அன்பின் இனியா 11

Advertisement

achuma

Well-Known Member
Hi all
நட்புஸ், இது சின்ன பதிவு தான் சென்ற பதிவுக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி .
அடுத்த பதிவை படித்து உங்கள் கருத்தினை தெரிவியுங்கள்
அன்பின் இனியா 11
இனியா குடும்பத்தினர் சென்றதும், அன்பு வினோத்திடம் திரும்பி, "மாமா , உங்கள விட்டுட்டு டிராவெல்ஸ், போறேன் தப்பா நினைக்காதீங்க, நான் இப்போ வீட்டுக்குள் வரும் நிலைமையில் இல்லை," என்று, வெளியே நின்று கொண்டும், அதே நேரத்தில், வீட்டிற்கு வந்திருக்கும் மாப்பிளையை விட்டு செல்வதும் சரியாக இருக்காது, என்றும், ஒரு வித சங்கடத்துடன் அவன் கூறினான் .

வினோத்துக்கு அன்புவின் நிலை புரியும், யாரிடமும், அவன் கோவத்தை காட்ட கூடாது என்பதர்காகவே, இவ்வாறு வீட்டினரை தவிர்க்கிறான் என்று புரிந்தது தான், வினோத்தும்

"டேய் புரியுது, நீ போ, எங்களுக்கும் டைம் ஆச்சு, நாங்க கிளம்புறோம் ".
"இல்லை சாப்பாடு ஆர்டர் செய்றேன், சாப்பிட்டு போங்க."
" வேண்டாம் டா, இங்கயே இருந்தா, உங்க அம்மா மனச விஷா இன்னும் குழப்புவா , நாங்க கிளப்புறோம்," என்றான் வினோத் .

அதன் பின்பு, அன்பு வண்டியை தவிர்த்து, டிராவெல்ஸ், நோக்கி நடை போட, வினோத் வீட்டிற்குள் நுழைந்தான் .
எரிமலையாய் சிதறி வெடிக்க காத்திருக்கும் அவன் கோவத்தை, வீட்டினர் மீது காட்ட கூடாது என்பதர்காகவே, அவன் அன்னையையும் அக்காவையும் தவிர்த்தான் .

"முதல் கோணல் முற்றும் கோணல்" என்பதற்கு இணங்க , இனியா வீட்டினர், வீட்டிற்கு வந்து சென்ற முதல் சந்திப்பே, அதிலும், கேட்பார் பேச்சை கேட்டு, குடும்பத்துக்கும் கெட்ட பெயர் உண்டாக்கும், அம்மாவை என்னவென்று கையாளுவது, என்னும் வகை தெரியாமல், குழப்பத்தில் தவித்தது, அன்புவின் மனம் .

இனியாவின் புன்னகையான முகம், பேசும் கண்கள், என்று அவன், அவள் அழகில் கவர பட்டான் என்றாலும், செழியன் வழி அவள் குடும்பத்திற்காக, செய்தது அனைத்தும் கேள்வி பட்டு, இனியா மீது தனி மதிப்பே அன்புவுக்கு வந்தது எனலாம் .
குடும்பத்தின் மீது அக்கறை உள்ள பெண், கண்டிப்பாக தன் குடும்பத்தையும் சீரமைப்பால், அவன் பாட்டியின் காலத்திற்கு பிறகு, அடுத்த தலை முறையாக, அவன் அன்னையே அந்த வீட்டில், மருமகளாக வந்தது,

ஆனால் எதிலும் பற்றுக்கொள்ளாமல் இருந்து விட்டார் .
விஷாகாவை தவிர அவருக்கு எதுவும் தேவையுமில்லை .
இனியா இந்த வீட்டுக்கு வந்தால், கண்டிப்பாக நல்ல மாற்றம் வரும் என்று அவள் மீதான நம்பிக்கை .

குடும்பத்து மீது தீரா , பாசம் உள்ள பெண், தன குடும்பத்துக்கு மருமகளாக வந்தால், கண்டிப்பாக, இந்த குடும்பத்தை சீராக்குவாள், அவன் குடும்பம் நன்றாக இருக்கும் என்னும் நம்பிக்கை, அன்புவுக்கு.

ஆனால் அதே நேரத்தில் இப்படி திருமணம் செய்து, அவளின் புன்னகையை துளைக்க அவன் விரும்பவில்லை .
எந்த புன்னகை அவனை கவர்ந்ததோ, அந்த புன்னகை, அவனை திருமணம் செய்துகொண்டால், காணாமல் போகும் என்ற பயமும், வேதனையும் போட்டி போட, அந்த குழப்பத்தில், திருமணம் வேண்டாம் என்று அன்னையிடம், கூறினான் .
ஒரு வகையில் நான் சுயநலமோ, என்று ஒரு சென்னைக்கு அவன் மனதில் சூழ்ந்து கொண்டு அவனை வாட்டியது .

தன்னை திருமணம் செய்தால், இனியா நன்றாக இருப்பாளா, என்று நினைவுகள், அவனுள் சுழல , அந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல், தவித்தான் .
அவனால் அன்னையையும், விட்டுக்கொடுக்க முடியாமல், தவிக்கிறான் .

அவன் அன்னை வழி பாட்டியுடன், கிராமத்தில் வளர்ந்த அவனுக்கு, அவன் பாட்டி, சுமதியை பற்றி கூறி கேட்டு வளர்ந்தவனாகிறே, அதனால் , அவனுக்கு அன்னை மீது கோவம் இல்லை.
வருத்தம் மட்டுமே .

" சுமதி எந்த, ஈ எறும்புக்கு கூட திரோகம் செய்யாதவ அன்பு, இந்த அஞ்சு வருஷம் குழந்தை இல்லைனு , கஷ்டப்பட்டு விஷாகா பொறந்ததால அவளுக்கு, விஷாவே உலகம் ஆயிடுச்சு ."

"அதான் அவ சுணக்கம் பொறுக்கமா, உன்னையும், உன் தங்கச்சியும், இங்க விட்டுட்டா ," என்று பேரன் , அவன் அன்னை மீது, எந்த தவறான எண்ணமும் வளராமல் பார்த்து கொண்டார் .

அவனும் பாட்டி மறைவுக்கு பிறகு, அதிதியை அப்படியே வளர்த்தான் .
இருவருக்கும் அன்னை மீது கோவம் இல்லை, அவள் மற்ற இரு பிள்ளைகள் மீது காட்டாத பாசம் அன்புவும், அதிதியும், சுமதி மீது பாசத்துடன் தான் இருக்கின்றனர் .
ஆனால் , விஷா என்னும் திரையில், சுமதியாக்கு , பிள்ளைகளின் பாசம் மறைக்க பட்டது .
இனியா வந்த பிறகு, அந்த திரை விலகும் காலமும் விரைவில்.

அன்புவுக்கு,அந்த நேரம் கழிக்க சங்கடமாக இருந்தது , அவளின் சிந்தனை தந்த தாக்கம் அதில் இருந்து மீள முடியாமல், அவன் தவித்தான் எனலாம்.
அதற்குள், கைபேசியில் ஒளிர்ந்த என்னை கண்டு, உடனே, தொடர்பை எடுத்து, எப்படி டா இருக்க, என்று அவனின் உற்ற தோழனும் மச்சினனும், ஆனா சரனுடன்(சந்திராவின் மகன்) பேசினான் .

எத்துணை தூரத்தில் இருந்தாலும் நண்பனின் குரல் பேதம், அவனால் உணர முடிந்தது .
"என்ன டா, குரலே சரி இல்லை, என்ன பிரச்னை,"
நட்பு ஒன்றே , எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான உறவு , அவன் நண்பனை மெச்சி கொண்டே, "நான் இருக்கேன் டா, இப்போ தான், எழுந்து இருப்பே, என்ன இவ்வளவு காலையில , உடனே போன் ," என்று, அவன் கவலையை ஒத்தி வைத்து, நன்பனுடன் உற்சாகமா பேச ஆரம்பித்து விட்டான் அன்பு .

நண்பன் தனக்காக வரவழைத்த, உற்சாக குரலை கண்டு கொண்ட, சரண் , "ஹ்ம்ம், அம்மா நேத்து போன் செய்தப்போ சொன்னாங்க, நீ கூட எனக்கு எதுவும் சொல்லலை," என்று உரிமை கோவம் கொண்டு, என்ன டா, வீடு கூட உனக்கு இல்லாம செய்துட்டாங்க, என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் .

"உன் பொறுமையா ரொம்ப சோதிக்கிறாங்க மச்சி, எல்லாரையும் விட்டு வெளியே வா , முதல "நண்பனுக்காக , ஆவேசம் கொண்டு சீறினான் சரண் .
"இன்னும் குடும்பம் உடைய கூடாது, கூட்டை பிரிக்க கூடாதுனு, டயலாக் விட்டே, மவனே, நான் நேரா வந்து, உன்ன சாத்துவேன் பார்த்துக்கோ."
சரனின் ஆவேசத்தில், அன்புவுக்கு அவன் கவலை மறைந்து, இப்பொழுது சிரிப்பு வந்து விட்டது .
சிரித்தும் விட்டான்.

சரனிடம் மட்டுமே, அவனின் கோவம், சிரிப்பு, என்று அவன், உணர்வுகளை பகிரும் ஒரே
ஒரே ஆறுதல்.
நீரோட்டம் போல் செல்லும், வாழ்க்கையில், இருவரும், இருவரும் ஒருவருக்கு ஒருவர் தோல் கொடுத்து, தட்டு தடுமாறி, நிமிர்ந்து நின்ற, தோழர்கள் .
என்ன இருவருக்கும் உள்ள வித்தியாசம், அன்புவுக்கு எந்த அளவுக்கு அனைத்தும் சொந்தமும் வேண்டும், எந்த உறவுகளை, அவன் பாசத்தில் பிடித்து வைப்பானோ, அந்த அளவுக்கு சரண் சொந்தங்களை விட்டு ஒதுங்கி இருப்பான்.

சொந்தங்களுக்கு நடுவில், சரண் என்றால் திமிர் பிடிச்சவன், சிடு மூஞ்சி, என்றே இவ்வாறான, எள்ளல் பேச்சுகள் அவனை பற்றி .
அவன் இது எதுவும் கருத்தில் புகுத்தாமல் , அன்னை வழி சொந்தத்தில், அன்புவை தவிர அவன் யாரையும் மதிப்பதில்லை .

நண்பனிடம் மறைப்பதிற்கில்லை, என்று, அன்பு வீடு விஷயத்தில் இருந்து, இனியா குடும்பத்தார், வந்து சென்றது, தற்போது, அவன் இருக்கும் மனநிலை வரை எடுத்து கூறினான் .

அவனுக்கும், யாரிடமாவது கூறினால் நன்றாக இருக்கும் என்றே, அவன் ஒரே வடிகளான நம்பனிடம் பகிர்ந்தான் .
"டேய் , லூசு மாதிரி யோசிக்காத, நீயே உன்னை சுயநலமானவன்னு, சொன்னா ஒரு குழந்தை கூட அதா நம்பாது.
தேவை இல்லாத விஷயத்தை யோசிக்காதா .

"அது ஒன்னும் இல்லை மச்சி, நீ முத முதல, உனக்காகன்னு ஒன்னு செய்ய, போறியா, அதான் உனக்கு ஒரு தடுமாற்றம்."
அது உன் குடும்பத்துக்கு பிடிக்கலை .
" உன் குடும்பம் எதுவும் உனக்கு நல்லது அமைய கூடாதுனு, குட்டைய குழப்புறாங்க, நீ அதுல அவங்க எதிர்பார்க்கிறது போல் நீச்சல் அடிச்சிட்டு இருக்க," என்று படு,நக்கலாக , அவன் குடும்பத்தை பற்றி கூறினான்.

சரண் கூறுவது உண்மை என்றாலும், குடும்பத்தை விட்டு குடுக்க முடியாமல், "நீயும் அந்த குடும்பம் தான் டா மறந்துடாத, என்று அன்பு கூறியதற்கு, சரண் சிரித்த சிரிப்பில், அவன்என்ன நினைக்கிறான், என்று, அன்புவால் புரிந்து கொள்ள முடிந்தது .

"இந்த தகுதி பார்க்கிற ,பண பேய் கும்பல, தலை முழுகி பல வருஷம் ஆச்சி மச்சி, உன்னையே, நான் சொந்தக்காரன் பார்க்காம, என் நண்பனா பார்குறதால தான் ,நம்ம உறவு அப்படியே இருக்கு, என் நண்பன் நீ போதும் .

வேற யாரையும் நான் என் கூட்டுல இணைக்க விரும்பல , என்று சீற்றத்துடன் பேசினான் .
அவன் பேசியது பாதித்தாலும், அவன் குணம் தெரிந்தததே என்று, அன்புவும் வேறு பேச்சிக்கு தாவினான் .

நண்பன் தன்னை இலகுவாக்க முயற்சிக்கிறான் என்று தெரிந்தாலும் சரண், அவனை விடுவதாக இல்லை .
அவன் குழப்பத்துடன் ,இருந்தால்,கண்டிப்பாக அவனே பெண் வீட்டாருக்கு திருமணத்தை நிறுத்துமாறு கூறிவிடுவான் , என்று அவன், அன்புவை நன்று தெரிந்தே , அவனை தெளிவு செய்ய நினைத்தான் . .

"அன்பு , யோசிக்காத , டா , மேரேஜ் , லைப்ல, நம்ம விருப்ப படி தான் நடக்கணும் ", அவன் இதை கூறும்போது , சரணின் மனம் ஒரு நிமிடம் அதிதியின் நினைப்பு அவன் அகத்தில் மின்னி மறைந்தது . அதே நேரத்தில் அவன் மனம் அந்த குடும்பத்தாரை நினைத்து நெருட செய்தது .

இப்பொழுது நண்பனின், வாழக்கை முக்கியம் என்று, அவன் எண்ணப்போக்கை நகர்த்தி, மீண்டும் அன்புவுடன் பேசினான் .
"இரு மனமும், இறுதி வரை ஒரே வழில பயணம் செய்ய போற ஒரு உன்னதமா உறவு ".
"அந்த உறவு ,மேல நமக்கு எப்பவும் நம்பிக்கை இருக்கனும் . உன்ன நீயே சந்தேக படுவியா அம்மாக்காக, கூட பொறந்தவங்க, ஏன் , நம்ம சொந்தம் எல்லாம் என்னை ஒதுக்குன, அப்போ,என் கூட கடைசி வரைக்கும் எனக்காகன்னு இருக்கியே, அப்படி பட்ட நீயா உனக்காகன்னு, வர பொண்ண கஷ்டப்படுத்துவ ".
எந்த,குழப்பமும் இல்லாம ,கல்யாணத்துக்கு ஓத்துக்கோ .

"நீ இப்போ தான் கொஞ்சம் மாறி இருக்க, இந்த மாற்றம் நல்லது தான் , எனக்கு நம்பிக்கை இருக்கு .
வீடு பற்றி கவலை படாத, உன் குடும்பத்துக்கு, வெட்டி கௌரவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இருக்காது ."

சரணால், அன்பு மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறந்தது .
"ஆமா , புலியா இருந்த என் பிரென்ட , பூனை ஆக்குன அந்த பொண்ணு பற்றி கொஞ்சம் சொல்லு," என்று இனியவை பற்றி கேட்டதும், அன்பு மீண்டு, அவளின் நினைவில், மனதில் உருவான உற்சாகத்துடன் , அவளை பற்றியும் , அவள் வீட்டினர் பற்றியும் கூறினான் .

இப்படியாக, அன்புவுக்கு, அந்த இரவு, இனிதே கடந்தது .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top