அவளே என் தோழனின் வசந்தம்-3-ஆ

Advertisement

surthi

Well-Known Member
ரிஷியின் வரவை எதிர்பாராத மீரா தண்ணீரை நிறுத்தாமல் பீச்சியதால் ரிஷி ரிஷி தொப்பலாக நனைந்தான் அப்போதும் மீரா ரிஷியை எதிர்பாராமல் பார்த்ததால் வந்த அதிர்ச்சியில் தண்ணீர் டியூப்பை கீழே போடாததால் இன்னமும் நனைந்து கொண்டிருந்தான் இதைக்கண்ட அனு குதூகலித்து சிரித்தாள் அவளின் சிரிப்பு சத்தத்தில் உணர்வுக்கு வந்த மீரா தண்ணீர் டியூப்பை தூக்கிப்போட்டுவிட்டு நடுநடுங்க நின்றாள்

அங்கிருந்த அனைவரும் நடுங்கிக் தான் இருந்தனர் ஏனென்றால் ரிஷியின் கோபம் அப்படி ஆனால் ரிஷியோ இப்பயம் தேவையில்லை என்பதை உணர்த்துவதுபோல் தன் முகத்தில் ஒரு புன்முறுவலை படரவிட்டான் முன்னிருந்தவர் எல்லாம் அசந்து விட்டனர் பின் அசராமல் எப்படி இருப்பர் எப்போதும் சிரிப்பு என்றாலே மில்லி மீட்டர் அளவிற்கு உதட்டை இழுத்து வைப்பவன் அதுவும் இந்த ஒன்றரை வருட காலமாக சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டவன் இன்று இவ்வாறு கன்னத்தில் குழி கண்கள் பளபளக்க அழகாக முறுவலித்தாள் யார் தான் அசர மாட்டார்கள்

பின் ரிஷி அங்கிருந்த அனைவரையும் கண்களாலேயே கலைய உத்தரவுயிட்டுவிட்டு அனுவை கைப்பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்துவிட்டு தானும் அவள் முன் அமர்ந்து அனுவிடம் அனுமா ஏன் இப்படி பண்ண என்று கேட்டான் ஆனால் அவளோ அதை அவனிடமே திருப்பி எப்படி பண்ணேன் என்று கேட்டாள் ரிஷி அதற்கும் கோபப்படாமல் அனுமா எதுக்கு மீரா பிரியா மேலேயும் தண்ணீர் விட்ட ஏன் மீரா உன் மேல தண்ணி பீச்ச வரும்போது என்ன பார்த்த உடனே விலகின என்று கேட்டான் அதற்கு அவள் உங்க ரெண்டு பேருக்கும் பனிஷ்மென்ட் வேண்டாமா என கேட்டாள்

அதைக் கேட்டவுடன் ரிஷி பனிஷ்மென்ட்டா எதுக்கு எங்க மூணு பேருக்கும் பனிஷ்மென்ட் நாங்க என்ன தப்பு பண்ணினோம் என வினாவின் அதற்கு அவள் ரிஷி இடம் நீ என்கிட்ட சொல்லாம போனதுக்கும் ப்ரியாவை காட்டி டைகரை பார்த்து அலறினதுக்கும் மீராவுக்கு நான் வேணும்னு பண்ணல பிரியா மேல் தண்ணி விடும்போது மீராவும் குறிக்க வந்துட்டா அதான் அவ மேல தண்ணி பட்டுச்சு என்றாள்
அனு கூறியதை கேட்டவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது ஆனால் அதை அடக்கி கொண்டனர் இல்லை என்றால் அதற்கும் தண்டனை என்ற பெயரில் ஏதாவது செய்துவிட்டால் பின் ரிஷி அனுவிடம் சாரி சாரி அனுமா நான் கிளம்பும்போது நீ தூங்கிட்டிருந்தேன் அதான் உன்ன எழுப்பல உனக்கும் தூங்கும்போது யாராவது கூப்பிட்டா பிடிக்காது நீயே சொல்லு நான் என்ன பண்ணனும் என்று கேட்டான்

அதற்கு அனு சிறிது யோசித்துவிட்டு ரிஷி நான் தூங்குகிறேனா இனிமேல் பார்க்காதே உனக்கு மட்டும் பர்மிஷன் தரேன் நான் தூங்கினாலும் என்னை எழுப்பி சொல்லிட்டு போய்ட்டு வா சரியா என்றாள் ரிஷியும் சரி அனு நீ சொல்லுற மாதிரியே உன்கிட்ட சொல்லிட்டு போறேன் சரியா என்றான் உடனே அனு போயிட்டு வரேன் சொல்லுனும் ரிஷி என்று கூறினாள்

அவன் கூறியதைக் கேட்ட ரிஷி சிரித்துக்கொண்டே சரி உன் கிட்ட சொல்லிட்டு போயிட்டு வரேன் சரிதானே எனக் கேட்டான் அனுவும் ம்ம் ஓகே என்றாள் அவ்வளவு நேரம் அனுவையும் ரிஷியையும் ரசித்துக்கொண்டிருந்த அம்மு அப்போது ரிஷியிடம் வந்து ரிஷி அனு எழுந்து ஒரு மணி நேரம் ஆச்சுப்பா இன்னும் அவ காபி கூட குடிக்கல எனக் கூறினார் உடனே ரிஷி அனுவிடம் திரும்பி என்ன அனுமா இது இப்படியா எதுவும் சாப்பிடாம குடிக்காம இருக்கிறது என்று கேட்டான் அதற்கு நானும் அனு நீ ஏன் என்னை விட்டுட்டு போனே நான் எழுந்த உடனே உன்னைத்தான் ரூம்ல தேடினேன் தேடினேன் அங்க நீ இல்லை என்று உடனே கீழே வந்து தேடினேன் இங்கேயும் நீ இல்லை எனக்கு எப்படி அழுகையா வந்தது தெரியுமா இதுல இந்த காயு வேற நீ யார்கிட்டயும் சொல்லாம போயிட்டேன்னு சொன்னாங்க அதைக் கேட்டவுடனே நான் கூட நீ என் மேலே கோபப்பட்டோ இல்லை பிடிக்காமலோ தான் போயிட்டியோ நினைச்சேன் அப்புறம் சாப்பிட்டியானு கேக்குறியே அறிவு இருக்கா உனக்கு என்றாள் அதற்கு ரிஷி உடனே எனக்கு அறிவு இல்லை தான் செல்லம் என்றவுடன் சுப் குறுக்க பேசாதே அப்புறம் நான் பேச வந்தது மறந்துவிடும் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் ரிஷியோ கண்களில் குறும்பு மின்ன என்ன பாத்து அறிவு இருக்கா என்று கேட்டடா என்று கூறினான் உடனே அனு அவனைக் கோபமாக முறைத்து பின்ன கேட்காமல நீதானே சொன்னே எழுந்து பிரஸ் ஆயிட்டு எதுனாலும் குடிக்கணும் சாப்பிடனும்னு சொன்னே என்றாள் அதற்கு ரிஷியிடம் இறந்த இருந்து பதில் வரவில்லை என்றவுடன் இன்னும் முழிக்கிறேன் என்ன முழிக்கிற நீதான சொன்ன அதோட இத எல்லாம் நீதானே என்னை கூட இருந்து செய்ய வைப்ப அது வந்து பிரஷ் பண்ண வைக்கிறது குளிக்க ஹெல்ப் பண்றது சாப்பாடு ஊட்டி விடறது எல்லாமே பண்ணுவ இப்ப வந்து ஏன் செய்யலைன்னு என்ன வந்து கேக்கறே போ உனக்கு என் மேல பாசமே இல்லை போ நான் உன் கூட பேசமாட்டேன் போ போ என ரிஷியை பிடித்து தள்ளிவிட்டுவிட்டு சத்தம் போட்டு அழுது கொண்டே மாடிக்கு சென்று விட்டாள்

அவள் அழுவதை கண்ட மீரா பிரியா அம்மு மூவருக்கும் கண்களில் நீர் கோர்த்தது என்றால் ரிஷிக்கு நெஞ்சில் ரத்தம் வடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும் அவனால் வாய்விட்டு அழக்கூட இயலவில்லை அதுவும் ரிஷிக்கு அனு அவன் தாய்க்கு நிகரானவள் அவன் கஷ்டத்தில் இருக்கும்போது அவனை தாயாய் தோழியாய் எல்லாமாகவும் இருந்து மடி தாங்கிய அனுவை இந்நிலைக்கு ஆளாக்கிய வரை கண்டுபிடிக்கக் கூட முடியாத தன் இயலாமையை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ஆனால் ஒன்று அனுவின் இந்நிலைக்கு காரணமானவர்கள் மட்டும் அவன் கைகளில் கிடைத்தால் அவர்கள் நரக வேதனை அனுபவிப்பர் என்பது மட்டும் சத்தியம் ரிஷியின் கண்கள் சிவந்திருப்பதையும் கை நரம்புகள் புடைத்திருப்பதையும் கண்ட அம்மு அவனிடம் வந்து அவன் தோள்களை பிடித்து அழுத்தினார் அதில் தெளிந்தவன் அம்முவை நிமிர்ந்து பார்த்தான் ரிஷி ரிஷி தன்னை நிமிர்ந்து பார்த்தவுடன் அம்மு ரிஷி இடம் ரிஷி போ போய் அனுவை சமாதான படுத்து என்ற என்றார் ரிஷியோ அம்முவை ஒரு அடிபட்ட பார்வை பார்த்தான் அவள் கண்களில் வேதனையை உணர்ந்த அம்மு என்ன ரிஷி ஏன் இவ்வளவு வேதனைப்படுற எல்லாம் சரியாயிடும் கூறினார் அதற்கு ரிஷி எல்லாம் சரி அம்மு ஆனால் அனு நல்லபடியா குணமாகி வந்து என்ன கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்லணும் என்று கேட்டான் அம்முவும் அதற்கு அனு அப்படியெல்லாம் கேள்வி கேட்க மாட்டா நீ கவலை படாத என்று கூறினார் அதற்கு ரிஷி அம்மு நீ கவலை படாதே அப்படின்னு சொல்றே ஆனால் நான் எப்படி கவலை படாமல் இருக்க முடியும் அனுவை இப்படி மனநிலை சரியில்லாத நேரத்துல நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது எனக்கு எவ்வளவு உறுத்தலா இருக்கு தெரியுமா அதுவும் என்னால் அனுவை என் மனைவிய அதாவது அவளோட முகத்துக்கு கீழ பாக்கவே முடியவில்லை நாளைக்கே அனு குணமாகி வந்து உனக்கு எப்படி என்ன கல்யாணம் பண்ணிக்க மனசு வந்தது நான் உன்னை என் உயிர் நண்பனா தானே பாத்தேன் அப்படின்னு கேட்பாளே நான் என்ன பதில் சொல்லுவேன் எப்படி அவ முகத்தை பார்ப்பேன் அதோட நான் தினம் தினம் நரகத்தில் வாழ்ந்துட்டு இருக்கேன் அம்மு சொல்லு அம்மு அவ அப்படிக் கேட்டா நான் என்ன செய்யணும் என்றான்

அம்முவால் இதற்கு என்ன பதில் கூற முடியும் அவரும் மனதிற்குள் ஒவ்வொரு நொடியும் அழுது கொண்டுதான இருக்கிறார் ஆனாலும் தன் முன் அவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கும் ரிஷி இப்படி குழந்தையாக மாறி என்ன செய்வது என புரியாமல் முழித்துக் கொண்டிருப்பதை அவரால் காண முடியவில்லை அதனால் ரிஷி இடம் ரிஷி நீ அனுவை குழந்தையாக பார்த்துக் கொள்வது எங்களுக்கு தெரியும் அனுவும் நிச்சயம் அவள் குணமானவுடன் அவளின் உயிரின் பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் அதற்காகத்தான் இதெல்லாம் என்பதையும் புரிந்து கொள்வாள் இல்லையேல் நாம் புரிய வைக்கலாம் சரியா கூறினார். இவர்கள் இவ்வாறு வருந்தி கொண்டிருப்பதையும் அனு அழுவதையும் கண்ட இவர்கள் பக்கத்தில் யார் கண்களுக்கும் புலபடாத உருவம் அவர்களின் நிலையைக் கண்டு தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்றும் தானும் ரிஷி இவ்வாறு வருந்துவதற்க்கும் காரணமாகி விட்டோமே என்றும் நினைத்து கதறிக் கதறி அழுதது.


வசந்தம் பூக்கும்...........................................!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top