட்டதும் தாடைகள் இறுக உடல் விறைக்க கைகளை இழுத்துக் கொண்டவன்



"கல்யாணம் பண்ணிக்கிறியா?" விஷ்வதீரன் கேக்க ஆரோஹி வாயடைத்து நின்றாள்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
டீஸர்லாம் நல்லாத்தான் இருக்கு
அப்டேட் எப்போ வரும், மிலா டியர்?
ரமலான் பண்டிகை முடிந்த
பிறகாப்பா ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top