Advertisement

                      அத்தியாயம் 6

ரீனாவிடம் பேசிவிட்டு திரும்பிய ஆராத்யா அங்கு நின்றுகொண்டிருந்த ஆத்ரேயனை கண்டு திருட்டு முழி முழித்தவள், அசடு வழிந்துக்கொண்டே வெயில் செல்ல போக
ஆத்ரேயன் “ஒரு நிமிஷம்”
“ஆத்தி மாட்டுனேன்னா.. போச்சு போச்சு.. இன்ட்ரோ ஆகுறதுக்கு முன்னாடியே பிரேக் அப் தான்.. அசிங்கமா திட்ட போறான்” என புலம்பிக்கொண்ட திரும்ப,
ரேயன் அவளை ஆழமாக பார்த்துக்கொண்டே “உன்னோட பர்ஸ்” என்று கிழே விழுந்து கிடந்த பர்ஸை கொடுக்க,
ஆரு “ஆஹ்.. தேங்க்ஸ்” என்று வாங்கிக்கொண்டாள். அத்து அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி சென்றான்.

அவன் சென்றவுடன் தான் ஆரத்யாவிற்கு மூச்சே வந்தது.
“ஊப்.. நல்ல வேளை அவன் எதுவும் கேட்கல போல.. தப்பிச்சேன்” என நினைத்துக்கொண்டு நேஹாவை அழைத்துக்கொண்டு சென்றாள்.

அலைபேசியை மறந்துவிட்டதாக மீண்டும் வகுப்பறைக்குள் நுழையும் போது தான் அப்பெண்கள் பேசியதும் அவள் பேசியதும் அவன் காதில் விழுந்தது.
முகத்தை ஏதோ போல் வைத்துக்கொண்டு வந்தவனை பார்த்த கிஷோர் “ரேயா டேய் என்ன ஆச்சு போன் எடுத்தாச்சா”
“ம்ம்ம்”
“என்ன உன் பல்ப் பியூஸ் போயிருக்கு”
“இல்ல ஒன்னுமில்ல போலாம்” என்றான் சமாளிப்பாக.
கிஷோர்  “யார் அந்த பொண்ணு”
“டேய் என்ன” என்றான் அதிர்ந்து.
கிஷோர் அசட்டையாக “சொல்றா டேய்.. வேற எதுக்கும் உன் முகம் இப்படி கேவலமா மாறாது”
“இல்லடா போன் எடுக்க போனேன்ல.. அப்போ சில பொண்ணுங்க பேசுற சத்தம் கேட்டுச்சு.. சரி போலாம்னு தான் பார்த்தேன் ஆனா”
“ஆனா…”
“என் பெரு அடிப்பட்டுச்சு.. அதுவும் ஆத்ரேயன் இல்லையாம் அத்துவாம்”
“எது.. யாருடா அது.. என்ன தவிர உன்ன அப்படி கூப்பிடறது அதுவும் இங்க”
“ம்ம் நானும் என்னனு பார்த்தேன்” என்று தொடங்கியவன் நடந்தவற்றை கூறி முடிக்க
கிஷோர் “அட்றா சக்க.. வந்த ரெண்டு நாள்ல கம்மிட் ஆகிட்டியா”
“பல்லை பேத்திடுவேன்.. அவ யாருனே தெரியாது எனக்கு” என்றான். ஆம் நேற்று அக்னி இழுத்துக்கொண்டு செல்லும் போது கூட அவள் பின்புறம் மட்டுமே இருவருக்கும் புலப்பட்டது, அவள் அக்னியின் தோழி என்று தெரிந்தால் அவன் என்ன செய்வான் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கிஷோர் “நம்ம கிளாஸ்ல பார்த்திருக்க.. அப்போ பெயர் தெரியலையா”
“இல்லடா நிஜமா தெரியல”
“சரி சொல்லு என் தங்கச்சிகிட்ட என்ன சொல்லிட்டு வந்த” என்றவனை ஆத்ரேயன் வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்க்க,
கிஷோர் அசடு வழிந்துவிட்டு “சரி முறைக்காதா.. என்ன சொன்ன அந்த பொண்ணுகிட்ட”
“என்ன சொல்லணும்.. நான் எதுவும் சொல்லல”
“என்ன அவளை திட்டுல” என்று நெஞ்சில் கைவைத்து கிஷோர் கேட்க,
“இல்ல”
“வாட்.. ஏன்.. வை.. அதிசயமா இருக்கே”
“டேய் நான் என்னிக்கி திட்டிருக்கேன்”
“நீ அவாயிட் பண்ணுவ.. ஆனா இப்படி பேசிருக்கானா அட்வைஸாச்சு பண்ணிட்டு வந்திருக்கனுமே” என கேள்வியாய் பார்க்க
“…..”
“சரியில்லையே சம்திங் பிஷ்ஷி”
“ஷட் அப்.. இதை  பெருசாக்கா வேண்டாம்ன்னு தான் எதுவும் கண்டுக்காம வந்துட்டேன்.. அண்ட் இவ சொன்னதால அந்த இன்னொரு பொண்ணு என்ன பார்க்காம இருப்பா..”
“அப்போ இவ பார்த்தா ஒகே வா”
“இவளும் தான்.. நேர்ல திருப்பி எதாச்சு பண்ணா அப்போ பார்த்துக்கலாம்”
“நீயெல்லாம் எங்க உருப்பட போற” என கிஷோர் தான் தலையில் அடித்துக்கொண்டான்.

____________________________

அக்னி ஸ்மிருதியை அழைத்து வர சென்றிருந்தான். பள்ளியின் வாசலில் கதிரை எதிர்பார்த்துக்கொண்டு நின்றவள் அக்னி வருவதை கண்டு துள்ளி குதித்து சென்றாள், அவளுக்கு அக்னி என்றால் கொள்ளை பிரியம் அதே போல் தான் அக்னிக்கும் அவள் என்றால் தனி பிரியம்.

ஸ்மிருதி “ஹாய் அக்னி ண்ணே.. நீ என்ன பண்ற இங்க” என்று சிரித்துக்கொண்டே கேட்க,
அக்னி “ஏன் உன் நோண்ணேன் கூப்பிட்டு போனா தான் போவியா”
“அப்போ நீ யாரு” என்று முறைத்தவளை பார்த்து இளமுறுவள் புரிந்தவன்
“உன்கிட்ட பேசமுடியாது பாப்பா.. ஏறு போவோம்”
“அந்த பயம் இருக்கனும்.. சரி எங்கயாச்சு போயிட்டு போவோம்”
“நான் வந்தா நீ இதான் சொல்லுவன்னு தெரியும்.. சாப்பிட்டு பீச் போயிட்டு போவோம்”
“வேற லெவல் ண்ணே நீ” என்றவள் உற்சாகமாக வண்டியில் ஏறினாள்.

ஸ்மிருதி கதிருக்கு அப்படியே நேரெதிர், எது வேண்டும் என்றாலும் அக்னியிடம் உரிமையாய் கேட்டு வங்கிக்கொள்வாள். அது தான் அக்னியும் விரும்புவான் என்பதை அவள் நன்கறிவாள்.

அவளை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றிவிட்டு அவளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்த பிறகு தான் அக்னி அவளை வீட்டில் விட்டுவிட வந்தான்.

வண்டியிலிருந்து இறங்கியவள் “சரி ண்ணே.. நீ போ.. ரொம்ப சுத்த விட்டுட்டேன்”
“ஓவரா நடிக்காதா போ.. போ”
“கண்டுபிடுச்சிட்ட.. சரி பை” என்று அவள் சென்றிட, கதிர் வந்தான். அவனை பார்த்தவுடன் அக்னி வண்டியை திருப்ப, கதிர் ஓடி வந்து “சாரிடா.. இனிமே இப்படி பண்ண மாட்டேன்”
“….”
“டேய் ரொம்ப பண்ணாத.. நான் என்ன உன் ஆளா.. எதுக்கு இப்படி கெஞ்ச வைக்கிற” என்று கேட்க,
அக்னி “அவளை எதுக்கு  நான் கெஞ்ச வைக்க போறேன்” என்று முணுமுணுக்க,
கதிர் “எதே எதே..”
“ஒன்னுமில்ல”
“கேட்டிடுச்சு டா டேய்.. சாரி டா இந்த ஒரு வாட்டி விட்டுரு”
“சரி விடு”
“ஹப்பா.. லவ் யூ மச்சா” என்று கதிர் அணைத்துக்கொண்டான்.
கதிர் “சரிடா நாளைக்கு பார்ப்போம்”
“சாப்டியா நீ”
“ஆன்.. உன் வீட்ல தான்”
“தப்பிச்சிட்ட” என்று வண்டியை கிளப்ப, கதிர் சிரித்துக்கொண்டே வீட்டினுள் சென்றான்.

வண்டியை திருப்பிக்கொண்டு வந்த அக்னி அங்கிருந்த நேஹாவை கண்டு “நீ என்னடி பண்ற”
“வீட்ல இருந்து பார்த்திட்டு இருந்தேன்.. ஒரே பாச மழை பொழிஞ்சிதா அதான் நனையலாம்ன்னு வந்தேன்”
“ஹாஹா.. போய் தூங்கு போ”
“ஏன் துறத்துற எட்டு தான் டா ஆகுது”
“ம்ம்..அப்போ வா கொஞ்ச தூரம் நடப்போம்” என்றவன் வண்டியை நிறுத்திவிட்டு அவளுடன் இணைந்து நடந்தான்.

நேஹா அமைதியாக வர, அக்னி “கதிர் என்ன பண்ணான்னு கேட்க மாட்டியா”
“நீயா சொல்லுவன்னு தான் அமைதியா இருந்தேன்.. சொல்லு என்ன ஆச்சு” என்று அவன் முகம் பார்க்க, அக்னி நடந்ததை கூறினான்.

நேஹா “விடுடா அவனை பத்தி தான் தெரியும்ல”
“இருந்தாலும்”
“இருந்தாலும் உனக்கு அவங்க அப்படி கஷ்ட படுறது பார்த்து கஷ்டமா இருந்துச்சு அதானா” என்று சரியாக கணித்தவளை பார்த்து சிரித்தவன் ‘ஆம்’ என தலையசைக்க,
நேஹா “விடு.. நம்ம கூட தான இருக்கோம்.. சொல்லலனாலும் நம்ம பார்த்துக்குவோம்.. இப்போ எதுவும் யோசிக்காம நிம்மதியா தூங்கு”
“சரி அப்பறம்”
“சொல்லு.. என்ன”
“இல்ல ஒன்னுமில்ல.. நாளைக்கு பார்க்கலாம்” என்றவன் அவள் சென்றவுடன் தன் இல்லத்திற்கு சென்றான்.

______________________

ஆத்ரேயன் மாடியில் நடந்துக்கொண்டிருந்தான், பாவம் இந்த ஆரத்யாவின் பேச்சு அவனை கொஞ்சமே கொஞ்சம் தடுமாற்றம் கொள்ள செய்திருந்தது.

எப்போதும் போல் மாடிக்கு வந்த நிரஞ்சனா அங்கு நின்றுக்கொண்டிருந்த ரேயனை பார்த்துவிட்டு,
“என்னடா தம்பி.. இங்க என்ன பண்ணுற தூங்காம.. எப்போவும் நான் தான் இப்படி சுத்துவேன்.. இப்போ நீ சுத்துற”
“ஒன்னுமில்ல.. சும்மா தான்”
“சரி நடிக்காதா.. இருக்கட்டும்” என்று திரும்ப,
அத்து “இல்ல அது”
“சொல்லு என்ன”
“இல்ல.. ஒன்னுமில்ல.. நான் தூங்க போறேன்”
“ம்ம்.. என் தம்பி எட்டாவது படிக்கும் போதே பிசினஸ் மேக்னெட் மாதிரி பேசுவான்.. இப்போ என்ன ஆச்சு”
“மேக்னெட் strength போது போல”
“அப்போ முடிஞ்சு.. நீயும் கிணத்துல விழ போற” என்றவளை புரியாமல் பார்த்தவன்,
“என்ன கிணத்துல”
“தி கிரேட் லவ் தான்” என்றவளை நக்கலாக பார்த்தவன், “ஓ மேடம்க்கு எக்ஸ்பிரியேன்ஸ் இருக்கோ”
“ம்ம்.. ரெண்டு வருஷம்” என்று அவள் அசட்டையாக கூற, ரேயன் அதிர்ந்து “என்னடி இப்படி சொல்ற.. நீ இல்லன்னு சொல்லுவேன்னு நினைச்சேன்”
“உன்ன யாருடா அப்படி நினைக்க சொன்னா”
“நீ இருக்கியே.. எல்லாத்துலயும் வித்தியாசமா இரு”
“உன் அக்கா ஆச்சே”
“சரி யாரு அவங்க.. எங்க இருக்காங்க”
“அதெல்லாம் எனக்கு எப்போ சொல்ல தோணுதோ அப்போதான் சொல்லுவேன்”
“உனக்கிருக்க திமிரு இருக்கே”
“குட் நைட் டா.. பெஸ்ட் விஷஸ்” என்று கிண்டலடித்தவளை முறைத்தவன்,
“நத்திங்.. பை” என்றுவிட்டு தன் அறைக்கு சென்றான்.

மறுநாள் ஆருவிற்கும் ஆத்ரேயனிற்கும் மட்டும்  புதிய விடியலாய் இருந்தது. ஆருவிற்கு மனம் பரவசமாக இருந்தது என்றால் அத்துவிற்கு யோசனையாய் விடிந்தது.

காலை ஆறு மணிக்கெல்லாம் அக்னிக்கு அழைத்தவள் “டேய் என்னடா எந்திரிச்சிட்டியா”
“ஹே என்ன.. மணி ஆறு தான் ஆகுது.. ஏழுக்கு தான எந்திரிப்பேன் எப்போவும்..இப்போ ஏன் கால் பண்ற.. ஆமா நீ  சீக்கிரம் எப்படி எழுந்த” என கேள்விகளை அடுக்க, ஆரு தலையில் அடித்துக்கொண்டு “ஒரு கேள்வி கேட்கலாம் இப்படி ஓராயிரம் கேள்வி கேட்டா எப்படி” என்று சலித்துக்கொள்ள,
அக்னி “சரி ஏன் சீக்கிரம் எழுந்த”
“காலேஜ் போனும்ல” என்றவளிடம் “ஹே வை டி.. சும்மா காலைல வெறுப்பேத்திக்கிட்டு.. என்ன கெட்ட கனவுல எழுந்து.. என்னையும் எழுப்பி விடுரியா”
“ஐயோ அகி.. இல்ல.. சரி நீ கிளம்பு நான் மத்தவங்களை எழுப்புறேன்”
“ப்ச்.. தூங்க விடு டி.. பாவம் அவங்க”
“அதெல்லாம் முடியாது.. எழுப்புவேன்.. டாடா செல்லோ” என்றவள் வைத்துவிட,
இங்கு அக்னி தான் ‘பைத்தியம்.. வினோதமா பண்றா..’ என அவளை பற்றிய சிந்தனையிலே தயாராகினான்.

ஆத்ரேயனும் வழக்கத்திற்கு மாறாக அன்று அதிகாலையிலே துயில் கலைந்திருந்தான்.

என்றும் இல்லாத அதிசயமாய் அவன் எழுந்து வருவதை பார்த்து அவன் குடும்பத்தினர் அனைவரும் வாயய் பிளக்க, அவன் தாய் முதல் அவன் வீட்டு தோட்டக்காரன் வரை ‘ஏன்’ என்ற கேள்வி கேட்டு அவனை படுத்திவிட்டனர்.

இவர்களின் நச்சரிப்பு தாங்காமல்,
ஆத்ரேயன் “எப்பா ஒரு நாள் கொஞ்சம் முன்னாடி எழுந்திரிச்சது தப்பா”
ஷோபனா “ஒன்னுமே இல்லையே.. சும்மா கேட்டோம்.. என்ன இப்போ” என ஷோபனா சரண்டர் ஆகிட,
ஜானா “ம்ம்ம் ம்ம்ம்” என்று அவனை பார்த்துக்கொண்டே செல்ல,
ஆத்ரேயன் “என்ன இப்போ”
“நைட்ல இருந்து தூங்கலையோ”
“நல்லா தூங்குனேன்.. அதான் சீக்கிரம் எந்திரிச்சேன்” என முகத்தை திருப்பிக்கொண்டு செல்ல,
ஜானா “ஹான் ஹான்.. நம்பிட்டேன்.. பை”
ஷோபனா “இவ்ளோ சீக்கிரம் எங்க டி கிளம்பிட்ட”
“ஆபீஸ் சைட் கன்ஸ்ட்ரக்ஷ்ன் ஸ்டார்ட் பண்ணிட்டேன்”, அவளை ஏதோ கூற வந்த கண்ணன் ஆத்ரேயனின் கண்ணசைவில் அமைதி காத்தார். ஷோபனா தான் பொறுக்க முடியாமல் “இது எப்போ டி ஆரம்பிச்ச”
“ரெண்டு வாரத்துக்கு முன்னாடி”
“ஏன் சொல்லல”
“சொன்னா” என கண்ணனை பார்த்து கேள்வி எழுப்பியவள் பின் வேக நடையுடன் வாசல் நோக்கி செல்ல, ஆத்ரேயன் அவள் பின் சென்றான்.

அவள் கையை பிடித்து நிறுத்தியவன் “எந்த இடம்”
“ஏன் இன்போ பாஸ் பண்ண போறியா”
“இல்லன்னு சொன்னா நம்பிடுவியா”
“மாட்டேன்.. **** நகர்”
“ஓ.. ஒகே.. பார்த்து போ” என்று அவளை வழியனுப்ப, வாசல் வரை சென்றவள் மீண்டும் அவனிடம் வந்து “உன் ஆளுக்கு ஹாய் சொன்னேன்னு சொல்லிடு” என கண்ணடிக்க, ரேயன் தலையில் அடித்துக்கொண்டு “ஒருத்தன் நல்லா இருந்தாலும் சுத்தி இருக்குறவங்க இப்படி பேசுறதுனால தான் நாசமா போறான் தெரியுமா”
“என் தம்பி எப்போ போவான்னு எனக்கு தெரியும்.. சோ ஷட் அப்.. அண்ட் பை” என்றுவிட்டு சென்றவளை பார்த்து ‘இவளே இப்படி பண்றா.. அவன் என்னலாம் பண்ண காத்திருக்கானோ’ என மானசீகமாக தன்னை நொந்துக்கொண்டு கிளம்பினான்.

ஆத்ரேயன் வண்டியை கிளப்பும் நேரம் கிஷோர் அழைத்தான். ஆத்ரேயன் அழைப்பை ஏற்ற மறு நொடி, கிஷோர் “ட்ரீம்ஸ் போதும்.. சீக்கிரம் கிளம்பி வா அங்க போய் பார்க்கலாம்”
“*$&@!&& (_)@&|&” என ரேயன் சில நல்ல வார்த்தைகளை கொண்டு அர்ச்சிக்க, கிஷோர் தன் காதை தேய்த்துக்கொண்டே
“ஒகே பை.. சீ யூ”
“பஸ்ல போட”
“மீ பாவம் டா.. வாடா தங்கமே” என கிஷோர் பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“பேசும் போதே வச்சிட்டான்.. ஒருவேளை வர மாட்டானோ.. வருவான்..  வராம எங்க போய்ட போறான்” என தனக்கு தானே பேசிக்கொண்டு ரேயனிற்காக காத்துக்கொண்டிருந்தான்

இதில் அழகு என்னவென்றால் ஆராத்யா அக்னியின் தோழி என்றும் அவள் தங்கள் குழு தான் என்று இப்போது வரை ரேயனும் சரி கிஷோரும் சரி அறிந்திருக்கவில்லை.

முன்னரே ரேயனை நினைத்து ஆடிக்கொண்டிருந்த ஆருவின் காலில் இந்த குழு பிரிப்பு சலங்கை கட்டி விட்டது போலானது.

துள்ளிகுதித்துக்கொண்டு கிளம்பிக்கொண்டிருந்தவளை பார்த்த சிவகுமார் தன் தர்ம பத்தினியிடம் “என்ன இன்னிக்கி மேக் அப்பும் ஆட்டமும் பலமா இருக்கு” , நிலா அவரை பார்த்து உதட்டை பிதுக்கினார்.
சிவகுமார் தன் பெண்ணை நன்கறிந்ததால் “அப்போ யாரோ ஒரு ஜீவன் இவகிட்ட மாட்ட போகுது”. இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே வந்த ஆரு “என்ன.. என்ன மாட்ட போகுது”
“நீ எதுக்கு இப்படி துள்ளி குதிக்கிறியோ.. அதுக்கு தான்”,
“ஏழாம் அறிவு சிவா உங்களுக்கு”
“உன்ன பெத்துட்டு இது கூட இல்லனா எப்படி”
“எஸ்.. அதுவும் சரி தான்..” என்றவள், மீண்டும் “ஐயோ இதை உங்க வளந்தவன் கிட்ட சொல்லிடாதீங்க” , அதுவரை அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த நிலா இப்போது “ஏன்.. ஏன் கண்ணா கிட்ட சொல்ல கூடாது.. நான் சொல்லுவேன்”
“லூசு அம்மா.. முதல் உனக்கே ஒன்னும் தெரியாது.. நீ என்ன சொல்லுவ”
“அப்போ என்னனு சொல்லு”
“முடியாது” என ஆரு முறுக்கிக்கொள்ள,
சிவா “இப்போ எதுக்கு என் பொண்டாட்டிய சீண்டுற நீ”
“அப்படி தான் பண்ணுவேன்” என அவள் நாக்கை துருத்தி காட்டும் போதே அக்னி நுழைந்திருந்தான்.

வீட்டினுள் நுழைந்தவன் “என்னடி வம்பு இழுதிட்டு இருக்க” என அவளை பார்க்க,
நிலா “அதுவா கண்ணா…” என தொடங்கும் போதே ஆரு வேண்டாம் என்று கண்காட்ட, அதற்குள் சிவகுமார் “அதெல்லாம் ஒன்னுமில்ல டா.. எப்போவும் போல தான்”
“ஓ.. சரி சரி… ஆரு வா போலாம்.. பை மா.. பை பா” என்று இருவரிடமும் விடைபெற்று சென்றான்.

நிலா “என்னங்க அவ அவன்கிட்ட முதல் தடவை ஒன்ன மறைக்கிறா”
“மறைக்கலாம் மாட்டா.. அவளே உலறிடுவா.. அப்படி இல்லனா அவனே கண்டு பிடிச்சிடுவான்…”
“இருந்தாலும்”
“நேஹா கதிர் இருக்காங்கல.. அவங்க பார்த்துப்பாங்க விடு” என்றுவிட்டு அவரும் அலுவலகம் செல்ல தயாரானார்.

அக்னி வண்டியில் ஏறியவுடன் ஆருவும் ஏறிக்கொண்டாள் ஆனால் அக்னி வண்டியை எடுக்காமல் அவளிடம் “இன்னிக்கி லேப் தானா”
“ம்ம் ஆமா அலைட் லேப்.. கோட் எடுத்தாச்சா”
“அதெல்லாம் இருக்கு…”
“பின்ன என்ன போலாம்”
“ம்ம்” என்றவன் அப்போதும் சிறு யோசனையில் இருக்க, ஆரு “ஆத்ரேயன் பத்திய” என்றாள். உடனே மறுப்பாக தலையசைத்தவன் “இல்ல இல்ல.. சும்மா தான்” என்க,
வண்டியிலிருந்து கீழ் இறங்கியவள் “எனக்கு தெரியும்.. உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை.. அவன் என்ன பண்ணான்.. சொல்லு போட்றலாமா”
“…..”
“அகி நீ இப்படி அமைதியா இருந்தா நான் என்ன நினைக்க”
“ஒன்னுமில்ல ஆரு.. ஏறு போலாம்”
“நீ பேசவேணா சொல்றியா.. சொல்லு நான் பேசல.. குரூப் காரணத்தை வச்சு கூட பேசல.. நீ சொல்லு.. என்ன பேச வேண்டாமா”
“எனக்கு அப்படி ஆர்டர் பண்ண பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல”
“சரி நானே புரிஞ்சிக்கனும்ன்னு சொல்றியா” என விடாமல் கேள்வி கேட்டவளை அவன் அமைதியாய் பார்க்க,
ஆரு சலித்துக்கொண்டே “இங்க பார் அகி.. நீ காரணம் இல்லாம சொல்லமாட்டேன்னு எனக்கு தெரியும்.. ஆனா நீ இப்படி கேட்டாலும் சொல்லாம இருக்குறது எனக்கு பிடிக்கில, நான் ஒரு கிளாஸ்மேட்டா அவன் கூட பேசுவேன்.. ஒரே குரூப் வேற.. ஆனா எதுவும் உன்ன மீறி நடக்காது.. புரிதா” என பெரிய மனுஷி போல் பேசியவளை கண்டு அக்னியின் முகம் மென்மையானது.

எப்போதும் தவழும் கீற்று புன்னகையை தவழவிட்டவன் “சரி டி.. ஏறு”
“எதுவும் பேசிடாத.. எல்லாம் படம் பார்த்து கெட்டு போற நீ.. போய் தொல”
“ஹாஹா”
“இரு டி.. நீ இப்படியே பாண்ணு.. நான் என்ன பண்றேன்னு பாரு”, என்றவுடன் வண்டியை நிறுத்தியவன் அவளை திரும்பி பார்க்க,
ஆரு ஒரு கும்பிடு போட்டு “எப்பா சும்மா சொன்னேன் சாமி… போ.. போய் தொல” என்றவுடன் தான் அவனும் வண்டியை கிளப்பினான்.

கல்லூரியில் கதிரும் நேஹாவும் இவர்களுக்கு காத்திருக்க, இவர்களும் பொறுமையாக வந்து சேர்ந்தனர். வண்டியை நிறுத்திவிட்டு வந்தவனிடம் நேஹா “இல்ல ஒன்னா தான் கிளம்புனோம் அப்பறம் எப்படி 15 நிமிஷம் லேட்டா வரிங்க”
“ஆமா எங்கடா போனீங்க எங்களை விட்டுட்டு.. நேஹா வா நம்மலும் எங்கேயாவது போயிட்டு வரலாம்”
“ஆமா டா குரங்கே.. வா போவோம்” என்றாள்.
அக்னி “அட ச்ச எங்கயும்  போல”
நேஹா “பொய்”
கதிர் “க்ரீன் பொய்” என இருவரும் அவனை பார்க்க, அக்னி எதுவும் பேசாது நேஹாவின் கை பிடித்து அவளை இழுத்துக்கொண்டு ஆருவிடம் “ஆரு அந்த லூசை இழுதிட்டு வா”
“எஸ் பாஸ்.. ஹே ஜுஜு வா போவோம்”
“அடியே அவன் என்னடான்னா குரங்குன்னு சொல்றா.. நீ என்னடான்னா ஜுஜுன்னு நாய கூப்பிடுற மாதிரி கூப்பிடுற.. அவன் என்னடான்னா அவளை மட்டும் இழுதிட்டு போறான்.. இந்த பசங்களே இப்படி தான்..” என புலம்ப, ஆரு “அப்போ நீ” என ஏதோ கூற விழைந்தவளின் வாயை அவசரமாக பொத்தியவன்,
“ஹே.. வாய மூடுடி.. வா போலாம்” என அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.

இன்று முன்னரே வகுப்பிற்கு வந்துவிட்டிருந்தனர் ஆத்ரேயனும் கிஷோரும். ஆத்ரேயன் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான், எல்லாம் கிஷோர் செய்த (செய்துக்கொண்டிருக்கும்) அலப்பறை தான்.
கிஷோர் “அந்த ஸ்பெக்ஸ் போட்டு இருக்காளே அவளா..
அந்த பச்சை சுடியா.. ம்ம் நாளா தான் இருக்கா.. அப்பப்போ உன்னை பார்க்குறா.. ஒருவேளை அந்த ஜீன்ஸ் போட்ட பொண்ணா.. வேண்டாம் மச்சா அவ நல்லா இல்ல” என அங்கிருந்த பெண்களை எல்லாம் பார்த்து கருத்துகள் கூறிக்கொண்டிருக்க,
ரேயன் “டேய் வாய மூடுடா.. செவில திருப்பிடுவேன் வாய திறந்தா”
“ஏன் ஏன்.. நான் ஏன் வாய மூடனும்.. நீ நேத்து வாய மூடிட்டு வந்ததுனால தான் இப்போ நான் பேசுறேன்”
“பின்ன என்ன சொல்ல சொல்ற அவட்ட போய்.. நான் எதாச்சு சொல்ல போய், திருப்பி அவ எதாச்சு சொல்லிட்டா”
“திருப்பி என்ன சொல்லுவா.. ஓ ஐ லவ் யூ ஆ… நீயும் சேம் டூ யூ சொல்லிடு.. என்ன செம்ம ஐடியால”
“டேய் வாய மூடு டா.. இல்ல அடிச்சே கொன்றுவேன்” என்றான் பல்லை கடித்துக்கொண்டு,
“இந்த ஹீரோஸ்ஸே இப்படி தான்.. ஒத்துக்கவே மாட்டாங்க” என கிஷோர் சலித்துக்கொள்ள ரேயன் அவனை முறைத்தான்.

இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போதே அக்னி சிரித்துக்கொண்டு ஆருவின் தலையை பிடித்து தள்ளிக்கொண்டே வகுப்பினுள் நுழைந்தான். இதை பார்த்த ரேயனின் முகம் யோசனையில் சுருங்கியது, அக்னி அவளை அப்படி அழைத்து வந்தது ரேயனுக்கு கோபத்தை கிளப்பியது, தான் ஏன் இதற்கு கோப பட வேண்டும் என தன்னை தானே கடித்துக்கொண்டு ரேயன் அமைதியாக அமர்ந்திருக்க, அவன் பார்வை செல்லும் திசையை பார்த்த கிஷோர் சற்று அதிர்ச்சி அடைந்து “டேய் மச்சா.. இவ தான் டா.. இவளே தான்.. அன்னிக்கு ஆடிட்டோரியத்துல உன்ன சைட் அடிச்சது” .

((ஆதாகப்பட்டது என்னவென்றால் கிஷோர் அன்று அக்னி அவளை இழுத்துக்கொண்டு செல்லும் போது அவள் உடையை மட்டுமே கண்டான்.. அவள் முகம் அவனுக்கு அப்போது சரியாக புலப்படவில்லை. இரண்டு நாள் வகுப்பிற்கு வந்த போதும் அவன் அவளை கவனிக்கவில்லை. அன்று ஆருவை தேடி அரங்கத்திற்கு வந்த கதிர் கிஷோர் அமர்ந்திருப்பதை கண்டான். அப்போது கிஷோரும் அவனை பார்த்துவிட இருவரும் ஸ்நேகமாக புன்னகைத்துக்கொண்டனர்.

கதிர் யாரையோ தேடிக்கொண்டிடுப்பதை உணர்ந்து அவன் கேட்டபோது தான் கதிர் அவனும் அவன் நண்பர்கள் மூவரும் இங்கு சேர்ந்திருப்பதாக கூறினான். அதை வைத்து தான் அக்னி ஆருவை இழுக்கொண்டு போவதை கண்டு அது அவர்களின் தோழி என்று ஆத்ரேயனிடம் கூறினான்.))

கிஷோர் கூறியதை கேட்டு ஆத்ரேயன் திகைத்து அமர்ந்திருக்க,

கிஷோர் “டேய் நீ அமைதியா இருக்கிறதா  பார்த்தா.. நேத்து பேசுனதும் இவ தானா” என்றான் அதிர்ச்சி நிறைந்த குரலில்.

தொடரும்…

Advertisement