உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 07

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

அடுத்த பகுதியுடன் வந்துவிட்டேன். சென்ற பதிவிற்கு கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. இது சின்ன அப்டேட் தான். பிகாஸ், இந்த இடத்திலேயே நிறுத்துனா தான் நல்லா இருக்கும்னு தோனுச்சு.

rana-and-sai-pallavi.jpg

அந்த பிரபலமான மருத்துவமனையின் எமர்ஜென்சி வாயிலில் நின்றிருந்தான் புகழ். அவன் கண்கள் உள்ளே இருந்து யாரும் வருவரா என்றே பார்த்துக்கொண்டிருந்தன.

அப்போது அவன் முன் வந்து நின்ற நர்ஸ், அவள் அணிந்திருந்த நகைகள் என்று அவனிடம் சிலவற்றை தந்துவிட்டு சென்றிருந்தாள். அவற்றைப் பார்த்தவனுக்கு பர்ஸ் நினைவிற்கு வர, அதனை தேடியவனுக்கு அவள் வீட்டிற்கு தகவல் சொல்ல வேண்டுமே என்ற எண்ணமும் எழ, சரியாக அச்சமயம் அவன் அருகில் தன் காயத்திற்கு கட்டிட்டு வந்தாள் ப்ரார்த்தனா.

“சின்னு! மகிழோட ஃபோன் எங்கேன்னு தெரியல. அவ வீட்டிற்கு தகவல் சொல்லனும். நான் ஆஃபீஸ்க்கு கூப்பிட்டு அவ டீடைல்ஸ் கேட்கறேன். ஃபோனை தேடினா லேட் ஆகலாம்” என்றவனை ப்ரார்த்தனா மறுப்பதற்குள் அங்கே வந்து சேர்ந்திருந்தான் ஆதி.

“ஸார்… அக்காக்கு என்னாச்சு?” என்று கேட்டவனின் குரலிலும் முகத்திலும் பதட்டம் அப்பியிருந்தது.

அவனுக்கு நடந்தவற்றை விளக்கினான் புகழ். ப்ரார்த்தனாவை குறிவைத்து ட்ரிகரை அழுத்திய நேரத்தில் அவளை தள்ளிவிட்டிருந்தாள் மகிழ். அதனால் அவள் நெஞ்சிற்கு அருகில் அந்த புல்லட் பாய்ந்திருக்க, அதற்காகவே தற்போது மருத்துவமனையில் இருக்கின்றனர்.

இதனைக் கேட்டவனுக்கு மகிழ் எப்படியேனும் திரும்பி வந்துவிட வேண்டும் என்ற வேண்டுதல் ஒருபுறம், எவ்வாறு வலியை பொருத்துக்கொள்வாளோ என்று பயம் ஒரு புறம் என்று நின்றிருந்தான் ஆதி. தற்போது வரை சிறு ஊசிக்கே ஊரைக் கூட்டுவாளே! ஆனால், அவனுக்குத் தெரியவில்லை, அவன் தமக்கை அந்த வலியை விட மிகப் பெரிய வலியுடன் வாழ்கிறாள் என்று!

ஆதி தன் பெரியம்மாவிற்கு சொல்வதாகச் சொல்லி அதன்படி செய்தும்விட, எப்படி அவர்கள் வீட்டிற்கு சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்த புகழுக்கு அது சிறிது நிம்மதியை அளித்தது.

சிறிது நேரத்தில் வெளிவந்த மருத்துவர்கள், மகிழ் நன்றாக இருப்பதாகவும், இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லையென்றும் கூற, அவருக்கு நன்றி சொன்னார்கள். ஆதியும் மகிழின் தாய் தந்தையிடம் விடயத்தை சொல்லி அவர்களை பதட்டப்படாமல் வருமாறு கூறியிருந்தான்.

இருவரும் இருப்பதால் சிறிது தெம்பாக உணர, அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து தன்னிரு கைகளாலும் தலையைத் தாங்கியமர்ந்தான் புகழ். அவன் விழிகளில் மகிழ் அவனைப் பார்த்த அந்த நொடியே வந்து நின்றது.

அவன் அவர்களருகில் ஓடி வரும்முன்னே அச்சம்பவம் நிகழ்ந்துவிட்டிருந்தது. அந்த அடியாட்கள் இருவரும் தப்பியோட முயற்சிக்க, அவர்களை காவலாளிகள் வளைத்துப் பிடித்திருந்தனர். ஆனால், அது எதுவும் புகழின் கண்களில் படவில்லை.

மகிழ் குறுக்கே புகுந்ததிலிருந்து அவனுக்கு வேறெதுவும் கருத்திலில்லை. “மகிழ்!” என்று கத்தியவாறு அவளிடம் அவன் வரவும், அவனைப் பார்த்தவாறே மயக்கமடைந்திருந்தாள் மகிழ்.

அவள் விழிகள் புது பொழிவுடன் ஜொலித்தது. உனக்கு முக்கியமான ஒன்றை நான் எவ்வாறு பாதுகாக்காமல் விடுவேன் என்று கேட்டது அந்தப் பார்வை. ஆனால், பாவம்! அது புரியவில்லை அவனுக்கு. அவள் ஏன் அவ்வாறு பார்த்தாள் என்று தலையைக் குடைந்துகொண்டு அமர்ந்திருந்தான் புகழ்.

சரியாக அந்நொடியில் அவனருகில் ஒரு பாடல் ஒலித்தது.

நீயின்றி நானும் இல்லை

என் காதல் பொய்யும் இல்லை

வழியெங்கும் உந்தன் முகம்தான்

வலி கூட இங்கே சுகம்தான்

இது அவன் குரலல்லவா? அவளுக்காக மட்டுமே அவன் பாடிய பாடல் இது! ஆராய்ச்சியுடன் ஒலிவந்த திசையை நோக்கினான். அங்கே ஆதி தன் கையில் இருந்த பேசியை உயிர்ப்பித்து பேசுவது தெரிந்தது. அவன் முடிக்கும்வரை அமைதியாக இருந்தவன், உடனே அவனை நோக்கி விரைந்தான்.

“ஆதி! இது, யாரோட ஃபோன்?” என்று அவன் படபடப்போடு கேட்க, அவன் செயலைக் கண்டவன் எதுவும் புரியாமலேயே, “அக்காவோட ஃபோன் சார்!” என்று பதிலளித்தான்.

தான் உணர்ந்தது எல்லாம் சரிதான் என்று அவன் மனம் கூப்பாடு போட, அதனை மேலும் விளக்கிக்கொள்ளும் பொருட்டு, “இந்த ரிங்டோன்?” என்று கேட்டான் அவன்.

“இதத்தான் ரொம்ப நாளா அவ ரிங்டோனா வைத்திருக்கா சார். பட், யார் பாடியதுன்னு சொல்லவே இல்ல. யாருக்கும் கொடுக்கவும் மாட்டா இதை” என்று அவன் சலிப்போடு சொல்லவும், மகிழ் யாரென்பதை தெரிந்துகொண்டவனுக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. இருந்தும் இது கோபத்தைக் காட்டும் நேரமல்ல என்பதால் முகத்தில் எதுவும் காட்டாமல் தான் முன்பு அமர்ந்திருந்த இடத்தில் வந்தமர்ந்தான் புகழ்.

‘நீ என்னை காதலிக்கவே இல்லையா? என்னை இங்கே பார்த்தபோது கூட எதுவும் சொல்லல! எனக்குத்தான் உன்னைத் தெரியல. உனக்கு தெரியும் தானே? உன்னை மாதிரி ஒரு நல்ல நடிகையை நான் பார்த்ததே இல்லை. ச்சே! நான் தான் இத்தனை வருஷமா உன்னை எங்கெங்கேயோ தேடியிருக்கேன். உனக்கு என் நினைப்பு கொஞ்சம் கூட இல்லவே இல்லையே! இருந்திருந்தா என்னிடம் நீ வந்து சொல்லியிருப்பியே, உன் ஹனி நான் தானென்று. அதைத்தான் நீ செய்யலியே!’ என்று அவளுக்கு வசைமாரி பொழிந்தவன் அவனை மறந்திருப்பவள் ஏன் அவன் பாடிய பாடலை வைத்திருக்க வேண்டும் என்பதை யோசிக்க மறந்துவிட்டான்.

அங்கே அதற்குமேல் அமர்ந்திருக்க இயலவில்லை அவனால். மகிழின் உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை என்பதும் தெரியவந்துவிட்டதால் ஆதியிடம் கூறிவிட்டு வெளியேறிவிட்டான். அவன் அறியவேண்டியது இன்னும் இருக்கிறதே!

*****

மகிழுக்கு விபத்து ஏற்பட்டு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இதுவரை அவளை நேரில் சென்று பார்க்கவில்லை என்றாலும் அவள் தாய், தந்தையிடம் அல்லது ஆதியிடம் தினமும் பேசி அவள் உடல்நிலையைப் பற்றி அறிந்துகொள்வான் புகழ். அதில் அவன் தெரிந்துகொண்ட மற்றொன்று, மகிழின் சொந்த ஊர் திருச்சி என்பது. அதனைக் கேட்டவனுக்கு இம்முறை அதிர்ச்சியில்லை. ‘இன்னும் எத்தனை பொய் என்னிடம் சொல்லியிருக்க?’ என்ற கேள்வி மட்டுமே இருந்தது. அதற்கு விடையளிக்க வேண்டியவளோ, மயக்கத்தில் இருந்தாள் பாதி நேரம்.

அவள் தான் தன் காதலியோ என்று சந்தேகப்படும்போதே தன்னைத் திட்டிக்கொண்டிருந்தாலும் தினந்தோறும் அவளைப் பார்க்காமல் இருக்காதவன், அவள் தான் தன் தன் காதலி என்று அறிந்தபின் அவளை பார்க்காமல் இருப்பது மிகவும் கடினமாக இருந்தது அவனுக்கு. அதுவும் அவள் மருத்துவமனையில் இருக்கும்போது அவளுடனேயே இருக்க வேண்டும் என்று அவன் மனம் ஏங்கியது. (கோபமாவது ஒன்னாவது!!) மூன்றாம் நாள் அவள் அருகில் இருந்தான் புகழ்.

*****

மருத்துவமனையின் பார்வையாளர் நேரத்தைக் கணக்கிட்டு சரியாக வந்திருந்தான் புகழ். அவனைக் கண்ட அவள் தாய் வரவேற்று அமரவைத்தார். மிகவும் சோர்வாகப் படுத்திருந்தாள் மகிழ். அப்போது அவருக்கு அழைப்பு வர, கைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியில் விரைந்தார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் ‘தண்ணீர்!’ என்று வாயசைத்தாள் மகிழ். அவளையே பார்த்துக்கொண்டிருந்த புகழுக்கு அது கேட்க, அவனும் பாட்டிலை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

அவளருகில் சென்றவனுக்கு நடை சிறிது யோசனையுடன் நின்றது. பின், அந்த யோசனையை ஒதுக்கிவிட்டான் அவள் மீண்டும் அழைக்கவும். மெதுவாக அவளை அமர வைத்தவன், அவளுக்கு நீரைப் புகட்டலானான். கண்களை மூடியவாறே அதனை குடித்தவள், மெல்ல விழிகளைத் திறந்தாள்.

மயக்கம் இன்னும் தெளியாத அவள் விழிகளில் விழுந்தான் புகழ்.

“புகழ்!” என்றவள் மருந்தின் வீரியத்தால் மீண்டும் தூங்கிப்போனாள்.

அவள் இதழ்கள் மட்டும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தன.

அவை தெளிவாக இல்லாததால் என்னவென்று தன் செவிகளைத் தீட்டிக்கேட்டவன் மேலும் குழப்பமடைந்தான்.

“நான் உனக்கு வேண்டாம் தமிழ்!”

“நான் கெட்டவ! அதுனால தான் நீ எனக்கு வேண்டாம்னு சாமி நெனைச்சுட்டாங்க போல!”

“நீ சின்னுவோட நல்லா இருக்கனும்!”

“என் துரோகத்தை மன்னிச்சிடு, ********…!”

இவ்வாறாக அவள் மாற்றிமாற்றி கூறிக்கொண்டிருக்க, அவள் கடைசியில் உரைத்த அந்த பெயரில் ஸ்தம்பித்து நின்றான் புகழ்.

சரியாக அப்போது அவள் தாய் உள்ளே வர, அவரிடம் விடைபெற்று மகிழ் கூறிய அந்த நபரைக் காணச் சென்றான் மகிழின் தமிழ்.

தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்

தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்

காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சே

மெல்ல மெல்ல என்னைக் கொல்லத் துணிஞ்சிடுச்சே

தீயில் என்னை நிற்க வைத்து சிரிக்கிறதே

தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சம் கேட்கிறதே!
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லேகா_1 டியர்
 


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top