Hii...frds &sis's...second epi konjam chinnadha irukkum...next epi periyathaga tharugiren....enadhu 1st epikku comments kodutha anaivarukkum en nandrigal..indhu oru police story and love ellame irukkum.... Ethavathu spelling mistake irundhal mannikkavum...ungalin comments kaga waiting....

அத்தியாயம் 2
ரேஷ்மி அதிர்ந்த நிலையில் நிற்க கதவை திறந்த ரோஹித்தோ அவளை பார்த்து ஆச்சரியமாக சிரித்தான்.... பின்னே இருக்காத அவளைப் பார்த்து முழுதாக மூன்று மாதம் ஆகிறது......இருவரும் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருக்க......
இளாவோ மனதில் “ம்க்கும்.... இதுங்க ரெண்டும் கண்ணப்பார்த்தே காலத்த ஓட்டிடுங்கப்போலவே......ஆண்டவா......”நினைத்துக்கொண்டாள்....இதற்கு மேல் முடியாது என்று தொண்டையை செறுமினாள் இருவரும் அசைந்தப்பாடில்லை.......அவன் முதுகில் ஒரு அடிப்போட்டாள்..... அதில் சுயநினைவுப்பெற்றான்.......
“என்னடி, எதுக்கு இப்போ அடிச்ச” என்று கேட்டான்...அவளோ அவன் காதருகில் “என்னடா ஒவராப்பன்ற நான் இங்கே அண்ணா.... அண்ணா...ன்னு கத்தரேன் நீ என்னடான்ன ரொமன்ஸ் பண்ணிகிட்டு இருக்க.....”என்று கிசுகிசுத்தாள்......அவனோ அசடு வழிய நின்றான்.
இருவரும் உள்ளே சென்றனர்....... ரேஷ்மி சீதாவை பார்த்ததும் கட்டிக்கொண்டாள்....அவரோ இவ்வளவு நாள் வராமல் இருந்ததால் கோபத்தைக் காட்ட முகத்தைத்திருப்பிக்கொண்டார்.....இருவரும் அவரை கெஞ்சிக் கொஞ்சி சமாதானப்படுத்தினர்.....
ரோஹித்தின் கண்களோ ரேஷ்மியை சுற்றிக் கொண்டே இருந்தது.சீதாம்மாவின் கண்களோ தன் மகனை சுற்றியது “இப்போதான் ரொம்ப டையர்டா வந்தான் ......அதுக்குள்ள முகத்துல இப்படி பல்பு எரியுது.....”என்று நினைத்துக்கொண்டார்.
சாப்பிட்டு முடித்துவிட்டு, குடும்பமே உட்கார்ந்து கேரம் ஆடிக்கொண்டே அரட்டையில் இறங்க....மாலையானதும் ரேஷ்மி விட்டால் போதும் என்று கிளம்பிவிட்டாள்...
ஆதியும், விஷ்வாவும் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினர்....இருவரும் ஒன்றாக தான் தங்கியுள்ளனர்...ஆதி குளியலறையில் ஷவரின் அடியில் நிற்க....அவளின் நினைவு வந்தது....தனக்குத்தானே சிரித்துக்கொண்டு “பார்க்க பேபி முகம்....ஆனால் சரியான வாயாடி...” என்றான்.
சிரித்துக்கொண்டே வெளியே வரும் நண்பனைக்கண்டு “என்னடா முகம் ரொம்ப பிரகாசமா இருக்கு..”
“அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பொண்ண நினைச்சி சிரிச்சேன்....பாவம்டா, செம்ம அடி மச்சான்... வலிச்சிருக்கும்... நெக்ஸ்ட் டைம் பார்க்கும்போது சாரி கேட்கணும்....” என்று சொன்ன நண்பனைக்கண்டு கொலைவெறியோடு முறைத்தான் விஷ்வா.. “ஏன்டா அந்த சாரிய அப்பவே கேட்கறதுக்கு என்ன...” என்று கேட்க,
“அப்ப இருந்த டென்ஷன் கேட்க தோனல, ஆனால் அவ மேலயும் தப்பு இருக்கு மச்சான்...முன்னாடி என்ன நடக்குதுன்னு பார்க்காம அப்படி என்ன பேச்சு....சரி சரி முறைக்காதடா...அதான் சாரி கேட்கறன்னு சொல்லிட்டேனே விடு..”.என்று.தூங்கிவிட்டான்...
இளமதியும் தன் அறையில் கண்ணாடி முன்பு நின்று கன்னத்தைத் தடவிக்கொண்டே “ம்ம்ம்... நான் செஞ்சதும் தப்புதான்...இருந்தாலும் அவன் சாரி கேட்காதது இதவிட பெரிய தப்பு, சரியான திமிர்பிடிச்சவன்...நெக்ஸ்ட் டைம் பார்க்கும்போது இருக்கு அவனுக்கு...”.என்று அவனை வசைப்பாடிக்கொண்டே தூங்கிப்போனாள்.....
இவர்களின் எண்ணங்கள் அடுத்த சந்திப்பில் பொய்யாகப்போவதை அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர் இருவரும்...
காலை எட்டு மணியளவில் XXX அப்பாட்மன்ட் மிகவும் பரப்பாக இருந்தது...ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் பள்ளிக்கும், ஆண்களும் பெண்களும் வேலைக்கு கிளம்ப என விறுவிறுப்பாக காணப்பட்டது....ஒரு வீடு (f block) மட்டும் நிசப்தமாக காணப்பட்டது....
தன் கண்களை தேய்த்துக்கொண்டே பட்க்கையைவிட்டு எழந்த சுந்தரிப்பாட்டி தனது பேத்தியைக் காண வேகவேகமாக விரைந்தார்...ஏனென்றால் நேற்று நடந்த நிகழ்வு அப்படி... “வினிஷா கதவத்திற....”என்றுத்தட்டினார்...கதவு திறக்கவில்லை என்றதும் பதறிப்போனார்... “வினிக்குட்டி திறடா பாட்டி உன்ன எதுவும் சொல்லமாட்டேன்... “என்று எவ்வளவு கத்தியும் திறக்கவில்லை என்றதும்...பக்கத்து வீட்டில் உள்ள டாக்டர் ஹரிஷ்-ஐ கூப்பிட சென்றார்....
அவன் வந்து கதவை உடைத்து, இருவரும் உள்ளே செல்ல அங்கே கண்டக்காட்சி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.... “வினிஷா....” என்று கத்திக்கொண்டே மயங்கி சரிந்தார் பாட்டி....அவர் கூப்பிட்டக் குரலுக்கு பதிலளிக்கமுடியாமல் தூக்கில்த்தொங்கிக்கொண்டிருந்தாள் வினிஷா.......
ஹரிஷ் தான் செய்ய வேண்டிய கடைமையை செய்தான்... காவல் நிலையத்திற்கு அழைத்து தகவல் சொன்னவன்...ஆம்புலன்சிற்கு அழைப்பு விடுத்தான்.....
காலையிலேயே ஆதி தனது காலைக்கடன்களையும், உடற்பயிற்ச்சியையும் முடித்து வியர்வையை துண்டால் துடைத்துக்கொண்டே வந்தவன் இன்னும் படுக்கையில் சுகமாய் கொறட்டைவிட்டுத்தூங்கும் நண்பனைக்கண்டு சிரித்தவன்... “எப்போதான் திருந்தப்போறானோ” என்று முணுமுணுத்துக்கொண்டே துண்டை அவன் முகத்தில் விட்டெறிந்தான்...அதில் துயில் கலைந்து எழுந்தான் விஷ்வா....
தனது சீருடையின் பட்டனைப் பூட்டிக் கொண்டிருந்தவனின் மொபைல் ஒலித்தது, எடுத்துப்பேசியவன்.... “ம்ம்ம்... ஒகே சார்....வீ வில் மீட் ஆன் திஸ் ஸ்பாட் சார்...” என்று கட் செய்தவன்...விஷ்வாவிடம் விவரத்தை சொல்ல... இருவரும் தங்களின் போலீஸ் வண்டியில் மேலதிகாரி சொன்ன இடத்திற்கு விரைந்தனர்.....
-தொடரும்