அன்பின் இனியா 16 2

Advertisement

achuma

Well-Known Member
hi friends next given
thanks for all you likes and comments
keep on supporting
takecare friends
:love:(y)

ரேஷ்மி, யாரிடமும், சொல்ல முடியா மன வேதனையில், அறையில் இருந்து வெளியே வர முடியாமல், யாரையும் பார்க்க பிடிக்காமல், அறைக்குள்ளே முடங்கி கிடந்தாள்.
நாதன் மகள் வெளியே வருவாள், என்று பொறுத்து பார்த்து விட்டு, மாலையில் சந்தித்து கொள்ளலாம், என்று தேவகியிடம் கூறி அலுவலகம் கிளம்பி விட்டார் .
வினோத்தும், சரி தங்கை, பயண களைப்பில் இருப்பாள், என்று அவனும் அலுவலகம் புறப்பட தயாராக இருந்தான் .
விஷாகா அங்கு அமைதியாக அமர்ந்திருப்பது பார்த்து, "என்ன, எங்களுக்கு முன்னாடியே கிளம்பிடுவே, இப்போ இன்னும் ரெடியாகாமா இருக்க," என்று மனைவியின் அருகில் அமர்ந்தான் .
என்ன என்று கூறு முடியும், அவள் செய்து வைத்த காரியத்திற்கு .
விஷாகாவை பொறுத்த வரை, ரேஷ்மி எப்பொழுதும் போல் இருந்ததால், அவளுக்கு இன்னும் எதுவும் தெரியவில்லை , இனி தேவகி, அன்புவின் திருமணம் குறித்து கூறியதும், தனது குட்டு வெளியே வந்து விடுமோ, என்ற பயம் .
வேலையில் எந்த கவனமும் செலுத்த முடியாமல், அலுவலகத்தில் இருப்பதற்கு, இங்கு என்ன எப்படி சமாளிக்கலாம், இப்படியே அவளின் யோசனை முழுதும் .
"என்ன மா, உடம்பு முடியலையா, நீ இவ்வளவு நேரம், வீட்டுல இருக்க மாட்டியே," என்று தேவகி, மருமகளின், நெற்றியில் கை வைத்து பார்த்தார், உடல் நலம் சரியில்லையோ என்று .
அதில் தன்னை மீட்டவள், "இல்லை ரேஷ்மி," என்றதும், "அவ வந்ததும் உன்னோடயே, சுத்திட்டு இருப்பா, இப்போ என்னவோ, நேத்து நைட் எல்லாம் ட்ரைன்ல வந்தது, அலைச்சலா இருக்கும்" .
"அவ எழுந்ததும், உனக்கு போன் செய்ய சொல்றேன்," என்று வெள்ளந்தியாக பதிலளித்த, மாமியாரிடம், இதற்கு மேலும் ஏதும் சமாளிக்க முடியாது, என்று, கடைக்கு கிளம்பலாம், என்று தயார் ஆனாள் .
"இன்னைக்கு ஏதோ டல்லா இருக்கே, நானே உன்னை ட்ரோப் பண்றேன்," என்ற கணவனிடம், ஏதும் கூறாது, அவனுடன் சென்றாள் .
ரேஷ்மி, தோழிகளுடன் சுற்றுலா சென்று, நேராக கல்லூரிக்கு செல்லலாம், என்ற தோழிகளை மறுத்து, அனைவரும், வீட்டிற்கு செல்லலாம், எப்படியோ, தேர்வுக்கான விடுமுறை தானே, என்று அனைவரையும் சம்மதிக்க வைத்தாள் .
தோழிகளுடன், இன்னும் கொஞ்ச நேரம் நேரம் செலவழிக்கலாம் என்று ட்ரைனில் புறப்பட்டனர.
தோழிகள் பட்டாளம் ஒரே கலாட்டாவாகவும் , மகிழ்ச்சியாகவும், அவர்களின் பொழுது, நன்றாகவே சென்றது .
அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்ததும், அவள் வரும் நேரம் அவனிடம் சொல்லி மீண்டும், தோழிகளுடன் கவனத்தை வைத்தாள் .
அன்புவிடம் இருந்து முதல் முறையாக அழைப்பு.
பல வண்ண கனவுகள் மிதக்க, ஒரு வித படபடப்புடன், அவனின் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள் .
என்ன பேசுவது என்று, மங்கையின் மனதில் தயக்கம், வெட்கம் என்று என்னற்ற உணர்ச்சிகள், ஆட்கொள்ள, ஒன்று பேசாமல், அமைதியாக இருந்தாள் .
"ஹலோ நான் அன்பு பேசுறேன், ரேஷ்மி, ஹலோ," என்று அவனின் தொடர் அழைப்பில், "மாமா நான் தான் சொல்லுங்க, எப்படி இருக்கீங்க," என்று கேட்டதற்கு, "உன்கிட்ட நான் முக்கியமான விஷயம் பேசணும்."
"நீ இப்போ எங்க வந்துட்டு இருக்கே, நானே உன்ன வந்து கூட்டிட்டு போறேன்," என்றதும், மங்கையின் மனதில், தென்றல், வீச, உடனே, கள்ளமும் புகுந்து கொண்டது.
"சரி" என்று அவனிடம் பதிலளித்தவள், உடனே அண்ணனுக்கு அழைத்து, இன்னும் இரண்டு மணி நேரம் தாமதமாகும், என்று பொய்யுரைத்து, அவன் காதலை சொல்வானோ, என்று எதிர்பார்ப்புடன், நேரத்தை, ஒரு வழியாக கடத்தி, அவனை சந்தித்தாள் .
வண்டியில் இருந்து இறங்கியதும், அவனை அங்கு ரயில்வே ஸ்டேஷனில் கண்டதும், துள்ளிய மனதை அடக்கி, அவனின் முன்பு சென்று நின்றாள், காரிகை .
அவளை அழைக்கும் வரை ஒன்றும் தெரியாமல், இருந்த அன்புக்கு, அவளை நேரில் கண்டதும், குற்ற உணர்ச்சி மேலோங்கியது .
அவன் அனுமதியின்றியே அவனை ஒரு பாவ செயலில் ஈடுபட வைத்த அவன் அக்காவை, தண்டிப்பதா , இல்லை இனி அடுத்து, இதில் இருந்து, அவளை வெளிக்கொணர்ந்து, அதே நேரத்தில் ரேஷ்மியிடம் எப்படி புரிய வைப்பது, என்று ஒரே தவிப்பு .
அவனே பாவம் செய்தது போன்று அவன் அகம் முழுதும், வேதனை .
அவளிடம் ஏதும் கூறாமல், அவளின் பையை பெற்று கொள்ள, அவளும் மகிழ்வுடன் கொடுத்து அவனின் பின்னே சென்றாள் .
அவன் டிராவெல்சின், கார் ஒன்று எடுத்து வந்து, அதில் அவளை ஏற செய்தான் .
வெளியே அவனின் பைக் என்று நினைத்த இருந்த மங்கையின் மனதில், கார் கண்டதும், புஸ் என்றானது .
"சரியான சாமியார்," என்று அவனை நிந்தித்து கொண்டே, அவனுடன் முன்னிருக்கையில் ஏறினாள் .
அவன் நேராக மெரினா கடற்கரைக்கு சென்று வண்டியை நிறுத்தினான் .
தூரத்தில் தெரிந்த கடலலைகளை வெறித்த வாறு அவன் அமர்ந்திருந்தான் என்றால், அங்கங்கு நடை பயிற்சி செய்வோர், காலை நேர கடல் காற்று , அருகில் மனம் கவர்ந்தவன், என்று மகிழ்ச்சி பொங்க ஒரு வித பரவச நிலையில் ரேஷ்மி .
ரேஷ்மி, என்று ஆவனின் அழைப்புக்கு, அவன் பக்கம் பார்வை பதித்த ரேஷ்மியிடம், நொடியும் தாமதிக்காது, "ரேஷ்மி, எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல, பட் நீ என்னை இவ்வளவு நாட்களாக விரும்புறன்னு, எனக்கு சத்தியமா தெரியாது.தெரிந்து இருந்தா கண்டிப்பா அப்போவே இதுக்கு ஒரு விடை கிடைச்சி இருக்கும், உனக்கும் மன உளைச்சல் இருக்காது ."
"உனக்கு அக்கா என்னோட கல்யாணம் செய்து வைய்கிறேன்னு வாக்கு கொடுத்து இருக்குறது, எனக்கு இப்போ கொஞ்ச நாட்கள் முன்னாடி தான் தெரியும் ."
"நான் உன்னை எப்பவும் என் அத்தை மகளா பார்த்தேனே தவிர, எனக்கு உன் மேல எந்த விருப்பமும் இல்லை .
எனக்கு முன்னயே தெரிந்து இருந்தா , நான் கண்டிப்பா என் மனசு என்னனு உனக்கு புரிய வெச்சி இருப்பேன் "
"அக்கா உனக்கு என் மேல விருப்பமனு, தெரிஞ்சதும், அவ சொல்லல".
ரேஷ்மிக்கு தான் தன் காதில் விழும் வார்த்தைகள் எல்லாம், ஏதோ கேட்க்கா மொழிகள் போன்று, ஜீவனற்று அவனை பார்த்து கொண்டிருந்தாள் .
"இவருக்கு என் மேல விருப்பம் இல்லையா , அண்ணி, சொன்னார்களே, இவருக்கும் என்னை பிடிக்கும்னு , என்ன சொல்றாரு , இவரு" அவளின் மனதில் பல கேள்விகள் .
பதிலளிக்க வேண்டியவன் , அவளின் முன்பு தான் அமர்ந்திருக்கிறான் என்றாலும், அவளால் தான் எதையும் கேட்கும் திராணியற்று , இருந்தாள் .
"எனக்கு அடுத்த வாரம், நான் விரும்பிய பொண்ணோட கல்யாணம்," என்று சுற்றி வளைக்காமல், நேரடியாக விஷயத்தை போட்டு உடைத்தான் .
ஏதோ இதயம் வெடித்து சிதறிய உணர்வு அவள் அகத்தில்.
அவளை கண்டு அன்பு வருதினாலும், அவளுக்கு புரிய வைத்தே ஆக வேண்டும், என்ற முடிவில் அவன் , மனதை வெளிப்படையாக பேசி விடும் முடிவில் இருந்தான் .
"நான் காதலிக்கிற விஷயம், வீட்டுல தெரிஞ்ச பிறகு தான், அக்கா உனக்காக பேசினாங்க."
"என்னோட எவ்வளவோ உனக்காக போராடி பார்த்துட்டாங்க"
"காதலுக்கு கட்டு பாடு ஏதும் இருக்கா என்ன, இவங்க மேல தான் காதல் வரும்னு சொல்றதுக்கு" .
"இங்கேயும் அதே தவறு தான் நடந்து இருக்கு" .
"உன்னோட விருப்பம், அவங்க எனக்கு என்னைக்கும் சொல்லவே இல்லை . இப்போவே எதுக்கு சொல்லணும்னு இருந்து இருப்பாங்க, அவங்களையும் குறை சொல்ல முடியாது," என்று அக்காவிற்காக பேசினான் .
"அவங்க மேலயும் தப்பு இல்லை, என் மேல நம்பிக்கை வைச்சாங்க, நான் அந்த நம்பிக்கை உடைச்சிட்டேன்" .
"என் கல்யாண பேச்சு பேசும்போது தான் நான் அவங்க நம்பிக்கைக்கு நான் தகுதியில்லைனு, அவங்களுக்கு தெரிய வந்தது .
என்னை மன்னிச்சுடு மா."
விஷாகா மீது தவறே இல்லை என்பது போன்று அனைத்து தவறும் தன் மீதே போட்டு கொண்டான் .
"நான் என்னைக்காவது, உன் மனசு பாதிக்கிற போல் நடந்து இருந்தா என்னை மன்னிச்சுடு மா" .
"இப்போவும், என் தேவகி அத்தை மகளா, உன்னை எனக்கு பிடிக்கும் .
பிடிதத்திற்கும், விருப்பத்திற்கும் வித்யாசம் இருக்கு" .
"தெரிந்தோ தெரியாமலோ, இந்த விஷயத்துல, பெரிதும் பாதிச்சி இருக்கிறது நீ மட்டும் தான்" .
" என்னால ஒருத்தவங்களுக்கு வருத்தம்னா , அந்த வருத்தத்தை போக்கும் கடமை எனக்கு தான் இருக்கு" .
"அதான் நானே நேருல உன்னை சந்தித்து இதை பற்றி பேசிட்டேன்,"
"நான் இதை நேரா உன் வீட்டுல வந்தே சொல்லி இருப்பேன், இதுக்கு முன்னாடி நான் உன்னோட அதிகமா பேசியது இல்லை, வீட்டுல எல்லாரும் புதுசா என்னனு , கேட்பாங்க, அதுக்கு இடம் தர வேண்டாம்னு தான், நான், நீ வர நாள் வரைக்கும் காத்திருந்து, உன்னை இங்கே சந்தித்து , சொல்றேன்" .
"வீட்டுல விஷயம் தெரிந்தா எல்லாருமே, வேதனை பாடுவாங்க" .
"என் அத்தைக்கு, வேதனை தர மாதிரி நான் நடந்து இருக்கேன், என்னோட குற்ற உணர்வே என்னை கொள்ளும்" .
அவனின் தரப்பும் நியாயம் தானே என்று, அமைதியாக கேட்டு கொண்டாள் .
அவன் எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாமல், தவிக்கிறான், என்று காதல் கொண்ட மனது அவன் மீதே அவனுக்காக பயணம் செய்தது .
"நான் தான் முட்டாள் .
காதலுக்கு, யாரையாவது, தூது அனுப்புவங்காளா . என் மனச நானே நேருல மாமா கிட்ட சொல்லி இருந்தா இந்த பிரச்னை நடந்து இருக்காதே. எனக்கும் என்னனு தெரிந்து இருக்கும், இவருக்கும் வேதனை இருந்து இருக்காது.
எது என்னை இவரோடு பேச தடுத்துச்சு " என்று அவளுக்குள் அவளே, கேள்வி பதில் என்று இருந்தாள் .
அவன் பேச ஆரம்பித்ததும், அவள் முகத்தை கவனித்தான் ஆரம்பத்திலிருந்தே .
மிகவும் தைரியாமான பெண், அவள் மனத்திலும் காதலின் வேதனை, இனியாவை, அவன் கண்டதில் இருந்து, அவள் பற்றிய எண்ணங்களே, நொடி பொழுதும் .
இனியாவை விட்டு தன்னால் இனி இருக்க முடியுமா என்றால், அவன் உயிர் அறுக்கும் வலி .
அதே தான் இங்கு ரேஷ்மிக்கும் .
விஷாகாவை நினைத்து பல்லை கடித்து அமர்ந்திருந்தான் .
அவளின் உணர்வற்ற முகத்தை பார்க்க பிடிக்காமல், கண் மூடி சாய்ந்து விட்டான் .
மனதில் அவனின் தேவகி அத்தைக்கு, ஏதோ பெரிய துரோகம் செய்த வலி அவனுள் .
ரேஷ்மிக்கு, சிறிது நேரத்திற்கு முன்பு தெரிந்த அழகான காட்சிகள் எல்லாம், அவளின் கண்ணில் இப்பொழுது பதிய வில்லை .
ஏதோ இருட்டில் இருப்பது போன்று வாழ்வே இருள் மூழ்கிய உணர்வில் வெறுமையுடன் அன்புவை பார்த்தாள்.
"காதலே இல்லைனு சொல்றவரு கிட்ட, நான் யாசகம் கேட்கணுமா , அப்படி கிடைக்கும் வாழ்வு தான் இனிக்குமா "
கண்களின் ஓரத்தில் சிதறிய கண்ணீர் துளியை துடைத்து விட்டு, உதட்டை கடித்து அவள் அழுகையை அடக்கினாள் .
"மாமா, என்னை வீட்டுல போய் விடுங்க, எனக்கு அழணும், எனக்கு யார் முன்னயும் என் உணர்வு பகிர பிடிக்காது ."
அவளின் பதிலில், அவளை வேதனையுடன் பார்த்த அன்பு, ஏதோ பேச வாய் திருக்கும் முன், அவள் கை நீட்டி தடுத்து, "இதுக்கு மேல பேச எதுவும் இல்லை , ஆல் தி பெஸ்ட்" .
"ப்ளீஸ் கிளம்பலாம் ," என்று அழுத்தத்துடன் ஒலித்தது அவள் குரல் .
அன்புவும் எதுவும் கூறாமல், வேதனை சுமந்த மனதுடன், அவளை வீட்டிற்கு வெளியே சென்று விட்டு வந்தான் .
அவள் அவனை பார்த்த பார்வை கூட, இதோ முடிந்தது, எனது காதல், அவனுடனே சென்று விட்டது, என்று தனக்குள்ளே ஒரு முடிவுடன், வீட்டினரை சாதாரனமாக எதிர்கொள்ள, தன்னை சமன் செய்து கொண்டாள் .
அதன் பிறகு, முகத்தை சாதாரணாமாக, வைத்து கொண்டு, அவள் குடும்பத்தாரை எதிர்கொண்டாள் .
இவை அனைத்தையும் அவளின் அறையில் இருந்து யோசித்து கொண்டே இருந்தாள்.
ஒன்று மட்டும் இறுதி வரை, அவள் சிந்தையை எட்டாமல், இருந்த கேள்வி என்னவென்றால், எதற்கு, விஷாகா, அன்புவுக்கும் தன் மீது நேசம் என்று கூறியது .
அதோ அதற்கான விடையுடன், அதிதி வந்து விட்டாள், தேவகி இல்லத்திற்கு .
ரேஷ்மி, விடுதி வாசம் என்ற பிறகு, அதிதி, அதிகம் அங்கு வருவதில்லை.
அதிலும் நாதனின் அலட்சிய பேச்சும், பார்வையும், அன்புவுக்கும் அதிதிக்கும், பிடிக்காது என்பதால், அவள் எதற்கு என்று, தேவகியுடன் மட்டுமே, உறவு வரை என்று நிறுத்தி கொண்டாள்.
இப்பொழுது, அண்ணனுக்காக, அவளின் தோழிக்காக என்று அந்த வீட்டிற்குள் சென்று, நேராக, தேவகியை, தேடி கொண்டே சென்றதும், "அதி மா, என்ன அதிசியம், வாங்க பெரிய மனுஷி ," என்று தேவகி அவளை வர வேற்றதும், அவளுக்கும் அவள் அத்தையை கண்டு மனம் வருந்தியது .
"அத்தை, ரேஷ்மி எங்க இருக்கா , எனக்கு அவளை பார்க்கணும்" என்றதும், "மேல அவ ரூமுக்கு போடா, இன்னும் அவ வெளியே வரல, நான் இரண்டு பேருக்கும் குடிக்க ஏதாவது கொடுத்து அனுப்புறேன்," என்று, சமயலறை சென்றார்.
அதிதி, ரேஷ்மி, அறையின் முன்பு கதவை தட்டவே, உடனே ரேஷ்மி தன்னை, சரி படுத்தி கொண்டு, கண்களை அழுந்த துடைத்து, கதவை திறந்து, அதிதியை கண்டு, முதலில் அதிர்ந்தாலும், திடீர் என்று அவளின் வரவு, அவளிற்கு குழப்பமே கொடுத்து இருந்தது.
ஒரு வேளை, அன்பு தன்னை விசாரித்து வர அனுப்பி இருப்பானோ, இவளுக்கு விஷயம் தெரியுமோ, என்று, ஒரே சிந்தனை .
அவளையே பார்த்து கொண்டிருந்த, தோழியை , "அதிதி, கொஞ்சம் தள்ளு, எவ்வளவு நேரம் என்னையே பார்ப்ப ," என்று அவளை நகர்த்தி கொண்டு அறைக்குள் சென்று கதவை சாத்தி, அவளின் தொலை பேசியின் இருந்த அவள் அம்மா அக்காவின் பதிவை, ஒலிக்க விட்டாள்.
இவள் என்ன செய்கிறாள், என்று பார்த்த வண்ணமே இருந்த ரேஷ்மியை, "இந்தா இது முதலில் கேளு, இனியாவது, உன்னை சுற்றி என்ன நடக்குது பாரு," என்று அவள் கையிலும் தொலைபேசியை கொடுத்து விட்டாள் .
பல நாட்கள் என்ன, பல மாதங்கள் கூட இருவரும் ஒருவருக்குகொருவர் நேரில் சந்திக்கவே இல்லை.
என்ன ஏது, என்ற எந்த விசாரிப்பும் இல்லாமல், அதிதி நேரடியாக, அதிரடியில் இறங்கினாள் .
முதலில் அவள் தெளிவு பெறட்டும் என்று .
ஆரம்பத்தில் இருந்து, அதிதியின் செயலில் குழப்பத்தில் இருந்த, ரேஷ்மிக்கு, காணொளியில் கேட்க கேட்க, இங்கு உள்ளம் உலைகளாமாக கொதித்தது .
தான் ஏமாற்ற பட்டோம் என்பதை தாங்கி கொள்ளவே முடியவில்லை மங்கையால் .
இதில் அன்பு மட்டும் இல்லை, இவளின் தவறும் எதுவும் இல்லை, விஷாகா தன்னை வஞ்சிக்க பட்டாள், என்று உணர்ந்து கொண்ட நொடியில் இருந்து, இனி விஷாகாவுக்கு, சோதனை காலம் .
அவளின் முகத்தியே பார்த்துக்கொண்டிருந்த அதிதிக்கு அவளை கண்டு பாவமாக இருந்தாலும், இனியாவது, அவள் சுதாரித்துக்கொள்வாள், என்று நம்பினாள் .
அவளுக்கு ரேஷ்மியை பற்றி நன்கு தெரியும்.
யாருக்கும், தீங்கு செய்யாதவள், அதே நேரத்தில், அவளை சீண்டுவோரை விட மாட்டாள் .
அதிதிக்கும், நன்கு தெரியும் அவள் அக்காவை பற்றி, விஷாகாவுக்கு இவள் தான் சரி, யாரவது, ஒருவராவது, அவளை அடக்கினால் தான் அவளின் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கும்.
குடும்பத்தில் இனியாவது அமைதி நிலவட்டும்.
போதும் அவள் அண்ணனை, படுத்தியது, என்று அண்ணனுக்காவும், விஷாகாவின் பிள்ளைகளுக்கும், என்று யோசித்தாள் .
இனி ரேஷ்மியை அப்படியே விட மனமில்லாமல், அவளை சென்று கட்டி கொண்டாள் .
அவளுக்கும் நேற்றில் இருந்து, மனம் கொதித்தது .
அவள் ரேஷ்மியிடம் ஆறுதல் தேடினாளா, இல்லை, ரேஷ்மிக்கு அறுதல் கொடுத்தாளா, என்று தெரியாது,
ஆனால் தோழிகள் இருவருக்கும் மனம் சிறிது, சமன் பட்டது .
"பாரு ரேஷ்மி, காதலுக்கு யாரவது தூது விடுவாங்களா, அதுவும் நீ எந்த ஜென்மத்தை நம்பி இருக்கியோ பாரு உன்னை எப்படி முட்டாள் ஆக்கி இருக்கா பாரு, ".ரேஷ்மிக்கு அதே தான் மனதில்.
நேரில் இந்நேரம் விஷாகா இருந்தால், அவளை அடித்தே நொறுக்கி இருக்கும் வெறி அவள் எண்ணத்தில் .
இங்கு, அன்புவுக்கு, அவன் அன்னை பல முறை அழைத்து, சலித்து விட்டார்.
ரேஷ்மியை சந்திக்க வேண்டும், அதை பற்றியே அவரின் சிந்தனை.
அவன் யாருக்கும் ரேஷ்மியை சந்திப்பது பற்றி சொல்லவில்லை .
அன்பு ரேஷ்மியை அவள் வீட்டில் விட்டு வந்து, அவன் நேராக அவனின் ட்ராவெல்ஸ் , சென்று விட்டான் .
ஒரு கட்டத்தில் அன்னையின் தொடர் அழைப்புக்கு, தலை வலி வந்தது தான் மிச்சம் .
அன்னையின் அழைப்பை ஏற்று காதில் வைத்ததும், "அன்பு, ரேஷ்மி வந்துடாளாம் , அவளுக்கு சொல்லணும் பா, அவ அதுக்குள்ள வீட்டுல ஏதாவது பிரச்னை செய்யா போறா, விஷா இப்போ தான் சொன்னா ."
அன்னையின் சுயநலம் அவனுக்கு ஏற்கனவே இருந்த குற்றவுணர்வில், இருப்பவனுக்கு இப்பொழுது கோவமும் சேர்ந்து கொண்டது .
அன்புவும், கோவத்தில் "போய், உங்க பொண்ணுக்கு சொல்லுங்க, தெரிஞ்சே ஒரு பொண்ணோட, மனசை கொன்னுட்டு வந்து இருக்கென் நான்னு , என் தலையில பாவத்தை சுமக்கிறேன், இனி நிம்மதியா இருக்க சொல்லுங்க உங்க மகளை " என்று பொரிந்து விட்டான் .
மகன் இது போல் கோவமாக பேசியது முதல் முறை, அதில் அதிர்ச்சி அடைந்தாலும், அவன் கூறிய செய்தி, மகளுக்கு எந்த பிரெச்சனையும் வராது என்பதில், தெளிவடைந்தார் .
அதிதி, ரேஷ்மியுடன், அவளின் சிந்தனைக்கு, மெருகேற்றினாள் .
இனி

 

Saroja

Well-Known Member
இப்ப கூட அம்மா மகள் அவங்க
நலம் இதுதான்
அன்பு தப்பு செய்த மனநிலையில்
ரேஷ்மி தன்னிரக்கத்தில்

அதிதி தான் சரியான
வழி காமிக்கிறா ரேஷ்மிக்கு
இனி விஷாகா வாய தொறக்க
விடக்கூடாது
திமிர அடக்கனும்
 

Nasreen

Well-Known Member
Nice
Good job by athithi
Nalla vela anbukitta kattama nera reshmi kattayam kaatinalae
Ini reshmi aatam ennannu parkanum
Ippokooda ponnu life mukkiyam ninaikura amma avanoda kovam perusa theriyalae
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top