உன்மத்தமானேன் பெண்ணே உன்மேலே -3

Advertisement

vinomalar

New Member
அத்தியாயம் 3

கீச்... கீச்... என்ற பறவைகளின் ரீங்காரத்தில் கண்விழித்தவள் எழுந்து கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள். சில்லென்று வீசிய குளிர் காற்று அவள் தேகத்தை சிலிர்க்க வைக்க, தோளின் ஒரு பக்கம் தொங்கிய சால்வையை நன்றாக இலுத்து போத்தி கொண்டு தன் எதிரே பச்சை பசேலென விரிந்திருந்த தேயிலை பாத்திகளை கண்டவளுக்கு மனதில் புத்துணர்ச்சி தோன்றியது.
அந்த அழகான காலை சூழலை சுகமாய் அனுபவித்துக்கொண்டே சுற்றி பார்க்க, தேயிலை பாத்திகளை தாண்டி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள், அந்த மரங்களிடையில் தெரிந்த அருவி,என அனைத்தும் அவளை வா என்று அழைப்பதை போல தோன்ற, மெல்ல அந்த மரங்கள் அடர்ந்த காட்டை நோக்கி நடக்க துவங்கினாள்.
‘யாருமற்ற வனாந்தரம் அச்சுறுத்தும் என்று யார் சொன்னது? எத்தனை விதமான மரங்கள்… செடிகள்... பூக்கள்...’ என்று நினைத்தவள், கண் மூடி ஆழ்ந்து மூச்சு இலுத்து அந்த காட்டு பூக்களின் வாசனையை முகர்ந்தாள். பரபரப்பான நகர வாழ்க்கையுடன் இந்த இயற்கை அழகை ஒப்பிடும் போதும் இது ‘பூலோக சொர்கம்’ என்று அவளுக்கு தோன்றியது.
தன்னை மறந்து, வால்பாறையின் இயற்கை அழகை கண் மூடி ரசித்தபடி நின்று இருந்தவளை, “சத்யா.... சத்யா!!!!”என்று அழைக்கும் சத்தம் கேட்க. மெல்ல கண் திறந்து, “நான் இங்க இருக்கேன் கிருஷ்ணா.” என்றாள்.
இவள் குரல் கேட்டதும் வேகமாய் அவள் அருகில் வந்த கிருஷ்ணா, அவளை அணைத்துக்கொண்டு, “தேங்க் காட்!!! உனக்கு ஒண்ணுமில்ல. நான் எவளோ பயந்துட்டேன் தெரியுமா.”என்று உருக்கியவன், பின், “இப்படியா சொல்லாம கொல்லாம தனியா வருவ??” என்று கடிந்து கொண்டான்.
அவன் கோபத்துக்கு பின் இருக்கும் அக்கறையை உணர்ந்தவள் புன்னகையுடனே, “சாரி பா.... எனக்கு சீக்கிரமே முழிப்பு வந்துருச்சு. உன்னை பார்த்தால் நீ நல்லா இலுத்து போத்தி தூங்கிட்டு இருந்த. சரி உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு எழுந்து வெளியே வந்தேன். அப்பறம் இயற்கையை ரசிச்சுக்கிட்டே இங்க வந்துட்டேன்.” என்றாள்.
வெகு நாட்களுக்கு பிறகு சத்யா முகத்தில் தெரிந்த மலர்ச்சியை கண்ட கிருஷ்ணா தன் கோபத்தை கைவிட்டுவிட்டு, “அப்படிங்களா மேடம்!!!! அப்படி இந்த அத்துவான காட்டுல என்ன இருக்குன்னு சொன்னிங்கன்னா நானும் ரசிப்பேன்.” என்று கேட்க.
“என்ன இல்ல கிருஷ்ணா??? எந்த பக்கம் திரும்பினாலும் பச்சை பசேலுன்னு கண்ணு குளிர்ச்சியா தேயிலை தோட்டம், அடர்ந்து வளர்ந்த மரங்கள், அதில் வசிக்கும் பறவைகள், விதவிதமான செடிகள், அதில் பூக்கும் பூக்கள் வசமும் மூலிகை வசமும் கலந்து நாம் சுவாசிக்கும் காற்றில் வீசும் அற்புதமான நறுமணம். இன்னும்.....”என்று ஏதோ சொல்ல போனவளை தடுத்து.
“ஹ்ம்ம...... போதும் போதும், லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு...இன்னைக்கு இது போதும். மீதியை நீ மட்டும் இல்லாம நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து வந்து ரசிச்சுக்கலாம் இப்போ கேம்புக்கு போலாம் வா” என்றபடி கை நீட்ட. சத்யா புன்னகையுடனே அவன் கை பிடித்துக்கொண்டு அவனுடன் நடந்தாள்.
கிருஷ்ணா, முழு பெயர் வம்சி கிருஷ்ணா. சென்னையில் பிரபலமான மருத்துவமனையில் மன நல மருத்துவராக வேலை செய்கிறான். தன் மருத்துவமனை வால்பாறையில் உள்ள பழங்குடி மக்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மெடிக்கல் கேம்பை சாக்காக வைத்து சத்யாவின் மன மாற்றத்துக்காக தன்னுடன் இங்கு அழைத்து வந்தான். தனக்கு உதவியாக வரும் படி அவன் சத்யாவிடம் கேட்க. அவனுக்கு உதவியாக சத்யாவும் அவனுடன் வந்து இருந்தாள்.
இங்கு வந்த நாள் முதலாய், வால்பாறையின் அழகு சத்யாவை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் மருத்துவ குழு தாங்கள் வந்த வேலையை முடித்துக்கொண்டு கிளம்ப நினைக்க, அந்த பழங்குடி மக்கள் இவர்களை தங்களது காவல் தெய்வத்துக்கு நடக்கும் திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்த. அவர்களின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
இந்த இடத்தை விட்டு செல்ல மனமே இல்லாமல் இருந்த சத்யா , இதை கேட்டதும் இன்னும் சில நாட்கள் இங்கே இருக்கலாம் என்று நினைத்து மகிழ்ந்து போனாள்.
அதனால் தான் இங்கு இருக்க போகும் இந்த கொஞ்ச நாளுக்குள் இந்த இயற்கை அழகை முடிந்த வரை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி காலை கண்விழித்ததும் இயற்கை ரசிக்க கிளம்பிவிட்டாள். அத்தோடு, தான் ரசிதத்தை எல்லாம் கிருஷ்ணவிடம் சொல்லிக்கொண்டே வந்தாள்.
இருவரும் கேம்புக்கு வரும் பொது காலை உணவு தயாராகி இருக்க. இருவரும் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டனர்.
அப்போது கிருஷ்ணவின் ஃபோன் அடிக்க, சத்யாவின் அன்னை ஸ்ரீவித்யா தான் அழைத்திருந்தார்.
“ஹலோ அத்தை.... சொல்லுங்க” என்றான் கிருஷ்ணா.
“ஹலோ கிருஷ்ணா.... எப்படி இருக்க?? சத்யா எப்படி இருக்கா??” என்று கேட்டார் ஸ்ரீவித்யா.
“நாங்க நல்லா இருக்கோம் அத்தை. நீங்களும் மாமாவும் எப்படி இருக்கீங்க??”
“நாங்களும் நல்லா இருக்கோம் கிருஷ்ணா. என்ன நீங்க ரெண்டு பெரும் இல்லாமல் தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நீங்க எப்போ கிளம்பிறீங்க???” என்று கேட்டார் ஸ்ரீவித்யா.
“அது நாங்க வர இன்னும் ஒரு வாரம் ஆகும் அத்தை.” என்று கிருஷ்ணா சொல்ல.
“என்ன பா இப்படி சொல்லற. இன்னைக்கு கிளம்பிடுவேன் தானே சொன்ன.”
“இங்க ஏதோ திருவிழாவாம் அத்தை, எங்களை கண்டிப்பா கலந்துகனுமுனு கேட்டுக்கிட்டாங்க அதுனால தான். ஆனா போற போக்கை பார்த்த உங்க பொண்ணு இங்க இருந்து கிளம்ப மாட்ட போல.”
“ஏன்??”
“அதை உங்க பொண்ணு கிட்டயே கேளுங்க.” என்று சொன்ன கிருஷ்ணா கைபேசியை சத்யாவிடம் கொடுத்தான்.
கிருஷ்ணவை செல்லமாக முறைத்துக்கொண்டே பேச துவங்கிய சத்யா, தான் பார்த்ததையும் ரசித்தைதையும் சிறு குழந்தை போல அன்னையிடம் பகிர்ந்துகொள்ள துவங்கினாள்.
*****************​

சென்னை.....
மிவா பங்களா.....
சமையல் அறையில் காலை உணவை தயார் செய்துகொண்டு இருந்தார் வசுமதி. அவருக்கு உதவிகொண்டிருந்த பாவனாவிடம், “பவிம்மா எல்லாத்தையும் எடுத்து டைனிங் டேபிளில் வைச்சுட்டு நீ போயி ரிஷியையும் அபியையும் சாப்பிட கூப்பிடு.” என்று சொன்னார்.
“சரி அத்தை” என்று சொல்லிவிட்டு பாவனா செல்ல.
“எல்லா அர்ரெஞ்ச்மெண்ட்ஸும் கர்ரெக்டா இருக்கான்னு நல்லா செக் பன்னிடு கதிர். வி‌ஐ‌பி’ஸ் வரதுனால ஹோட்டல் மானேஜ்மென்ட் கிட்ட சொல்லி செக்யூரிட்டி டைட் பண்ண சொல்லு. அதே மாதிரி ஃபைனல் கெஸ்ட் லிஸ்ட் ரெடி பண்ணி வை நான் வந்து செக் பன்றேன்.” என்று தனது பி.ஏ கதிரிடம் போனில் உத்தரவிட்ட படி வந்து சாப்பிட அமர்ந்தார் மித்ரெஷ்.
வசுமதி உணவு பரிமாற துவங்க, “பசங்களும் வரட்டும் மதி” என்ற மித்ரெஷ் போனில் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தார்.
“ஏங்க உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்.”
“சொல்லு மதி”, என்றார் போனில் இருந்து கண்ணை எடுக்காமல் .
“அது….. இன்னைக்கு ஈவினிங் ரிசப்ஷனக்கு, ஸ்ரீ ஃபேமிலியை நான் இன்வைட் பண்ணி இருக்கேன்”.என்று வசுமதி சொல்ல.
“வாட்????” அதிர்ச்சியாக கேட்டார் மித்ரெஷ்.
“இன்னைக்கு ஈவினிங் ரிசப்ஷனக்கு, ஸ்ரீ ஃபேமிலியை நான் இன்வைட் பண்ணி இருக்கேன்னு சொன்னேன்.”என்று வசுமதி மீண்டும் சொல்ல.
“நீ தெரிஞ்சு தான் பன்றியா மதி.... நான் தான் உன்னை பொறுமையா இருக்க சொன்னேன் இல்ல. நான் அவளோ சொல்லியும் நீ இப்படி பண்ணின என்ன அர்த்தம்.??”என்று கோபமாக கேட்டார் மித்ரெஷ்.
அப்போது “என்ன அப்பா........ அம்மா என்ன பன்னாங்க???” என்று கேட்டுக்கொண்டே வந்து அமர்ந்தான் ரிஷி. அவனை தொடர்ந்து அபி, பாவனா, அமிர்தாவும் வர. அனைவருக்கும் உணவை பரிமாறினாள் பாவனா.
“என்ன ஆச்சு அப்பா??” ரிஷி மீண்டும் கேட்க,
“அது ஒண்ணும் இல்லை ரிஷி.” என்றார் மித்ரெஷ்.
“ஒண்ணுமில்லைன்னா எதுக்கு அம்மா கிட்ட கோபமா பேசினிங்க???”.
மித்ரெஷ் தன் மனைவியை பார்க்க, வசுமதியே சொன்னார்.
“அது ஒண்ணுமில்ல ரிஷி, இன்னைக்கு ஈவினிங் நம்ப அபி பவி ரிசப்ஷனக்கு என் ஃப்ரெண்ட் ஃபேமிலி இன்வைட் பண்னினேன். அதுக்கு தான் உங்க அப்பா கோப்படுறார்.”
“இதுல கோப பட என்ன இருக்கு அப்பா.” ரிஷி தந்தையிடம் கேட்க.
“அப்பா கோப படுற அளவுக்கு அப்படி எந்த ஃப்ரெண்டை ம்மா இன்வைட் பன்னிங்க.” கேட்டாள் அமிர்தா.
மகளை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்த வசுமதி, “சத்யா தான்”. என்றார்.
“என்னது சத்யா வா!!!!!!” என்று அபி, அமிர்தா இருவரும் ஒரு சேர ஆச்சரியமாய் கேட்க.
ரிஷி தம்பியையும் தங்கையும் விசிதிரமாய் பார்த்துவிட்டு, “இப்போ எதுக்கு ரெண்டு பெரும் இவளோ ஷாக் ஆகிறீங்க??” என்று கேட்டான்.
அமிர்தா தாய்யை பார்க்க, அவர் கண்ணாலே மகளுக்கு செய்கை செய்தார். அதை புரிந்து கொண்டு அமிர்தவும் அமைதியானாள்.
“ஏன்னா..... அம்மா அவங்களை பார்த்ததில் இருந்து வீட்டில் ஒரே சத்யா புராணம் தான். நானும் அவங்களை மீட் பண்ணனும் பார்த்த ஆஃபிஸ் வேலை, அப்பறம் கல்யாண வேலைன்னு அவங்கள மீட் பண்ணவே முடியல. ஃபைனலி இன்னைக்கு எங்க ரிசப்ஷன்ல பார்க்க போறேன். அதான் ஆச்சர்யமாய் கேட்டேன்.”என்றான் அபி.
“ஓ....” என்று தம்பி சொன்னதை கேட்டுக்கொண்டவன், தந்தையிடம், “அது சரி... அவங்க வரதுல உங்களுக்கு என்ன அப்பா பிரச்சனை.” என்று கேட்டான் ரிஷி.
“எனக்கு ஒரு பிரசனையும் இல்லை ரிஷி. அவங்க வரதை ஏன் முன்னாடியே சொல்லன்னு தான் உங்க அம்மாகிட்ட கேட்டுட்டு இருந்தேன்.” என்றார் மித்ரெஷ்.
“ஓகே” என்று சொன்ன ரிஷி உணவில் கவனமாக. மற்றவர்களும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“அவங்க எங்க ம்மா இருக்காங்க??” என்று ரிஷி கேட்க.
“யாரு??” மகன் யாரை கேட்கிறான் என்று புரியாமல் கேட்டார் வசுமதி.
“சத்யா ஆண்ட்டி....” என்றான் ரிஷி.
இதை கேட்டதும்.... தண்ணீர் குடித்து கொண்டிருந்த அமிர்தவுக்கும், சாப்பிட்டு கொண்டிருந்த மித்ரெஷுக்கும் ஒரு சேர புரையேறியது......
“ஹேய் ..... அம்மு..... பார்த்து...” என்ற ரிஷி தங்கையின் தலையில் தட்டிவிட்டான்.
“சாரி அண்ணா.... ஐ கான்ட் ரேசிஸ்ட்....” என்று சொன்ன அமிர்தா. “என்ன சொன்னிங்க சத்யா ஆண்ட்டியா?? அவங்களுக்கு நம்ப பவி அண்ணி வயசு தான் இருக்கும் அண்ணா.” என்று சொல்லி சிரித்தாள்.
இதை கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்த ரிஷி , “எனக்கு என்ன தெரியும் இப்போ நீங்க தானே சொன்னிங்க அம்மா ஃப்ரெண்ட் சத்யான்னு. அதான் அப்படி கேட்டேன்.” என்று சொல்ல.
“ஏன் டா எனக்கு பவி வயசுல ஃபிரண்ட்ஸ் இருக்க கூடாதா???” வசுமதி கோபமாக கேட்க.
“அய்யோ அம்மா நான் எப்போ அப்படி சொன்னேன்.”
“பின்ன இப்போ நீ கேட்டதுக்கு வேற என்ன அர்த்தம்??”
“தெய்வமே நான் எதுவும் சொல்லல. ஆளை விடுங்க எனக்கு வேலை இருக்கு. நான் கிளபுறேன்.” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான் ரிஷி.
அன்று மாலை, அபிமித்ரன் – பாவனா வின் திருமண வரவேற்பு அந்த 5 நச்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சியாக நடந்துகொண்டிருந்தது. தொழில் நண்பர்கள் அனைவரும் வந்து மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்து கொண்டு இருந்தனர்.
அப்போது கையில் மைக் உடன் மேடை எறிய அமிர்தா, “குட் ஈவினிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென். தேங்க் யு ஆல் ஃபார் யுவர் பிரசென்ஸ் ஆன் திஸ் ப்யூடிஃபுல் ஈவினிங். உங்க எல்லாருக்கும் ஏனோட அண்ணா மிஸ்டர் ரிஷிமித்ரனை ஒரு பெர்பெக்ட் பிசினஸ் மேன்னு தெரியும். ஆனா உங்களுக்கு தெரியாத விஷயம் என்னான அவர் ஒரு நல்ல சிங்கர் கூட. சோ இப்போ உங்களோட இந்த அழகான ஈவினிங் இன்னும் அழகாக்க. ஏனோட செல்ல ரிஷி அண்ணா ஒரு பாட்டு பாடுவார். ” என்று சொல்ல.
இதை எதிர்பார்க்காத ரிஷி, “அம்மு என்ன பன்ற?? நான் பாட மாட்டேன்.” என்று மெல்லிய குரலில் மறுத்தான்.
அபியும் அமிர்தாவும் , “பிளீஸ் அண்ணா....” என்று கெஞ்ச. வேறு வழி இல்லாமல் மேடை ஏறினான் ரிஷி.
“என்ன பாடறது??” என்று ரிஷி மெல்லிய குரலில் தங்கையிடம் கேட்க.
“நீங்க எப்பவும் பாடும் பாரதி பாட்டு. பாடுங்க.” என்று அபி சொல்ல. ரிஷி பாட துவங்கினான்.

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே
ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி
உச்சிதனை முகந்தால் – கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.
கன்னத்தில் முத்தமிட்டால்......
என்று படியவனுக்கு, தன்னவளை முதல் முறை சந்தித்த பொது அவள் கன்னத்தில் முத்தம்மிட்டது நினைவுவரா, அந்நேரம் அவன் உணர்ந்த அவளது ஸ்பரிசத்தையும், அவளது வாசத்தையும் இப்போதும் உணர்ந்தான்.
கன்னத்தில் முத்தமிட்டால்......உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.
அன்று ஒரே அறையில் அவளை தன் மார்போடு அனைத்து கொண்டு உறங்கியது நினைவு வந்து அவனை வேதனை படுத்தியது.
உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!என்னுயிர் நின்னதன்றோ!
என்று பாடி முடிக்க, அனைவரும் அவன் குரலில் மயங்கி தான் போயினர். வசுமதிக்கு நீண்ட நாட்கள் கலித்து மகன் பாடுவதை கேட்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அதே மன நிலையில் இருந்த அமிர்தா “இன்னொரு பாட்டு அண்ணா... பிளீஸ் எனக்காக” என்று கேட்க.
தன்னவளின் நினவுகளில் மூல்கி இருந்தவன், தன் மன வலியை அப்படியே சொல்லும் பாடல் வரிகளை பாடினான்.
பூங்காற்றிலே உன்
சுவாசத்தை தனியாக தேடி
பார்த்தேன் கடல் மேல் ஒரு
துளி வீழ்ந்ததே அதைத் தேடி
தேடி பார்த்தேன் உயிரின் துளி
காயும் முன்னே என் விழி உனை
காணும் கண்ணே என் ஜீவன் ஓயும்
முன்னே ஓடோடி வா
கண்ணில் ஒரு
வலி இருந்தால் கனவுகள்
வருவதில்லை
காற்றின் அலை
வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு
உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு
நனைகின்றதா இதயம்
கருகும் ஒரு வாசம்
வருகிறதா ஒயியும் ஜீவன்
ஓடும் முன்னே ஓடோடி வா
வானம் எங்கும்
உன் பிம்பம் ஆனால்
கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன்
வாசம் வெறும் வாசம்
வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு
கிள்ளி என்னைச் செந்தீயில்
தள்ளி எங்கே சென்றாயோ
கள்ளி ஓயும் ஜீவன் ஓடும்
முன்னே ஓடோடி வா.........
ரிஷி இந்த பாட்டை பாடுவான் என்று எதிர்பார்க்காத அவன் குடும்பம், உணர்ச்சி பொங்க அவன் பாடிய விதமே அவன் தன்னவள் மேல் கொண்ட காதலையும், ஏக்கத்தையும் சொல்ல. அவன் மன வேதனையை போக்க வழி தெரியாமல் தவித்தனர்.
மற்றவர்களின் கை தட்டலில் தன்நிலைக்கு வந்த ரிஷி, சுற்று புறம் உணர்ந்து, வேகமாய் அங்கிருந்து வெளியேறினான்.அபி அண்ணனை தொடர்ந்து செல்ல முயல, அவனை தடுத்த வசுமதியும் மிதேர்ஷும் மகனின் பின்னோடு சென்றனர்.
“ரிஷி...... கண்ணா..... நில்லு......” என்றபடி வசுமதி அவன் பின்னே வர. வேகமாய் வெளியே வந்த ரிஷி தனது காரை எடுத்துக்கொண்டு சென்று இருந்தான்.
ரிஷியின் கார் அந்த ஹோட்டல் விட்டு வெளியே செல்ல அந்த கார் உள்ளே நுழைந்தது. ஸ்ரீவித்யாவும், அவர் கணவர் விக்ரமனும் காரில் இருந்து இறங்க, அவர்களை புன்னகையுடனே வரவேற்றார் வசுமதியும் மித்ரெஷும்.
“வா ஸ்ரீ.... வங்க அண்ணா....” என்றவரின் பார்வை சத்யாவை காணாமல், “சத்யா வரலையா ஸ்ரீ???.” என்று கேட்டார்.
“இல்ல வசு, சத்யவும் கிருஷ்ணாவும் இன்னும் கேம்பில் இருந்து வரல. அதான் நாங்க மட்டும் வந்தோம்.” என்றார் ஸ்ரீவித்யா.
மனதில் சிறு ஏமாற்றம் எழ, வசுமதியின் முகம் வாடியது. அதை கவனித்த மித்ரெஷ், “பரவாயில்லை நீங்க வாங்க உள்ளே போகலாம்” என்று அவர்களை அழைத்து சென்றார்.
“என்னங்க இது. ரிஷியையும் சத்யவையும் மீட் பண்ண வைக்கலாம்ன்னு நினைச்சேன் ஆனா இப்படி ஆயிடுச்சு.” என்று வசுமதி கணவரிடம் சொல்லி வருத்தப்பட.
“சரி விடு மதிம்மா.... இப்போ இல்லைன்னா என்ன இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.” என்று மனைவியை சமாதான படுத்தினார் மித்ரெஷ்.
“ஆனா ரிஷி இப்போ எங்க போனான் தெரியலையே....” என்று கவலையாக சொல்ல.
“அவன் எங்கேயும் போக மாட்டான். இப்போ அவனுக்கு தேவை தனிமை. அவனுக்கு கொஞ்சம் டைம் கொடு, அவனே திரும்பி வந்துருவான்.” என்றார்.
திரும்பி வந்த தந்தையிடம் அபி ரிஷியை பற்றி கேட்க, “அவன் கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும்.” என்று சொன்னார்.
அன்னையின் அருகில் வந்த அமிர்தா, “சாரி அம்மா, இப்படி ஆகும்னு நான் நினைக்கல.” என்று வருத்தமாக சொல்ல.
மகளின் கன்னத்தை அன்பாக தடவிய வசுமதி, “ஒண்ணுமில்ல அம்மு, ரிஷி வந்துருவான். இப்போ நீ போயி பவி பக்கத்தில் நில்லு. போ” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார்.
****************​

ரிஷி எங்கு சென்றான்???? சரயு ஏன் ரிஷியை பிரிந்து சென்றாள்.??? ரிஷியும் சரயுவும் மீண்டும் சந்தித்தால்?? ரிஷிக்கும் சத்யாவுக்கும் திருமணம் செய்ய நினைக்கும் வசுமதியின் ஆசை நிறைவேறுமா?? அடுத்த அத்தியாயதில் தெரிந்துகொள்ளாம்.

actress-babe-bollywood-indian-wallpaper-preview.jpg
 

Nasreen

Well-Known Member
Rishi sarayu lovers
But due to some reason pirinjuttanga
Sathya kku enna problem?
Vamsi Krishna oru mananala .dr.vera?
Sathya Klum love failiurah
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top