உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 05

ChitraPurushoth

New Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
சென்ற அப்டேட்-ஐ படித்த அனைவருக்கும் நன்றிகள்... இதோ அடுத்த பகுதி. நிறைய பேர் சிறிய இடைவெளியோடு அப்டேட் கொடுக்க சொல்லியிருந்தீங்க. அது இப்போதைய சூழ்நிலையில் முடியுமா என்று தெரியவில்லை. எனக்கு ஞாயிறு மட்டும் தான் லீவ். மற்றைய நாட்களில் கஷ்டம்தான். அதனால் ஃபால்ஸ் வேர்ட்ஸ் தர வேண்டாம் என்று நினைக்கிறேன். எப்பொழுது வாரநாட்களில் நேரம் கிடைத்தாலும் அப்டேட் தரப் பார்க்கிறேன். மோஸ்ட்லி செமஸ்டர் எக்ஸாம்ஸ் முடிந்ததும் அது வாய்க்கும் என்று நினைக்கிறேன்.
என்னை ஸ்டூடெண்ட் என்று நினைத்து ஆல் த பெஸ்ட் சொல்ல வருபவர்களுக்கு கல்லூரியில் இன்விஜிலேஷன் செய்பவர்களுக்கு டீயுடன் வடையும் தருமாறு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டு...


உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 05அன்றைய நாள் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்தவன் காலையில் இருந்து நடந்ததை நினைத்துப் பார்த்தான். என்னற்ற கேள்விகள் அவன் மனதில் இருந்தாலும் அதற்கு பதில் காணத்தான் முடியவில்லை.

மகிழ் சென்றதும் அவளது பயோ-டேட்டாவை வரி வரியாக படித்துப் பார்த்தும் அவளுக்கும் தனக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? என்ற அந்த சிறிய சந்தேகம் அவனுக்கு தீர்க்கப்படாமலேயே இருந்தது. அவள் அதனை மாற்றியமைத்திருக்கவும் வழி இல்லை. அதனால் இது உண்மையானதே என்னும் பட்சத்தில் அவர்கள் இருவரும் சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், அவன் மனம் இருவருக்கும் ஏதோ உறவு என்று சொல்லாமல் சொல்லியது.

அச்சமயத்தில் அவனுக்கு தன்னை சுற்றியுள்ள எதுவும் கருத்தில் இல்லை; தனக்காக காத்திருப்பவளும் நினைவிற்கு வராததுதான் பரிதாபம். அவன் குணமான இரண்டு நாட்களில் கோவை சென்றுவிட்டாள் பிரார்த்தனா. கம்பெனி பொறுப்பை கையில் எடுத்தபின்னர் புதிய தொழில் அவன் நேரத்தை குடிக்க, மகிழ் அவன் மனதை அரிக்க, மெல்ல மெல்ல அவன் நினைவில் பிரார்த்தனா வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

*****

இத்தனை நாட்களில் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க பழகியிருந்தாள் மகிழ். அவளுக்கு அவனிடம் கேட்க ஆயிரமாயிரம் கேள்விகள் இருந்தன. ஆனால் அவற்றுக்கு பூட்டு போட்டு பூட்டி வைத்தது அவள் தான்! அவள் மட்டும்தான். சில சமயங்கள் அவள் தன்னைத் தானே வெறுத்துப் போவதுண்டு. அப்போதுகூட அவன்மீது குற்றம்சாட்ட முற்படமாட்டாள். அது அவள் எந்நாளும் செய்ய முடியாத ஒன்று. ஒதுங்கி நின்றாளே ஒழிய, வெறுத்து நிற்கவில்லையே! அவள் நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. நெருப்பில் இட்ட நீர்த்துளியாய் அவள் அவனுள் கரைய நிற்க, அவளை அடக்குவதே அவளுக்கு பெரும் போராட்டமானது.

‘வேலையை விட்டு போ டி!’ என்றது அவள் அறிவு.

‘மாட்டேன்! அவனை பார்க்க முடியாதே!’- மனம்.

‘இத்தனை வருஷம் அவனை பார்த்துட்டா இருந்த?’

‘அப்போ பாக்கல. இப்போ பாத்துட்டேனே! இந்த சந்தோஷமாவது இருக்கட்டுமே!’

‘இதனால் வலி மட்டுமே கிடைக்கும். அவனுக்கு நீ யாருன்னு தெரிந்தால் உன்னை ஒரு நிமிடம் கூட அவன் எதிரில் நிற்க விடமாட்டான்’

‘காதல் வெட்கம் அறியாது. நானும் திட்டு வாங்கிட்டு போறேன்’ என்று அவள் மானம்கெட்ட மனசாட்சி அவனிடமே சரணடைந்தது.

இப்பொழுதெல்லாம் வேலையில் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் வந்தது அவளுக்கு. ஒரு முறை, “சார்! இந்த வால் ஆர்ட் நல்லா இருக்குமா?” என்று வந்து நிற்பாள்.

மறு முறை, “இந்த ரூமுக்கு எப்படி டிசைனிங் செய்தாலும் ஏதோ இன்கம்ப்ளீட்டா ஃபீல் ஆகுது சார். நீங்க சஜஸ்ட் செய்ய முடியுமா?” என்று கேட்பாள்.

அவள் செய்கைகள் அனைத்தும் காணாததுபோல் கண்காணித்துக்கொண்டிருந்தான் புகழ்.

ஒரு நாள் இவ்வாறே அவன் அறையில் மகிழ் இருக்கும்போது புகழின் அலாரம் அடித்தது. அதனை எடுத்துப் பார்த்தவன் மகிழை பிறகு வரச்சொல்லி வெளியேற்றினான். அவள் தனது ப்ளான்களை எல்லாம் சேகரித்துவிட்டு அறைக்கதவை நெருங்கவும், அவன் செய்த போன்காலில் மறுபுறம் எடுக்கப்படவும், “ஹாப்பி பர்த்டே சின்னு…” என்று அவன் கூற, கதவை நோக்கி நீண்ட கை அந்தரத்திலேயே நின்றுபோனது அவளுக்கு. உடல் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது. இதனை எப்படி மறந்தேன்?

தான் செய்த துரோகத்தை எண்ணி விலகியவள் அவனை நெருங்கினால் செய்யவிருக்கும் துரோகத்தை எண்ணவில்லையே! விரைவில் தன்னை மீட்டெடுத்தவள் அங்கிருந்து வெளியேறினாள்.

****

அன்றில் இருந்து மகிழ் புகழிடம் ஒதுங்கியே இருந்தாள். ஆனாலும், அவ்வப்போது அவள் கண்களில் ஏதோ ஒரு தவிப்பு தோன்றிவிடும். அவனிடம் எதுவோ ஒன்றைப் பற்றி கேட்க நினைத்து தயங்கித் தயங்கி நிற்பாள். அவன் சிறியதாக ஒரு அதட்டல் போட்டால் போதும், அன்று முழுவதும் அவன்புறமே வரமாட்டாள். அந்த நாட்கள் எப்பொழுதெல்லாம் என்று மட்டும் புகழ் யோசித்திருந்தால் அவனுக்கு என்றோ மகிழ் என்னும் புதிருக்கான விடை கிடைத்திருக்கும். நேரம் காலம் கூடவில்லையோ?

மகிழ் மட்டுமே இவ்வாறு குழப்பத்தில் தவிப்பது. மற்றபடி, அவளை சுற்றியுள்ள எதிலும் எந்த மாற்றமும் இல்லை, புகழ் உட்பட, அவன் கடிதல் கூட மாற்றமில்லாமல் அவளிடம் வந்து சேர்ந்தது. அவன் திட்டும்போதெல்லாம் பயந்து நடுங்கினாலும் அதன்பின் ஏதோ அவார்டு வாங்கியாற்போல் சந்தோஷித்துக்கொள்வாள். அவள் மனம் மட்டும், ‘அவங்கிட்ட இருந்து வாங்காத திட்டா? இதவிட எவ்வளவோ வாங்கியிருக்கோம்!’ என்று சிறு வலியோடு அதன் காலரை தட்டி விட்டுக்கொள்ளும்.

*******

அன்று ஞாயிறுக்கிழமை.

தி.நகரில் அமைந்துள்ள ஒரு கடையில் தன்னருகே நின்றிருந்த அந்த பனைமரத்திற்கு டிரஸ் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தாள் மகிழ்.

அந்த பனைமரம் யாரென்று சொல்லவில்லையே!

அவன் பெயர் ஆதித்யா, மகிழின் சித்தப்பா மகன். சென்னையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்துவருகிறான். பல நேரங்களில் இருவரும் தான் பார்ட்னர்-இன்-க்ரைம். அவள் தானாக இருக்கும் நேரங்கள் பெரும்பாலும் அவனோடானது. அவன் தனக்கு டிரஸ் வாங்கவென்று அவளை தன்னோடு இழுத்து வந்திருந்தான். தன் தூக்கம் பறிபோன கடுப்பில் மகிழும் ஆதியை பனைமரம் என்று திட்டியவாறே ஷர்ட்களை ஆராய்ந்தாள். கடைசியில் அவனுக்கு இரண்டு மூன்று டீஷர்ட்-ஜீன்ஸ்களை தேர்வு செய்து அதனை அணிந்து வருமாறு ட்ரையல் ரூமிற்கு அவனை அனுப்பிவிட்டவள் மேலும் சில ட்ரெஸ்களை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதிலும் சிலவற்றை எடுத்துக்கொண்டு ட்ரெஸ்ஸிங் ரூமின் வாயிலில் நின்றவள், “ஆதி! இன்னும் கொஞ்சம் ட்ரெஸ்ஸஸ் எடுத்துட்டு வந்துருக்கேன். அதையும் பாரு!” என்க,

“எடுக்கப்போறதே ஒரு செட். இதுக்கு ஏன் இத்தனைய கொண்டு வந்து தர்ற?” என்று அவன் கேட்க,

“ம்ம்ம்ம்…. நீ இந்த கடைக்குள்ள வரும்முன்ன சைட் அடிச்சியே அந்த யெல்லோ டாப்ஸ் பொண்ண கரெக்ட் பண்ணத்தான்!” என்றவள் குரல் வந்த கதவை நோக்கிச் சென்று அதனை தட்டிவிட்டு அருகில் இருந்த கதவில் வாகாக சாய்ந்து நின்றுகொண்டாள்.

அப்பொழுது சரியாக அவள் சாய்ந்திருந்த கதவு திறக்க, பேலன்ஸ் இல்லாமல் உள்ளே விழப்போனவளை இரு கரங்கள் தாங்கிக்கொண்டன.

“அம்மா!” என்றவாறு விழப்போனவள் அந்நிகழ்வு நிகழாமல் இருக்கவும், கண் திறந்து பார்க்க, அவள் முன் இருந்த விழிகளைக் கண்டவள் உடலெல்லாம் சிலிர்த்தது. அவள் கண்ணன் அவளை தாங்கிக்கொண்டிருந்தான்.

அவனைக் கண்டு அவள் விக்கித்து நிற்க, இதுவரை தடை போட்டிருந்த காதலும் இந்த திடீர் சந்திப்பில் தன் தடைகளை எல்லாம் மறந்து அவள் விழிவழி அவன் மனம் சேர்ந்தது.

கஞ்சிக்குள் போட்ட உப்பு

கஞ்சியெல்லாம் கூடிப் போகும்

அது போல நெஞ்சில் சேர்ந்தியே

கண்மூடி தூங்கப்போனா

கண்ணோடு கலகம் செஞ்ச

கனவோடு சிறகாய் நீந்தியே!

மகிழை அங்கு கண்டவனும் அவள் நயனங்கள் நடத்திய பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற அதனை வெகு கவனத்துடன் படிக்கலானான்.

எலும்பெல்லாம் தேனூற

நரம்பெல்லாம் பூப்பூக்க

எளம்பொண்ணு ஏதோ செஞ்சிட்டா

ஒடம்பெல்லாம் கடுங்காய்ச்சல்

உள்ளுக்குள் பனிமூட்டம்

மகராசி மாயம் பண்ணிட்டா

இருவரும் தனி உலகில் இருக்க, அதில் அபஸ்வரமாய் அருகில் இருந்து ஒரு குரல் கேட்டது.

“அடியே! என்ன ஆச்சு!”

அந்த குரலில் தன்னை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்தவள் தடுமாற்றத்துடன் விலகி நின்றாள். தன்னெதிரே நின்றவனையே குழப்பத்துடன் கண்டவாறு அவள் நின்றிருக்க, அதற்குள் பலமுறை அழைத்துவிட்டிருந்த ஆதி தன் அக்காவிற்கு என்ன நடந்ததென்று பார்க்க கதவை திறந்துகொண்டு வந்துவிட்டிருந்தான்.

அங்கே மகிழோ புகழை ‘இவன் எப்படி இங்க?’ என்று பார்த்துக்கொண்டிருந்தாள். (ஹே! மகிழ்! நீ மட்டும்தான் கடைக்கு வருவியா? அவன் வர மாட்டானா?)

மகிழ் இவ்வாறு நிற்பதைக் கண்டு அவளை ஆதி உலுக்க, அதில் தன்னை மீட்டெடுத்தவள், ஆதியை “ஹாய் ஆதி!” என்று அழைத்தாள்.

“அக்கா! என்னக்கா ஆச்சு! கீழ விழுந்துட்டியா?” என்று அக்கரையாக விசாரித்தான்.

(உன் அக்கா எங்கையாச்சும் விழுந்தா கூட எல்லாம் நினைவுல வைச்சுருப்பா… எதிரில் நிற்பவனைப் பார்த்தா மட்டும் தான் எல்லாத்தையும் மறப்பா!)

“ஹீஹீஹீ!!! இவரு … இவரு….” என்று அவள் தந்தியடிக்க,

‘எவரு’ என்றவாறு தன் கண்களை அவளைத் தாண்டி வீசியவன் விழிவிரித்தான்.

“மிஸ்டர் புகழேந்தி!” என்று அவன் சந்தோஷமாகக் கூவ, அதில் புகழ் வியப்புற்றான்.

“சார்! உங்களைப் பற்றிய ஆர்ட்டிக்கல் ரீசெண்ட்டா மேகசின்ல பார்த்தேன். படிச்சதும் அவ்வளவு வியந்தேன் சார். யூ ஹவ் இன்ஸ்பையர்ட் மீ அ லாட்” என்று அவன் சொல்ல,

அதனை சின்ன புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவன், “தேங்க்ஸ். இட் ஃபீல்ஸ் குட் டு ஹியர். நம்மகிட்ட இருந்தும் ஏதோ ஒன்னு நல்லது ஒருத்தங்க எடுத்துக்கற அளவுக்கு வாழ்ந்துட்டு இருக்கோம்னு நினைத்துப் பார்க்கும்போது மகிழ்வா இருக்கு!” என்றான்.

அதன்பின் சுயஅறிமுகம் நடைபெற, அதுவரை எந்த ஆரவாரமும் செய்யாமல் இருந்த மகிழை நோக்கி திரும்பினர்.

மகிழோ காற்றில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். ‘இவன் லாஸ்டா கொடுத்த இண்டர்வியூ எப்படி நம்ம கண்ணுல படாம போச்சு?’ என்று.

அவள் செய்கையைக் கண்டு புகழ் சிரிக்க, “சாரி சார்! அவ கொஞ்சம்…” என்று விரலால் தலையை சுற்றிக் காட்டிவிட்டு ‘மானத்த வாங்குறா!’ என்றவாறு அவளை உலுக்கினான் ஆதி.

அதில் சுயவுணர்வு பெற்றவள், “ஸார்! நீங்க எங்க இங்க?” என்க,

“ஹே! வைட்! இவர உனக்கு தெரியுமா?” என்று கேட்டான் ஆதி.

“இவ்வளவு கிட்டத்துல இருக்குறவர தெரியாதா?” என்றவள், அவன் கடுப்பாகவும்,

“ஹீ இஸ் அவர் எம்.டி” என்று அவனை அறிமுகப்படுத்தினாள் மீண்டும் ஒருமுறை.

“ஓ… நீ சொல்லவே இல்ல!” என்று அவன் குறைபட்டுக்கொண்டான். தன் ரோல்மாடல் அவள் எம்.டி, என்பது தெரிந்திருந்தால் எப்போதோ புகழை சந்தித்திருக்கலாமே என்ற கவலை அவனுக்கு.

“உனக்கு ஊருல இருக்குற எல்லாரையும் பிடிக்கும். எல்லாரையுமா கூட்டிட்டு வந்து உனக்கு அறிமுகப்படுத்துவாங்க?” என்று அவள் கேட்க,

“போ அக்கா! நீ கீழ விழுந்துட்டேன்னு நினைச்சு நான் எப்படி பயந்தேன் தெரியுமா!” என்று அவன் கூற,

“டேய்… உண்மையை சொல்லு! எனக்காக பயந்தியா? இல்லை உன் ஷவர்மா கிடைக்காதுன்னு பயந்தியா?” என்று மகிழ் கேட்க, திருதிருத்தான் ஆதி.

(தம்பிகள் உள்ள அக்காக்களுக்கு மட்டுமே தெரியும், அவன் அக்கா என்றழைத்தால் எதற்கோ அடிபோடுகிறான் என்பது!)

இதனை புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்த புகழ் அங்கிருந்து விடைபெற்று நகர்ந்தான்.

******

“டேய் புகழ்! என்னடா செய்திட்டு இருக்க நீ? மகிழை ஏதோ டீனேஜ் பையன் மாதிரி பார்த்துட்டு இருக்க. என்ன, சினிமால எல்லாம் வர்ற மாதிரி அவ உன் கைல விழுந்ததும் ‘கையில் மிதக்கும் கனவா நீ’ன்னு பாட்டு ஓடுது உனக்கு? நீ ஒருத்திய லவ் பண்ற. அத மறந்துறாத. இங்க எதற்காக வந்தியோ, அதை மட்டும் செய். மற்றது எல்லாமே உனக்கு வேண்டாதது” என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டவன் உறங்கச் சென்றான்.

ஏதோ ஆகிப்போச்சு

இதயம் இத்துப் போச்சு

ஏனோ இந்தக் கூத்து நீ சொல்லம்மா

நெஞ்சா பழத்துக்குள்ள

கொஞ்சம் கூடுகட்டி

குத்திக் குடையும் வண்டு நீ தானம்மா
Gooood
 


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top