Advertisement

                     அத்தியாயம் 10

ஹர்ஷாவும் சாஹியும் வீடு திரும்ப ரேணு அவர்களுக்காக வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் “எங்க போய்ட்டீங்க” என்று ரேணு கேட்க சாஹி “அது.. அது.. ஹான்.. அவரோட பிரிண்ட் ஒருத்தரை பார்க்க போனும்” , அவள் சமாளிக்கிறாள் என்பதை உணராமல் இருந்தால் அது ரேணு அல்லவே அவளை முறைத்துவிட்டு “இன்னும் சின்ன பொண்ணு கிடையாது சாஹி நீ.. பார்த்து நடந்துக்கோ” என்று கடிந்து கொள்ள அவள் மனதில் “கூட்டிட்டு போனது அவரு.. இவங்க என்ன சொல்லுறாங்க.. எல்லாம் உன் நேரம் சாஹி” , தனக்குள்ளே நினைத்துக்கொண்டவள் உண்ண அமர அங்கு மேசையின் மீது வைக்க பட்டிருந்த உணவு வகைகளை பார்த்து “அம்மா இங்க எதாவது விசேஷம் நடக்குதா.. இவ்ளோ சமைச்சு வெச்சிருக்கீங்க” , அவள் தலையை தட்டிய ரேணு “விருந்துனா அப்படி தான் இருக்கோம் பேசாம சாப்பிடு” என்று அதட்ட

அமைதியாக உண்ண தொடங்கினாள்.

இரண்டு நாட்கள் அங்கு செலவழித்தவர்கள்  மூன்றாம் நாள் வீடு திரும்பினர். சாஹி தன் சுடிதார்களையும் மற்ற உடைகளையும் கொண்டு வந்திருந்தாள். அன்று மாலை தன் அறையில் துணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தவளை கலைத்தது அபியின் அழைப்பு. அபி எதுக்கு இப்போ பண்றாரு என்று நினைத்துக்கொண்டே அழைப்பை ஏற்றாள்.

சாஹி “சொல்லுங்க ஜி”

“என்ன சாஹி நாளைக்கு எல்லாரும் ஊருக்கு போறாங்களாம்”

“ஆமா காலேஜ் ஆரம்பிக்க போகுது அபி.. நானும் மறந்தே போய்ட்டேன்”

“மிஸ் சாஹித்யா நான் அதை கேட்க போன் பண்ணல எனக்கு மாயாவை மீட் பண்ணனும் நான் கூப்பிட்டா வர மாட்டா நீ கூப்பிடு இன்னும் 20 மினிட்ஸ்ல நாங்க பர்ஸ்ட் மீட் பண்ண அதே கேஃப்ல”

“எல்லாம் பிளான் பண்ணிட்டு அப்பறம் சொல்லுறீங்க அப்படி தான”

“ச்சா ச்சா.. ப்ளீஸ் சாஹி”

“சரி சரி நான் பேசுறேன்” என்று மாயாவிற்கு அழைத்தவள் “மாயா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இன்னும் 20 மினிட்ஸ்ல ஸ்டார் கேஃப் வந்திடு டி” என்று அவள் பேச கூட நேரம் கொடுக்காமல் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

மாயா , இவ ஏதோ பிளான் பண்ணிட்டா அதான் ஒழுங்கா பேச மாட்றா.  தன் தோழியின் குணத்தை நன்கறிந்தவள் சாஹியின் திருட்டு வேலையை கண்டுகொண்டாள். இருப்பினும் அவள் என்ன செய்தாள் என்பதை அறிய அங்கு விரைந்தாள்.

அன்று மாலை ஹர்ஷா வெகு சீக்கிரமாக வீட்டிற்கு வந்துவிட வீடே அமைதியாக இருந்தது. எப்போதும் போல் தன் அறைக்கு சென்றவன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வர அங்கு மேசையின் மீது சாஹியின் டைரி கண்ணில் பட்டது. இவளுக்கு டைரி எழுதுற பழக்கமெல்லாம் இருக்கா என்று எண்ணிக்கொண்டு தன் தோட்டத்திற்கு சென்றான். அங்கு ரோஜா செடிகளின் நடுவே இளஞ்சிவப்பு நிற ஷிஃப்பான் புடவையில் புத்தம் புது ரோஜாவாய் அமர்ந்திருந்தவளை பார்க்க பார்க்க தேவிட்டவில்லை ஹர்ஷாவிற்கு. அவளை பூக்குவியல் போல் அள்ளி அணைக்க கைகள் பரபரத்தாலும் அதை அடக்கிக்கொண்டு அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தான் இல்லை இல்லை ரசித்துக்கொண்டிருந்தான். 

பூக்களை பறிக்க தோட்டத்திற்கு வந்தவள் அங்கிருந்தவற்றின் வாசனையால் கவரபட்டு ஒவ்வொரு பூவையும் வாசம் பிடித்துக்கொண்டிருந்தாள். ஹர்ஷா வந்ததையும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்ததையும் அவள் கவனிக்கவில்லை. அங்கிருந்த மலர் ஒன்றை பறிக்க திரும்பும் போது ஹர்ஷா அமர்ந்திருப்பதை கண்டவள் “ஹாய் ஹர்ஷா.. எப்போ வந்தீங்க”

“நான் எப்பயோ வந்துத்டேன் மேடம் தான் பிஸியா இருந்தீங்க”. அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் அருகில் வந்தவள் அவன் பேசி முடித்தவுடன்  இடுப்பில் கை வைத்து முறைத்தாள் பின் அவன் கை பிடித்து அங்கிருந்த மலர்களின் நடுவே அழைத்து சென்றவள் விழி விரிய “செம்ம வாசனையா இருக்குல” என்று அவனை உரசும்படி நின்றுகொண்டாள். பெண்ணவளின் அருகாமையும் மலர்களின் நறுமணமும் அவனை மயக்க ஒருவித போதையில் கட்டுண்டு கிடந்தான் அந்த ஆறடி ஆண்மகன். மலர்களின் நறுமணத்தை விட தன்னவனின் பிரத்தியேக மணம் அவளை கிறங்க செய்ய அதிலிருந்து மீள முடியாமல் தவித்துப்போனாள் பேதையவள்.

இருவரும் அவர்களின் உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர், அப்போது தான் சாஹி அபி முகத்தை தொங்க போட்டுகொண்டு வருவது பார்க்க  ஹர்ஷாவிடம் கூறிவிட்டு அபியிடம் சென்றாள். பொத்தென்று நீள்விருக்கையில் கண் மூடி தலையை கையில் தாங்கியபடி அமர்ந்தான் அபி. அவன் அருகில் சென்று “ஜி என்ன ஆச்சு.. ஏன் இப்படி முகத்தை தொங்க போட்டுட்டு இருக்கீங்க”

“சாஹி எல்லாம் கூடி வர நேரத்துல ஒருத்தி வந்தா.. அவ்ளோ தான் மொத்தமா முடிஞ்சிது”

ஹர்ஷா “புரியுற மாதிரி சொல்லுடா” , ஒரு பெருமூச்சுடன் இன்று மாலை நடந்தவற்றை கூற தொடங்கினான்.

மாலை மாயாவை சந்திப்பதற்காக அந்த கேஃப் முழுவதையும் விலைக்கு வாங்கிவிட்டான் அபிவர்தன்.  இதை கூறி முடிக்கும் போது சாஹி அவனை முறைக்க அபி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு   “என்னப்பா முறைக்குறீங்க.. என் ஆளுக்கு நான் செய்றேன்..”

“இந்த செலவு தேவை தானா.. அபி உங்களுக்கு”

“விடு சாஹித்யா நீ சொல்லுடா என்ன ஆச்சு”

“நான் சில பல வசனமெல்லாம் பேசி மாயாவை ஒத்துக்க வச்சேன் அவளும் கொஞ்சம் கன்வின்ஸ் ஆகும்போது குட்டைய குழப்புறதுக்குனே அந்த நித்யா பொண்ணு அங்க வந்துட்டா”

“அது யாரு ஹர்ஷா நித்யா”

“எங்க மாமா பொண்ணு” , ஹர்ஷா கூறுவதை ஆச்சிர்யமாக பார்த்தவள் அபியிடம் “அப்போ அவ”

“சாஹி.. அவ எங்க மாமா பொண்ணு அவ்ளோ தான் மத்தபடி வேற எதுவுமில்லை”

“அப்பறம் என்னடா ஆச்சு”

“நித்யா வந்து அவகிட்ட நான் அவளை தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் அப்படின்னு எப்போவும் உலறுற மாதிரி உலற அதை கேட்டுட்டு அவ (மாயா) தைய தக்கான்னு கதகளி ஆடிட்டு போய்ட்டா” என்று முடிக்க சாஹி ஏதோ யோசனையாக அமர்ந்திருந்தாள்.

அபி பரிதாபமாக “சாஹி.. இப்போ என்ன பண்ண”

“விடுங்க அபி நான் பேசுறேன்” , அவனை சாமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.

இரவு உணவு முடித்துவிட்டு ஹர்ஷா சாஹி இருவரும் தங்கள் அறைக்கு வர ஹர்ஷா அப்போது தான் நியாபகம் வந்தவனாய் தன் மனைவியிடம் “உனக்கு காலேஜ் எப்போ ஓபன் ஆகுது”

“மண்டே”

“அப்போ நாளைக்கே ஊருக்கு போனா தான்  சரியா இருக்கோம்ல”

“ஆமா” , அந்த ஆமாவில் ஒரு ஸ்ருதியேயில்லை அதை கண்டுகொண்டவன் அவளை சீண்டும் விதமாக “சாஹித்யா.. எப்படி நீயே போய்டுவியா இல்ல நான் வந்து விடனுமா” , அவனை தீயாய் முறைத்தவள் “நானே போய்கிறேன் சார் உங்களுக்கு எந்த கஷ்டமும் வேண்டாம்” என்று முகத்தை வெட்டி திரும்பினாள். ஹர்ஷா புன்னகைத்தவாறே தன் அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டான். போகும் அவனை மனதில் அர்ச்சனை செய்துகொண்டே உறங்கிப்போனாள்.

ஹர்ஷவர்தனின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆயிரம் எண்ணமும் தன்னவளை பற்றியே இருந்தது. அவளை நான்கு மாதம் பிரிந்திருப்பது மிகவும் கடினமான ஒன்றாக தோன்றியது அவனுக்கு.. திருமணத்திற்கு முன்பே ஹர்ஷாவிற்கு அவளின் மேல் தனி அன்பு இருக்க தான் செய்தது அதுவும் அவள் இல்லத்திற்கு சென்ற போது தான் இருவரின் எண்ணமும் ஒன்றுபோல் இருப்பதை அவன் உணர்ந்தான்.  அவளுடன் இருந்த இந்த ஒரு வாரத்தில் ஹர்ஷாவின் மனம் முழுவதும் சாஹியிடம் சரணடைந்துவிட்டது ஆனால் அதை அவளிடம் கூற ஏதோ ஒன்று தடுத்தது.  அவளின் சின்ன சின்ன செயல்களை கூட ரசிக்க ஆரம்பித்துவிட்டது அவனின் காதல் கொண்ட மனம்.

தன் சிந்தனைகளிலிருந்து வெளிவந்தவன் உறங்குவதற்கு வர அங்கு சாஹி தூயில் கொண்டிருக்கும் அழகு அவனை வெகுவாய் ஈர்த்தது. அவள் உறக்கம் கலையாதவாறு வந்தவன் அவளின் பட்டு கன்னத்தில் தன் இதழை பதிக்க அதில் அவள் “ஹர்ஷு” என்று சிணுங்கிக்கொண்டே அவன் மேல் புரண்டு படுத்தாள் , தன்னவள் உறக்கத்தில் கூட தன்னை எவ்வாறு இனம் கண்டுகொண்டாள் என்று ஆச்சரியமாக அவளை பார்த்தவனுக்கு எங்கே தெரியும் அவள் இரண்டு வருடங்களாக அவனை உயிருக்குயிராக நேசிக்கிறாள் என்று. தன்னவளை பிரிய போகும் துயரில் அவளை  தன் கைவலைவிற்குள் வைத்துக்கொண்டு உறங்கிப்போனான்.

மறுநாள் காலை அழகாக புலர்ந்தது. எப்போதும் போல் ஹர்ஷா முதலில் உறக்கம் கலைய தன்மேல் இருப்பவளை விலக்க மனமில்லாமல் அவளை இறுக அணைத்துக்கொண்டு மீண்டும் கண்மூடிக்கொண்டான். சிறிது நேரத்தில் அவளிடத்தில் அசைவு தெரிய அவளை விலக்கி வைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டான். தன் காலை கடன்களை முடித்துவந்தவன் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கும் மனைவியை பார்த்து “சரியான கும்பகர்ணி” என்று செல்லமாக கடிந்துவிட்டு கீழே சென்றான்.

ஹர்ஷா அன்று வீட்டிலிருந்தே வேலை செய்ய சாஹி குட்டி போட்ட பூனை போல் அவனையே சுற்றி வந்துகொண்டிருந்தாள். அதை கவனித்தும் அவளை கண்டுகொள்ளாமல் சுத்தலில்விட்டான் அவளவன்.

மாலை யசோதா சாஹியிடம் “நீ வந்து ஒரு வாரம் தான் ஆகுது ஆனா நீ இங்க ரொம்ப நாள் இருந்த மாதிரி தோணுது டா.. சீக்கிரம் படிச்சி முடிச்சிட்டு வந்திடு டா” என்று அவர் வாஞ்சையாக இவளின் தலையை தடவ சாஹி கள்ள சிரிப்புடன் “சீக்கிரம் வந்திடுவேன் அத்தை… அப்படியே வரும் போது உங்களோட சின்ன மருமகளை கையோட கூட்டிட்டு வந்திடுறேன்”

“அடிப்பாவி” என்றிட அவரை பார்த்து கண்சிமிட்டிவிட்டு ஓடிவிட்டாள். போகும் அவளையே புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தார் அவர்.

இரவு எட்டு மணிக்கு ஊருக்கு கிளம்ப தயாரானவளை அணைத்து விடை கொடுத்தார் யசோதா. விமல் “சாஹி நீ ஒன்னும் ஸ்டேரைன் பண்ணிக்காதமா ஒரு போன் தான் உங்க கரஸ் கிட்ட நான் பேசிக்கிறேன். நீ காலேஜ் கூட போக வேண்டாம்” , சாஹி சிரித்துக்கொண்டே “இது நல்ல ஐடியாவா இருக்கே மாமா” என்று  கூற அபியும் அதை அமோதித்தான் ஹர்ஷாவும் யசோவும் தான் தலையில் அடித்து கொண்டனர்.

ஹர்ஷா ஓட்டுனரை அழைக்க அவர் கார் எடுத்துக்கொண்டு வந்தார். சாஹி அவர்களிடம் விடைபெற்றுக்கொள்ள ஹர்ஷா ஒரு தலையசைப்புடன் விடைபெற்றுக்கொண்டான்.  ஹர்ஷாவும் சாஹியும் பின்னிருகையில் அமர்ந்துகொண்டனர். சாஹி ஹர்ஷாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு அந்த பயணத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்.


நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?
தேன் மழை தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா?
நான் சாயும் தோள் மேல்வேறாரும் சாய்ந்தாலே தகுமா?
நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம்…

வாகனம் முன்னோக்கி செல்ல சாஹியின் நினைவுகள் பின்னோக்கி பயணம் செய்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்

         சாஹி ஒரு செமினாரில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தாள் அப்போது தான் அவள் ஹர்ஷாவை முதல் முதலாக சந்தித்தாள். நீல நிற முழுக்கை சட்டையும் காக்கி நிற கால் சட்டையும் அணிந்து கம்பீரமாக நின்றுகொண்டிருந்தான். அந்த செமினரில் ஹர்ஷவர்தன் தான் பேச்சாளர் அவன் பேச்சில் பெண்ணவள் வெகுவாக கவரப்பட்டாள். அவனின் பேச்சும் அவனின் கம்பீரமும் அவனின் விளக்கமும் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதோ பெண்ணவளின் மனம் அவள் அனுமதி இல்லாமலே அவன் புறம் சாய தொடங்கியது ஆனால் அதற்கும் ஆயுள் காலம் குறைவு தான்  போலும் அன்று மாலையே  ஹர்ஷாவை மீண்டும் சந்தித்தாள் ஆனால் கீர்த்தியுடன்.

கீர்த்தி ஹர்ஷாவுடன் காதல் வசனம் பேசிக்கொண்டிருந்தாள். அவனும் அவளையே கவனித்துக்கொண்டிருந்தான். இதை பார்த்த சாஹித்யாவிற்கு மனதினுள் ஆயிரம் ஈட்டி இறங்குவதுபோல் இருந்தது. அதனால் தான் அவள் ஹர்ஷாவை பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை.

நாட்கள் ஓடியதே தவிர  பாவம் பேதையவளால் அவனை மறக்க மட்டும் முடியாவில்லை. அவனுக்காகவே சைபர் க்ரைமில் ப்ரொஜெக்ட் செய்ய முடிவெடுத்தாள். ஆனால் அவளின் நல்ல நேரமோ என்னமோ சத்யா வர்தன் குரூப்ஸில் தான் ப்ரொஜெக்ட் செய்ய வேண்டும் என்று அடம்பிடிக்க வேறு வழியின்றி ஒத்துக்கொண்டாள். அதன் பின் ஹர்ஷாவின் முன் உரையாற்றும் போது அவளுள் எழுந்த படபடப்பும் அவன் பாராட்டும் போது மனதில் பரவிய நிம்மதியும் அவள் மட்டுமே அறிவாள்.
அதன் பின் அபி அவளை மாற்றி பெண் பார்த்துவிட்டு சென்ற போது அவளுள் எழுந்த வலியை அடக்க பெரும் பாடுபட்டாள்.  ஆனால் அபி ஹர்ஷாவின் சகோதரன் என்று தெரிந்த பின்பு அவளின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. எங்கு ஹர்ஷா அவளின் பயத்தால் அவளை விட்டுவிடுவானோ என்ற பயம் ஒரு பக்கம் இருக்க தான் செய்தது. இரண்டு வருடங்களாக அவள் அவனுடன் கனவில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறாள். அதனால் தான் ஹர்ஷா அவளை முத்தமிடும் போது அவள் ஹர்ஷு  என்று சிணுங்கினாள்.

அன்று ஹர்ஷா கீர்த்தியின் முன் சாஹியை தன்னவள் என்று கூறியதில் சிரகில்லாமல் வானத்தில் பறந்தாள். அதன் பின் அவளை பற்றி தெரிந்தும் அவன் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதில் அவளின் காதல் பன்மடங்கு பெருகியது. கல்யாண புடவை எடுக்க போன போது அவன் அவ்வாறு கூறும் போது கூட அவளுக்கு அவள் காதலின் மேல் நம்பிக்கை இருந்தது. நிச்சயம் ஒரு நாள் அவன் அவளை காதலிப்பான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. இதோ அவளின் அந்த ஆசையும் நிறைவேறியது (ஆனால் அவள் தான் அதை இன்னும் அறியவில்லை). ஹர்ஷாவிற்கு அவள் யாரென்று தெரியவில்லை ஆனால் அவளை பொறுத்தவரை அவன் அவளின் காதல் கணவனே.

Advertisement