அன்பின் இனியா 14 2

Advertisement

achuma

Well-Known Member
Hi friends irandu update kudukuren
thanks for all your comments n likes
take care


keep supporting

திருமண சேலை எடுக்க இனியா காஞ்சிபுரம் வர மறுத்து விட்டாள்.
அன்பு அன்று வீட்டிற்கு வந்து சென்றதில், அன்று இரவே, ரமேஷ் வீட்டினரிடம் பற்ற வைத்ததில், இனியா வீட்டில் அன்று இரவே, நான்கு அத்தை குடும்பமும், பஞ்சயாத்தை கூட்டினர்.
அனைவரும், சகுந்தலாவை தவிர, மற்ற மூன்று பேரும், வேறு வேறு தெருவில், அதே ஊரில், குடியிருப்பதால், ஒரு பஞ்சாயத்து என்றால், உடனே நால்வரும் சேர்வர்.
அனைவரும், மோகனை விட, அதிக வயது வித்தியாசத்தில் உள்ளவர்கள் .
அந்த கால பழக்கம், ஆகையால், எதையும் சாதாரணாமாக கடந்த போகும் ஆற்றலற்றவர்கள் .
ஏதோ, வீட்டினில் யாரும் இல்லா நேரம், இனியா அன்பவுடன் பேசியது போன்று, அவளின் தலையையை வேறு உருட்டினர் .
இந்திராவும் , ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் பேசியதை பொறுத்து கொள்ள முடியாமல்,"என்ன ஆச்சுன்னு இப்போ இவ்வளவு பேசிட்டு இருக்கீங்க.
பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு அவர் வரல , அதுனால, அவர் வேலை, குடும்பம், அது ஒரு இரண்டு நிமிஷம் பேசிட்டு போனார் . நானும் அங்கே தான் இருந்தேன், வீட்டுக்கு, உங்க தம்பி வந்ததும் நானே இது சொல்லி இருப்பேன் .
நீங்க என் பொன்னையும் நான் வளர்த்த வளர்பையும் சேர்த்து தப்பா பேசுறா மாதிரி இருக்கு .
வெளில போய் பாருங்க அங்க அங்க, எப்படி பசங்க இருக்காங்கனு ."
மோகன் அக்காக்கள், பேசுவதில் அமைதியாக இருப்பதை கண்டு இன்னும் கோவம் பெருகவே, "என்ன பண்றது, என் காலத்துல எங்க அப்பா மட்டும் அப்போவே, மாப்பிளை கூட ஒரு இரண்டு நிமிஷம் பேச விட்டு இருந்தா, நான் ஏன் இங்க இருக்க போறேன்," என்று பேச்சு வாக்கில், மோகனையும் விட்டு வைக்காமல், பொங்கி விட்டார் .
பெரியவர்கள் முன்பு என்ன பேசுவது என்று, அமைதியாக இருந்த மோகனுக்கு, "இவளுக்கு இங்க இப்போ என்ன குறை வந்துடுச்சு, இப்படி பேசுறா," என்று பதிலுக்கு மனைவியை முறைத்தார் .
"இது போல் பேச்சு வரும் என்பதற்காக தானே, நான் என் பிள்ளைகளை கட்டுப்பாடுடன் வளர்த்தேன் , இப்பொழுது பார்த்தாயா என்பது போன்ற அர்த்தத்தை," கணவரின் முறைப்பில் உணர்ந்த, இந்திரா , அமைதியாக இருந்தார் .
அதற்கு மேல், அக்காக்கள் நால்வரும், தம்பியை பேசியதும் பொறுக்க முடியாமல், பேச வந்ததை விட்டு , "ஏன் என் தம்பிக்கு, என்ன குறைச்சல், அவனை கல்யாணம் செய்ய, எத்தனை பேரு போட்டி போட்டாங்க தெரியுமா, நாங்க என்ன பேசுனா, எங்க போறா இவ , என்று பெரிய அக்கா பேசியதும், நாங்க எதுக்கு சொல்றோம்னுனே, புரியா மாடிக்கு உனக்கு, நம்ம பொன்னையா நாங்க தப்பா பேசுவோமா ?"
"கழுத்துல தாலி, ஏற வரை, எதுவும் நிச்சயம் இல்லை" .
"நம்ம எல்லா நல்லதே நடக்கும் நம்புவோம், அது படி தான் செய்வோம், நெருப்புனா நாக்கு சுடாது, ஒரு பேச்சுக்கு சொல்றேன்" .
"ஆனா ஏதோ சந்தர்ப்பத்துல, கல்யாணத்துல , தடங்கல் வந்ததுனா, நம்ம புள்ளைங்க, முன்னயே, பழகி இருந்தாங்கன்னா, அவங்க மனசு எவ்வளவு வேதனை படும்" .
"இந்த மனசுல ஒருத்தன் வந்து, உட்காந்துட்டு, அது நிறைவேறலனா , அது பெரிய கொடுமை மா .
அதுக்கு தான், நாங்க கல்யாணத்துக்கு முன்ன, பொண்ணு புள்ளைய பேச விடறது இல்லை ".
"இது எல்லாம் யாரும் மனசுல ஏத்திக்கிறது இல்லை .
ஏதாவது சொன்னா அந்த காலம், போன் இல்லை, நொட்டு (நெட் ) இல்லைனு, நம்மளையே கிண்டலடிக்க வேண்டியது ."
"ஏன் நம்ம வீட்டு பொண்ணுங்களுக்கு மட்டுமா இந்த கட்டு பாடு, என் பசங்களுக்கும் தான் நான் இதையே சொன்னேன்," என்று மூன்றாவது அக்கா .
அவர்கள் கூறுவதில் இப்படி ஒரு கோணம் இருக்கிறதா என்று அப்பொழுது தான், இந்திராவுக்கும் தெரிய வந்தது .
"நம்ம பிள்ளைங்க மனசுல தேவை இல்லாம, ஆசை வளர்க்க நம்மளே, அதுக்கு காரணமா இருக்க கூடாதுமா,"
"அதுக்கு தான் நாங்க சொல்றோம், ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல, அவங்க மனசு வேதனை படுச்சுனா, நமக்கு தான் அது பெரிய தண்டனை".
"அவங்க சந்தோஷத்துக்கு தான் நம்ம பிறப்பே, அதுக்காக தான் இது எல்லாம் பேசுனோம், நீ என் தம்பியையே குறை சொல்லுவியா, அவன் சிங்கம்," என்று நாலாவது அக்கா .
"ஹ்ம்ம் தம்பிய ஒன்னு சொன்னா எல்லா கூடிட்டாங்க , என்று மனதிலே கருவிய இந்திரா, பின்ன, நான் அங்கேயே தான் இருந்தேன், நீங்க ஏதோ பசங்க திருட்டு தனமா பேசுறதா சொல்ற மாதிரியே இருந்ததா , அதான் , எனக்கும் ஒரு மாதிரி ஆச்சு" .
"அவ இரண்டு நிமிஷம் பேச கூட, என் மூஞ்சிய பார்த்துட்டு நின்னா, அவளை தப்பா சொல்லற மாதிரி இருக்கு," என்று வேதனை பட்டார் .
"சே சே நம்ம வீட்டு தங்கங்கள, நாங்களே அப்படி பேசுவோமா, ஆனா ரமேஷ், அவங்க இரண்டு பேரும் தனியா பேசுனதா, தானே சொன்னான், என்று யார் வழி இத்தகவல், நான்கு சகோதரிகளுக்கும் பறந்தது, என்றுமண்டை குடைச்சலில் இருந்த இந்திராவுக்கு ரமேஷ் என்றது, ஆவேசம் பொங்கியது .
மோகனும் இவன் என் பொண்ணு, என்ன செய்துட்டு இருக்கானு வீட்டுல இருந்தே பார்த்துட்டு இருக்கானா, என்று அக்காவிடம் போட்டு வாங்கினான் .
"ரமேஷ் சொன்னானா அக்கா, என்று மோகன் கேட்டதும், ஹ்ம்ம், அவன் வேலைக்குனு, ஏதோ வீட்டுலயே படிச்சிட்டு இருந்தனா , அப்போ, தான், மாப்பிள்ளையோட, இனியா பேசிட்டு இருந்ததா, வீட்டுல யாரும் இல்லைனு, சொன்னான், அதான், என்ன இது புதுசான்னு, எங்களுக்கும் பக்குனு,ஆச்சு," என்று வெள்ளந்தியாக மகனை பற்றி அறியாமல், அக்கா பேசியதில், என்ன சொல்ல அக்காவிடம் என்று அமைதி காத்தார் மோகன் .
"அண்ணி , அவனை எதுவும் தெரியாம, ஒன்ன நாலா பேச வேண்டாம் சொல்லுங்க, நான் இனியாவுக்கு சாப்பாடு கட்டிட்டு இருந்தேன், ஏன் இந்த கூடத்துக்கும், சமயலறைக்கும் எவ்வளோ தூரம், நான் சாப்பாடு கட்டி எடுத்துட்டு வந்ததும், அவரும் சொல்லிட்டு போய்ட்டார்," என்று மோகனுக்கு இருந்த அமைதி எல்லாம் இந்திராவுக்கு இல்லை, பட படபடத்தார்.
"இந்த பொறுக்கி கண்ணு, இப்போ என் பொண்ணு மேலயே வந்துடுச்சா," என்று அவரின் உள்ளம் கொந்தளித்து கொண்டிருந்தது .
மோகனுக்கும் அதுவே, "ஏதாவது அவன் பிரச்சனைனு , வரட்டும், அவனுக்கு இருக்கு," என்று மனதில் கருவி, "சரி சரி, இனி நாள் சரியா இருக்கு, எல்லாம் பார்த்து பண்ணனும், என்ன ஏதுன்னு வந்தோம்," என்று பெரிய அக்கா, அந்த விஷயத்துக்கு முற்று புள்ளி வைத்து , அவரவர், இல்லத்திற்கு கிளம்பினர் .
இது எல்லாம் கேட்டு கொண்டிருந்த இளங்கோவுக்கு, "அந்த பொறுக்கி நாய், கண்ணு என் அக்கா மேலையா, இருக்க கூடாதே," என்று, நினைத்தான் .
மோகன், அனைவரும் சென்றதும், "அக்கா எதுக்கு பேசுறாங்கனு, எனக்கு தெரியும் அதுக்காக, நான் அமைதியா இருந்தா, நீ என்னையே பேசுவியா," என்று மனைவியிடம் பாய்ந்து, "குட்டிமா, பார்த்துக்க டா, மாப்பிளை, போன் செய்தா கூட நீ பேசாத, நான் பேசுகிறேன்," என்று அவளுக்கு எச்சரிக்கையா , இல்லை அறிவுரையா என்ன என்று பிரித்தறியா நிலையில் அவளிடம் கூறி விட்டு, சென்றார் .
இனியாவுக்கு தான், ச்சே என்று இருந்தது .
"எல்லாம் அந்த வம்பு, பண்ற வம்பால , என்று அவனை பற்றிய சிந்தனையை, மறக்க நினைத்தாலும், இரவு உறங்கும் நேரம் படுக்கையில், அவனே அவள் மனதை ஆட்கொண்டான் .
"நிம்மதியா போயிட்டு இருந்த என் லைஃபில, இப்போ தூக்கம் இல்லாம செய்யறான் பாரு, நான் ஆபீஸ் போனும், அமைதியா , என் மைண்ட்ல இருந்து போடா, என்றுஅவள் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் அன்புவை, திட்டி, ஒரு வழியாக உறங்கி போனாள் .
ஆனால் , இங்கு இளங்கோ, இரவோடு இரவாக, ரமேஷின் இரு சக்கர வாகனத்தின், இரு சக்கரத்தையும் அபேஸ் செய்து வெறும் வண்டியை மட்டும் விட்டு வைத்தான் .
"இந்த சக்கரம் இல்லாம, உன் வண்டி எப்படி காலேஜ் வாசலுக்கு போகுதுனு பார்க்குறேன் .
எங்க வீட்டுலயே பதணி வேலையா , பார்குறா , கொஞ்ச நாளுக்கு வண்டி டென்ஷன்ல இரு, மவனே " என்று, இரண்டு சக்கரத்தையும் எடுத்து , நம்பர்களிடம் கொடுத்து, எங்கேனும் தூக்கி ஏரிய சொல்லி விட்டான் .
ஏன்னென்றால், அவனுக்கு தெரியும், பயம் உள்ள மனது, தவறு செய்யும் புத்தி உள்ள ரமேஷ், கண்டிப்பாக வீட்டினருக்கும் இதை பற்றி எடுத்துரைக்க முடியாமல் அல்லாடுவான் என்று .

அடுத்த நாள் விடியலில், ரமேஷ் வீட்டினர் அங்கு காணாமல் போய், இருந்த அவன் வண்டியின் சக்கரத்தின் பரபரப்பில் இருந்தனர் என்றால், அவன் யாரு, எந்த, பெண்ணின் அண்ணன், என்ற குழப்பத்திலும் பயத்திலும் ரமேஷின் பொழுது கழிந்தது.
அவன் அவனின் அண்ணனிடமும், தந்தையிடமும் என்ன என்று கூற முடியும் எப்படி, பணம் ஈட்ட முடியும் என்ற பயத்தில் இருந்தான் .
இது வரை அத்தெருவில் இது போன்ற திருட்டு நடை பெறாததால், சகுந்தலாவின், மூத்த மகன், காவல் துறையில் புகார் கொடுக்கலாம், என்றதற்கு, ரமேஷ் அலறி கொண்டு, ஒரு வழியாக சமாளித்து வைத்தான் .
அவனின் அண்ணி(காயத்திரி ) , மட்டுமே, ரமேஷை சந்தேகமாக பார்த்துக்கொண்டிருந்தாள் .
அன்பு அதற்கு பின்பு, அவன் வேலையில் தன்னை புகுத்தி கொண்டான் .
அவள், அன்று அவனிடம் அவளின் பிடித்தம் கூறியதே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
தினமும், எங்கேனும் சந்திக்க, விடியும் வரை தொலைபேசியில், கடலை போட என்று, அன்பு ஒன்றும் விடலை பையன் அல்லவே, அதே நேரத்தில் இனியாவும் பொறுப்பான பெண், அவளுக்கும் இது போன்ற எண்ணம் இல்லை, பெரியவர்களின் பயம் புரிந்து, அவள் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு இருக்க தான் செய்தது, அவனை சந்தித்த பின்பு .
அவள் தோழிகளுடன், அவர்களின் திருமண கலாட்டாவை பற்றி பேசியதின் தாக்கமாக இருக்கலாம், என்று, முடிவு செய்து, அவளும் அவளின் வேலையில் ஈடு பட்டாள் .
ரமேஷை நினைத்து, இனியாவின் பெற்றோர்கள் தான் பயந்தனர் .
அவன் வீட்டினுள் இருந்தாலும் இந்த வீட்டை கண்காணிக்கிறானா, இது என்ன குழப்பம்,என்று நினைத்தனர் .
இது போன்ற கலாட்டாக்களில், இனியா இறுதியில், கண்டிப்பாக அன்பு வீட்டினரை அவனன்றி வேறு யாரும் அழைத்து வர இயலாது, என்று புரிந்து, "அவர் வருவாரு, நானும் வந்தா தேவையில்லாத தர்ம சங்கடம், எதுக்கு?"
"நீங்களே எனக்கு ஏற்றது போல் டிரஸ் பாருங்க," என்று வேலைக்கு சென்று விட்டாள் .
இளங்கோ, அன்னையுடனும், இந்திரா, மற்றும் இலக்கியாவை செழியனிடம் கேட்டு, ஒரு வழியாக, அழைத்து வர பட்டனர் .
மூன்று பெண்களும், இளங்கோவின் துணையுடன், காஞ்சிபுரம் சென்றனர் .
அன்பு வீட்டினில், விஷாகாவை, போராடி, கெஞ்சி கொஞ்சி, என்று சுமதி, அழைத்தாள் .

அதன் பின்பு, தேவகி, சுமதி, விஷாகா, அன்புவுடன் அவர்கள் வாட்சப்பில் அனுப்பிய முகவரியின்,உள்ள கடையின் முன் சென்று இறங்கினார் .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top