E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Gomathi1986

Well-Known Member
நாமெல்லாம் ஒரே இனம்....அதானே முகமறியாவிட்டாலும் நட்பாக இருக்கிறோம்....நம் இணைப்பு பாலம் மல்லி என்றாலும்....அதன் செங்கல்கள்....கம்பிகள்...புத்தகங்களே...எல்லோரிடமும் இருக்கும் நிச்சயமாக..
:)
Correct madam....naam theevira vasagargalai irupadhal puthagangal Mattum alla ithinai natpugalum kidaithulladhu....it is heavenly to be with like minded people....thanks to malli madam
 

ThangaMalar

Well-Known Member
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்

ஒரு ஆசை மனைவிப்போல் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
ஒரு தாயே நான் என் சேய் நீ
இந்த உறவுக்கு பிரிவேது

தாய்மடியில் சேய்தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியில் விடலாமா

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ

இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் சொல்வேன் தவறாது

என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
 

murugesanlaxmi

Well-Known Member
யாரையும் மட்டமாக எடை போடாதே
********************************

ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,"எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றார்.
உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதிய பெண்மணியிடம்
,"ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றாள்
உடனே அந்த முதியவள்
,"ஏன்?" என்று கேட்டார்.
உடனே அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன் அந்த முதியவளிடம்
,"இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்று கூறினாள் சற்றே கடுமையுடன்
அந்த முதிய பெண்மணி இப்பொழுது அமைதியாக நின்றார்.
அவர் தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து
,"தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்துவிடுங்கள்" என்றார்.
அந்த கேஷியர் பெண் அந்த முதியவர் அக்கவுண்டில் உள்ள பண நிலுவையை பார்த்த பொழுது அதிர்ச்சியானாள்.
அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவளிடம்
, "என்னை மன்னித்து கொள்ளுங்கள் பாட்டி, உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது, எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை ஒரு நேரம் ஒதுக்கி வர இயலுமா? என்று மிக பணிவோடு பவ்யமாக கேட்டாள்
உடனே அந்த முதிய பெண்மணி"இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்
?" என்று கேட்டார்.
உடனே அந்த பெண்
,"மூ்ன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றாள்
உடனே அந்த முதியவள் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று கூறினார்.
அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள்.
அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு
மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னார்.
அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள்.....
சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும்
, நாம் மனிதர்கள் சில சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகலாம்.
ஒருவருடைய தோற்றத்தையோ
, உடையையோ வைத்து ஒருவரை எடை போட கூடாது.
மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.
ஒரு அட்டைப் படத்தை வைத்து அந்த புத்தகத்தை கணிக்க கூடாது...



 

murugesanlaxmi

Well-Known Member
புரண்டு படுத்தால் நாம் இறந்துவிடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட தொலைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன் அம்மா
 

murugesanlaxmi

Well-Known Member
ஒரு தம்பியின் மகா புலம்பல்:-
அழகில்லாத ஆண்களை இறைவன் இன்னும் படைக்கவில்லை,,,,
ரசனை இல்லாத கண்களைதான் சில பெண்களுக்கு படைத்து விட்டான்...!!
 

murugesanlaxmi

Well-Known Member
ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர்முன்னால்வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில்எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான்அவருக்குசோறுவழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்


திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம்ஆரம்பமாகிறது


எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "


அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது


அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது


உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"
திரு தென்காசிசுவாமிநாதன் அவர்களின் கதை
 

murugesanlaxmi

Well-Known Member
ஒருவர் காபி ஷாப் விட்டு வெளியே வரும்
போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்தார்
ஒரு சவப்பெட்டி முதலில் எடுத்து செல்கிறார்கள்
அதை தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது
அதற்க்கு பின்னால் ஒரு மனிதன்
கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்
அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக 200
ஆண்கள் நடந்து செல்கிறார்கள் .
இதை பார்த்த காபி ஷாப் மனிதருக்கு ஒரே ஆர்வம்
அடக்க முடியவில்லை .
அவர் கருப்பு நாயுடன்
நடந்து கொண்டிருந்தவரிடம்
சென்று,
என்னை மன்னிக்கவும்
உங்களை தொந்தரவு
செய்வதற்கு ...
ஆனால் இந்த
மாதிரி ஒரு இறுதி ஊர்வலத்தை நான் என்
வாழ்கையில் பார்த்தது இல்லை
எல்லோரும்
ஒரே வரிசையில் உங்கள் பின்னால்
வருகிறார்கள்
இது யாருடைய
இறுதி ஊர்வலம் என்றார். அதற்கு அந்த மனிதன்
முதல் சவப்பெட்டி என் மனைவி உடையது
என்ன ஆயிற்று உங்கள் மனைவிக்கு ??
என்னுடைய நாய்
அவளை கடித்து கொன்று விட்டது ...
இரண்டாவது சவப்பெட்டி ??
என்னுடைய மாமியாருடையது !!
அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் கொன்று விட்டது ...
ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு முதல் மனிதர் அவரிடம் கேட்டார்
"
இந்த நாயை எனக்கு சிறிது நாட்கள் தர
முடியுமா "
அதற்க்கு அவர் சொன்ன பதில்
.
.
.
.
.
.
.

பின்னால் வரும் வரிசையில் போய்
நில்லுங்கள் !
படித்ததும் சிரித்துவிடுங்கள் மீ பாவம்

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top