விதியின் வசத்தால் தத்தளித்துத் தடுமாறி நின்ற உள்ளங்கள் இன்று தான் தெளிந்து நின்றது.ஆம் இன்று தான் சீயான் - வேம்பு மற்றும் முத்து-பிச்சி திருமண நாள் இருவருக்கும் உண்மையான விடியல் போலும்.
நடு சாமம் கடந்து விடியலுக்கு வழி விட்டு நிற்க அந்நேரம் வேம்புவை பார்க்க வந்த அவரது தாய் வேம்பு அவளது அறையில் இல்லையென்ற உடன் பதறிக் கொண்டு வந்தார்.
வெளியில் முனியாண்டியும் பொன்னுரங்கமும் அப்போது தான் காபியை குடித்துக் கொண்டு இருந்தனர் என்னங்க என்று பதறிக் கொண்டு வந்தவரை பார்த்த இருவருக்கும் பக்கென்று இருந்தது இன்னும் என்ன…..? என்ற நிலையில் இருவரும் பயந்து போய் நிற்க அவர்களை நெருங்கியவர் வேம்புவ காணமுங்க.
“நல்ல பார்த்தியாம்மா” முனியாண்டி கேட்க
“பார்த்தேங்கண்ணே புள்ளய காணோம்” அனைவருக்கும் காப்பிக் கலந்து வந்த அங்காயி பொறுமையாக உறவினர்களுக்கு காபியை கொடுத்துவிட்டு.
“மதனி வேம்பு தம்பி கூடத்தான் இருக்கு வரும் நீங்க ஆக வேண்டிய வேலையைப் பாருங்க” என்றவர் பேச்சில் நிம்மதி பிறந்தது வேம்புவை பெற்றவர்களுக்கு. இருவரும் மேல் கொண்டு ஆக வேண்டிய வேலையைப் பார்க்க சென்றனர் அவர்கள் செல்வதற்காகக் காத்திருந்த முனியாண்டி
“சாமி தோட்டத்து வீட்டுக்கு போய் இருக்காரோ” மனைவியிடம் சற்று கடுப்பாகக் கேட்க அவர் தலையைக் குனிந்து கொண்டார். நேற்று இரவு தண்ணீர் எடுக்க வந்தவர் கண்ட காட்சி வேம்புவை தோளில் சுமந்து செல்லும் சீயானை தான் முதலில் அதிர்ந்தவர் பிறகு ஒரு புன் சிரிப்புடன் கண்டும் காணாமல் சென்று விட்டார்.
ஏனோ அவருக்கு அவர்களைத் தடுக்கும் எண்ணம் வரவில்லைப் போலும்.இரு பிள்ளைகளும் அளவிற்கு அதிகமாகவே சுமைகளைச் சுமந்து விட்டதாகத் தோன்றியது அவரும் பார்க்க தானே செய்கிறார் அவர்கள் வயது பிள்ளைகள் இருக்கும் நிலையை.
ஆனால் பழி ஒரு பக்கம் இருக்கப் பாவம் மட்டும் தன் பிள்ளைகளைப் பதம் பார்த்து விட்டதே என்ற எண்ணம் எழ அவர்கள் போக்குக்கு விட்டு விட்டார் இனியாவது பிழைத்து கொள்ளட்டும் என்பது போல்.
முனியாண்டிக்குத்தான் கடுப்பாக இருந்தது திருமணம் முடியும் வரை பொறுத்தால் என்ன என்ற எண்ணம் வர வழமை போல் மகனிடம் பேச முடியாமல் ஆழந்த உறக்கத்தில் இருக்கும் முத்துவிற்கு அழைத்தார் மறுமுன்னையில் போன் எடுக்கப்படவே
தூக்கம் கண்ணைச் சுழட்ட கொட்டாவி விட்டாவாறே போனை எடுத்துக் காதில் வைத்து “ஹலோ” என்றது தான் தாமதம்.
“ஏண்டா கொட்டிப்பயலே இன்னும் என்னடா உறக்கம் வேண்டி கிடக்கு மரியாதையா போய் வேம்புவையும் உன் கூட்டாளியையும் கூட்டிகிட்டு வந்து சேறு”
அவரது கூச்சலில் மல்க மல்க விழித்தவன் “என்னங்க பெரியப்பா” அவர் சொல்லுவது புரியாமல் மீண்டும் கேட்க.
“நல்ல வந்துரும் வாயுலடேய் தோட்டத்து வீட்டுக்கு போய் அவங்கள கூட்டிட்டு வாடா விடிய போகுது அம்புட்டு சனமும் கூடுறதுக்குள்ள வந்து சேருங்க” என்றவர் போனை வைக்க முற்றிலும் தெளிந்த முத்து.
“அடபாவி இன்னைக்குக் கல்யாணத்த வச்சுக்கிட்டு நேத்து எதுக்குடா அவளை தோட்டத்து வீட்டுக்கு தூக்கிட்டு போன பாவி பயலே உனக்கு எங்கனயோ மச்சம் இருக்குடா,நான் பாரு ஒன்னுமே பண்ணாம வவுத்துல புள்ள கொடுத்துட்டான்னு ஊரே கூட்டி பஞ்சாயத்து வைக்கிதுங்க நலத்துக்கே காலமில்ல” என்று புலம்பி கொண்டே தோட்டத்து வீட்டுக்கு சென்றவன் அங்கு இருவரும் இருக்கும் நிலையைப் பார்த்து வாயில் அடித்துக் கொண்டான்.
**
அ....... டேய் எரும மாடே!... சீயான்!.... கதவத் திறந்து தொலைடா உச்ச பட்ச கோவத்தில் கத்த உள்ளே இருந்தவன் சொகுசாக வேம்புவின் மார்பில் தஞ்சம் கொண்டு துஞ்ச வேம்புவிற்கு முத்துவின் குரல் மெலிதாகத் தீண்டியது
“மாமா முத்து மாமா கத்துது கதவை திறங்க”
“கத்துனா கத்தட்டும் பேசாம இருடி என்றவன் மேலும் அவளிடம் நெருங்க நெளிந்து அவனை விலகினால் பெண்.அவள் தள்ள இவன் அள்ள என்று இங்குத் தள்ளு முள்ளு நடக்க வெளியில் உள்ள ஜீவனுக்குப் பாதி ஜீவன் போயிற்று.
“மாமா பாவம் மாமா விடுங்க” என்றவள் சற்று வேகமாக அவனைத் தன்னிடம் இருந்து பிரித்து எடுத்து தள்ளி உள் அறைக்குச் சென்று விட்டாள் உடை மாற்ற.அவள் தன்னை விட்டுச் சென்றதில் சிறு கோபம் வர வேகமாகத் தனது நிலையை மறந்து கதவை தெரிந்தவன் “என்னடா” இதம் தொலைந்த கடுப்பில் எகிற.
அவனது நிலையைப் பார்த்து அதிர்ந்தவன் ஐயோ! ஐயோ! என்று வாயில் அடித்துக் கொள்ள அவனது செய்கையைப் பார்த்து ‘என்ன இவன்’ யோசித்தவாறே தன்னைப் பார்க்க அப்போது தான் செய்து வைத்த மடத்தனம் புரிய தனது தலையில் பலம் கொண்டு அடித்துக் கொண்டு கதவை வேகமாக சாத்தினான்.
முத்து தான் அதன் தாக்கத்தில் இருந்து வெளி வரவில்லை மேலும் சில நொடிகள் சென்று இருவரும் கிளம்பி வர முத்து அதே நிலையில் தான் இருந்தான்.
வேம்பு தான் சீயானை முறைத்து வைத்தால் ‘எல்லாம் உன்னால் என்று’ அவளது முறைப்பை அலட்சியம் செய்தவன் முத்துவை தள்ளி கொண்டு போனான்.
எங்கே பேசாவிட்டால் தன்னை உண்டு இல்லையென்று ஆக்கி விடுவான் என்ற பயம் அவனுக்கு. அதனால் தான் எந்தப் பேச்சுமின்றி வீட்டுக்கு விரைந்தனர்.வேம்பு வீட்டில் யார் முகத்தையும் பார்க்காமல் ஓடி போய் அறையில் ஒளிந்து கொள்ளத் தன்னை முறைத்து பார்க்கும் தந்தையை ஓர விழியில் பார்த்துக் கொண்டே அறைக்கு விரைந்து விட்டான்.
அதன்பின் அனைவரும் பரபரப்பாகச் சுற்றி திரிந்தனர் ஒரே பிள்ளையென ஊரை கூட்டி செய்யாமல் வேம்புவின் நிலையைக் கருத்தில் கொண்டு எளிமையாகத் திருமணம் நடந்து முடிந்தது.முத்துவும் சரி சீயானும் சரி அது இதுயென்று வீண் செலவுகளை இழுத்து வைக்காமல் கோவிலில் திருமணம் செய்து உற்றார் உறவினர்களுக்கு முனியாண்டி தோட்டத்தில் விருந்து வைத்து விட்டார்.
மகளின் முகத்தில் தெரிந்த நிறைவை கண்டு பொண்ணுரெங்கம் சற்று தணிந்தார்.அல்லவை அனைத்தும் அகன்ற உணர்வுடன் குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
மணமக்களை ஒவ்வொரு மனிதராக வந்து வாழ்த்த அனைத்தையும் இன் முகத்துடன் பெற்று கொண்டனர் இரு ஜோடிகளும்.அவ்வப்போது வேம்பு காது படவே முதல் திருமணத்தைப் பற்றிய பேச்சு இருந்தாலும் அதனைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு சிரிப்புடன் கடந்து சென்றாள்.
இன்னும் காலம் உள்ளதே தன் காலம் முழுவதும் இது பேசப்படும் பகடி.இதனை கடந்து தான் ஆகவேண்டும் என்ற மனநிலையைத் தனிமையில் ஒவ்வொரு முறையும் தனக்கு உணர்த்திக் கொண்டே இருந்த தன்னவனை எண்ணி அத்தனை மகிழ்வாக இருந்தது.
அவ்வப்போது அவனே தேளாக இவ்விடயத்தைக் கொட்டுவதும் உண்டு.அதனையும் கடக்கப் பழகி இருந்தால் பெண் இல்லை............. இல்லை ...............பழகக் கற்றுக் கொடுத்தான் என்றே சொல்ல வேண்டும்.
அனைவரும் விருந்தில் இருக்க அவர்களை மேல் பார்வை பார்த்துக் கொண்டு நின்றான் சீயான் தனது தந்தை உதவியுடன் அவனது கண்கள் அவ்வப்போது வேம்புவை தீண்டி செல்ல பார்க்கும் பெரியவர்களுக்கு அத்தனை அழகாக இருந்தது.
அப்போது தான் வீராயி கவனத்தில் தனது மகனும் மருமகளும் இல்லாததை கண்டு வேகமாக வேம்புவிடம் நெருங்கியவர் “என்னம்மா முத்து எங்க? இந்தப் பிச்சி புள்ளையும் காணோம் மயக்கத்தில் இருந்த வேம்பு தெளிந்து.
“தெரியல அத்தை”
“எங்கன போனான் கொட்டி பைய இவனை வச்சுக்கிட்டு” என்றவர் ஒவ்வொரு இடமாகத் தேடி அலைய
தேடலுக்கு உரியவனோ படு தீவரமாகத் தனது கையில் சிக்கிய பிச்சியைப் பிச்சு பிச்சு எடுத்துக் கொண்டு இருந்தான் “ஏண்டி என்ன தைரியம் இருந்தா என் ஆத்தாகிட்ட சொல்லி என் மனத்த வாங்கி இருப்ப…. எப்படி.. .. மூனே நாளுல மூனு மாசமா பாதகத்தி இருடி ஒரே பிரசவத்துல பத்து புள்ள பெத்துக்க வைக்குறேன்”
“முடியாதுடி எப்போ பாரு என்கூட மல்லுக்கு நிக்க வேண்டியது ஒரு வாய் காப்பித் தண்ணி குடிக்க விட்டியாடி நீ”
“மாமா.. மாமா… இனிமே இப்படி பண்ண மாட்டேன் மாமா” தாடையைப் பிடித்துக் கொஞ்ச
அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் முத்து கூடவே வளர்ந்த பெண் என்றாலும் பாசமான பேச்சோ அன்பான பார்வையோ எதுவும் கிடையாது. எங்கே சந்தித்தாலும் முட்டி கொண்டே இருப்பாள்…….என்று தன்னை அன்பு செய்கிறேன் என்று சொன்னாலோ அன்றில் இருந்து சிறு சலனம் அதுவே நாளடைவில் பேரும் காதலாக மாற
அன்று தனக்கு இருக்கும் குடும்ப நெருக்கடியில் தேற்ற யாருமின்றி இருக்கையில் தனது மார்பு கொண்டு தன்னைத் தாங்கி தாயாகநின்ற அவள் மீது இப்போது எக்கச்சக்க காதல்.அவனது விழிகள் தன்னை விழுங்க அவனிடம் விடுபடப் போராடி கொண்டு இருந்தவள் தனது போராட்டத்தை நிறுத்தி.
“என்ன மாமா அப்படி பாக்குற”
ஒரு பெரு மூச்சை வெளியிட்டவன் “என்ன மனுச்சுக்கிடு பிச்சி அன்னைக்கு இருந்த இறுக்கத்துல எனக்குச் சாஞ்சுக்க வழி இல்லை ஆறுதல் சொல்ல வேண்டிய நீயும் ரொம்பப் பேசுனியா அதேன்”
கண்கள் பனிக்க “எனக்குத் தெரியும் மாமா நீ எதுவும் சொல்ல வேண்டாம்” என்றவள் மீண்டும் விலகப் பார்க்க எரிச்சல் ஆனவன் “எங்கடி போற”
“மாமா”
“பேசாத” என்றவன் கைகளும் இதழ்களும் வரம்பு மீற
“மாமா கை............. விடு மாமா .....ஐயோ சீல”
“இது எதுக்குடி நான் இருக்கும் பொது” என்றவன் அவளை மொத்தமாகக் கலைய பதறி போன பிச்சி “மாமா விளையாடாத சீலய கொடு”
“ப்ச்…. தர முடியாது அன்னைக்கு இரவைக்கு ஒன்னும் நெனவுல இல்லடி எதையுமே சரியா பார்க்கல
“ஐயோ! என்ன பேச்சு விடு மாமா”
“நெசமாடி எதுவும் தெரியல” என்றவன் இப்போது பட்ட பகலில் தனது கண்ணனுக்கு விருந்தாக நிற்கும் பிச்சியைக் கண்ணின் ஒளி கொண்டு அள்ள அள்ள பருகினான் வெட்கத்தில் மீனாகத் துடித்தவளை அள்ளி அனைத்தவன்.
“பிச்சி இம்புட்டு அழகையும் ஒழுச்சு வச்சு இருக்க அப்பவே மாமாவை புடிக்கும் சொல்லி இருந்தா இந்நேரம் இரண்டு புள்ளையும் வீராயி உயிரை எடுத்துக்கிட்டு திரியும்” அவன் சொல்லவே வெளியில் வீரியின் குரல் கேட்டது
“அடேய்! எங்கன போனானு தெரியலையே பாவி அந்தப் புள்ளையும் கூட்டிகிட்டு போய் இருக்கானே நான் என்ன பண்ணுவேன் அவளை எதுவும் பண்ணிட போறான்”
அவரது கூச்சலை கேட்டுப் பிச்சி கிளுகி சிரிக்க “மகன் மேல் அம்புட்டு நம்பிக்கை இரு வந்து உன்ன வச்சுக்குறேன்” என்றவன் பிச்சியிடம் திரும்பி “என்னடி சிரிப்பு உனக்கு”
காண்டன முத்து அவளிடம் பாய்ந்து சிரித்த இதழுக்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தான்.அதன் பின் அனைத்தும் அவன் ஆதிக்கமே தன்னை நாடும் மாமனை சுகமாகி தாங்கி போனால் பெண்.
பெற்றவர்களுக்கு மதிப்பளித்து இளையவர்கள் நடக்க அங்கே மிதமாக பயணித்தது வாழ்க்கை பயணம்.இதோ ஆண்டுகள் சென்று காலமும் கடவுளும் தந்த மாற்றம்.................