E4 Nee Enbathu Yaathenil

Advertisement

malar02

Well-Known Member
Hi mam

இலகுவாக கூறுவிட்டீர்கள் பலமான நிராகரிப்பு என்று,உண்மைதான் ஆனால் உயிரும் உணர்வும் உள்ள பெண்ணை பொருளைப்பரிசோதித்து நிராகரிப்பதுபோன்று அச்சிறுபெண்ணையும் சில நாட்கள் பரிசோதித்து நிராகரித்துவிட்டார் கண்ணன்,விருப்பமில்லாத திருமணம் என்பதை சுந்தரிக்கு சொற்ப நாள் வாழ்ந்து காட்டித்தெரியப்படுத்தவேண்டிய அவசியமில்லை கண்ணனுக்கு,விருப்பமின்மையை திருமணத்திற்கு முன்பே காட்டி திருமணத்தை நிறுத்தியிருக்கவேண்டும் ,அல்லது தவிர்க்கமுடியாத காரணத்தால் திருமணம் நடந்தாலும் அவசரமாக முடிவெடுக்காமல் இப்போது யோசித்தது போன்று நிதானமாக யோசித்து அவருடன் பழகியிருந்தால் மனம்விட்டுப்பேசியிருந்தால் ,அவரின் பழக்கவழக்கம் பண்பு குணம் போன்ற செயல்களைப்பார்த்து,பழகப்பழக நாளடைவில் தோன்றும் பாசமானாது நாளாக நாளாக அதுகாதலாக மாறியிருக்கும்,தோற்றத்துக்கான முக்கியத்துவம் பின்னடைந்து சுந்தரிக்காகவே சுந்தரியை காதல்செய்திருப்பார்,ஆறஅமர இப்போது வந்து பார்த்து,பார்த்தவுடனே கொஞ்சமேனும் சுந்தரி மரியாதையாகவோ அல்லது பாசமாகவோ அல்லது குழந்தையை காட்ட வேண்டுமென்று நினைப்பதில் நியாயம் இல்லை,அது கண்ணனுக்கும் புரிந்துதான் இருக்கின்றது,எனக்கு என்னவோ வெறும் நன்று கூறிச்செல்வதற்காக வந்தமாதிரித் தெரியவில்லை,சின்ராசு மாதிரி ஆட்களை கொஞ்சம் கவனத்தில் வைக்கவேண்டும் சுந்தரி,தன்னுடைய ஏமாற்றுத்தனம் சுந்தரிக்கு தெரிந்துவிட்டது அதனால் இனி திருந்தவோம் என்று நினைக்காமல் அடக்கிவாசிப்போம் என்று நினைக்கின்றார்,ஆபத்தான மனிதர்போல,இவரால்தான் சுந்தரியின் வாழ்க்கையில் கண்ணன் மீண்டும் நுழைவார் என்று நினைக்கின்றேன் .சுந்தரிக்குள் கண்ணனைப்பற்றி ஏதோவொரு உணர்வு இருக்கின்றது ,அதற்கு அவருக்கு பெயர்தெரியவில்லை,ஏனெனில் இதுவரை அழாத பெண் அன்று அழுததும், இதுவரை கண்ணனைப்பற்றி பேசாதவர் இன்று பேசியது ,எதுவோ இருப்பதனால்தான் இச்செயல்கள் நடந்திருக்குது,பொறுத்திருந்துபார்ப்போம்.

நன்றி
Aravin22​
photo.jpg
 

malar02

Well-Known Member
பொன்னம்மா செம போங்க, இதையும் நான் நினைச்சேன் ஊர்ல எவ்வளவு பேரு வண்டி ஓட்டி இருப்பாங்க... எல்லாரையும் இவ இப்படி தான் பார்ப்பாளா என்ன உரிமை இன்னமும் எங்கயோ அவ மனசுல ஒட்டியிருக்க போய் தானே அவனை பார்த்து ரசிக்க முடிஞ்சுது...
பின்ன அவள் பெண்மையையை உணரசெய்த்தவனின் வாசனை ஓட்டிட்டு தான் இருக்கும் உயிர் இருக்கும் வரை போகாது அந்த வாசனை அதுமட்டுமா அந்தவாசனையே இடுப்புல வச்சிக்கிட்டு சுத்தறா எப்படி மறக்கும்
 

malar02

Well-Known Member
Hi.....பூவிழி.....
பெண்களைத்தான் ,எப்படி கரை சேரப்போகிறாள்
என்று சொல்லுவார்கள்.
்நீங்கள்,அவன் எப்படி கரை சேர்ப் போகிறான்,
என்று கூறியது, நல்ல காமெடிதான்...:D
அவன் நிலமையைப் பார்க்கும் பொழுது
அப்படித்தான் தோன்றுகிறது...

வார்த்தையாடல் அவனுக்கு வராது,
எப்பொழுதும் சுந்தரி தான் upper handஆ
இருப்பாள் போல.....
நேரத்திக்கடனை,நிறைவேற்ற அடிக்கடி வருவானா????


தன் அம்மா மீது பாசம் இருந்தாலும்,
அவர்கள் மீது அவனுக்கு ஒரு கோபம் இருக்கின்றது....
காரணம் என்னவாக இருக்கும்....


பாரதியாரின் வரிகளை,பொருத்தமான தருணத்தில்
குறிப்பிட்டுள்ளீர்கள்...
அதற்கு நியாயம் செய்வாள் என்று நம்புகிறேன் ..
வந்துதான் ஆகணும் புள்ள கடன் இருக்கே பொண்டாட்டி வேற இரும்பா இருக்கா இளக வைக்கறத்துக்குள்ள கை காலை சுட்டுகிட்டு தான் ஆகணும் முன்னமாதிரியா தன் ரத்தவாசனையை மோர்ந்தாச்சு இப்ப
 

malar02

Well-Known Member
அப்பாவின் கட்டாயத்தினால் பிடிக்காத பெண்ணை திருமணம் செய்யும் கண்ணன் திருமணமாகி நான்கைந்து நாட்கள் மட்டுமே மனைவியுடன் இருந்து விட்டு படிப்பை முன்னிட்டு வெளியூர் சென்றுவிடுகிறான்.

அப்பா வீட்டுக்கு சென்ற மருமகள் கர்ப்பவதியாக இருக்கிறாள் என கேள்விபடும் மாமியார் நிச்சயம் அவளது கர்பத்தை நல்ல விதமாக பார்த்திருக்க வாய்பில்லை.


பிடிக்கவில்லை என கூறிய மகன் அவளுடன் தனது படுக்கையை பகிர்ந்திருப்பான் என்று விமலா எதிர்பார்த்திருக்கமாட்டார். இதனால் சுந்தரி கர்ப்பம் என்றதும் ஒரு பிரளயமே நிகழ்ந்திருக்கும் என்று தோன்றுகிறது ராணிமா. இது என்னோட கனிப்பு. வேறு ஏதேனும் பிரச்சினையாக கூகூட இருக்கலாம்.
MM-மே
பூரி சுடட்டும் பா அந்த நான்கு நாட்களுக்கு என்ன பூரி சுட்டு இருக்கங்கானு தெரியலை சோள பூரியா ஸ்டாப்புடு பூரியா சின்ன சின்ன பூரியா நீங்கஎல்லோரும் கொஞ்சம் மாவு பிசையுங்கன்னு மாவு பிசையவிட்டுடாங்க
 

ThangaMalar

Well-Known Member
என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
ஓர பார்வை பார்க்கும் போதே
உயிரில் பாதி இழந்தேன்
மீதி பார்வை பார்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை
உனக்கே உனக்கே
 

Manimegalai

Well-Known Member
என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
ஓர பார்வை பார்க்கும் போதே
உயிரில் பாதி இழந்தேன்
மீதி பார்வை பார்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை
உனக்கே உனக்கே
இந்த பாட்டு அன்னு பாடுவா....சூர்யகிரிவாசன் பார்த்து....எனக்கு பிடிச்ச பாட்டு.
 

Adhirith

Well-Known Member
பின்ன அவள் பெண்மையையை உணரசெய்த்தவனின் வாசனை ஓட்டிட்டு தான் இருக்கும் உயிர் இருக்கும் வரை போகாது அந்த வாசனை அதுமட்டுமா அந்தவாசனையே இடுப்புல வச்சிக்கிட்டு சுத்தறா எப்படி மறக்கும்

பெண்மையை உணரச் செய்தாலும்,
அந்த பெண்மையை மதிக்காமல்
நாலு நாட்களில் தூக்கி எறிந்து விட்டு
சென்றவன் தானே???????

காயம் பட்ட பெண்மை
தனக்கு நேர்ந்த அவமானதை
விட அந்த வாசனையை
நினைவில் நிறுத்தி அவனை
ரசனையோடு பார்க்குமா.....?????


அவள் அவனைப் பார்த்ததின்
காரணம் தன் மகனோடு உருவகப் படித்தி....
எனவே அது ஒரு தாயின் ரசனையாக
தான் எனக்கு தோன்றியது....







 

Adhirith

Well-Known Member
வந்துதான் ஆகணும் புள்ள கடன் இருக்கே பொண்டாட்டி வேற இரும்பா இருக்கா இளக வைக்கறத்துக்குள்ள கை காலை சுட்டுகிட்டு தான் ஆகணும் முன்னமாதிரியா தன் ரத்தவாசனையை மோர்ந்தாச்சு இப்ப

Legally separated....
No emotional bonding between them....
இணைக்கும் ஒரே பாலம் மகன் மட்டுமே....
்சேலத்தின் எஃக்கா இறுகிப் போய் இருப்பவளை,
வாசம் மிகுந்த மல்லியாக எப்படி
மலரச் செய்யப் போறீங்க.....
மல்லி மேடம்......?????????


கதையை பற்றிய ஆழமான விவாதத்திற்கு
உங்களின் கருத்துகள் காரணமாகின்றன.....
பூவிழி,உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top