அத்தியாயம் – 2

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வம்பு நாட்டான்

அத்தியாயம் – 2
ரம்மியமான மதிய பொழுதில் உண்டு முடித்த களைப்பில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடத்தில் அமர்ந்திருந்தனர். நேற்று பூசை முடித்து விட்டு அனைவரும் இங்கயே தங்கி விட்டனர்.

கோவிலுக்கென்று வந்தாலும் வேலையோடு வேலையாக அன்னத்திற்கு சடையப்பனை பேசி முடிக்க எண்ணி காலை முதல் அவனை எதிர் பார்த்து குடும்பமே நிற்க மதிய வேலை தாண்டியும் அவன் வந்த பாடில்லை.

மகனை எண்ணியதும் நடனதேவர் இரு மனைவிகளையும் பாச பார்வை பார்த்து வைக்க ஒரு சேர இருவரும் தலையைக் குனிந்து கொண்டனர்.

அவர்களும் என்னதான் செய்வார்கள் பாவம் குச்சியை எடுத்து அடிக்கும் வயசா அவனுக்கு? பேசினாலே வம்பு தான் இதில் வீட்டின் சூழல் எதோ சரியில்லை என்ற உணர்வை கொடுக்க தவித்து போயினர் இரு பெண்களும் அது போகாதென நேற்றைய தினம் நடனதேவர் புரிந்த நடனம் கொஞ்ச நஞ்சம் அல்ல.

நேற்றைய தினம் நங்கை பேசியதை தாங்க முடியவில்லை பெரியவருக்கு ஏன்? எதனால் பிரித்துப் பேசுகிறாள்? இப்போது தான் அவர்களது ஒட்டா தன்மை கண்ணனுக்கு மெல்லிய கோடாக தெரிய அதிர்ந்து போனார் வீட்டுக்குள் நுழையும் வரை தனக்குள் அலசி கொண்டு இருந்தவர்.

நுழைந்த உடன் அறிவழகியை நிறுத்தி விசாரிக்க முந்தி கொண்டு பேச வந்த பிள்ளைகளைப் பேச விடாமல் செய்து விட்டார் அறிவழகி.

ஒரு வேளை பேத்திகள் பேசி இருந்தால் இத்துடன் அத்தியாயம் முடிந்து இருக்குமோ என்னவோ அறிவழகியால் மீண்டும் அது ஒரு கால் புள்ளி போட்டுத் தொடர்ந்தது.

“என்ன அறிவழகி இது? பிரிச்சு பேசுது பாப்பா?.... சின்னதும் பெருசும் உங்க ஆத்தா காரிகிட்ட பொனைகிட்டு இருக்காம் என்ன செய்தி” வந்ததும் வராததுமாக நேரடியாக நிற்க வைத்து தந்தை கேட்க அதிர்ந்து போனார்.

“அது ஒன்னுமில்லங்க ஐயா எனக்குக் கால் வலி செத்து புண்ணு ரணமா இருக்கு அதேன் என் மேல உள்ள கோபத்துல பேசி புடிச்சுங்க வேறு ஒன்னும் இல்லங்க” மழுப்ப பார்க்க

‘செத்து புண்ணுக்காகவா அம்புட்டு பெரிய வார்த்தை’ வாய் வரைக்கும் வந்தாலும் அதனை விடுத்து “உடம்பப் பார்த்துக்கோ சாமி பிள்ளைங்க சொல்லுறதை கேளு” என்றவர்

மனைவியை அழைத்து “செல்லம் புள்ளைங்கள கவனி அதை விட வேற வேலை இல்லை உனக்கு” என்றவர் சிறியவளிடம் தேங்கி நின்று “அது என்ன பேச்சு உங்க குடும்பம்... நம்பக் குடும்பம் இரண்டு கை குவிச்சாதேன் மாறுவதை (மரியாதை) இனி இது போலப் பேசக்கூடாது சரியா” என்க

அவரைப் பார்த்து சிறு புன்னகையுடன் தலை அசைத்தாள் அகர நங்கை அவள் புன்னகை எதோ செய்ய யோசனையுடனே அவ்விடம் விட்டு நகர்ந்தார் நடனதேவர்.

அவர் சென்றவுடன் மலரும் நங்கையும் தனது தாயை முறைத்தனர் செல்லம் மற்றும் ஆவுடையம்மாள் நெருங்கி பிள்ளைகள் தோள் தொட வர இருவரும் ஒன்று போல் விலகி செல்ல தனது தாயை ஏறெடுத்தும் பார்க்காமல் அறிவழகியும் அவர்களுடன் சென்று விட்டாள்.

மூவரதும் ஒதுக்கமும் பயத்தை கொடுக்க “செல்லம் அறிவு பொய் பேசுது என்னமோ சங்கடம் இருக்கு அதுக்கு சொல்ல மாட்டேங்கிதுங்க படப் படனு வருதுடி எல்லாரும் பொனகிக்கிட்டு போனா அவுக பின்னாடி ஓடுற வயசா”

“கத்திரிக்கா முத்துனா சந்தைக்கு வந்து தான் ஆகனும் அதுவரை பொறுமை பழக வேண்டியது தான் வேற வழியே இல்லக்கா........ இந்தச் சின்னது எப்படி போகுது பார்த்தீகளா”

“கொஞ்ச நாள் எதுவும் சரியில்லை காலம் போன கடைசில அவர்கிட்ட அடி வாங்க நமக்கு தெனவு இல்ல பயந்து வருதுடி செல்லம்”

“வுடுக்கா சங்கிலி கருப்பன் இருக்கான் பார்த்துக்கிடுவான்” என்றவர் மேலும் சில சமாதானகள் சொல்லி அவரைத் தேற்றி அனுப்பினார் நேற்றைய தினம் அப்படியென்றால் இன்றைய தினம் பெரிய மகள் அத்தனைப் போரையும் கூட்டி ஒரே ரகளை.

அன்னம் வள்ளியுடைய பெண்ணாக இருந்தாலும் பெண் பிள்ளை இல்லாத குமாரி தான் அவளை வளர்த்தது.குமாரிக்கு ஒரே மகன் என்பதில் பால் குடி மறந்தவுடன் அன்னம் குமாரியின் கையில்...

வள்ளி-சொக்கு,குமாரி - மூக்கையன் தேவன்,ராசியப்பன் - சுந்தரி,சிங்கமுத்து - இளவரசி,அன்னம்,சரசு ,முத்தரசு,செல்வம்,அழகர்,மதியழகி,ரெங்கதேவன் என்று பட்டாளமே கூடி நிற்க வழமை போல் அறிவழகி தனது பெண் பிள்ளைகளுடன் அறையில் முடங்கிக் கொண்டார்.

அனைவரும் அமைதியாக இருக்கக் குமாரி தனது வெண்கல தொண்டையைத் திறந்தார் ஐயா!..........

“என்ன சாமி”

“நேருல கேக்கேன் என் மகளை எடுப்பீகளா மாட்டீகளா” என்றதும் அசையாமல் பெண்ணைப் பார்த்தாரே ஒழிய எதுவும் பேசவில்லை ஆவுடையம்மாள் தான் “என்ன குமாரி இது கொஞ்சம் அமைதியா இரு சடையப்பன் வரட்டும் பேசிக்கிடலாம்”

“ஆத்தா எனக்குப் பொறுமை இல்ல அடுத்தடுத்து பிள்ளைங்க கண்ணாலத்துக்கு நிக்குது அன்னத்துக்கு வழி செஞ்சா தான் அடுத்துக்குப் பார்க்க முடியும்” குமாரி அதே உரத்த குரலில் சொல்லி கொண்டு இருக்க வெளியில் புல்லட் சத்தம் அது யாருடையது என்று கணித்தவர்

“இதோ உங்க தம்பிமார் வராக நீங்களே கேட்டுக்கிடுங்க” என்றவர் வாசலை பார்க்க அனைவரது பார்வையும் அங்கே சென்றது.

வெள்ளை வேட்டி கட்டி அரக்கு சட்டை போட்டு அபார உயரத்துடன் தேக்கு மரகதவின் அகலத்துடன் வந்து கொண்டு இருந்தான் சடையப்பன் பார்க்கவே சற்றுப் பயமாகத் தான் இருந்தது கலையான முகம் என்றாலும் கடுமை கூடுதல் தான்.

உள்ளே நுழைந்தவன் அனைவரையும் இரு கரம் கூப்பி “வாங்க மாமா... வாக்கா...” என்றவன் தனது மாமன்களுக்கு எதிரில் அமர்ந்து கொண்டான் அது மட்டுமா தனது பக்கத்தில் நிற்கும் அக்கா மகளைப் பார்த்து வெகு இயல்பாக “அன்னம் டீ போட்டுக் கொண்டு வா” என்க குமாரி முகத்தில் வெளிச்சம்.

தன்னை முறைத்துக் கொண்டு இருக்கும் தந்தையையும் அண்ணன் மார்களையும் கண்டு கொள்ளாமல் ஒன்றுமே நடவாதது போல “அப்புறம் பூசை நல்ல படிய முடிச்சுதா மாமா” தனது முதல் மாமனும் அக்கா கணவனும் ஆனா சொக்கனை பார்த்து கேட்க

“ஆச்சுங்க மச்சான் நீங்க இல்லாதது தான் குறை”

“என்ன செய்ய அம்புட்டு வேலை மாமா” என்றதும் வெடுக்கின திரும்பி அவனது முகத்தை பார்த்த நடனதேவர்

“கேள்வி பட்டேன் ரொம்ப வேலைத்தேன்” ஒரு மார்க்கமாக அவர் இழுத்து சொல்ல எங்கே காதில் வாங்கினான்.

ராசியப்பன் சிங்கமுத்துவிடம் தணிந்த குரலில் “எம்புட்டு ஏத்தம் பார்த்தியா முத்து”

“இவனை என்ன தாண்ணே பண்ணுறது” சிங்கமுத்து அங்கலாய்க்க உதட்டை பிதுக்கினான் பெரியவன் இவர்களை கலைத்தது குமாரியின் குரல்.

எடுத்த எடுப்பில் “தம்பி நீ உறுதி கொடுத்தீனா நாள் குறிச்சுபுடலாம்”

“என்ன உறுதி? எதுக்கு?”

“என்ன சாமி போன வாரம் தானே பேசிட்டு போனேன் அன்னத்தை முடிக்க”

“அக்கா நான் பிறவு சொல்லுறேன்னு தானே சொன்னேன் உறுதி கொடுக்களையே” என்றதும் குமாரியும் வள்ளியும் அதிர நெஞ்சில் கை வைத்து நிம்மதி பெருமூச்சு விட்டார் சொக்கன் அவரது செயலை பார்த்த மூக்கையன்

“என்ன சகல மச்சான் இப்படி சொல்லுறான்”

“சகல எந்தச் சாமி புண்ணியமோ நல்ல செய்தி சொல்லி இருக்கான் விடுய்யா”

“ஏன் உனக்கு மச்சானை எடுக்குறதுல விருப்பமில்லையா”

“அட நீ வேற உன் சம்சாரமும் என் சம்சாரமும் தான் தம்பிக்கு கொடுக்கனும் ஒத்த காலுல நிக்குதுங்க எனக்கெல்லாம் அசலூர்தேன் முடிவு

“என்னய்யா சொல்லுற வம்பு பண்ணாலும் கருத்து உள்ளவன் சகல”

“கருத்துதேன் சகல ஆனா இந்தப் பைய உடம்பப் பாருயா நம்ப மாமனுக்கு மேல இருக்கான் அது மட்டுமா அவன் சண்டி தனத்துக்கெல்லாம் என் புள்ள தாங்காது அது பதிவிசு சடையப்பனோடு கண்ணாலம்னு சொன்னதுல இருந்து பிள்ளை பயந்து கிடக்கு”

“அதுவும் சரி தான் சகல எனக்கும் யோசனை உண்டு ஆனா சொல்ல முடியாதே பேசியே கொன்னுப்புடுவா என் வூட்டுக்காரி”

“இங்கனையும் அதே நிலைத்தேன்...... நம்மளும் வயசுல அப்படி இப்படித்தான்யா இருதோம் ஆனா இவன் அளவுக்கு மோசமில்ல சாமி கொடுக்காம்பட்டி திருவிழால செம ஆட்டமா இன்னைக்குக் காலையில என் பங்காளி டீ கடையில வச்சுச் சொல்றான் இவன் கூடச் சேர்ந்து சோமு அண்ணே அவுக ஐத்த மகன் கருப்பனும் கூட்டு அது மட்டுமா சகல இடுப்பு உடையுற அளவுக்கு இறங்கி ஆட்டம் வயசு வித்தியாசம் இல்லாம சோமு அண்ணனும்”

ஐயோ! என்று அதிர்ந்தார் மூக்கையன் இருவரும் கிசு கிசு குரலில் பேசி கொள்ள அவர்களைக் கலைத்தது குமாரியின் ஒப்பாரி யும் வள்ளியின் அழுகையும் நொடியில் வீடே ரணகளம் ஆனது.

ஐயா!..... இது சரியில்லை இந்த வூட்டுக்கு என் பேத்தில ஒருத்தியதேன் கட்டுவேன்னு தானே சொன்னீக இப்போ பார்த்தீகளா என்ன சொல்லுறாரு தம்பின்னு”

“முதல கண்ண கசக்குறதை நிறுத்து பொம்பள புள்ள கண்ணீர் நெறைஞ்ச வூட்டுல வேணாம் என்ன மீறி எதுவும் நடக்காது இப்பவும் அதேன் சொல்லுதேன்” என்றவர் பார்வை தனது மகனிடமே அவனும் அவர் பார்வையை ஒரு நொடி தாங்கி அடுத்த நிமிடம் விலக்கி கொண்டான்.

“மச்சான்தேன் வேணான்னு சொல்லருள பிறவு என்ன வுடு அசலூர் பார்த்துக்கிடலாம்” இது தான் சாக்கென்று மூக்கையன் தனது விருப்பத்தை சொல்ல பிடித்து கொண்டார் வள்ளி

“என்ன சுளுவா சொல்றீக ரொம்ப நாள் காத்து கிடாதீகளோ” என்றதும் அலறி விட்டார் மனிதர் இருக்காதா பின்னே நடனதேவர் முன் பேசி வைத்தால்.

“ஏய்!.. ஏய்!... என்ன பேசுற வாழ போறது நம்பப் பொண்ணு விருப்பம் இல்லாம என்னாத்துக்கு அதேன் சொன்னேன்” என்றவர் தனது மாமனாரிடம் தஞ்சம் புகுந்தார்

“மாமா நான் சொல்றது சரி தானுங்க மச்சானை எடுக்க கசக்குமா” போட்டாரே ஒரு போடு

“அடப்பாவி” வாய் பிளந்தார் முக்கையைன்

“சரிதேன் மாப்புள” என்றவர் தனது மகனிடம் நேர் பார்வை கொண்டு சொல்லுக பிறவு துறை யாரை கட்டலாம்னு இருக்கீக நீக எந்த ஊரு ஆட்டக்காரிய பார்த்து வச்சு இருக்கீக எதுவா இருந்தாலும் சொல்லி புடுக எனக்கு வாக்கு முக்கியம் என் மாப்புள,பொண்டு, பிள்ளைக முன்னாடி தலை குனிய முடியாது”

ஆட்டக்காரி என்றதும் கோபம் வர ரோஷமாக சடையப்பன் “உங்க வாக்கு பலிக்கும்”

“அப்புறம் என்ன அன்னத்துக்குச் சரி சொல்ல வேண்டியது தானே”

“பேத்திகளைத் தானே முடிக்கனும் அன்னம் மட்டுந்தேன் பேத்தியா?”

“பிறவு” புருவ சுழிப்புடன் நடனதேவர் கேட்க அன்னம் கொடுத்த காப்பியை வாங்கியவன் அன்னத்தைப் பார்த்து அன்னம் “உனக்கு என் மேல விருப்பம் எதுவும் இருக்கானே” கூடத்தில் தாய் தகப்பன் மாமாக்கள் சூழ நின்று கொண்டு இந்த கேள்வியா என்று எண்ணினாலும் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பற்றியவள்.

“அதெல்லாம் இல்லங்க மாமா ஐயாவும் ஆத்தாவும் யாரை சொல்றாங்களோ அவுங்களை தான் கட்டிக்கிடுவேன்”

“நல்ல புள்ள........ “ சான்றளித்து வள்ளி பேச வர அவரைத் தடுத்த சடையப்பன்.

அக்கா எனக்கு எல்லாரும் முக்கியம் நீ மட்டும் எனக்கு அக்கா இல்லை என்றவன் குறளை உயர்த்தி அறிவுக்கா வெளில வா என்க அறையில் இருந்தவருக்குத் தூக்கி வாரி போட்டது

பேந்த பேந்த முழித்த அறிவழகி இரு பிள்ளைகளையும் பார்க்க “ம்மா மாமா கூப்புடுது”

“எதுக்குடி என்ன கூப்புடுறான்”

“போன தானே தெரியும்”

ஹ்ம்ம் என்றவர் எழுந்து செல்ல மலரும் அவருடன் சென்றாள் அகர நங்கை........இருவரும் வந்து கூடத்தில் ஒரு ஓரமாக வந்து நிற்க.

“இங்கன வா” என்று தனக்குப் பக்கத்தில் உள்ள இடத்தைத் தட்டி காட்ட தலையசைத்து மறுத்தார் அறிவு

“சொல்லு தம்பி”

“இங்கன வா” சொல்லுதேன் மீண்டும் அவள் தலை அசைத்து மௌனம் கொள்ள மலர் அவளது கை பற்றி அழைத்துச் சென்று தனது மாமனிடம் அமர்த்தி அவளும் பக்கத்தில் நின்று கொண்டாள்

அனைவருக்கும் எதுவோ புரிந்தது போல் இருந்தது பெரியோர்கள் கண்ணில் ஓர் ஆர்வம் நெளிந்து கொண்டே அமர்ந்த அறிவின் கையைப் பற்றிய சடையப்பன் அதனைத் தடவி கொடுத்தவாறே “முதல என்ன மனுச்சுக்கிடு அக்கா”

தம்பியின் செயலில் ஒன்றும் புரியாமல் பாவமாக முழித்தார் அறிவழகி “என்ன தம்பி இது....”

“நான் என்ன தப்பு பண்ணாலும் மன்னிப்பியா”

“என்ன தப்பு பண்ணீக அதுவும் என்கிட்ட மன்னிப்பு கேட்குற அளவு” இருவரது உரையாடலையும் கவனித்துக் கொண்டு இருந்த அத்தனை பேரும் புரியாமல் பார்த்திருந்தனர் அதுவரை அமைதியாக இருந்த சிங்கமுத்து ராசியப்பன் இருவரும் “சடை என்ன பேசனுமோ சட்டுனு பேசி முடி” என்றதும்.

வேகமாக எழுந்தவன் உள்ளே செல்ல சிங்கமுத்து கடுப்பாகி “என்ன அண்ணே பண்ணுறான் ஒன்னும் விளங்கள போங்க”

“இவனை சமாளிக்க முடியலடா சாமி இரு என்ன பண்ணறானு பார்ப்போம்”

இளவரசி சுந்தரியிடம் “அக்கா என்னக்கா கொழுந்து ஒரு தினுசா பேசுது வேகமாக உள்ளர போகுது ஒன்னும் புடிபடல”

“யாருக்குடி தெரியும் எனக்கே பதட்டமா இருக்கு”

“சரிதேன்” அந்த வீட்டு மருமகள்கள் தங்களுக்குள் பேசி கொள்ளச் சகல பாடிகள் அவர்களுக்குள் பேசி கொள்ள அக்கா தங்கைகள் அவர்களுக்குள் கிசு கிசுக்க இளவட்டம் அனைத்தும் படு ஆர்வமாக நின்றது.

அனைவரையும் சில மணி நேரங்கள் பதட்டத்தில் வைத்தவன் கை நிறையப் பூக்களை அள்ளுவது போல் அள்ளி கொண்டு வந்தான் அகர நங்கையை அவனது செயலை பார்த்து நடனதேவர் எழுந்தே விட்டார்

அறிவு,குமாரி,வள்ளி,சுந்தரி,இளவரசி எனப் பெண்கள் பதறிக் கொண்டு வந்தனர்

“தம்பி என்ன இது புள்ளைய வுடுக” என்று சுந்தரி பக்கத்தில் செல்ல அவனோ இறுக்கப் பற்றி இருந்தான் கையில் துள்ளி கொண்டும் அவனைச் சரமாரியாக அடித்துக் கொண்டு இருந்தாள் அகர நங்கை.

“விடு..... விடு.... விடு...... மாமா” என்று ஓயாமல் அடித்து கொண்டும் துள்ளி கொண்டும் இருந்தவளை “அடங்குடி சின்னச் சிறுக்கி” என்று ஒரு அராட்டு போட்டவன் அவளை இறக்கி விடத் துள்ளி குதித்து ஓட பார்த்தவளை அமுக்கி பிடித்து அனைவரும் முன் நிறுத்தினான்.

அதிர்ந்து பார்த்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கப் பாவாடை சட்டையில் இருந்தவளது சட்டைக்குள் வெகு இயல்பாகக் கை விட்டு தான் கட்டிய தாலியை வெளியில் எடுத்து போட்டான்

அறிவழகி அதிர்ந்து நின்றது ஓர் நொடி தான் பின்பு “என்ன காரியமடி பண்ணி வச்சு இருக்க” அடிக்க வர தனக்குள் அவளைப் பொதித்துக் கொண்டவன் ஓர் கையால் தனது அக்காளின் கை பற்றி தடுத்தவன்.

“அக்கா ஒரு நிமிஷம்நான் சொல்லுறதை கேளு அவளுக்குத் ஒன்னும் தெரியாது நாந்தேன் தூக்கிட்டு போயி கட்டுனேன் அடிக்கனுமா என்ன அடி” என்று நின்றவனை இயலாமையோடு பார்த்து நின்றாள் அறிவழகி

பெரியர்வர்கள் அனைவருக்கும் பேச்சே வரவில்லை ஆவுடையம்மாள் சுந்தரியிடம் “சுந்தரி நங்கையைக் கூட்டிட்டு உள்ளர போ” என்க அவரும் அவளை அழைக்க விட மறுத்தான் சடையப்பன்.

“அவ இருக்கட்டும் மதனி கண்ணாலம் பண்ணி மூனு வருஷம் தனுச்சுக் கடந்தது போதும் இனி விட முடியாது பேசிப்புடலாம்” நடனதேவர் மௌனம் கொள்ள அனைவரும் அவரைத் தான் பார்த்தனர் கனவிலும் எண்ணத்திலும் எட்டா செயல் மகன் செய்தது அந்தப் பெரியவருக்குச் சற்று சறுக்கல் தான்

ஐயா!... தனது தந்தையை அழுத்தமாக அழைக்க அவனைப் பார்த்தவர்

“நா அய்யன் னு இப்போதேன் தெரியுதுங்களா சரி சொல்லுக அப்பன் ஆத்தாளுக்குக் கூடத் தெரியாம கண்ணாலம் பண்ணுற அளவுக்கு என்ன சங்கதி அதுவும் உருத்து உள்ள உறவு அக்கா மக நாங்க தடை சொல்லலையே பிறவு எதுக்கு இந்தத் திருட்டுக் கண்ணாலம் விளங்களா சாமி”

“உசுரா விரும்புனே கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டா அதேன்தூக்கிட்டுப் போயிட்டேன்”

“விரும்பம் இல்லாத பொண்ண தொடராது அசிங்கம் ஆம்பள தனம் இல்ல”

“விருப்பம் இல்லாமலா கட்டுன தாலியா மறைச்சு வச்சு இருக்கா அறுத்து போட்டு போக வேண்டியது தானே நான் கட்டி வருஷம் மூணு ஆச்சுங்க ஐயா” அசராமல் சொன்னான் சடையப்பன்

“ஆத்தி மூணு வருசமா சகல” சொக்கன் நெஞ்சில் கை வைத்து மூக்கையனிடம் முனங்க

“இருயா இன்னும் கேட்போ”ம்

“நங்கை நீ சொல்லு” நடனதேவர் நங்கையிடம் கேட்க மௌனம் பெண்ணிடம்

“நீ இந்தக் கண்ணாலத்தை ஏத்துக்குரியா”

குரலே வெளியில் வராமல் “ஹ்ம்ம்” என்றாள் பெண்

ராசியப்பன், சிங்கமுத்து, சுந்தரி, இளவரசி, வள்ளி, சொக்கன் குமாரி, மூக்கையன் தேவன் ,ஆவுடையம்மாள், செல்லம்மாள் நடனதேவர் அது போகச் செல்வம், அழகர், மதியழகி ,சரசு அன்னம் ,ரெங்கதேவன் ,மலர் என நடனதேவர் குடும்பமே மண்டையை உடைத்துக் கொண்டது இப்படிப் பார்த்தாலும் அவர்களது கேள்விக்கு விடையில்லை

சடையப்பன் வீட்டில் இருப்பது அரிதிலும் அரிது மற்ற இளவட்டங்கள் கூடி கூத்தடித்தாலும் மலர் மற்றும் நங்கை வர மாட்டார்கள் பேசி கூடப் பார்த்ததில்லை.

அகர நங்கை மீது விருப்பம் இருக்கக் கூடும் என்பதைக் கனவில் கூட யாரும் கணிக்கவில்லை போலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அதிர்ச்சி.

அனைவரும் பார்க்க நடனதேவர் வெளிநடப்புச் செய்து விட்டார் அவர் பின்னில் வால் பிடித்தது போல் அனைத்து ஆண்களும் பதறி கொண்டு ஓட பெண்கள் சடையப்பனை சூழ்ந்து கொள்ள முயல சுதாரித்தவன் அகர நங்கையை மீண்டும் தோளில் தூக்கி கொண்டு.

அங்கிருந்த பெண்களைப் பார்த்து “நான் என் பொஞ்சாதி கூடப் பேசிட்டுப் பிறவு வந்த உங்களுக்கு விளக்கம் சொல்லுதேன் என்ன”

“சாமி இது தப்பு புள்ள பயந்துக்கும் கீழ விடு பேசிக்கலாம்” ஆவுடையம்மாள் தன்மையாகச் சொல்ல சட்டமாக மறுத்து விட்டான்

“முடியாது ஆத்தா கொஞ்சம் நாழி செண்டு அனுப்புறேன் அப்புறம் கண்ணாலத்தைப் பத்தி எது கேட்கனு முண்டாலும் என்ன கேளுங்க அவ கிட்ட பேச வேணாம் என்ன அண்ணி” என்று சுந்தரியை பார்த்து கேட்டு வைக்க

அவரோ பதறி “சரிங்க தம்பி” என்றாள் அறைக்குள் வந்து தான் நங்கையைக் கீழே இறக்கி விடச் சரமாரியான அடி... அடித்தவளுக்குத் தான் கை வலித்தது.

“எல்லாரும் என்ன நினைப்பாங்க நீ ஏன் இ ப்படி பண்ண மாமா” என்று மீண்டும் அடித்து வைத்தாள் கை தான் வலிக்குது ஓய்ந்து கட்டிலில் அமர்ந்தவளது மடியில் சட்டமாகப் படுத்துக் கொண்ட சடையப்பன்.

சுகமாகக் கட்டிக்கொண்டு கண்களை மூடி அந்தக் கனத்தை அனுபவித்தவன் மெதுவாக

என்ன தெனவு இருந்தா வூட்டவுட்டு போக அக்காளும் தங்கச்சியும் முடிவு எடுப்பீக என்றதும் அதிர்ந்து போய் அமர்ந்து விட்டாள் நங்கை.

இவன் சரியான வம்பு நாட்டான் டோய்...............
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top