Advertisement

                    அத்தியாயம் 10

யசோதா சாஹியை விளக்கு ஏற்ற கூற,  விளக்கை ஏற்றியவள் அங்கிருந்து கடவுள்களிடம் “கடவுளே உன்கிட்ட என் வாழ்க்கையை ஒப்படைகிறேன் இனிமேல் நீ தான் பார்த்துக்கணும்” என்று வேண்டிவிட்டு யசோதாவின் கால்களிலும் விமலின் கால்களிலும் விழுந்து எழுந்தாள்.

இரவு மெல்லிய பட்டு புடவையில் ஒப்பனைகள் ஏதுமின்றி தலையை தளர பிண்ணிவிட்டு வந்தவளை வரவேற்றது என்னவோ காலி அறை தான். அறைக்குள் நுழைந்தவள் கதவை மூடிவிட்டு அறை முழுவதும் கண்களை சுழலவிட விளக்குகள் அணைந்தது.  இருட்டை பார்த்து மிரண்டவள் கண்களை இறுக மூடிக்கொண்டு தன்னை சமன் செய்ய முயற்சிக்க அவளின் கைகள் தன்னிசையாய் நடுங்க தொடங்கியது. கண்களை இறுக மூடிக்கொண்டு காதை கைகளால் போதிக்கொண்டவள் நின்ற இடத்திலே அமர்ந்தாள், கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொண்டது. 

திடீரென்று விளக்குகள் மிளிர அவள் தோள்களில் கை வைத்தவரின் கழுத்தை கட்டிக்கொண்டு “எனக்கு பயமா இருக்கு என்னை இங்க இருந்து கூட்டிட்டு போங்க. ப்ளீஸ்” என்று கதறிக்கொண்டு  கண்ணீர் வடித்தவளை இறுக அணைத்தவன் “சாஹித்யா கண்ணை திறந்து பாரு. நான் லைட் போட்டுட்டேன் கண்ணை திற” என்ற குரலில் அவனிடமிருந்து விலகியவள் “ச…சா…சாரி” , தலை குனிந்து அவள் கூற “பரவால்ல போய் தூங்கு” என்று கட்டிலை காட்டியவன் தனது மடிக்கணினியில் மூழ்கினான். வெகு நேரம் கழித்தே உறங்க சென்றான்.

தன் மீது ஏதோ பாரமாக அழுத்த அதில் துயில் கலைந்தவன் கண்ணை திறந்து பார்க்க அவன் மனையாள் வாகாக அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்துக்கொண்டிருந்தாள். கடிகாரம் ஐந்தரை என்று மணிகாட்ட அவள் உறக்கம் கலையாதவாறு அவளிடமிருந்து விலகியவன் எப்போதும் போல் உடற்பயிற்சி செய்ய ஜிம்மினுள் நுழைந்தான்.

ஏழு மணிக்கு முழிப்பு தட்ட எழுந்தவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்பதே தெரியவில்லை பின் நினைவு வந்தவளாக அவசர அவசரமாக கிளம்பினாள். குளித்து முடித்து வந்தவளுக்கு புடவை கட்ட தெரியவில்லை. ஹர்ஷா இல்லையென்று புடவையை கையில் கொண்டுவந்தவள் Youtubeயில் புடவை கட்டுவது எப்படி என்று போட்டு அதை பார்த்து காட்டுகிறேன் பேர்வழி என்று புடவையை  சுத்திக்கொண்டிருக்க நடக்கும்  அனைத்தையும் உள்ளிருந்த கண்ணாடி அறையிலிருந்து சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருந்தான் அவளின் கணவன்.  இருபது நிமிடம் போராடியும் அவளால் அதை கட்ட முடியவில்லை “அட போங்க டா” என்று புடவையை போட்டுவிட்டு தனது ஆடைகளை அலசி ஆராய அதில் புடவைகள் மட்டுமே இருந்தது. தன் அன்னைக்கு அர்ச்சனை செய்துகொண்டு செய்வதறியாது முழித்துக்கொண்டிருந்தாள்.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் அவ்வறையிலிருந்து வெளியில் வர அவன் வருவதை எதிர்பாராதவள் திரு திருவென முழிக்க ஹர்ஷா “இன்னும் எவ்ளோ நேரம் இந்த புடவை கூட சண்டை போட போற”
“நான்.. என்ன பண்ணுவேன் எனக்கு கட்ட வர மாட்டேங்குது” என்று உதட்டை பிதுக்க, யூடியூப்பை பார்த்து அவளுக்கு புடவை கட்ட உதவினான் அவளின் மணவாளன்.

நேர்த்தியாக புடவை கட்டிவிட்டவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். என்னை எதிப்போரை இடம் தெரியாமல் வீழ்த்திவிடுவேன் என்று தகவலை தரும் கண்கள் கூறிய நாசி அழுத்தமான இதழ்கள் என்று அவனை கண்களால் அளவெடுத்துக்கொண்டிருந்தாள். அவள் இடையில் புடவையை சரி செய்துகொண்டிருந்தவனின் விரல்கள் அவள் வெற்றிடையை தீண்டி செல்ல பெண்ணவளின் மென்மையில்  தொலைந்துகொண்டிருந்தான் அதுவும் சில விநாடிகளே உடனே தன்னை சமன் செய்தவன் அவளிடமிருந்து விலகி நின்றான். 

கண்ணாடி முன் தன்னை பார்த்து கொண்டவள் அவனை குறுகுறுவென பார்க்க “என்ன.. ஏன் அப்படி பாக்குற”
“இல்ல இவ்ளோ அழகா புடவை கட்டி விடுறீங்களே எக்ஸ்பிரியென்ஸா” என்று சிரித்துக்கொண்டே கேட்க
“லூசு மாதிரி பேசாத” என்று அவளை முறைத்துவிட்டு அகன்றான். ஏனோ அவளின் மனம் அவனை ரசிக்க தொடங்கியிருந்தது.

ஹர்ஷா கீழிறங்கி வந்த சில நிமிடங்களில் தானும் இறங்கினாள். காலை உணவை முடித்தவள் தன் மாமியாருடன் கதையலுத்துக் கொண்டிருக்க மகேஸ்வரன் ரேணு வந்து இருவரையும் மறுவீட்டிற்கு அழைத்து சென்றனர்.

ஹர்ஷா அமைதியாக வர சாஹி தனது அலைபேசியில் அதி தீவிரமாக கேண்டி க்ரஷ் ஆடிக்கொண்டிருந்தாள். ரேணு “சாஹி போனை நோண்டாத” என்று கட்டளையிட அவரை முறைத்துக்கொண்டே அதை அனைத்து வைத்தாள்.

ஹர்ஷாவிற்கென பார்த்து பார்த்து சமைத்துக்கொண்டிருந்தனர் பெண்கள் இருவரும். மகேஸ்வரன் “சாஹி மாப்பிள்ளைய உன்னோட ரூம்க்கு கூட்டிட்டு போ ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க”
“சரிப்பா.. வாங்க ஹர்ஷா” என்று அவனை அழைத்துக்கொண்டு சென்றாள்.  அவள் அறை மிக நேர்த்தியாக இருந்தது,  அறை முழுவதும் புத்தகங்களால் சூழ்ந்திருந்தது. ஹர்ஷா அவளின் புத்தகங்களை பார்வையிட்டுக்கொண்டே “புக்ஸ் நிறைய படிப்பியா”
“ஆமா எனக்கு புக்ஸ் படிக்க பிடிக்கும்” , அங்கிருந்த The Hacker playbook என்னும் புத்தகத்தை எடுத்தவன் “சைபர் செக்யூரிட்டி பீல்ட் ரொம்ப பிடிக்குமோ”
“….”
“என்ன பதிலே காணும்”
“நான் உங்ககிட்ட பேசணும் ஹர்ஷா” , அவள் உறுதியான குரலில் அவளை நோக்கி கை கட்டி நின்றவன் “என்ன பேசணும்” என்றான் ஆழ்ந்த குரலில்
“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா”
“பிடிக்காமலா கல்யாணம் பண்ணிக்குவாங்க” , அக்குறலில் என்ன இருந்தது என்று அவளுக்கு புரியவில்லை இருப்பினும் விடாமல் “அப்போ எதுக்கு அன்னிக்கு கடைல அப்படி பேசுனீங்க” என கேட்க “பிடிச்சிருக்குறதும் லவ் பண்றதும் வவேற சாஹித்யா. நமக்கு நிறைய பேரை பிடிக்கும் ஆனா பிடிக்கிற எல்லாரையும் லவ் பண்ண முடியாது” என்று கடுகடுத்துவிட்டு அப்புத்தகத்தில் மூழ்கினான்.

ஹர்ஷாவின் அலைபேசி அழைப்பு அவனை இவ்வுலகிற்கு மீட்டது , அதை உயிற்பித்தவன் “ஹலோ”
“….”
“குட் நான் உடனே வரேன்” என்றவன்  சாஹித்யாவை அழைத்தான். சாஹி “சொல்லுங்க ஹர்ஷா”
“என்கூட வா”
“எங்க”
“வந்து நீயே தெரிஞ்சிக்கோ” என்று அவளை அழைத்துக்கொண்டு ஒரு இடத்திற்கு சென்றான்.

அது ஒரு பத்து மாடி கட்டிடம்,  பாதி கட்டப்படாத நிலையில் அது வீற்றிருக்க  அவ்விடமே மயான அமைதியாக இருந்தது.

அக்கட்டிடத்தின் ஆறாம் மாடியில் கை கால்கள் கட்டப்பட்டு இரண்டு பேர் அமர்ந்திருக்க அவர்களை சுற்றி கருப்பு உடைகளில் இருபதுக்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை கண்டு குழப்பமாக வந்தவள் அங்கிருந்த இருவரை பார்த்து வேரூன்றி நின்றாள். கால்கள் தன் பலத்தை இழந்து போல் இருக்க அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்காது தன் கணவனின் கைகளை பிடித்துக்கொண்டாள்.  கண்கள் கலங்க உதடுகள் தண்டியடிக்க அவளின் இதய துடிப்போ அவள் கணவனுக்கே கேட்கும்படி அடித்து கொண்டிருந்தது.

சாஹியை தன் கை வலைவிற்குள் கொண்டுவந்தவன் அங்கிருந்தவர்களிடம்  கண் காட்ட  அனைவரும் அவ்விருவரை அடித்து துவம்சம் செய்தனர்.
அவ்விருவர் வேறெவருமில்லை இனியாவின் கொலைக்கு காரணமானவர்களே.

தொழில்முறையில் எதிர்போர்களை தொழில் மூலமாக வீழ்த்துவதில் வல்லமை பெற்றவன் ஹர்ஷவர்தன் தன்னை எதிர்பவரை அவன் விட்டுவைத்ததாக சரித்திரம் கிடையாது. தொழில் உலகளில் கொடிகட்டி பறக்கும் இவன் இருள் உலகிலும் பெரும் செல்வாக்கை பெற்றுள்ளவன். மகேஸ்வரன் கூறியதை கேட்டதிலிருந்து கொதித்துக்கொண்டிருந்தவன் நேரம் பார்த்து அவ்விருவரையும் பிடித்துவிட்டான்.
சாஹியின் பயத்தை போக்க அவள் கண் முன்னே அவர்களை அழிக்க நினைத்தான். அதன் படி அவளை அழைத்தும் வந்துவிட்டான்.

ஹர்ஷா “தீனா” என்று ஒருவனை பார்த்து கையை நீட்டினான் , வாட்ட சட்டமாக வந்த ஒருவன் ஹர்ஷாவின் கைகளில் துப்பாக்கியை வைக்க அவளிடமிருந்து விலகியவன் அவ்விருவரையும் சரமாரியாக சுட்டு தள்ளினான் , அவன் முகத்தில் அப்படி ஓர் அலட்சியம். 

“தீனா ஜஸ்ட் டிஸ்போஸ் தேம்” என்று கட்டளையிட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவனின் இந்த அதிரடியில் பெண்ணவள் திகைத்து நின்றாள். அவள் திகைப்பை உணர்ந்தவன் அவளை மெல்ல அங்கிருந்து அழைத்து சென்றான்.

காரில் சாஹி அவனை பார்த்து கொண்டே வர அதில் சலித்துக்கொண்டவன் “ஏன் இப்படி பார்த்துட்டு இருக்க”
“நீங்க கொலை பண்ணிருக்கீங்க ஹர்ஷா” , சோ என்று தோளை உளுக்கியவன் “தே டிசர்வ் இட்” என்றான் உணர்ச்சிகள் துடைத்த குரலில்.
அவன் கூறியதில் இதழ்விரித்தவளை பார்த்து “எதுக்கு இப்போ இந்த ஸ்மைல்”
“இல்ல உங்களுக்கு லவ் இல்லன்னு சொன்னீங்க ஆனா எனக்காக இவ்ளோ பண்றீங்க” என்று நக்கலாக கேட்க அவள் மீது அலட்சிய பார்வையை செலுத்தியவன் “உன் இடத்துல யாரு இருந்தாலும் என்னோட ரியாக்ஷன் அப்படி தான் இருக்கும்”
“நம்பிட்டேன்” என்று அவள் சிரிக்க அவன் இதழ்களிலும் குருநகை பூத்தது.

Advertisement