அன்பின் இனியா 16 1

Advertisement

achuma

Well-Known Member
hi friends how are you all
updated next
எனது சித்தப்பாவின், எதிர்பாரா மரணம் , அவரை நேரில் சென்று பார்க்க முடியா துர்ப்பாக்கிய நிலை எனக்கு .
இங்கு லாக்டௌன் .
ஆகையால், என்னால், சீக்கிரத்தில் பதிவு கொடுக்க முடியாமல், தாமதம் ஆகியது .
அடுத்த பதிவு, நாளை மறுநாள், புதன் அன்று .
உங்களின் கருத்துக்களை, பகிருங்கள் .
உங்களின் கருத்துக்களே, என்னை அடுத்த பதிவு கொடுக்க செய்யும் பூஸ்டர்
all take care be safe

அதிதிக்கு , அன்னையை பற்றி ஓரளவிற்கு தெரியும் என்றாலும், விஷாகாவுக்காக இந்த அளவிற்கு சுயநலமாக, அதிலும் அடுத்த வீட்டு பெண்ணின் வாழ்க்கையை பணயம் வைக்கும் அளவிற்கு, கீழ்த்தனமாக இறங்குவார் என்று இது வரை நினைத்ததும் இல்லை , அதனை மனம் ஏற்க மறுக்க, சிக்கி தவித்தாள் .
திடீர் என்று, அவள் வீட்டு வாயில் அருகே, வண்டி சத்தம் கேட்டு, சுயம் பெற்று, அந்த பக்கம் திரும்பினாள் .
அவளின் பாட்டி வழி உறவுகள், கிராமத்தில் இருந்து, அன்புவின் திருமணத்திற்கு வந்திறங்கினர் .


எப்பொழுதும், அவர்களை கண்டால் இன்பம் துள்ளும் மனதில், இன்று, அன்னையின், எண்ணம் அறிந்து கொண்டு, யாரையும், கருத்தில் ஏற்கும், நிலை இல்லமால், ஒன்றும் செய்யாமல், அவர்களை வெறும் என்றே பார்த்துக்கொண்டு நின்றிந்தாள் .

அதிதியின் மனம் முழுதும், ரேஷ்மி என்ற பெண்ணின் பற்றிய சிந்தனை .
அவளின் சிறு வயது தோழி.
அக்காவை போன்று, அனைத்திலும் திறமை பெற்றவள் , ஒரு விளையாட்டில் கூட விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லை அவளிடம் .
எதிலும் தோற்காமால் இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவள்.


ஆனால் அதே நேரத்தில், இனிமையாக பழகும் குணம் உடையவள், அவளை சுற்றி இருப்போருக்கு, அவள் மென்மையான மனம் படைத்தவள் என்று தெரியும் .
"இப்பொழுதும் அப்படியே இருப்பாளா," ரேஷ்மியின் விடுதி வாழ்க்கை, இவர்களின் தோழமையில் பிரிவை ஏற்படுத்தியது .
நாளடைவில், இருவருக்குமான நட்பும் மறைந்தும் போனது .


"இப்பொழுது ரேஷ்மியின் குணம் எப்படி இருக்கும், அவளால் ஏமாற்றத்தை தாங்க முடியுமா , ஐயோ ரேஷ்மி," என்று அவளின் மனதில், அவள் தோழியை பற்றிய கூச்சல் .
இதில் வீட்டிற்கு வந்திருப்போரை, கவனிக்கும் நிலையில் அவள் இல்லை .
சுமதி வழி உறவுகள் அனைவரும்,கிராமத்தை சேர்ந்தவர்களே, அதில் சுமதியின் கணவருக்கு, எப்பொழுதும், அவர்களை கண்டால், ஒரு அலட்சியம் .
அனைவரும், இராஜசேகரை விட, செல்வந்தர்களே, கிராமத்தில், ரைஸ் மில், பால் பண்ணை, நிலம், தோப்பு, விவசாயம், என்று அணைத்திலும், சிறந்தவர்களே .


இருப்பினும், அவர்களை எப்பொழுதும், ஒரு வித அலட்சியத்துடன், எதிர்கொள்வார் இராஜசேகர் .
சுமதியையும், அவர்களிடம், அதிகம் ஓட்ட விடாமல், நாளடைவில், சுமதிக்கு, பிறந்த வீட்டு சொந்தம் என்று இல்லாமலே போனது .
அன்பு மட்டும், வருடத்திற்கு ஒரு முறையேனும், கிராமம் சென்று வருவான் .


அவன் எப்பொழுதும், அனைவரிடமும், ஒரே போல் அன்புடன், இருப்பதால் , அவர்களுக்கும், அன்புவை கண்டால், அவ்வளவு பிடிக்கும் .
இன்றளவும், பாட்டியின் வீடும், நிலமும், அன்பு பெயரில் உள்ளது.
நிலத்தில் வரும் வருமானத்தில், அவன் தாத்தா பாட்டியின் விருப்பத்தின் பெயரில், தர்ம காரியங்களுக்கு அந்த பணத்தை செலவு செய்கிறான் .


அதில் விஷகாவுக்கு கடுப்பு என்றாலும், கிராமத்தில் தான் என்ன செய்ய முடியும் என்று விட்டு விட்டாள் .
சுமதியின் அன்னை செல்விக்கு, அருகிலேயே, அவரின் அக்கா குடும்பம் உள்ளது .
ஆகையால், அந்த வீட்டை தினமும் சுத்தம் செய்து, அன்புவின் வேண்டுகோளிற்கு, பூஜை மாடத்தில் தினமும் விளக்கேற்றி வைப்பார், செல்வியின் அக்கா வீட்டினர் .
செல்வியின் அக்கா அவரின் கணவர், அவர்களின் பிள்ளைகள், என்று கூட்டு குடும்பமாக, அங்கு பக்கத்திலேயே உள்ளதால், அன்பு, அங்குள்ள அனைவருடன், ஒன்றாக வளர்ந்தான் .


ஆகையால், இப்பொழுதும் அந்த பாசம் மாறாமல், அன்பு இருப்பதால், அவர்கள் அன்பு ஒன்று என்றால் , உடனே செய்யும் அளவிற்கு, அவர்களின் உறவும் பலம் பெற்றது .
இப்பொழுதும், அன்பு என்ற ஒரு தனி மனிதனின், அழைப்புக்கு, அவனை மதித்து, அவனின் பாட்டி குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர் .


சுமதியின் அக்கா முறை பெண்மணியும், அவரின் அண்ணன் மனைவியும் முதலில் நேராக அதிதி மும்பு வந்து நின்று, "என்ன ஆத்தா, நீயும் உன் அக்காகாரியாட்டும் ஆயிட்டியா, வந்த சனத்த, வாங்கனு சொல்லாம அப்படியே நிக்கிறே," என்று, அவளின் தாடையில் ஓன்று லேசாக இடிக்கவே, நடப்பிற்கு வந்தவள், அதுவரை, அக்கா மற்றும் அன்னை இருவரும் பேசியதை அவளின் கை பேசியில் பதிவேற்றி கொண்டிருந்ததை, அணைத்து, அவளின் கைப்பையில் போட்டு கொண்டாள் .

ஆம் , அதிதி, வீட்டினுள் நுழையும் முன்னரே, விஷாகாவின் குரூர புத்தியை, எப்படி கையாள வேண்டும், எங்கு அடிக்க வேண்டும் என்று, அதி வேகத்தில் சிந்தித்து, கை பேசியில் பதிவேற்றி கொண்டாள் .
அவளின் வேகமாக சிந்திக்கும் திறன், இதையே செய்ய தூண்டியது .
அவளுக்கு ரேஷ்மியை பற்றி தெரியும்.
ஆகையால், அவள் வழியே, விஷாகாவை கையாள வேண்டும் என்று புத்திசாலி தனமாக செயல் பட்டாள் .
வந்த விருந்தினரை, கருத்தில் கொண்டு, முகத்தை சாதாரணமாக மாற்றி , அவர்களை கண்டு புன்னகையித்தாள் .


அந்த வெள்ளந்தி மனதர்கள், மீது எப்பொழுதும், அதிதிக்கு அலாதி , அன்பு .
இவர்களின், வழி வந்த தன அன்னையின் எண்ணம் மட்டும், ஏன் இப்படி, என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை, அந்த சிறு பெண்ணால் .
அவர்களை வர வேற்று, வீட்டினுள் அழைத்து சென்றாள் .
சுமதியும், பல வருடம் கழித்து, சந்தித்த , அவள் அன்னை வீட்டினரை கண்டு, மனதில் மகிழ்ச்சி .


அது முகத்திலும் தெரிய, அவர்களை வரவேற்றார்.
"வாங்க, மதினி , வா அக்கா, எப்படி இருக்கீங்க, இப்போ தான் வீடே நெறஞ்சு இருக்கு , எங்க பெரியம்மா ஐயா, எல்லா வரலீங்களா, எல்லாரும் எப்படி இருக்காங்க, ஊரு எப்படி இருக்கு ," என்று பட பட என்று வரிசையாக கேள்விகள் .


அவர்களுக்கே ஆச்சர்யம், இத்தனை வருடம், எப்படி இவர்களிடம் பேசாமல் இருந்தார் என்று .
"ஹ்ம்ம் நீ எங்களோட, சாதாரணமா பேச கூட, உன் புருஷன் போய் சேரணும்னுட்டு இருக்கு போல ," என்று அங்கலாய்த்து கொண்டே, சுமதியின் அக்கா அங்கு கீழே தரையில் அமர்ந்தார் .


அதிதி ஓடி சென்று பாய் எடுத்துவருவதற்குள், தரையில் அமர்ந்து விட்டார் .
"என்ன பெரியம்மா, நீங்க, பாய் எடுத்துட்டு வரதுக்குள்ள , தரையில உட்கார்ந்துட்டீங்க," என்று அதிதியின் உபசரிப்பு வேறு, விஷாகாவுக்கு எரிச்சலை மூட்டியது .


அது வரை, இந்த மாட்டு சாணி கூட்டம், இங்க எதுக்கு வந்தது, என்று அவர்களை, ஒரு வித, அருவெறுப்புடன் கண்டு கொண்டிருந்த, விஷாகா, அவள் தந்தையின் பெயரை, சொன்னதும் , வெகுண்டு விட்டாள் .

"ஹ்ம்ம் , ஏன் பேச மாட்டீங்க, எங்க அப்பா, எப்போ போவாருனு தானே காத்துட்டு இருந்தீங்க .
அவர் இருந்து இருந்தா, நீங்க எல்லாம் உள்ள வந்தே இருக்க மாட்டீங்க, தராதரம் பார்த்து பழக தெரியாதவன், இப்போ நாட்டாமை செய்யறான் இல்ல, அதான் என்ன என்னவோ நடக்குது," என்றதும், அவரும் எழுந்து விட்டார் , கோவத்தில்.


"அக்கா அவ ஏதோ கோவத்தில்,' என்று சுமதி பேசியதும் , அன்னையை முறைத்து வைத்தாள் விஷாகா .
"எனக்கு சப்போர்ட் பண்ணாம, அவங்களுக்கு பரிஞ்சு வர," என்று வேறு அன்னையிடம் கடிந்தாள் .
அவர் புடவை முந்தியை, உதறி, மீண்டும் இடுப்பில் சொருகி சண்டைக்கு தயார் என்பது போல் நின்றதும், விஷாகாவின் வாய் தன்னால் அடங்கியது .


அவள் அவ்வளவு , இங்கிதம் பார்ப்பாள், இந்த கிராமத்தில் இருந்து வந்தவர்கள்,ஏதேனும் பேசிவிட்டால், அதிலும் தங்கை முன்பு தனக்கு அசிங்கமாகி விடும் என்று உடனே அமைதி காத்தாள் .
"இந்தா டீ , உன் சத்தத்தை குறை, நான் உன் அப்பன் வூட்டுக்கு வரலை, என் அன்பு வீடு இது.


உனக்கு தான் மக்கா மனுசா , வேணாம் ,என் புள்ளை, எங்களை மதிச்சு கூப்பிட்டு இருக்கான் , உன் அம்மாகாரிக்கும் இந்த பட்டணத்துக்கு வந்து, அந்த மரியாதை எல்லாம் செத்து போச்சு" .

"இங்க உன் வாய தொறந்த, தச்சி புடுவேன் பார்த்துக்க," என்று ஒரே போடாக போட்டதும், அவளுக்கு அவ்வளவு அவமானமாகி போனது .
"அக்கா" என்று சுமதி மகளுக்காக வந்ததும், "நீ சும்மா கெட, உன் மொகரைக்காக, நான் பேசாம இருக்கேன், என் புள்ளை கல்யாணத்துக்கு, வந்து இருக்கேன்".


"அதுவும் இப்போ அவன் வீடு அந்த உரிமை எனக்கு இருக்கு".
"நீ உன் பொண்ணுக்கு சால்ரா அடிச்சிகிட்டே, இருந்தா கல்யாண வேலை நடக்குமா, வந்து வேலைய பாருடி . பரிஞ்சிகிட்டு வந்துட்டா ," என்று சுமதியையும் விட்டு வைக்க வில்லை .


அதற்குள், வண்டிக்கு பணம் செலுத்தி விட்டு வந்து சேர்ந்த, அவர்களின் பிள்ளைகள், "சின்னமா, எப்படி இருக்கே, அம்மா சத்தம், ரோட்டுக்கு கேட்குது" .
"இவங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு போக வந்தோம்.
அன்பு எங்களை கூப்பிட்டு விட்டான்."


"அம்மா எல்லாம் தனியா பார்ப்பாங்க, வந்து அம்மாவையும், அத்தயையும் கூட இருக்க சொன்னான் நாங்க, வியாழ கிழமை காலையில வாரோம் .
அம்மாவையும், அத்தையையும் நீ கொஞ்சம் பார்த்துக்க .
"அப்பத்தாக்கும் ஐயாக்கும் (சுமதியின் பெரியன்னை, பெரியப்பா )வயசாகிடுச்சு , முன்ன மாறி எங்கயும் வர போறதில்லை ".


"நம்ம தம்பிக்கு கல்யாணம் முடிஞ்சதும், அனுப்பி வை".
"நீயும் ஒரு எட்டு பார்த்துட்டு வா" .
என்று பேசி விட்டு, அதி மா, நாங்க இராத்திரிக்கி, வண்டில போகணும், உன் அண்ணன , வீட்டுக்கு சீக்கிரமா வர சொல்லுத்தா," என்று விஷாகாவை ஒரு ஆளாக யாரும் மதிக்காமல், பேசிக்கொண்டிருந்தனர் .


அதிலும், சுமதியின் அண்ணி, "ஆயிரம் சொல்லு சுமதி, இப்போ தான், எங்களுக்கு இந்த வீட்டுக்கு வர நிறைவா இருக்கு" .

"உன் புருஷன் வீட்டுக்கு இந்த பிள்ளைங்க சீர் செனத்திக்கு வந்தா, ஏதோ உங்க வூட்டு காசு பணத்தை , அள்ளிட்டு போற மாதிரியே பார்ப்பாரு" .
"ஒரு வாய் தண்ணி இறங்காது" .
"இப்போ, அன்பு தான் இந்த வீட்டுக்கு வாடகை தரனாமே , அவன் வீட்டுக்கு வந்த பொறவு தான், கொஞ்சம் நடமாட முடியுது", என்று பெருமை பொங்க , தரையில் அமர்ந்தார் .
"என்ன வெயிலு, எண்ணத்தை மெட்ராசோ ," என்று சலிப்பு வேறு .


விஷாகாவுக்கு, காதில் புகை வராத குறை தான், அவளின் கோவம் கண்களில் தெரிய, சுமதி பாவமாக, மகளை கண்டார் .
"இந்த மாட்டு சாணி கூட்டத்தை கண்டா ரொம்ப துள்ளுற , அடங்கி இரு, நாளைக்கு கதை எனக்கு என்னவோ," என்று அன்னையை கடித்து துப்பி, சென்று விட்டாள் .

சுமதிக்கு மகளை நினைத்து பெரும் கவலை ஒரு பக்கம், மகனின் திருமணத்திற்காக உறவினரின் வருகை ஒருபக்கம் என்று, இரு வேறு நிலையில் தவித்தார் .
இவர்களின் முன்பு அன்புவை, எதுவும் பேசிவிட முடியாது .
ரேஷ்மியின் வருகை பற்றி எப்படி அன்புவிடம் சொல்வது என்று அது வேறு ஒரு எண்ணம் அவரை ஆட்டி படைத்தது .
சுமதியின் அக்கா மற்றும் அண்ணி, அவரை பூஜை, மாங்கல்யம் வாங்குவது, என்று ஆளுக்கு ஒரு வேலை ஏவி, திசை திருப்பினார் .
சுமதியால் தான் மனதை ஒரு நிலையில் வைத்து எதிலும் செயல் படுத்த முடியாமல் சிக்கி தவித்தார் .
அதிதி அவளின் அறையிலேயே முடங்கி கொண்டாள் , எக்காரணம் கொண்டும், அவள் அண்ணனின் விருப்பத்திற்கு எத்தடையும் வர கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் .


எப்படி ரேஷ்மியை சந்திப்பது, இவ்விஷயத்தை அவளிடம், எவ்வாறு தெரிய படுத்துவது என்று அதிலேயே அவளின் சிந்தனை குதிரை அதி வேகத்தில் பயணித்தது .
இப்படி எல்லோரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர் என்றால், அங்கு விஷாகாவின் வீட்டினில், ரேஷ்மியின் வருகைக்கு, தடபுடலாக, விருந்து நடை பெற்று கொண்டிருந்தது.
தேவகியின் குரல், சமையலறையில் இருந்து, வேலை செய்வோருக்கு, அடுத்தடுத்த கட்டளைகள் என்று ஒலித்தது .


வேலை செய்வோருக்கும் அவளின் பழகும் பாங்கு மிகவும் பிடிக்கும் .
விஷாகாவிடம், ஆணவமும், அதிகாரமும் இருந்தால், ரேஷ்மியிடம், அன்பு கலந்த அதிகாரம் இருக்கும் .
ஆகையால், விருப்பத்துடன், தேவகியிடம், "அம்மா பாப்பாக்கு, ரசகுல்லா பிடிக்கும், அதுவும் செய்யலாம்," என்று அவளின் பதிலுக்கு காத்திருந்தனர் அங்கு சமையல் செய்வோர் .


"உங்க பாப்பா, நீங்க ஆசையா செஞ்சா கண்டிப்பா சாப்பிடுவா, தாராலாமா செய்ங்க", என்று அங்கு பணிபுரிவோரிடம், சொல்லி விட்டு, நாதனின் அருகில், சென்று உட்கார கூடத்திற்கு வந்தார் .
அவரும், தொலைக்காட்சியில் ஒரு கண் வைத்தும், சமயலறையில் இருந்து நடக்கும் கூத்தினை, ஒரு வித புன்னகை மாற முகத்துடன், ரசித்து கொண்டிருந்தார் .
"விஷா நீ எப்போ மா வந்த, இரு உனக்கும், டி எடுத்துட்டு வரேன்,"என்று மருமகளை கண்டதும், சோர்வையும் மீறி ஒரு புன்னகை .


அவளுக்கு தான், இவர்களுக்கு எல்லாம் தெரிந்தால், ஐயோ, என்று இருந்தது .
அடுத்த நாள் விடியல் ,தேவகி நாதன் தம்பதியருக்கு, மகளின் வருகையின் எதிர்பார்ப்புடன், விஷாகா வினோத் பிள்ளைகளுக்கு, அரவாரத்துடனும், விஷகாவுக்கு ஒரு வித பயத்துடனும் விடிந்தது .


முதல் நாள் இரவே, சுமதி, அன்புவிடன், நாளை, ரேஷ்மி வருவதை பற்றி, கூறி, இனி மகன் பார்த்துகொள்ளவன் என்ற நம்பிக்கையும் ஒரு பக்கம் பயமும் போட்டி போட்டு இரு வேறு எண்ணங்களுடன் இருந்தது, அவருக்கு.
காலை, எட்டு மணி அளவில், வண்டியில் இருந்து இறங்கிய, ரேஷ்மி, ஒரு முறை அவள் இறங்கிய கார் பார்த்து விட்டு, மீண்டும், வாயிலின் உள்ளே ஆரவாரத்துடன் பெரும் கூச்சலுடன் நுழைந்தாள் .


அவளின் குரல் கேட்டு தோட்டத்திற்கு ஓடி வந்து வரவேற்ற அவள் குடும்பம், அவளை கண்டு மகிழ்ச்சியுடன், வர வேற்றனர் .
"அப்பா, என்று முதலில், அவள் தந்தையை கட்டி கொண்டு, அன்னையிடம் செல்லம் கொஞ்சி, அவரின் கண்ணத்தில் முத்தம் வைத்து, வினோத்தை சீண்டி, அவள் அண்ணன் பிள்ளைகளுக்கு , முத்தத்தை வாரி வழங்கி, என்று வீடு அவளின் வருகையால் ஒளி பெற்றது .
தேவகிக்கும், நாதனுக்கும் மகளை கண்டதும், பெரும் மகிழ்ச்சி .


அறிவும், அழகும் ஒன்றே சேர்ந்து, சிறந்த மகளை பெற்ற, பெருமிதம், இருவர் முகத்திலும்.
விஷாகாவை, ரேஷ்மி, ஏறெடடுத்து பார்த்ததும், அவள் எச்சிலை கூட்டி விழுங்கி, தொண்டை குழியில் வார்த்தை சிக்கி வராமல் நா வறண்டது போல், அப்படியே, கல் போல் நின்றிருந்தாள் .
"எப்படி இருக்கீங்க அண்ணி", என்று ரேஷ்மி கேட்டதும், "ஹான் ஹ்ம்," என்று இருமல் வந்து, தன்னை சரி படுத்தி கொண்டு," நல்லா இருக்கேன்," என்று ஒரு வழியாக, வார்த்தை வெளியே வந்தது .


அவளை கண்டு புன்னகை புரிந்து, அங்கு பணிபுரிவோரையும் விசாரித்து, அமர்ந்தாள் , பிள்ளைகளுடன் .
"ஹே வாலு, பத்து மணிக்கு தானே, வண்டி சொன்னே, அதுக்குள்ள, சீக்கிரம் வந்துட்டே, நானே வந்து இருப்பேனில்லை ," என்று வினோத் விசாரித்ததும் , "இல்லை னா, இரண்டு மணி நேரம் லேட்டுன்னு தான் சொன்னாங்க, அதான் உன்னை வர வேண்டாம்னு சொன்னேன்" .


"ஆனா, சீக்கிரமா வந்துட்டாங்க, பிரென்டு வண்டிலேயே, வந்து இறங்கிட்டேன், சில் ப்ரோ," என்று கூறி, நான் ரூமுக்கு போறேன், என்று அறைக்குள் சென்று, பொத்தென மெத்தையில் விழுந்து, கதறி அழுதாள்,
அன்புவின் மனம் யாரென்று தெரிந்ததும் , அதுவும் அவன் மனதில் இருப்பவனே, தான் வேறு ஒரு பெண்ணை நேசிப்பதாகவும், அடுத்த வாரம் திருமணம் என்றதும் , அவளின் உள்ளம் சிதறியது என்றால் மிகையல்ல.


வீட்டினரின் முன்பு, இந்த சிறிது நேரம் கூட சிரித்து கொண்டு போலி முகத்துடன், நடமாடுவது, தணல் அள்ளி அவள் மேல் கொட்டியது, போன்று உணர்வு அவளுக்கு .

"அன்பு மாமா மனசுல நான் இல்லையா , அடுத்த வாரம், வேற பொண்ணோட கல்யாணமா, ஐயோ , என் மனசு வலிக்குதே," என்று ஓசையில்லா , கேவல், அவள் மனதில் .
வீட்டினர் யாரும் தெரியா வண்ணம் , அவள் அறைக்குள் அழுது கரைந்தாள், பாவையவள் .


அண்ணனின், வாழ்க்கைக்காக, அதிதி ரேஷ்மியுடன், எப்படி பேசலாம், என்று, நினைத்தால், அக்காவின் வாழ்க்கைக்காக, அதிலும், ரேஷ்மயின் நலன் கருதி, அன்புவே, அவள் வரும் நேரம் கண்டு, அவளிடம், பேச வேண்டும் என்று வழியிலேயே, அவளுக்கு தெரியப்படுத்தி, அக்காவை பற்றி கூறாமல், அவன் மனதில் இருக்கும் இனியவள் இனியாவை பற்றியும், அவன் திருமணத்தை பற்றியும் கூறினான் .
 

Saroja

Well-Known Member
அருமை ஊருல இருந்து
வந்தவங்க விஷாகா சுமதிய
நல்லா பேசுனாங்க
அதிதி பரவாயில்லை புத்திசாலி

அன்பு சொல்லிட்டானா
ரேஷ்மா கிட்ட
பாவம் அந்த பெண்
 

achuma

Well-Known Member
அருமை ஊருல இருந்து
வந்தவங்க விஷாகா சுமதிய
நல்லா பேசுனாங்க
அதிதி பரவாயில்லை புத்திசாலி

அன்பு சொல்லிட்டானா
ரேஷ்மா கிட்ட
பாவம் அந்த பெண்
Thanks sis (y)
 

Nasreen

Well-Known Member
Nice ud
Sumathi relatives vishakavukku super bathiladi koduthanga
Reshmi paavam, vishayam therinji ava anni ya oru kai papannu parth poi roomla zahra
Anbuvum vishakava kaapathitan
Ippo yaaru poonaikku manikatrathu.
Athiyhi enna seiyya poralo?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top