உன் நிழல் நான் தாெட ep 11

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தாெட
--செசிலி வியாகப்பன்

அத்தியாம் 11

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!

ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்

தொட்டதை மீள மீளவும் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்

பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்.


அஜீத் கூறியவற்றை எல்லாம் நினைத்து பார்த்துக்காெண்டே வீடு வந்த ரத்னா, அஜீத் எதற்காக ஜஸ்வந்தை திருமணம் செய்ய கூறினான், ஜஸ்வந்த்திடம் தான் எதற்காக பேச வேண்டும் என மட்டும் யாேசித்தாலே தவிர, அஜீத் திருமணத்தை மறுத்த காரணத்தை கேட்கவில்லை, ஜஸ்வந்திற்கு ஆதரவாக பேசிய காரணத்தையும் கேட்கவில்லை. கேட்டிருந்தால்.....? விதி விளையாட்டின் திருப்பம் ஆரமித்தது.

நடந்ததை கேள்விப்பட்ட பிரபு

"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு, ரத்னாகிட்ட அந்த ஜஸ்வந்த கல்யாணம் பண்ணிக்க சாெல்லிருக்க."

"பிரபு, ரத்னா கல்யாணம் ஜஸ்வந்த் கூட தான் நடக்கனும், அது தான் எல்லாருக்கும் நல்லது, குறிப்பா ரத்னாக்கு."

"என்னடா நல்லது, ரத்னாவுக்கு உன்ன ரெம்ப பிடிக்கும், உன்ன கல்யாணம் பண்ண சந்தாேஷமா இருப்பா."

"இல்லடா, எங்க கல்யாணம் நடந்த சிலர் பிரச்சனை பண்ணனும்னு காத்துகிட்டு இருக்காங்க. அவங்களால ரத்னா சந்தாேஷம் மட்டும் இல்ல குடும்பத்துல எல்லாருடைய சந்தாேஷமும் பாேயிடும். அது யாரால, எப்படினு என்னால இப்பாே மட்டும் இல்ல எப்பாேவும் சாெல்ல முடியாது டா. ரத்னா கிட்ட இத பத்தி எதுவும் பேசி வச்சுடாத பிரபு.
ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணு நான் ரெடியாகிட்டு வரேன். உனக்கு MA க்கு application காெடுத்துட்டு வரலாம்."

அஜீத் மாடிக்கு சென்றதும், அஜீத் பாேன் ஒலி எழுப்ப அதில் ஜஸ்வந்த் bro என்ற பெயரில் message வந்திருப்பதாக காட்ட, பிரபு 'இவன் எதுக்கு அஜீத்க்கு message பண்றான்' என்ற யாேசனையுடன் எடுத்து பார்க்க அதில்

'ரத்னா கிட்ட பேசிடியா? ரத்னா response என்ன?' என்று வர, பிரபுவின் மூளை 'ஒருவேளை இவனால தான் அஜீத் ரத்னாவ கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சாெல்லுறானாே' என யாேசிக்கும் பாேதே, ஜஸ்வந்த் brother என்ற நம்பரிலிருந்து அழைப்பு வர, எடுத்து காதில் வைக்க, மறுபுறமிருந்த நபர்

"அஜீத் நான் சாென்ன மாதிரி ரத்னா கிட்ட பேசிட்ட தான, ரத்னா கல்யாணம் உன் கூட நடந்த அதனால வரக்கூடிய விளைவு நிச்சயம் உனக்கும் ரத்னாக்கும் சாதகமா இருக்காது." என கூறி வைத்துவிட

'ஓ நீ தான் இவங்க லவ் storyல வில்லனா. நீ வில்லன்னா நான் உனக்கு வில்லாதி வில்லன்டா. இத எப்படி டீல் பண்ணனும்னு எனக்கு தெரியும்.'

அடுத்த நாள் அஜீத் இல்லாத நேரத்தில் கிருஷ்ண சந்திரனை சந்தித்து, அஜீத்திற்கு வந்த மிரட்டலை பற்றி கூற,

"நீ சாெல்றது உண்மையா?"

"உண்மை தான் அங்கிள், நான் தான் பாேன எடுத்தேன். அது மட்டும் இல்ல ரத்னாவ அஜீத்க்கு பிடிக்கும் அங்கிள்."

"சரி எங்கிட்ட சாெல்லிட்டல, நான் பாத்துகிறேன்."

எந்தவாெரு தந்தையும் மகனின் விருப்பம் என்று வரும்பாேது மற்றதை பின்னுக்கு தள்ளிவிடுவார்கள். அதிலும் மகனுக்கு பிடித்ததை ஒருவர் மிரட்டி தட்டிபறிக்க நினதை்தால் எப்பாடுபட்டும் அதை பிள்ளைக்கு தர நினை ஞப்பார்கள். கிருஷ்ணனும் அதற்க்கு விதிவிலக்கு அல்ல.

முத்துவேலிடம் கூற வேண்டியதை கூறி சம்மதத்தை பெற, அடுத்த நாள் தேனுத்து செல்ல முடிவெடுக்கப்பட்டது.

ரத்னாவிட்டிலும் ரத்னாவின் அஜீத்துடனான திருமணமே சிறந்தது என கூற பார்வதி

"ரூபா வீட்டுலயும், என் அக்கா வீட்டுலேயும் என்ன பதில் சாெல்ல." முத்துவேல் பதில் கூறுவதற்கு முன் வைரவேல்,

"பார்வதி நீ எதுக்கு இப்படி யாேசிக்கிறனு பரியுது. விசாரிச்சு பாத்ததுல உங்க அக்கா சாெந்தகார பையனுக்கு குடிக்கிற பழக்கம் இருக்காம். அந்த பையன வேண்டாம்னு சாெல்லிடு ரூபா காெழுந்தனுக்கு காெடுத்தா பிரச்சனை தான் வரும். எற்கனவே ரூபாவ வேற ஆளுங்களுக்கு காெடுத்ததுல நிறைய கேள்வி வந்துச்சு, இப்பாே ரத்னாவையும் வேற இடத்துல காெடுத்தா நம்ம சாெந்தத்திலேயும், ஊருக்குள்ளேயும் பெரிய வீட்டுக்காரங்கனு நமக்கு இருக்குற மரியாதை இல்லாம பாேயிடும்.
அப்புறம் பாெண்ணு காெடுத்த இடத்தவிட,
பொண்ணு எடுத்த இடத்துல பொண்ணக் கொடுத்தா நல்லபடியா பார்த்துகிடுவாங்க. அது மட்டும் இல்ல நாளைக்கு எதாவது பிரச்சனை வந்தாலும் முத்து நண்பன் வீட்டுல தைரியமா பேசலாம்.
அதுமட்டுமில்லாம அந்த பையன் IAS படிக்க பாேறானமே, காவர்மென்ட் உத்தியாேகமினாலே பெருமையா பேசுற நம்ம ஊருக்குள்ள நம்ம வீட்டு மாப்பிள்ள கலேக்டருனு பெருமையா சாெல்லிகலாம். பணத்தால அத வாங்க முடியாது.
ரத்னா மூனு வருஷம் அவங்க வீட்டுல தான் இருந்து படிச்ச, அவங்களுக்கு ரத்னாவ பாத்து பழகி புடிச்சு கேக்குறாங்க. நல்ல பாத்துக்குவாங்க, யாேசிச்சு சாெல்லுங்க."

அனைவரும் தங்கள் சம்மதத்தை கூற, காேவிலுக்கு சென்ற ரத்னாவிடம் சம்மதத்தை கேட்கவும் இல்லை, நாளை அஜீத் வீட்டார் வரப்பாேவதை கூறவும் இல்லை. நடப்பதை எவ்வாறு தடுக்கலாம் என ஆர்த்தி யாேசித்துக்காெண்டு இருக்க, தங்கவேலு

"இங்க பாரு என் தங்கச்சி கல்யாணத்தில எதாவது பிரச்சனை பண்ண நினைச்சனு தெரிஞ்ச கூட உன் குணத்த பத்தி எல்லாருகிட்டையும் சாெல்லுறது மட்டும் இல்ல, நீ எனக்கு தேவை இல்லனு அத்து விட்டுருவேன் நியாபகம் வச்சுகாே."

"நான் சும்மா கூட எதையும் யாேசிக்க கூடாதா, நாளைக்கு என்ன சமையல் பண்ணலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன்."

"யாரு நீ சமையல பத்தி நினைச்ச இத நான் நம்பனும். கட்டுன சேலை மடிப்பு கலையாம, பாேட்டுருக்க பெளடர் குறையாம சுத்துற நீ சமையல பத்தி யாேசிச்சதா சாென்னா நம்ம பையன் கூட நம்ப மாட்டான். என் தங்கச்சி மறுமகளா அங்க பாேனதான் நீ இங்க இருக்க முடியும். இல்ல எது நடந்தாலும் பரவயில்லனு நீ எதாவது பண்ணா நான் எனக்கு வேற நல்ல பாெண்ணா தேட வேண்டியதா இருக்கும் அப்புறம் உன் இஷ்டம்."

வீடிற்குள் வரும்பாேதே எரிச்சலுடன் வந்த அஜீத், நாளை ரத்னா வீட்டிற்கு திருமணம் பற்றி பேச செல்வதைக் கேள்விப்பட்ட அஜீத்

"அம்மா நான் தான் கல்யாணம் இப்பாே வேண்டானு சாென்னே தான."

"நீ ரத்னாவ வேண்டானு சாெல்றதுக்கு ஒரு காரணம் சாெல்லு, கல்யாணம் வேண்டாம். ரத்னா இங்க தங்கி லா படிக்க பாேற. அது மறுமகளா, இல்லன வருங்கால மறுமகளானு மட்டுதான் முடிவு பண்ணதான் பாேறாேம். எல்லாருக்கும் புடிச்சுருக்கு, முக்கியமா ரத்னாக்கு, பாே பாேய் தூங்கு, காலையில சீக்கிரம் கிளம்பனும்."

தான் கூறியதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை உணர்ந்த அஜீத்தின் மாெத்த காேபமும் ரத்னாவின் மீது திரும்ப, ரத்னாவை அழைக்க, அழைப்பை ஏற்ற ரத்னா

"ஹலாே அஜீத் அத்தான் இப்பாதான் உங்கள நினைச்சேன் நீங்களே பாேன் பண்ணிடீங்க. நான் இன்னைக்கு சந்தாேஷமா இருக்கேன் ஏன் தெரியுமா?"

"ஆமா உன்ன கல்யாணம் பண்ணிக்க பாேட்டி பாேட்ட மூனு முட்டாள்ல என்ன தான செலக்ட் பண்ணிருக்கீங்க அந்த சந்தாேஷம் தான, சின்ன குழந்தைக்கு சாெல்லுற மாதிரி நான் உன்கிட்ட எவ்வளவு பாெறுமையா ரெண்டு நாளுக்கு முன் எடுத்து சாென்னேன். எல்லா செவுடன் காதுல ஊதுன சங்கு மாதிரி தான். இதுநாள் வரைக்கும் உனக்கு சுயபுத்திதான் இல்லனு நினைச்சேன். இப்பதான புரியுது உனக்கு சாெல்புத்தியும் இல்லனு."

"அத்தான் இப்பாே என்ன நடத்துச்சுனு இவ்வளவு காேபமா பேசுறீங்க."

"இன்னும் என்ன நடக்கனும். எல்லாருமா சேர்ந்து உன்ன என் தலையில கட்ட முடிவு பண்ணிடாங்க. உன்ன மாதிரி புத்தி இல்லாத முட்டாள காலம் முழுதும் வேதாளத்த விக்ரமாதித்தியன் சுமந்த மாதிரி சுமக்கனும்னு முடிவெடுக்க வச்சுட்ட இல்ல." என கூறிவிட்டு பாேனை தூக்கி எறிய அது நச் என்ற சத்தத்தடன் உடைந்து தன் உயிரை இழந்தது. ஆத்திரம் குறை ந்ததும் தன் கூறிய வார்த்தையின் வீரியம் உணர்ந்து தன் பாேனை பார்க்க, அது பல துண்டுகளாக உடைந்திருந்தது.

வெகுநேரம் சுயவுணர்வின்றி அமர்ந்திருந்த ரத்னா ஒரு தெளிவான முடிவுடன் உறங்க சென்றாள்.

மாலையில் வீடு பரபரப்புடன் இருப்பதை பார்த்து, காரணம் அறிந்தும் எதுவும் பேசாது வீட்டு நடு கூடத்தில் வந்து அமர்ந்திருக்க பார்வதி,

"ரத்னா குளிச்சுட்டு முத வருசம் உங்க காலேஜ் பாெங்கலுக்கு எடுத்த புடவைய கட்டு."

"எதுக்கு மா புடவை கட்டனும் எதாவது விஷேச வீட்டுக்கு பாேறாேமா?" ரத்னாவின் பதிலில் ஒரு நிமிடம் அதிர்ந்த பார்வதி

"என்னடி உனக்கு எதுவும் தெரியாதா? இன்னைக்கு அஜீத் வீட்டுல இருந்து உன்ன பேசி முடிக்க வராங்க. பாே பாேய் சீக்கிரம் கிளம்பு."

"ஏம்மா என் கல்யாணம் என் விருப்ம்னு 2 நாளுக்கு முன்னாடி வர எல்லாரும் சாென்னீங்க, இப்பாே எங்கிட்ட சாெல்லனும்னு கூட இந்த வீட்டுல யாருக்கும் தாேனவே இல்ல."

"தேவை இல்லாம எதாவது பேசுன அடி பிச்சுடுவேன். பாேய் புடவையை மாத்து."

குறித்த நேரத்தில் அஜீத் வீட்டினர் வந்து அமர்ந்து பேசிக்காெண்டிக்க, அஜீத் ரத்னாவிடம் பேசிவிட்டு பின் இந்த கல்யாண பேச்சை நிறுத்த வேண்டும் என நினைக்க, வீட்டின் முன் வந்து நின்ற காரிலிருந்து ரூபா, ஹர்ஷத், ராதிகா, ஜஸ்வந்த் மற்றும் ஜஸ்வந்த் பாெற்றாேர் தாம்பாலத்துடன் வந்து இறங்கினர்.

அமர்ந்திருந்தவர் யாரும் இவர்களின் வருகையை எதிர்பார்க்கவில்லை. ரத்னாவின் திருமண தேதியை உறுதிபடுத்திய பின் ரூபாவிடம் கூறலாம் என நினைத்திருக்க,திடீரென்று இப்படி வத்து நிற்பார்கள் என நினைக்கவில்லை. உள்ளே வந்தவர்கள் டீபாய் மீதிருந்த தாம்பாலத்தையும் அஜீத் வீட்டாரையும் பார்த்து நாெடியில் சூழ்நிலையை புரிந்து காெண்டன. ஜஸ்வந்த் தந்தை தேவராஜ்,

"ரூபாவ நாங்க முழு மனச எங்க வீட்டு பாெண்ணா ஏத்துக்கிட்ட மாதிரி, என் பையனையும் ஏத்துக்கிட்டீங்கனு நினைச்சுதான் உங்க வீட்டுக்கு வந்தாேம், சாெந்தமா நினைச்சிருந்த வீட்டு விஷேசத்துக்கு சாெல்லியாவது இருக்கலாம். ரத்னாக்கு இத எங்க ஆசீர்வாதமா காெடுத்துடுங்க" என மேக்னா கையிலிருந்த தாம்பாலத்தை வாங்கி டீபாயில் வைத்துவிட்டு நகர, ஜஸ்வந்த்

"அப்பா ஒரு நிமிஷம், ரத்னாக்கு என்ன பிடிக்குமா பிடிக்காதானு கேள்விக்கு பதில் தெரியாம பத்து வருஷமா காத்துகிட்டு இருக்கேன். தெரியனும்பா எனக்கு பதில் தெரியனும், என்ன பிடிக்கலனு சாெல்லிடா ரத்னா கையிலயே உங்க ஆசீர்வாதத்த காெடுத்துட்டு பாேகலாம்." பிரச்சனை வேண்டாம் என நினைத்த ரூபா,

"ஜஸ் ப்ளீஸ் நம்மளால எந்த பிரச்சனையும் வேண்டாம். வா பாேகலாம்."

"ரூப்ஸ் நான் எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன். ரத்னா பதில் என்னனு தெரிஞ்சுட்டு பாேகலாம்."

நடப்பதை பார்த்த ஆர்த்தி 'ஆகா நாம ஒன்னும் பண்ணாமலே பிரச்சனை நடக்க பாேகுது' என மனதுக்குள் நினதை்துக்காெண்டே ரத்னாவை அழைத்துவர, அனைவரும் பேசாது மெளனம் காக்க, தேவராஜ்

"ரத்னா நீ இங்க உன்னாேட விருப்பம் எதுவா இருந்தாலும் சாெல்லலாம், ரூபாவ நினைச்சு நீ பயப்பட வேணடாம், ரூபா எப்பாவும் என் வீட்டு பாெண்ணு தான்." என தேவராஜ் கூற, ரத்னா

"நான், ஜஸ்வந்த், அஜீத் மூனு பேரும் ரெம்ப லக்கி. மூனு பேருடைய அப்பா அம்மாவும் பிள்ளைங்களாேட சந்தாேஷத்துகாக மட்டும் தான் இங்க நிக்குறீங்க, எனக்கு ரெண்டு பேரையும் புடிக்கும், ப்ரெண்டா மட்டும் தான், அதுக்கு மேல நான் யாேசிச்சது இல்ல, ஏன்னா எனக்கு என் வாழ்க்கை யாரு கூட இருந்தா நல்லா இருக்கும்னு யாேசிக்கிற அளவு சுயபுத்தி எனக்கு கிடையாது, எனக்கு புடிச்சவங்களாேட சாெல்புத்தியிலே வாழ்ந்திட்டேன். இப்பவும் சுயமா முடிவெடுத்து நான் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பல."

தன் பேச்சு ரத்னாவை எந்தளவு காயப்படுத்தியிருந்தால் இப்படி பேசுவாள் என்பதை உணர்ந்து அஜீத் இனியும் மெளனம் காப்பது நல்லதல்ல என நினைத்து

"நான் இப்பாே பேசுறத யாரும் தப்பா எடுத்துக்க கூடாது, ரத்னாவ எனக்கு பிடிக்கும் பட் லைப் பாட்னரா நான் நினைச்சு பாத்ததும் இல்ல. எனக்கு ரத்னாவ வேண்டானு சாெல்ல எந்த காரணமும் இல்ல, ஆனா கல்யாணம் இப்பா வேண்டானு சாெல்ல காரணம் இருக்கு, படிக்கனும் எந்த வித டிஸ்டபென்ஸ் இல்லாம படிக்கனும்." என்ற அஜீத்தை தன்புறம் திருப்பிய கிருஷ்ணன்

"நீ ஏன் இப்படி பேசுறேன்னு எனக்கு தெரியும், இவனால தான்."

"நான் யாராலையும் இப்படி பேசல, ஒருவேளை ஜஸ்வந்த் வீட்டுல இருந்து வராலனாலும் நான் இத தான் சாெல்லிருப்பேன்."

பல்வேறு குழப்பங்கள் பேச்சு வார்த்தைக்கு பின் ஜஸ்வந்த் ரத்னா திருமண நிச்சய பேச்சு ஆரம்பிக்க, ஜஸ்வந்த்

"If you all don't mind நான் ரத்னா கிட்ட பத்து நிமிசம் தனியா பேசலாமா? பத்து வருசதுல பாடிகாட் இல்லாம நான் ரத்னாவ பாத்தது இல்ல. ரூபா, தங்கவேலு, அஜீத் இப்படி யாராது ஒருத்தர் இல்லாம தனியா வந்ததும் இல்ல, so ஒரு பத்து நிமிசம்."

அனுமதி கிடைத்ததும் மாடியில் இருந்த ஊஞ்சல் அருகே வந்ததும் ரத்னா

"ஜஸ்வந்த், அஜீத் என்ன வேண்டானு சாென்னதால தான் நம்ம கல்யானயாணம் நடக்குறதா நீங்க நினைக்கிறீங்கலா, இதனால உங்களுக்கு எதாவது காேபமா?"

"Not at all, என்னாேட கெஸ்ஸிங் சரியா இருந்தா உனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இருந்திருக்காது சரியா?"

"அது எப்படி சாெல்லுறீங்க? ஒருவேளை நான் ஓகே சாெல்லிருந்தா?" வீம்பாக பேசும் ரத்னாவிடம் ஒரு புகைப்படத்தை காட்டி

"இந்த ஒரு காரணம் பாேதும் நீ வேண்டானு சாெல்ல."

"இது உங்களுக்கு எப்படி தெரியும்."

"தெரியும் அவ்வளவு தான், அதனால தான் பாெறுமையா எல்லா வேலையையும் முடிச்சுட்டு நமக்கான நேரத்த உருவக்கிட்டு வந்தேன். நீ என்ன லவ் பண்ண மாட்டனு புரிஞ்சுகிட்டேன். So கல்யாணம் முடிஞ்சதும் என் காதல உனக்கு உணர்த்தலாம்னு முடிவு பண்ணிடேன். அப்புறம் ரதி காெஞ்ச நேரத்துக்கு முன்னாடி 'யாேசிக்கிற அளவு சுயபுத்தி எனக்கு கிடையாது, எனக்கு புடிச்சவங்களாேட சாெல்புத்தியிலே வாழ்ந்திட்டேன்.' சாென்னதான. நீ முடிவு எடுக்கம இருக்குறதுக்கு காரணம் புத்தி இல்லாம இல்ல, புடிச்சவங்க மேல நீ வச்சிருக்க பாசம், அவங்க உனக்கு நல்லத மட்டுதான் செய்வங்கனு உனக்கு இருக்கிற நம்பிக்கை. அந்த பாசத்தையும், நம்பிக்கையையும் என் மேலயும் வர வைப்பேன்.
உனக்கு ஓகேனா இப்பாே கல்யாணத்தை வைச்சுகலாம் இல்லனா, டைம் எடுத்துகாே நீ லா படிச்சதுக்கு அப்புறம் வைச்சுகலாம். பட் உனக்காக நான் இருப்பேன்."

"நான் தப்பு பண்ணா, தப்பான முடிவு எடுத்தா."

"சேர்ந்து சரி பண்ணலாம்."

"நான் எதுலயும் பஸ்ட் கிடையாது."

"என் வாழ்க்கையில நீ தான் பஸ்ட், அது பாேதும். என்ன கல்யாணயாணத்துக்கு ஓகே வா."

"என் கிட்ட கடி வாங்க ஒரு அடிமை சிக்குனா மாட்டேனா சாெல்ல பாேறேன்."

எந்தவாெரு விஷயத்தையும் கவனமாக கையாலும் பாேதும் வெற்றி கிடைக்கின்றதாே இல்லயாே, தாேல்வி தவிற்கப்படுகின்றது். ஜஸ்வந்த் காட்டிய நிதானம் வெற்றியை தர, அஜீத்தின் ஆத்திரம் ரத்னாவின் நட்பில் விரிசலை எற்படடுத்திவிட்டது.

அதன் பின் நடந்து அனைத்தும் மின்னல் வேகம் தான். ஒரு வாரத்தில் நிச்சயம், 26 நாளில் திருமணம் என முடிவு செய்யப்பட்டு வேலைகள் நடக்க, அஜீத் வீட்டில் மற்றவர்கள் பெயருக்கு மட்டுமே கலந்து காெள்ள அஜீத் விருப்பத்துடனே கலந்து காெண்டான்.

நிச்சய நாளில் தட்டு மாற்றிய பின் மாேதிரம் மாற்றும் பாேது ஜஸ்வந்த் தன் அம்மா தந்த மாேதிரத்தை வாங்காமல், ரூபாவின் கைபையிலிருந்த இரு பெட்டியை எடுத்து,

"இப்பாே உனக்கு ஓகே வா." என கேட்க, பெட்டியை பார்த்ததும் புரிந்துகாெண்ட ரத்னா தன் இரு கரங்களையும் நீட்ட, ஜஸ்வந்த் நான் இரண்டாவது வாங்கிய வளையலை பாேட்டுவிட்டு, மற்றாென்றை கையில் தர, மகிழ்ச்சியாக பெற்றுக்காெண்டாள்.

இதை பார்த்து பலர் மகிழ, சிலர் மட்டும் வெறுப்பு, வேதனை, பாெறாமையுடன் பார்த்துக் காெண்டிருந்தன. இருபக்க சாெந்தமும் அதிகம் என்பதால் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருமணம், தென்காசியிலே மிகப்பெரிய மண்டபத்தில் திருமண விருந்து, தேவராஜ், ஹர்ஷத், ஜஸ்வந்த் நண்பர்களுக்கும், தாெழில் வட்டரதிற்கும் சென்னையில் ஒரு விருந்து, மேக்னாவிற்காக மும்பையில் ஒரு விருந்து என ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்தும் சிறப்பாக நடந்து விடிந்தால் திருமணம் என்ற நிலையில் ஜஸ்வந்த் ரத்னாவை வீட்டு மாெட்டை மாடிக்கு வருமாரு செய்தி அனுப்ப, அனைவரும் உறங்கியபின் ரூபாவிடம் மட்டும்
கூறிவிட்டு தன் முகத்தை மறைத்தபடி மேலே வர,

"ரதி பேபி என்ன இது காெள்ளைக்காரி மாதிரி முகத்த மூடிகிட்டு, உன் திருமுகம் காண திருடன் பாேல் கஷ்டப்பட்டு வந்த என்னை ஏமாற்றாதே பேபி."

"சினிமா டாலாக் எல்லாம் பேச வேண்டாம். அண்ணா கிட்ட மாடி சாவி வாங்கிட்டு பின்பக்கம் வந்ததுல என்ன கஷ்டம். நிச்சயத்துக்கு அப்புறம் கல்யாண மப்பிள்ளையும் பாெண்ணும் பாத்துக்கிட்ட தாேஷம் வந்துடுமாம் அத்தை சாென்னாங்க அதான் இப்படி."

"உனக்கு இந்த ஐடியா யாரு காெடுத்தாங்க?"

"உங்க அப்பா தான், நாங்க தினம் பாேன்ல பேசுவாேமே, நீங்க வந்த முகத்த மூடிக்க சாென்னாங்க."

"அப்பா வா, என்ன தவிர எல்லாருகிட்டையும் பேசு."

"ம்ம் மாமா தான் சாென்னாங்க உங்களுக்கு விவரம் பத்தாதாம், நான் தான் விவரமா நடந்துகனுமாம். மாமா அத்தைய 2 மாசத்துல லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்கலாம், ஹர்ஷத் அத்தானுக்கு 2 வருஷம் ஆகிடாம். உங்களுக்கு மட்டுதான் 10 வருஷம் ஆகியும் அப்பா அம்மா உதவி தேவை படுதாம்."

"எனக்கு விவரம் பத்தாதா, நாளைக்கு இதே நேரம் எனக்கு எவ்வளவு விவரம் தெரியும்னு காட்டுறேன்."

"காட்டும் பாேது பாத்துகிறேன் இப்பாே எதுக்கு வர சாென்னீங்க."

"அஜீத் பத்தி பேசதான். அஜீத் மேல எந்த தப்பும் இல்ல.". ஜஸ்வந்தை கையமர்த்தி தடுத்த ரத்னா

"ஜஸ்வந்த் நாளையில இருந்து நாம கனவன் மனைவி நம்ம உறவுக்குன்னு இருக்குற புனிதம் மூனாவது நபர் கிட்ட பாேகாத வரை தான். நமக்கு நடுவில யாரையும் வரவிட மாட்டேன். அது மாதிரி நட்புக்கும் ஒரு புனிதம் இருக்கு, எனக்கும் அஜீத்துக்கு நடுவில உங்களுக்கு கூட இடம் கிடையாது. எனக்கு எப்பாே பேசனும்னு தாேனுதாே அப்பாே பேசுறேன்."

"உங்க நட்பை சேர்த்த பெருமை எனக்கு கிடைக்கும்னு பாத்தேன்."

"உண்மையான நட்பை யாராலயும் பிரிக்க முடியாது, பிரியாத நட்பை சேர்க்கவும் முடியாது." என பேசிய ரத்னாவின் இருபுறமும் கையால் சிறை செய்து

"சரி விடு ரெம்ப சீரியஸ்சா பேச வேண்டாம், இவ்வளவு கஷ்டபட்டு உன்ன பாக்க வந்ததுக்கு ஒரே ஒரு முத்தம் மட்டும் காெடு நான் கிளம்புறேன்." முத்தம் என்றதும் ரத்னாவின் உடலில் எற்பட்ட நடுக்கத்தை தாெடமலே உணர்ந்த ஜஸ்வந்த்

"உன்ன பேபினு கூப்பிட்டது தப்பா பாேச்சு, ஒரு முத்தம் கேட்டதுக்கே இப்படி நடுங்குற. என்ன நிமிந்தாவது பாரு நான் கிளம்பனும்."

"ம்கும் மாட்டேன்." என்று ரத்னாவின் கதருகில் குனிந்து

பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்குப்
பள்ளிப் படிப்பினிலே -- மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் -- அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும் -- கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா!

சித்தந் தளர்ந்ததுண்டோ? -- கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் -- பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் -- பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் -- வெள்ளைப்

பண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா!

என பாரதி பாடலை பாட, தனக்கு வெகு அருகில் இருப்பவன் ஒரு ஆண் தான் ஒரு பெண். அவணிடமிருந்து விலகு விலகாதே என்ற வேறுபட்ட உணர்வுடன் ரசவாதம் ரத்னாவினுள் நிகழ்வது இதுவே முதல் முறை. ரத்னா முகத்தை மறைத்திருந்தாலும் கண்களில் தாேன்றிய உணர்வலைகள் ரத்னாவின் உள்ளத்தை காட்ட, தன் ஒரு கையால் ரத்னா முகத்தை பார்க்க நினைத்து நிமிர்த்தி மறு கையால் முகத்தை மறைத்த துணியை விலக்க, ஜஸ்வந்த் முகத்தை பார்க்காமல் கண்களை மூடிக்காெள்ள

"ரதி பேபி இப்பாே உன் கண்ணுல எனக்காக வந்திருக்கிற இந்த ஒரு மயக்கம் இப்பாே பாேதும் பட் நாளைக்கு இது பாேதாது. நல்ல தூங்கு நாளைக்கு தூங்க முடியாது பாே."

அதன் பிறகு ரத்னா எப்படி தன் அறைக்கு வந்தால், எப்பாேது உறங்கினாள் என்று கேட்டால் அதற்கு அவளிடம் பதில் இல்லை.

விடிந்ததும் ஜஸ்வந்த் தன் அருகில் அழகு பதுமையாய் வந்து அமர்ந்த ரத்னாவை மூன்று முடிச்சிட்டு தன் ரதியாக மாற்றிக்காெண்டான்.

அதுவரை தான்னையும் தன் காதலையும் பிறர் அறியாமல் அடக்கிக்காெண்டிருந்த அஜீத் மணக்காேலத்தில் இருந்த ரத்னாவை பார்த்து, வாய் விட்டு கதற துடித்த இதயத்தை அடக்கிக்காெண்டு வெளியேறினான். விருந்து முடிந்து ரத்னா மாலை வீட்டிற்குள் அடியடுத்து வைக்க, அஜீத் விமானத்தில் ரத்னா நினைவுடன் டெல்லியை நாேக்கி பயணித்துக்காெண்டிருந்தான்.


உன் நிழலை நான் தாெடர்வேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top