Advertisement

                      அத்தியாயம் 8

மகேஸ்வரன் கூறியதை கேட்டு அனைவரும் கண்கலங்கி நிற்க ஹர்ஷா மட்டும் கோபத்தில் சிவந்திருந்தான். உலகம் அறியா சிறு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டவர்களை நினைக்கும் போதே அவன் கழுத்து நிரம்புகள் புடைக்க மகேஸ்வரனிடம் “அவங்க ரெண்டு பேரை என்ன பண்ணீங்க” என்று அவன் கேட்க கசந்த புன்னகையுடன் “என்ன பண்ண முடியும் போலீஸ் கிட்ட போனும் ஆனா அவங்களுக்கு இருக்குற பண பலத்துல ஒரே வாரத்துல வெளிய வந்துட்டாங்க” என்றவர் ஹர்ஷாவை பார்க்க அதுவரை அவரை பார்த்துக்கொண்டிருந்தவன் எப்போதும் போல் தன் முகத்தை உணர்ச்சிகள் துடைத்து வைத்துக்கொண்டு “எனக்கு உங்க பொண்ணை பிடிச்சிருக்கு, மத்ததெல்லாம் அம்மா அப்பா உங்ககிட்ட பேசுவாங்க”  என்றவன் சாஹியின் அறையை கேட்டுக்கொண்டு அங்கு சென்றான்.

மாயாவின் மடியில் தலை வைத்துக்கொண்டு சுவரை வெறித்தபடி  படுத்துக்கொண்டிருந்தவள் யாரோ வரும் அரவம் கேட்டு திரும்ப அங்கு ஹர்ஷாவை கண்டவள் “நீ..நீங்க.. இ..ங்க.. எ..ப்..படி” , அவர்களுக்கு தனிமை கொடுக்கும் பொருட்டு மாயா அங்கிருந்து சென்றிட, ஹர்ஷா “ரெடியா இரு இன்னும் ரெண்டு வாரத்துல நமக்கு கல்யாணம்” , சாஹி அதிர்ந்து அவனை பார்க்க அவள் பார்வை புரிந்தும் எதுவும் கூறாது அங்கிருந்து நகர்ந்தான். 

விமல் வர்தன் மகேஸ்வரனிடம் “எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. என் பையனை பத்தி விசாரிக்கணும்னா தாராளமா விசாரிச்சிட்டு உங்க முடிவை சொல்லலாம்”

” அட இதுல விசாரிக்க என்ன இருக்கு எங்களுக்கும் உங்க வீட்ல எங்க பொண்ணை கொடுக்குறதுல ரொம்ப சந்தோசம் தான் சார்”

“என்னங்க சம்மதம் சொல்லிடு சார்ன்னு கூப்பிடுறீங்க சம்மந்தினு சொல்லுங்க சம்மந்தி”

“சரிங்க சம்மந்தி. அப்பறம் மத்ததெல்லாம்”

“உங்க பொண்ணை கட்டுன புடவையோட அனுப்பி வைங்க அது போதும்” என்றிட யசோதா ” எனக்கு பொண்ணு இல்லன்னு ரொம்ப நாள் பீல் பண்ணிருக்கேன். உங்க பொண்ணை எங்க பொண்ணா பார்த்துக்குவோம்” என்றிட ரேணுவிற்கு ஆனந்தத்தில் கண்ணீரே வந்துவிட்டது.

யசோதா ” நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னா ஒரே விஷயம் கல்யாணம் மட்டும் ரெண்டு வாரத்துல சிம்பிள்லா முடிச்சிடலாம் சாஹி படிப்பு முடிச்ச அப்பறம் ரிசப்ஷன் நல்லா கிராண்ட்டா பண்ணலாம்”

ரேணு “ரொம்ப சந்தோசம் சம்மந்தி நாளைக்கே  ஜோசியரை பார்த்து நல்லா நாளா பார்த்து நிச்சயம்மும் அதுக்கு அடுத்த நாள் கல்யாணம் வச்சிகலாம்” என்றிட அனைவருக்கும் மகிழ்ச்சியே.

மறுநாள் காலை அழகாய் புலர எப்போதும் போல் அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தாள் சாஹி.

மாயா “சாஹி இன்னிக்கி அந்த சமர் நம்மளை வச்சு செய்ய போறான்” , உள்ளுக்குள் பயந்திருந்தாலும் அதை காட்டிக்கொள்ளமல் “விடு டி அதான் ஹர்ஷா கிட்ட சொல்லிருக்கோம்ல” , “நானும் அந்த நம்பிக்கைல தான் இருக்கேன்” என்று இருவேரும் அலுவலகம் கிளம்பினர்.

அலுவலகம் வந்த சாஹி சத்யாவை தேட பிரபு அவளிடம் “அடியே துரோகி நேத்து லீவ் போடுறேனு சொன்னியா டி” , அவன் கூறியதை கேட்டவள் அப்போது தான் அவர்கள் இருவருக்கும் விஷயம் கூறாதது உரைத்தது. தலையை சொறிந்தவள் “சாரி டா மறந்துட்டேன்”

“அதுசரி கல்யாணத்துக்கு முன்னடியே இப்படினா கல்யாணத்துக்கு அப்பறம் எங்களை யாருன்னு கேட்ப போல” என்று அவன் கலாய்க்க அதில் முகம் சிவந்தவள் அவனை முறைக்க அங்கு வந்த சமர் பெண்கள் இருவரையும் தனியே அழைத்து சென்றான்.

அபி காலையில் தன் தமயனிடம் சில தாள்களில் கையொப்பம் வாங்க வரும் சாக்கில் மாயாவை சைட் அடிக்க ஓடோடி வர   அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சத்தியாவை அழைத்தவன் அவனிடம் “சாஹி மாயா எங்க”

“அவங்க ரெண்டு பேரையும் சமர் சார் கூட்டிட்டு போயிருக்காரு” , அவர்கள் கூறுவதை கேட்டவன் புருவமுடிச்சிட சமரின் அறைக்கு சென்றான்.

அபி சமரின் அழைக்குள் நுழையவும் மாயா கலங்கிய கண்களுடன் வெளியே வரவும் சரியாக இருந்தது.  கலங்கிய கண்களுடன் அபியை ஏறிட்டவள் எதுவும் கூறாது நகர அவள் கை பிடித்து தன் அறைக்கு அழைத்து சென்றான்.

அவளை ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு மேசை மீது சாய்ந்து நின்றவன் “என்ன ஆச்சு உனக்கு ஏன் கண்ணெலாம் கலங்கி இருக்கு” , உதட்டை கடித்து கொண்டு தன் அழுகையை கட்டுப்படுத்தியவள் எதுவுமில்லை என்றிட அவளை நம்பாமல் பார்த்தவன் அவளிடம் “உனக்கு சொல்லவேண்டாம்னு தோணுச்சுனா நீ சொல்ல வேண்டாம் நான் உன்னை போர்ஸ் பண்ண மாட்டேன்” , என்று அவன் முடிக்கும் முன் அவன் நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்தாள்.  அதை சிறிதும் எதிர்பாராதவன் முதலில் இன்பமாக அதிர்ந்தாலும் அவள் உடல் குலுங்குவதை கண்டவன் அவளின் முதுகை ஆதாரவாக தடவி கொடுத்தான். அவளிடம் மென்மையாக “என்ன ஆச்சு டா ஏன் அழற” , தேம்பிக்கொண்டே அவனை ஏறிட்டவள் சிறிது நேரத்திற்கு முன் நடந்தவற்றை கூறினாள்.

சாஹியும் மாயாவும் சமரின் அறைக்குள் நுழையும் போதே அங்கு வந்த ஹர்ஷா சாஹியை தன் அறைக்கு அழைக்க மாயாவிடம் “மாயா நீ போய் சமர் கிட்ட என்னன்னு கேளு நான் சீக்கிரம் வந்திடுறேன்”

“அடியே சீக்கிரம் வந்துடு டி என்னால தனியா சமாளிக்க முடியாது” என்று பாய குரலில் அவள் கூற “சரி” என்றுவிட்டு ஹர்ஷாவின் அறைக்குள் சென்றாள். சமர் பார்க்க தான் ஹிந்தி ஹீரோ போல் இருப்பான் ஆனால் வேலை விஷயத்தில் மிகவும் கராராக இருப்பான். பெண்களை வேலை வாங்கும் சாக்கில் அவர்களிடம் தவறாக நடந்துகொண்டு அவர்களை மிரட்டி வேலையை விட்டே போகும் படி செய்துவிடுவான் அதனாலேயே மாயாவிற்கு அவன் என்றால் பயம்.

மாயா சமரின் அழைக்குள் நுழைய அவன் கேட்ட முதல் கேள்வியே “சாஹித்யா எங்க” , அவன் குரலில் பயந்தவள் “ஹர்ஷா சாரை பார்க்க போயிருக்க” என்று பதில் கூற அதில் ஆத்திரம் அடைந்தவன் அவர்களின் ப்ரொஜெக்ட் பைலை அவள் முகம் மீது வீசி “irresponsible idiots. நீங்கலாம் ப்ரொஜெக்ட் பண்ணலைன்னு யாரு அழுதா எங்கிருந்தோ வந்து எங்க உயிரை வாங்குறீங்க”

“என்ன பிரச்சனை சார்”

“உங்களுக்கு இன்ச்சார்ஜ்  யாரு நானா ஹர்ஷா சார்ரா. நான் நேத்து அவ்வளவு சொல்லியும் நீங்க லீவ் எடுத்தா எனக்கு என்ன மரியாதை” என்று கூறும் போதே அவளின் கண்கள் கலங்கிவிட்டது அதை அவன் முன் காட்டாமல் மறைத்துக்கொண்டு நின்றாள். ஆனால் அப்போதும் நிறுத்தாவன் இன்னும் சில தகாத வார்த்தைகளில் அவளை திட்டி விட தலைகுனிந்து கண்ணீர் சிந்தினாள் பெண்ணவள்.

சாஹியின் அழகின் பால் ஈர்ப்பு கொண்ட சமர் அவளை அடைய நினைத்து ப்ரொஜெக்ட் என்ற பெயரில் பாதி நேரம் அவளை தன்னோடு தனித்து வைத்துக்கொள்வான் ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் அவளை நெருங்க முடியவில்லை அவள் நெருங்கவிட்டதும் இல்லை அதில் முன்னமே கடுப்பில் இருந்தவன் நேற்று அவன் கூறியும் அவள் விடுப்பு எடுத்ததில் இன்னும் கடுப்பாகி இருந்தான். எறியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இப்போதும் சாஹி ஹர்ஷாவின் அறைக்கு சென்றிட அந்த கடுப்பை இவள் மீது காட்டிக்கொண்டிருந்தான். மாயா “சாரி சார் இனிமேல் இப்படி நடக்காது” என்று கூற “கெட் அவுட்” என்று கையை நீட்டி கதவை காட்ட சிரமப்பட்டு தன் கண்ணீரை அடக்கி கொள்ள அது எல்லாம் சில நிமிடமே அபியை பார்த்தவுடன் அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோட அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.

மாயா கூறுவதை கேட்டவனுக்கு கோபத்தில் முகம் சிவந்தது. அவளை சமாதானம் செய்துவிட்டு சென்றான் நின்றது தன் தமயனின் அறை வாசலில். ஏதோ வேலைகளில் முழ்கிருந்த ஹர்ஷாவிடம் “என்ன நினைச்சிட்டு இருக்க ஹர்ஷா” , அவன் மொட்டையாக கேட்க அவனை கேள்வியாய் பார்த்தான் ஹர்ஷா , அபி “அந்த சமர் கேரக்டர் சரியில்லனு நான் அல்ரெடி உன்கிட்ட சொல்லிருக்கேன் டா இன்னிக்கி மாயா கிட்ட தப்பா பேசிருக்கான்”
“என்ன பண்ணலாம்” என்று அவன் பொறுமையாக கேட்க அபிக்கு தான் கடுப்பாக இருந்தது

“ஹர்ஷா நான் செம்ம கடுப்புல இருக்கேன் ஆனா நீ பொறுமையா என்ன பண்ணலாம்னு கேட்குற. ஜஸ்ட் ஃபயர் (fire) ஹிம்”

“யூர் விஷ் அபி” என்று அவன் வேலையில் மூழ்கிட அபி சமரின் டிஸ்மிஸ் ஆர்டரை அனுப்பி வைத்தான்.

மாயா முகத்தை கழுவிக்கொண்டு தங்களுக்கு ஒடுக்கப்பட்ட இடத்திற்கு வர அங்கு சாஹி ஏதோ யோசனையாக அமர்ந்திருந்தாள். மாயா “என்ன சாஹி என்ன யோசனை”

“மாயா பேபி நான் செம்ம ஷாக்ல இருக்கேன்”

“என்ன ஷாக்”

“இந்த கம்பனியோட MD யாருன்னு உனக்கு தெரியுமா” , இல்லை என்பதாய் அவள் தலையசைக்க சாஹி “ஹர்ஷாவும் அபியும் தான்”

“இன்னாது” என்று சத்யாவும் பிரபுவும் கேட்க மாயா “டேய் நீங்க எங்கிருந்து டா வரீங்க”

“இங்க தான் இருந்தோம் நீங்க கதையடிக்கும் போது என்னன்னு பார்க்க வந்தோம்”

“அட சீ போய் வேலைய பாருங்க” என்று சாஹி துரத்திவிட மாயா சாஹியிடம்  “சாஹி டூ மினிட்ஸ் டி வரேன்” என்றுவிட்டு அபியின் அறைக்கு செல்ல அங்கு வெளிநாட்டு கிளையண்ட்டுகளிடம் பேசிக்கொண்டிருந்தான் அவன்.

மாயா மிகவும் எளிமையான குடும்பத்தில் வாழும் பெண் அவர்கள் வீட்டில் காதலுக்கு எதிர் எவருமில்லை ஆனால் தகுதிக்கு மீறி அவள் காதலித்தால் நிச்சயம் அதை ஏற்க மாட்டார்கள் என்பதை அவள் அறிவாள் தானே. இதற்கு மேல் வளர விட கூடாது என்றெண்ணி  அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள் அவர்கள் சென்ற பின் அபியிடம் “சார் ஐ அம் சாரி நீங்க யாருன்னு தெரியாம நான் உங்கக்கூட பழகிட்டேன்” , அவளை தன் தோள் வலைவிற்குள் கொண்டு வந்தவன் கிசுகிசுப்பான குரலில் “ஹே என்ன ஆச்சு டா” , அவனிடமிருந்து விலகியவள் “இங்க பாருங்க சார் நீங்க இந்த கம்பனி MDன்னு எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் உங்ககிட்ட சமரை பத்தி சொல்லிருக்க மாட்டேன். உங்களுக்கும் எனக்கு ஒத்துவராது புரிஞ்சிக்கோங்க” என்றுவிட்டு நகர அபி அவள் சென்ற திசையை வெறித்துக்கொண்டிருந்தான். 

காதல் மொழி தேவையில்லை
பார்வை பரிமாற்றங்கள் போதுமே
உன் காதலை உணர்த்த..



Advertisement