Advertisement

                   அத்தியாயம் 4

ஆத்ரேயனை பார்த்தபடி அமர்ந்திருந்த ஆராத்யாவின் தலையை அக்னி முன்னோக்கி திருப்பினான். ஆருவும் வேறு வழியின்றி திரும்பி அமர்ந்தாள். முதல் வகுப்பிற்கான பேராசிரியர் வர, ஆராத்யா ஆர்வமானாள் (ஆத்ரேயனின் பெயரை தெரிந்துகொள்ள தான் இந்த ஆர்வம்). ஆனால் அவள் நினைத்தது போல் எந்த பேராசிரியரும் அவர்களிடம் பெயர் கேட்கவில்லை. வந்தவர்கள் எல்லாம் அந்த செமிஸ்டரின் பாடத்தை பற்றி பேசினார்களே ஒழிய யாரும் பெயர் கேட்கவில்லை. ஆராத்யா “அட… என்ன ஒருத்தரும் பேரை கேட்க மாட்டேங்குறாங்க”

அக்னி “இப்போ எதுக்கு உன் பெயரை கேட்க ஆர்வமா இருக்க”

நேஹா ‘சிக்குனா’ (எல்லாம் மைண்ட் வொய்ஸ் தான்)

“ஹான்.. சும்மா டைம் பாஸ் ஆகணும்ல”

கதிர் “ஆமா ஆமா பீரியட் ஓடும்” என்று அவள் எதற்கு கூறுகிறாள் என்பதை அறியாமல் அப்பாவியாய் கூற, அக்னி தலையில் அடித்துக்கொண்டான். இரண்டு வகுப்புகள் இப்படியே முடிய மூன்றாவதாக வந்தார் குமரன்.

குமரன் சாரை பற்றி கூற வேண்டும் என்றால் நல்ல கலையான முகம், கைக்குள் அடங்காமல் காற்றில் அலைபாயும் கேசம், விரிந்த தோள்கள், முக்கியமாக இருபத்தெட்டு வயதே ஆனா முரட்டு சிங்கிள். கடந்த இரண்டு வருடங்களாக இங்கு தான் பேராசிரியராக பணிபுரிகிறார். அவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அத்தனை பாசமான ஒருவர், குறிப்பாக மதிப்பெண்ணை வைத்து மாணவர்களை மதிப்பிடாத ஒரு நல்ல உள்ளம்.

குமரன் “என்ன பசங்களா பெயர் கேட்கும் படலம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா”

ஆரு “ஐயோ எங்க சார்..  யாரும் ஒன்னும் கேட்கல” என்று சலித்துக்கொள்ள,

குமரன் “பின்ன இது என்ன ஸ்கூல்லா.. இங்க யாரும் உங்க பெயரை கேட்க மாட்டாங்க..” , இதை கேட்டு ஆருவின் முகம் வாடிவிட அதை கண்டு பொறுக்க முடியாமல் அக்னி, “அப்பறம் ஏன் சார் கேட்டீங்க”

“உயிர் தோழன் போலயே.. இப்படி பொங்குறியே தம்பி.. சரி நோ டென்சன்.. இப்போ ஒவ்வொருத்தரா உங்க பெயரை சொல்லுங்க” என்று கேட்க மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். அக்னி தன் பெயரை கூறும் போது  ஸ்வேதா அவனையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள், இப்போதல்ல அவன் வகுப்பறையினுள் நுழைந்ததிலிருந்து அவனை தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அடுத்தது ஆத்ரேயனின் முறை, சரியாக அவன் முறை வந்தபோது வகுப்பு முடிந்தது.

குமரன் “ஒகே பசங்களா.. மீதி பேரை நாளிக்கி கேட்டு ஹாரை ஓட்டலாம்.. சோ அடுத்த ஸ்டாஃப்  வர வரைக்கும் அமைதியா இருங்க” என்றிவிட்டு சென்றார்.

ஆத்ரேயனின் பெயரை தெரிந்து கொள்ள முடியாத கடுப்பில் ஆரு “அட ச்ச.. ஒரு பெயரை கேட்க முடியுதா.. அதுக்குள்ள பெல் அடிச்சிட்டாங்க” என்று முணுமுணுக்க,

நேஹா “என்ன கிட்டி ஒரே குஷியா இருக்க போல”

“வேண்டாம் கிட்டி.. செம்ம கடுப்புல இருக்கேன்.. ஏதாவது சொல்லிட போறேன்” ,

கதிர் எப்போதும் போல் சம்மந்தமே இல்லாமல் “ஆரு குட்டி ஏதாவது சாக்லேட் வச்சிருக்க” என்று அவளிடம் கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்தவள் “விஷம் இருக்கு.. குடிக்கிறியா”

“ச ச இவ்ளோ சீக்கிரம் வேண்டாம் டா.. நீ அதை பிரிட்ஜ்ல வை.. நான் அப்பறமா குடிக்கிறேன்” என்றவனை தன் பையை கொண்டு மொத்தினாள். அக்னி நடப்பவற்றை கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தான்.

அடுத்ததாக அவர்கள் துறையின் தலைமை பேராசிரியர் (அதாங்க HOD) வகுப்பினுள் நுழைந்தார்.

“குட் மார்னிங் பசங்களா.. நான் ராம் குமார் உங்க டிபார்ட்மெண்ட் hod. உங்கள்ல நிறைய பேருக்கு என்ன அட்மிஷன் அப்போவே தெரிஞ்சிருக்கோம். எனக்கு மத்த டிபார்ட்மெண்ட் பத்தி தெரியாது ஆனா என் பசங்க டிசிப்லின்டா இருக்கணும்.. தேவை இல்லாம யார்க்குடையும் வம்புக்கு போக கூடாது.. அதுவும் அந்த மெக்கானிக்கல் பசங்க கூட ஏதாவது சண்டைக்கு போனீங்கன்னு தெரிஞ்சா அவ்ளோ தான் சொல்லிட்டேன்.. இந்த டிபார்ட்மெண்ட் பொறுத்தவரை மார்க்கை விட ஒழுக்கம் முக்கியம்.. சோ நாலு வருஷம் எந்த வம்பு தும்பும் பண்ணாம நல்லபடியா முடிச்சிட்டு போங்க” என்று அறிவுரை வழங்கியவர் அவருக்கு தெரியாத சிலரின் பெயரை மட்டும் கேட்டு தெரிந்துகொண்டார்.

ராம் குமாரை பற்றி கூறவேண்டும் என்றால் தன் துறை மாணவர்களுக்காக எதையும் செய்பவர், அதே சமயம் அவர்கள் தவறு செய்தால் அதை கண்டிக்கவும் தயங்க மாட்டார். சுருக்கமாக சொல்ல போனால் கேங் லீடர் என்று சிவில் துறை மாணவர்களால் விளிக்கப்படுபவர்.

ஒருவழியாக மதிய வேலை வந்துவிட ரேயனும் கிஷோரும் உணவுண்ண சென்றனர். வழியில் கிஷோர் “மச்சா எனக்கென்னவோ குமரன் சாரை பார்த்த ஒரு ஒளிவட்டம் தெரியுது”

“ஏன் உன்ன கழுவி ஊத்துனதாலயா”

“நோ நோ மச்சான்.. எனக்கென்னமோ அவர் நம்ம கட்சியா இருப்பாரோனு தோணுது”

“ம்ம்ம் இருக்கலாம்.. அவர் இந்த காலேஜ் அலுமினி தான்.. சோ பசங்க சைட் இருக்க அதிக வாய்ப்பிருக்கு” என்று தோளை உலுக்க,

கிஷோர் “ஓ நம்ம மாஸ்டர் மாதிரி”

“ம்ம்”

“ஆனா அவர் அவ்ளோ வர்த் இல்ல, நீ வேணா ஒரு பத்து வருஷத்துக்கு அப்பறம் அப்படி ஆகலாம்.. வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு” என்று பாட்டு பாட ரேயன் தலையை இடமும் வலமுமாக ஆட்டி சிரித்தான்.

இவர்கள் இப்படியே செல்ல, வழியில் ஒருவன் “பாஸ் ஒரு நிமிஷம்” என்றான், ரேயன் யார் என்பதை போல் பார்க்க அப்புதியவன் “பாஸ் ஒரு 100 ரூபா கிடைக்குமா”

கிஷோர் “இல்லையே நீங்க என்கிட்ட கொடுக்கலையே”

அப்புதியவன் “ஐயோ பாஸ் கொஞ்சம் அர்ஜெண்ட்”

கிஷோர் “அர்ஜெண்ட்னா போங்க என்கிட்ட எதுக்கு சொல்றிங்க” என்று கேட்க, ரேயன் அவன் தலையில் ஒன்று போட்டுவிட்டு அப்புதியவனிடம் காசை நீட்டினான்.

புதியவன் “தேங்க்ஸ் பாஸ்.. நாளைக்கு குடுத்திடுறேன்”

“….”

“பாஸ் என் பெயரை கூட கேட்க மாட்டீங்களா” என்று புதியவன் கேட்க ரேயன் சிரித்துக்கொண்டே “ஏன் கேட்கனும்” என்றான்.

புதியவன் “ஒருவேளை நான் காசு கொடுக்காம போய்ட்டா” என்று கேட்க, ஆத்ரேயன் சத்தமாக சிரித்தான், ராஜ் குழம்பி “இப்போ ஏன் பாஸ் சிரிக்குறீங்க”

“பின்ன என்ன பாஸ் நீங்க என்ன நூறு கோடியா வாங்குனீங்க ஜஸ்ட் நூறு ரூபா தானே.. அதுவுமில்லாம உங்களை பார்த்த அப்படி எமாத்துற ஆள் மாதிரி தெரியல”

“தேங்க்ஸ் பாஸ்” என்றவன் திரும்பி நடக்க, ஆத்ரேயனும் திரும்பினான்.

அப்புதியவன் மீண்டும் “பாஸ் பாஸ்”

கிஷோர் “என்ன இப்போ 400 ரூபா வேணுமா”

“அதெல்லாம் வேண்டாம் பாஸ்.. என் பெயர் ராஜ், மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, கிஷோர் “ஓஹோ.. ஹாய் ராஜ் நான் கிஷோர் இது என் தளபதி ஆத்ரேயன் சுருக்கமா ரேயன்”

ரேயன் “நாங்க சிவில் பர்ஸ்ட் இயர்”

“ஓ ஒகே ஒகே.. actualஆ என்னோட பைக் பஞ்சர் ஆகிடுச்சு பர்ஸை வேற வீட்ல மறந்து வச்சிட்டு வந்துட்டேன் அதான் உங்ககிட்ட காச வாங்குனேன்”

“இருக்கட்டும் ராஜ்.. ஆனா இப்போ பைக் எடுத்துக்கிட்டு எங்க போற”

“என் பெரியப்பா வீட்டுக்கு.. இப்போதிக்கு  என்னோட லகேஜ் எல்லாம் அங்க தான் இருக்கு.. இனிமேல் போய் ஹாஸ்டல்ல வைக்கனும்”

கிஷோர் “அப்போ நீ ஹாஸ்டல் பையனா.. நான் கூட கட் அடிச்சிட்டு தங்க இடம் இல்லையென்னு நினைச்சிட்டு இருந்தேன்.. நல்லவேளை நீ இருக்க.. இனிமே நம்மயெல்லாம் பிரெண்ட்ஸ்” என்று அவனிடம் கை குலுக்கிக்கொண்டான்.

ஆத்ரேயான் “சரி ராஜ் நீ போ டைம் ஆகுது நாளைக்கு மீட் பண்ணுவோம்” என்று அவனை அனுப்பிவிட்டு கிஷோருடன் கேன்டீன் சென்றான்.

நிலா கொடுத்த பூரியை மூவருக்கும் ஊட்டியபடி அக்னியும் உண்டுகொண்டிருக்க, ஆரு பலத்த சிந்தனையில் இருந்தாள். பெரிதாக ஒன்றுமில்லை அவன் பெயரை எப்படி தெரிந்துகொள்ளலாம் என்ற சிந்தனை தான்.

ஆராத்யாவின் எண்ணவோட்டம் புரிந்து ஒரு பக்கம் கோபம் வந்தாலும் மறுபக்கம் சிரித்துக்கொண்டே “போதும் ரொம்ப யோசிக்காத முடி கொட்டிட போகுது” என்று அக்னி அவள் சிந்தையை கலைக்க, அவனை பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்தவள் “நான் எதுவும் யோசிக்கில பா”

“…..”

“டேய் நான் நிஜமா எதுவும் யோசிக்கில டா” என்று ஆரு அவனிடம் உரைக்க, அக்னி அமைதியாக எழுந்து சென்றான்.

ஆரு அவன் செல்வதை பார்த்துக்கொண்டே “ஓவரா பண்றான் கிட்டி அவன்”

“ஹே அவன் என்னடி பண்ணான்.. சும்மா தான போறான்”

“அவனை யாரும் ஒன்னும் சொல்லிட கூடாதே”

“அப்படி சொல்லல.. பட் அக்னி இஸ் ஆல்வேஸ் ரைட்”

“ஆமா ஆமா நீ அவனுக்கு தான சப்போர்ட் பண்ணுவ”

“லூசு.. அந்த பையன் நம்ம கிளாஸ் தான.. ஈஸியா பெயரை கண்டுபிடிச்சிடலாம்.. சோ சில்”

“என்ன நீ அவனுக்கு பயப்படாம பேசுற”

“ஹாஹா.. அவன் ஏதாவது கேட்டா எனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லன்னு எஸ் அகிடுவேன்” என்று கண்ணடிக்க

“உஷாரு தான்” என்று சிரித்தாள்.

இப்படியே சிரிப்பும் அரட்டையும் என அந்த நாள் முடிவுற்றது. வகுப்பிலிருந்து வெளி வந்த அக்னி “ஆரு இங்க வெயிட் பண்றியா இல்ல என்கூட வரியா”

“இல்ல நீ வண்டி எடுத்துட்டு வா.. நான் வெயிட் பண்றேன்” என்றிட நேஹாவிடம் கேட்டான் அவளும் ஆருவுடன் இருப்பதாக கூறிட அவனும் சரி என்று சென்றான். சிறிது தூரம் சென்றவன் மீண்டும் வந்து ஆருவின் கையை பிடித்து தரதரவென இழுத்துச்செல்ல,

ஆரு “டேய் எதுக்கு டா இப்படி இழுதிட்டு போற.. கைய விடுடா”

“நீ யார் பெயரையும் தெரிஞ்சிக்க வேண்டாம் மூடிட்டு வா” என்று இழுத்துச்செல்ல ஆரு “இவனுக்கு மட்டும் எப்படி தான் எல்லாம் தெரிஞ்சிடுதோ” என நினைத்தாள், அவள் அக்னியை அனுப்பியதே எப்படியாவது அவன் பெயரை தெரிந்துகொள்ள தான் ஆனால் அவளின் நேரம் அக்னி அவளின் கேடித்தனத்தை கண்டுகொண்டான்.

அக்னி ஆருவை இழுத்துக்கொண்டு  செல்வதை பார்த்த ரேயன் கிஷோரிடம் “மச்சா அவனை பாரு”

“எவன”

“அவனை” என்று ஆத்ரேயன் அழுத்தி கூற

“அதான் மச்சான் எவன” என்று கிஷோர் வேண்டுமென்றே கேட்க,

ஆத்ரேயன் “பல்ல கழட்டிடுவேன்”

“ஓ எதிரி பெயரை சொல்ல மாட்டீங்களோ.. ஒகே ஹீரோ.. அவன் எதுக்கோ இழுதிட்டு போறான் உனக்கென்ன” என்றான் அசட்டையாக

“ப்ச்.. அங்க பாரு  அந்த பொண்ணு வேற விடுடான்னு கத்திக்கிட்டே போற”

“போகட்டும் அதுக்கு”

“ஹே.. மனுஷனா நீயெல்லாம்.. அந்த பொண்ணு நம்ம கிளாஸ்மேட் தான அப்பறம் எப்படி விட முடியும்”

“டேய் டேய் ரொம்ப பொங்காத.. அக்னி அப்படிபட்டவன் கிடையாது.. அது உனக்கே தெரியும்”

“ஆமா ஆமா ரொம்ப நல்லவன் தான்… பொறுக்கி”

“இதையே தான் அவனும் அங்க சொல்லிருப்பான்”

“…..”

“சரி முறைக்காத.. அவன் அந்த பொண்ணு இன்னோரு பொண்ணு அப்பறம் கதிர் அவங்க எல்லாம் பிரெண்ட்ஸ்டா”

“ஓ”

“எனக்கு என்னமோ அந்த பொண்ணு உன்னையே பார்க்குற மாதிரி இருக்கு”

“ஏன்டா”

“நிஜமா டா.. ஒருவேளை அக்னி உன்ன பத்தி ஏதாவது சொல்லிருப்பான் போல”, ரேயனின் முகம் சுருங்கியது, உடனே தன்னை சரி செய்தவன் “அவன் யார்கிட்ட என்ன வேணா சொல்லட்டும் எனக்கென்ன”

“அப்போ அந்த பொண்ணு உன்ன பத்தி என்ன நினைச்சாலும் உனக்கு பரவால்ல”

“ம்ம்ம்”

“அப்போ எதுக்கு ராசா இப்போ பொங்குனீங்க”

“அதான் சொன்னேன்ல கிளாஸ்மேட்”

“டேய் டேய் என்கிட்டயே நடிக்காதாடா.. நீ என்னிக்கி கிளாஸ்ல உள்ள பொண்ணுங்கள கண்டுகிட்ட”

“சரி மூடிட்டு வா” என்று முன் நடக்க, கிஷோர் “சரியே இல்ல மச்சா நீ” என்றபடி அவன் பின் சென்றான். ஆத்ரேயனுக்கு அக்னி ஆராத்யாவை அவ்வாறு இழுத்துக்கொண்டு செல்வது ஏனோ பிடிக்கவில்லை ஆனால்  அது ஏன் என்ற ஆராய்ச்சியில் சிக்கிக்கொள்ளவும் அவனுக்கு விரும்பமில்லை.

அகியுடன் சென்ற ஆரு தன் முகத்தை எட்டூருக்கு தூக்கி வைத்திருந்தாள். அவள் வீடு வந்தவுடன் இறங்கியவள் “கல்லுமா கிட்ட நைட் வரேன்னு சொல்லிடு அகி” என்றுவிட்டு திரும்ப அக்னி “ஆத்ரேயன்” என்றான். அவனை புரியாமல் பார்த்தவள் “என்னது”

“அவன் பெயர் ஆத்ரேயன்” என்றிட, ஆரு விழிகள் வெளியே தெறித்துவிடும் அளவிற்கு அவனை விழி விரித்து பார்த்தாள்.

அவளின் பார்வை அவனுக்கு சிரிப்பை வரவைக்க, அவள் முடியை கலைத்துவிட்டு  “எனக்கு அவனை பிடிக்காது தான் ஆனா உன்னோட முகம் வாடி இருக்குறதையும் என்னால பார்க்க முடியாது” என்றான். அவனை பார்த்து மென்னகை புரிந்தவள் “நிச்சயமா உனக்கு பிடிக்காதத நான் பண்ண மாட்டேன்” என்றுவிட்டு வீட்டினுள் ஓடி மறைந்தாள். அவள் செல்வதை பார்த்து புன்னகைத்தவன் தானும் இல்லம் நோக்கி பயணித்தான்.

_____________________

கிஷோருடன் அவன் இல்லத்திற்கு சென்ற ஆத்ரேயன் இரவு எட்டு மணிபோல் வீட்டிற்கு கிளம்பினான்.

ரேயனின் இல்லத்தில்…

கண்ணன் நிரஞ்சனாவை திட்டிக்கொண்டிருந்தார், அவருக்கு  நிரஞ்சனா தனியாக தொழில் தொடங்குவதில் விருப்பமில்லை அதற்கு தான் இன்று பஞ்சாயத்து நடந்துக்கொண்டிருந்தது.

கண்ணன் “என்ன ஷோபா இது.. இவ எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா”

நிரஞ்சனா “பா.. என்ன பத்தி பேசுறத நீங்க என்கிட்டயே பேசலாம் எதுக்கு அம்மா கிட்ட கத்துறீங்க”

ஷோபனா “ஜனா கொஞ்சம் கத்தாமா பேசுமா”

“மா நான் கத்தல ஜஸ்ட் பேசுறேன்” என்று கடுகடுத்தாள்.

கண்ணன் “இப்போ நீ புதுசா பிசினஸ் பண்ணணும்னு என்ன அவசியம் ஜனா.. ஆல்ரெடி நம்மகிட்ட இருக்குறதை நீ டேக் ஓவர் பண்ணலாமே”

“பா.. I need to do it on my own.. (எனக்கு தனியா பண்ணனும்).. நீங்களும் அப்படி தான் வளர்ந்தீங்க”

“புரியாம பேசாத ஜனா.. எனக்கு அப்போ யாருமில்ல அப்போ என் நிலையும் வேற.. ஆனா உனக்கு அப்டியில்ல.. நான் இருக்கேன்”

“என்னால உங்க நிழல்லையே வாழ முடியாது பா.. எனக்கு நிறைய சாதிக்கணும்” என கண்களில் கனவு மின்ன பேசினாள்.

கண்ணன் “நீ தேவை இல்லாம அடம் பிடிக்கிற ஜனா.. நீ தனியா எதுவும் பண்ண கூடாது.. பண்ணவும் நான் விட மாட்டேன்” என கோபமாக உரைத்தவரை உறுத்து விழித்தவள் “ஐ டோன்ட் கேர் பா.. உங்களால முடிஞ்சத நீங்க பாருங்க.. எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்” என கூறிவிட்டு சென்றவளை நினைத்து கண்ணனுக்கு ஆயாசமாக இருந்தது. கண்ணன் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துவிட ஷோபனா அவர் குடிக்க தேனீர் தயாரிக்க சென்றார்.

இருபத்திமூன்று வருடங்களுக்கு முன் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நின்ற போது அவர் தந்தை அதை மறுத்துவிட்டார் அதற்கு முக்கிய காரணம் அவர்களின் அன்றைய நிலை, அவர்களின் எதிர்ப்பையும் மீறி கண்ணன் வங்கியில் கடன் பெற்று தான் தன் தொழிலை தொடங்கினார். இன்று இவ்வளவு பெரிய நிறுவனமாக அது மாற முக்கிய காரணம் என்னவோ அவரின் உழைப்பும் நேர்மையும் தான். ஆனால் இன்றைய நிலை அப்படியல்லவே, என்பதே அவருக்கு பெரும் கவலையாக இருந்தது.

நடந்த விவாதத்தை கேட்டுக்கொண்டே வந்த ஆத்ரேயன் அடுக்களைக்குள் சென்று தன் தாயிடம் “என்னமா இன்னிக்கும் அக்கா ஆரம்பிச்சிட்டாளா”

“அவ என்னிக்கி நிறுத்துனா ஆரம்பிக்க.. அப்பாவும் பொண்ணும் இப்போலாம் பேசுனாலே அது சண்டைல தான் முடியுது..”

“இன்னிக்கி என்ன சண்டை”

“அவர் சொல்ல சொல்ல கேட்காம அவ சேர்த்து வச்சிருந்த காசுல பிசினஸ் பண்ண இடம் பார்திருக்கா.. அது இவரோட பிரெண்ட் ஒருத்தர் பார்த்துட்டு இவர்ட்ட சொல்லிருக்காரு அதான்”

“ம்மா அவளால மேனேஜ் பண்ணிக்க முடியும்.. அவளுக்கு ஒரு சேன்ஸ் கொடுத்தா என்ன”

“அதெல்லாம் நீ அவர்கிட்ட பேசிக்கோ.. அவராச்சு அவளாச்சு..” என தலையை உலுக்க, “அப்போ வாங்க அப்பா கிட்ட போய் பேசலாம்” என்று அவரை இழுத்துக்கொண்டு சென்றான்.

கண்களை மூடி அமர்ந்திருந்த கண்ணனின் அருகே அமர்ந்த ஆத்ரேயன் “ப்பா ஃபிரீயா” என்று கேட்க, மெல்ல கண் திறந்தவர் “ஜனாவை பத்தி பேச போறியா”

“இல்லப்பா நீங்க என்ன நினைக்குறீங்கன்னு தெரிஞ்சிக்க வந்தேன்”, கண்ணன் பெருமூச்சுடன்

“நீயாவது நான் என்ன சொல்ல வரேன்னு கேட்க வந்தியே… அவ கேட்க கூட தயராயில்ல” என்றவரை பார்த்து மென்னகை புரிந்தவன்

“சொல்லுங்க பா.. அக்கா ஏன் பண்ண கூடாது”

“உன் அக்காவை நான் ஏன் தடுக்க போறேன்”

“அப்பறம் என்ன பா”

“தனியா பிசினஸ் பண்றது அவ்ளோ ஈஸி இல்ல ரேயா.. ஏற்கனவே எனக்கு எதிரிங்க அதிகம் இதுல என் பொண்ணு இப்படி தனியா பிசினஸ் பண்றாணு தெரிஞ்சா அவளுக்கு ஏதாவது குடைச்சல் கொடுப்பாங்க அதுவும் ஒரு பொண்ணுனா அவங்க எந்த மாதிரி குடைச்சல் தருவாங்கன்னு நான் சொல்லி தான் உனக்கு தெரியனும்னு இல்ல.. இதை அவகிட்ட என்னால சொல்ல முடியாது டா.. அப்படியே சொன்னாலும் அவ இதை பெருசா எடுத்துக்க மாட்டா.. கேட்டா, பா எனக்கு தெரியும்னு ஒரே வார்த்தைல முடிச்சிடுவா” என்றவரின் கையை தன் கைக்குள் வைத்தவன் அதை பிடித்துக்கொண்டு

“But I think she can manage (ஆனால் அவளால் அதை சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன்) பா”

“I don’t want her to manage it (அவள் அதை சமாளிக்க தேவையில்லை).. அவ எதுக்குடா கஷ்டப்படனும்.. அவ கஷ்டப்பட்டுறத என்னால பார்க்க முடியாது.. ஏன் அவளால.. இல்லை இவ்ளோ பேசுறியே உன்னால, அவளுக்கு ஏதாவது ஒன்னுனா தாங்கிக்க முடியுமா” என்று ஷோபனாவை கைகாட்டி ஆத்ரேயனிடம் கேட்க, அவர் கையில் அழுத்தம்கொடுத்தவன்

“பா நீங்க என்ன நம்புறீங்க தான”

“என்ன கேள்வி டா இது”

“சொல்லுங்க பா”

“எனக்கு உங்க ரெண்டு பேர் மேலையும் அதீத நம்பிக்கை இருக்குடா”

“அப்போ ப்ரீயா விடுங்க நான் பார்த்துக்குறேன்.. என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு”

“என்ன ஐடியா”

“நீங்க முதல ஒகே சொல்லுங்க அப்பறம் ஐடியாவா சொல்லுறேன்”

ஷோபனா “அவன் தான் ஏதோ ஐடியா இருக்குனு சொல்றானே ஒகே சொல்லுங்க” என்று வற்புறுத்த கண்ணனும் “சரி ஒகே” என்று தன் சம்மதத்தை வழங்கினார்.

“தேங்க்ஸ் பா” என்று அவரை தோளோடு அணைத்துக்கொண்டவன் ஜனாவின் அறையை நோக்கி செல்ல,

கண்ணன் “டேய் ஐடியாவை சொல்லிட்டு போட”

“முதல அக்காகிட்ட தான் சொல்லுவேன்” என்று கண்ணடிடுத்துவிட்டு சென்றான்.

கண்ணன் “உன் புள்ள சரியான எமகாதகன் டி.. என்கிட்டயே எப்படி சம்மதத்தை வாங்கிட்டான் பாரு” என்றவரை பார்த்து புன்னகைத்தவர் இதமாக அவர் தோளில் சாய்ந்துகொண்டார். இனி தன் மகன் பார்த்துக்கொள்வான் என்ற நிம்மதியில் கண்ணனும் சற்று அடக்கினார்.

தமக்கையின் அறை முன் நின்று ஆத்ரேயன் கதவை தட்ட,

நிரஞ்சனா “உள்ள வாங்க”, ரேயன் உள்ளே சென்றதும்

“நீ எதுக்குடா கதவை தட்டிட்டு வர, அப்படியே வர வேண்டியது தானே”

“இருக்கட்டும் நீங்க எல்லாம் பெரிய ஆளு.. அதான் பார்த்து பக்குவமா நடந்துக்குறேன்”

“டேய் சும்மா ஆரம்பிக்காத.. என்னனு சொல்லு.. என்ன உங்க அப்பா தூது அனுப்புனாரா” என புருவமுயர்த்தியவளை பார்த்து “இல்லையே நான் நடந்து தான வந்தேன்” என மொக்கை போட்டவனை முறைத்தவள்

“வெளிய போ நீ முதல.. அவுட்” என்று கத்த, தன் காதை தேய்தவன் “சரி கத்தாதா.. உனக்கு பர்மிஷன் கிரெண்டெட்”

“கடுப்பை கிளப்பாத ஓடிடு”

“ஹே நிஜமா”

“எப்படி.. என்ன ஏதாவது அக்ரீமெண்ட்டா” என சந்தேகமாக கேட்டவளை பார்த்து இடமும் வலமுமாக தலையசைத்தவன் “கொஞ்சம் பொறுமையா பேசிருந்தா அப்போவே ஒகே ஆகிருக்கோம்”

“என்னால அப்படியெல்லாம் பேச முடியாது”

“அதான் நான் பேசுனேன்” என்றான் மென்மையாக.

நிரஞ்சனா “ம்ம்.. சாப்டியா” என்று சம்மந்தமே இல்லாமல் கேட்க

ஆத்ரேயன் “என்ன ரியாக்ஷன் டி இது”

“நீ பேசுவேனு தெரியும்.. அதான்”

“எப்படி”

“நீ வரும்போதே பார்த்தேன்.. ஏதாவது ஐடியா இருக்குன்னு சொல்லிருப்ப கரெக்டா”

“எப்படி டி”

“இனொன்னும் சொல்லட்டா”

“ம்ம்”

“என்கிட்ட வாடி போடினு பேசுறது ஆனா நான் இல்லாத போது அக்கா ஜனா அக்கான்னு பேசுற” என்றவளை மெச்சும் பார்வை பார்த்தவன்

“நீயெல்லாம் போலீஸ் ஆகிருக்க வேண்டியவ தான்.. சரி சாப்டியா”

“ம்ஹும்.. வேண்டாம்னு சொல்லிட்டேன்”

“ப்ச்.. ஏன் இப்படி உடம்பை கெடுத்துகிற.. வா போய் சாப்பிடலாம்” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு உணவுண்ண சென்றான்.

_______________________

மணி இரவு பதினொன்றை தாண்டி இருந்தது. ஆரு தன் இல்லத்தில் சோபாவில் கால் மீது கால் போட்டுக்கொண்டு கைகளை தலைக்கு முட்டுக்கொடுத்தபடி படுத்துக்கொண்டு

பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தொலைக்காட்சியில்

அத்திரி புத்திரி ஆச்சுலா

என் கவனம் செதரி போச்சுலா

அவன பார்த்த அடுத்த நிமிசம்

நின்னா போச்சு மூச்சுலா

ஊரே…

கேக்கல…

சரியா…

பாக்கல…

சொலட்டிப் போட்ட சோழி போல

சொழன்டு நின்னே லா!…

என்று பாடல் ஓட, “பார்ரா சிட்டுவேஷன் சாங்லாம் ஓடுது..” என்று நினைத்தபடி காலை ஆட்டிக்கொண்டு படுத்திருக்க, அங்கு வந்த சிவா அவள் படுத்திருப்பதை பார்த்து தலையில் அடித்துக்கொண்டார். “ஐயோ.. எனக்கு பொறந்தது பொம்பள புள்ளையான்னு எனக்கே சந்தேகம் வர வச்சிடுவா போலயே” என்று சத்தமாக முணுமுணுக்க அப்போது தான் அவர் வருவதை பார்த்தவள், “ஹாய் சிவா” என்றபடி எழுந்தமர, சிவா அவள் அருகில் அமர்ந்து  “ஏன் இன்னும் தூங்கள ஆரு”

“தூக்கம் வரல பா”

“தூக்கம் வரலையா.. ஏன் எந்த பையன பார்த்த இன்னிக்கி” என்று சரியாக கணித்தவரை மெச்சும் பார்வை பார்த்தவள் “எப்படி சிவா.. இப்படி இருக்க.. கொஞ்சமாச்சு அப்பா மாதிரி நடந்துக்கோ பா”

“அதனால தான் மாப்பிள்ளைய பத்தி கேக்குறேன்..” என்றவரை பார்த்து சிரித்தவள்

“இதையே தான் நான் அகி கிட்ட சொன்னேன்.. சிவாவே இப்படி தான் பேசுவாறு நீ ஏன்டா என் உசுர வாங்குறன்னு” என்று நொந்தவளை பார்த்து அட்டகாசமாக சிரித்தவர்

“அவன் அப்படி இருக்கறதால தான் நான் இப்படி ஜாலியா இருக்கேன்”

“ஓ இல்லனா மட்டும்” என்று சைட் கேப்பில் அவரை கலாய்க்க, அவள் காதை வலிக்காத படி திருகியவர்,

“சொல்லு யார் அந்த பையன்”

“தெரியல பா.. ஆனா என் கிளாஸ் பையன் தான், முதல் முறை ஆடிட்டோரியதுல பார்த்தேன்.. பார்த்தவுடனே ஒரு ஸ்பார்க் சின்னதா” என்று கண்களையும் விரகலையும் சுருக்கி கூறியவளை ஆராயும் பார்வை பார்த்தவர் “இதுக்கு முன்னாடியும் உனக்கு நிறைய பேர் மேல ஸ்பார்க் வந்திருக்கே டா” என்றிட, அவரை பாவமாக பார்த்தவள் “வந்திருக்கே.. ஆனா யாரும் என்ன இவ்ளோ யோசிக்க வச்சதில்லயே”

“அப்போ இவன் யோசிக்க வைக்கிறானா”

“ம்ம்ம்.. அப்படியே மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கான்” என்று விஜய் சேதுபதி போல் கூறியவளை பார்த்து தலையில் அடித்துக்கொண்டார் சிவா.

ஆரத்யாவே தொடர்ந்து “ஆனா அவனுக்கும் உங்க வளந்தவனுக்கும் ஏதோ முன் ஜென்ம பகை போல.. ரெண்டு பேரும் விறப்பா திரியிரானுங்க”

“அப்போ அந்த வளர்ந்தவன் விட மாட்டானே”

“ம்ம் ஆமா”

“சரி பையன் பெயர் என்ன” என்றவரை பார்த்து

அத்திரி புத்திரி ஆச்சுலா

என் கவனம் செதரி போச்சுலா

அவன பார்த்த அடுத்த நிமிசம்

நின்னா போச்சு மூச்சுலா

ஊரே…

கேக்கல…

சரியா…

பாக்கல… (இல்ல இல்ல இது போய்.. வச்ச கண்ணு வாங்கமா பச்சையா சைட் அடிச்சா மக்களே)

சொலட்டிப் போட்ட சோழி போல

சொழன்டு நின்னே லா!…

என்று கைகளை விரித்து பாடியவளை சந்தேகமாக பார்த்தவர் “இல்லையே.. ரெண்டு நாளா காலேஜ் போறியே.. இந்நேரத்துக்கு நீ அவனோட பயோ டேட்டாவை கலெக்ட் பண்ணிருப்பியே” என்றவரை பார்த்து உதட்டை பிதுகியவள் “இப்போதைக்கு பெயர் மட்டும் தான்”

“அதானா பார்த்தேன்.. பையன் பெயர் என்ன”

“ஈஈஈ… ஆத்ரேயன்” என இளித்தவளை ஒரு கேவலமான பார்வை பார்த்தவர்

“ஈஈஈ என்ன அவன் இனிஷியலா” என்று கேட்க இப்போது லுக் விடுவது அவள் முறையாயிற்று. அவள் பார்வையில் அசடு வழிந்த சிவா, “சரி பெயரை எப்படி கேட்ட”

“யாரு கேட்டா.. அகி தான் சொன்னான்”

“சரியான வினோத பிறவி குட்டிமா அவன்”

“ல… எனக்கும் அடிக்கடி அப்படி தான் தோணுது பா”

“சரி.. நீ உன் மனசுக்கு பிடிச்சத பண்ணு ஆனா அக்னிய ஹர்ட் பண்ணிடாத.. அப்பறம் நானே உன்ன சும்மா விட மாட்டேன்”

“நல்ல தந்தை.. நன்றிங்க” என நக்கலடித்தவாய்

“டேய் டேய் உன் அம்மா வந்தா இதை விட பண்ணுவா”

“ஹான் தெரியும் தெரியும்.. நானெல்லாம் அகிய ஹர்ட் பண்ண மாட்டேன்.. அவன் என்ன பண்ணாம இருந்தா சரி”

“அதெல்லாம் என் பையன் அப்படி பண்ண மாட்டான்.. இப்போ நீ போய் தூங்கு.. ஓடு” என்று அவளை துரத்திவிட்டு உறங்க சென்றார்.

அன்றைய இரவு அனைவருக்கும் அமைதியான இரவாகவே கழிந்தது.

தொடரும்..

Advertisement