அசோகாஷ்டமி

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அசோகாஷ்டமி

பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது.

சுகம் தரும் மருதாணி மரத்திற்கு வட மொழியில் அசோகம் என்று பெயர்.
சோகம் என்றால் துன்பம்.
அசோகம் என்றால் துன்பமில்லாதது.
அதனால் அசோகாஷ்டமி என்று பெயர்.
ஶ்ரீராம நவமி அன்றோ அல்லது அதற்கு முதல் நாளோ வரும்.
அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களை பயிர் செய்விக்கலாம்.
மருதாணி மரம் இருக்கும் இடத்திற்கு சென்று அதற்கு தண்ணீர் ஊற்றலாம்.
மூன்று முறை வலம் வரலாம்.
முட்கள் இல்லாமல் ஏழு மருதாணி இலைகளை பறித்து அதை கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

த்வாம சோக நராபீஷ்ட மது மாஸ ஸமுத்பவ;

பிபாமி சோக ஸந்தப்தோ மாம் அசோகம் ஸதாகுரு.

ஓ மருதாணி மரமே
உனக்கு அசோகம் (துன்பத்தை போக்குபவன்) எனப் பெயர் அல்லவா
மது என்னும் வஸந்த காலத்தில் நீ உண்டாகி இருக்கிறாய்.
நான் உனது அருளை பெறுவதற்காக உனது இலைகளை சாப்பிடுகிறேன்.
நீ பலவித துன்பங்களால் எரிக்கப்பட்டவனாய் இருக்கும் எனது துன்பங்களை விலக்கி வஸந்த காலம் போல் எவ்வித துன்பம் இல்லாமல் என்னை எப்போதும் பாதுகாப்பாயாக என்பதுதான் இதன் பொருள்.

இதை சொல்லி மருதாணி இலைகளை சாப்பிடவேண்டும்.
இதனால் நம் உடலில் தங்கி இருக்கும் பற்பல நோய்கள் துன்பத்திற்கு காரணமான பாபங்களும் விலகுகிறது என்கிறது லிங்க புராணம்.

மருதானி மரத்திற்கு வடமொழியில் அசோகம் என்றுபெயர்.
ராவணன் இலங்கையில் சீதையை மருதாணி மரம் அடர்ந்த காட்டில் சிறை வைத்தான்.
அரக்கிகளை பாதுகாப்பிற்கு வைத்து அவர்களை பயமுறுத்த சொன்னான்.
அரக்கிகளும் சீதையை பயமுறுத்தினார்கள்.
இதனால் பதிவிரதையான சீதாதேவி பத்து மாதங்களும் மிக துன்பத்தை அனுபவித்தாள்.
தனது துன்பங்களை சீதாதேவி இந்த மருதாணி மரங்களிடம் சொல்லி அழுது கொண்டிருந்தாள்.

அந்த சீதாதேவியின் கதறலை கருணையோடு கேட்ட அசோக மரங்களும் தனது கிளைகளாலும் இலைகளாலும் சீதையை சமாதானபடுத்தின.
மரங்களும் சீதையை துன்பத்திலிருந்து காப்பாற்றுமாறு கடவுளை ப்ரார்த்தித்தன.

இறுதியில் சீதா ராமர் அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டார்.
அப்போது சீதை இந்த அசோக மரங்களை நோக்கி தங்களுக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார்.

பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்த துன்பம் வேறு யாருக்கும் வரக் கூடாது.
குறிப்பாக பதிவிரதைகளுக்கு வரக் கூடாது எனக் கேட்க சீதாதேவியும் மருதாணி மரங்களான உங்களை யார் ஜலம் விட்டு வளர்க்கிறார்களோ? பூஜிக்கிறார்களோ?உன் இலையை கைகளில் பூசிக் கொள்கிறார்களோ? உன் இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ? அவர்களுக்கு எந்த துன்பமும் நேராது என்று ஶ்ரீ ராமரின் அனுமதியுடன் வரமளித்தாள்.

ஆகவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக் கொள்கிறார்கள்
சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே அசோகாஷ்டமி நாளாகும்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Good information akka..
Nalaiku enna visheshamo athu neenga muthal naal sollalamey..apo nalaiku engalku pooja seiya easya irukum...Nan ellam online varuvathu afternoon thaan...
எனக்கே இன்னிக்குத்தான் இந்த மெசேஜ் வந்ததுப்பா
அதனால என்ன?
முடிந்தால் இன்னிக்கு பண்ணுங்க
இல்லாட்டி நாளைக்கு பண்ணுங்க
நமக்கு எல்லாமே நல்ல நாட்கள்தான்ப்பா உமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top