Bhuvana
Well-Known Member
அன்னாசி பழ ஊறுகாய் :
தேவையான பொருட்கள்:
அன்னாசி பழம் - 1 {நடுத்தர அளவு உள்ளது}
சக்கரை - 1/2 கி.
வினிகர் - 1/2 கப்
இஞ்சி - 50 கிராம் {துருவியது }
பூண்டு - 6 பல் {பொடியாக நறுக்கியது}
பேரிச்சம்பழம் - 100 கிராம் {நீளமாக நறுக்கியது}
உப்பு, மிளகாய் தூள் - தேவையான அளவு
அன்னாசி பழத்தைஒரு கடாயில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சக்கரை, வினிகர்,
இஞ்சி, பூண்டு, பேரிச்சை ஆகியவற்றை கலந்து சுமார் ஒரு மணி நேரம் மிதமான தீயில் வேக விடவும்.
அடி பிடிக்காமல் இருக்க இடை இடையே கிளறி விட்டு கொண்டே இருக்கவும். பாதி வெந்ததும் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிண்டவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்ததும் இறக்கி ஆறிய பின்பு ஒரு சுத்தமான பாட்டிலில் அடைத்து பயன்படுத்தவும்.