Advertisement

                     அத்தியாயம் 6

சாஹித்யா வர்தன் குரூப்ஸில் ப்ரொஜெக்ட் செய்ய வந்து இன்றோடு இரண்டு வாரம் ஆகிருந்தது. அபி ஒரு வேலை காரணமாக மும்பை பறந்திருந்தான். அபி இல்லாததால் ஹர்ஷாவின் தலையில் அதிக வேலைகள் விழ எவ்வித பதட்டமும்மின்றி அவற்றை செவ்வனே செய்துகொண்டிருந்தான். அன்று காலையிலிருந்தே சாஹிக்கு ஏதோ மனதில் தோன்றிக்கொண்டிருக்க அலுவலகம் வந்தவுடன் அபியை காண சென்றாள் அப்போது தான் அவன் இன்னும் வராதது தெரிந்திருக்க தன் இருக்கைக்கு வந்தவள் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இரு கைகளாலும் தலையை தாங்கியபடி அமர்ந்திருக்க மாயா அவளின் தோளை இடித்து “சாஹி ஹர்ஷா சார் உன்னை கூப்பிட்டார்”

“எனக்கு தலை வலிக்கிது மாயா நீ போ”

“இல்ல சாஹி அவர் உன்னை தான் தனியா கூப்பிட்டார்”

“ம்ப்ச்.. போறேன்” என்று அவள் சென்றாள்.

சாஹி ஹர்ஷாவின் அறை கதவை திறந்து உள்ளே நுழைய ஹர்ஷா அவளை கண் ஜாடையினால் தன் அருகே வர கட்டளையிட்டான். அவள் சென்றது தான் தாமதம் ஹர்ஷா எழுந்து அவளை தன் இடையோடு கட்டிக்கொண்டு அவன் முன் அமர்ந்திருந்த கீர்த்தியிடன் “மிஸ் கீர்த்தி மீட் மை வைஃப் சாஹித்யா” என்று அவளுக்கு அறிமுகப்படுத்த சாஹி திரு திருவென முழித்தாள். சாஹியின் மீது அனல் பறக்கும் பார்வையை வீசியவாறே கீர்த்தி  “இது என்ன நியாயம் ஹர்ஷா நம்ம லவ் பண்ணோம்”

ஹர்ஷா தன் தோள்களை உலுக்கிக்கொண்டு “பண்ணோம்.. எப்போ பணம் தான் முக்கியம்னு நீ சொன்னியோ அன்னிக்கி நமக்குள்ள இருந்த எல்லாம் முடிஞ்சிது. அதுமட்டுமில்ல உனக்கு தான் எங்க கம்பனி சிஃப் மேனேஜர் கூட கல்யாணம் நடக்க போகுதே” என்று நக்கல் தோணியில் கேட்க சாஹிக்கு தான் ஒன்றும் புரியவில்லை. முதல் முறையாக ஒரு ஆடவனின் ஸ்பரிசம் தந்த குறுகுறுப்பில் நெளிந்தவள் பாவமாக ஹர்ஷாவை பார்க்க அவளிடமிருந்து சற்று  விலகியவன் அவளை நோக்கி “ஸ்வீட் ஹார்ட் நீ உன்னோட ப்ரொஜெக்ட்டை பாரு போ” என்று கனிவான குரலில் கூற அதில் தொலைத்தவள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் அங்கிருந்து வெளியேறினாள்.

சற்று நேரத்திற்கு முன்பு தர்ஷனை பார்க்க கீர்த்தி அவன் வேலைசெய்யும் அலுவலகம் வந்தாள். அங்கு  ஹர்ஷா தர்ஷனிடம் கோபமாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு சிலையென நின்றவள் மனதில் ‘ஐயோ நான் லவ் பண்ணதை சொல்லிடுவானோ’ என்று பயந்திருக்க  ஹர்ஷா அங்கிருந்து செல்வதை பார்த்தவள் தர்ஷனிடம் “யாரு தர்ஷன் அது உங்களை அப்படி கத்திட்டு போறது”

“ஓ அவரா அவர் தான் ஹர்ஷவர்தன் இந்த காம்பனியோட எம்.டி. என்றிட உலகமே நின்றது போல் தோன்றியது மனதில் , ச்சா அன்னிக்கி இதை தான் சொல்ல வந்தானா.. கொஞ்சம் பொறுமையா கேட்காம போய்ட்டியே முட்டாள், தன்னை தானே கடிந்து கொண்டவள் ,

அவனிடம் ஏதேதோ பேசிவிட்டு ஹர்ஷாவை பார்க்க அவன் அறைக்கு சென்றால்.
ஹர்ஷாவிடம் தன் காதல் நாடகத்தை தொடங்க அதுவரை நடந்தவற்றை தன் கணினி திரையில் பார்த்தவன் அவளை வெறுப்பேற்ற சாஹித்யாவை அழைத்தான்.

சாஹித்யா அங்கிருந்து சென்றவுடன் கீர்த்தி “இங்க பாருங்க ஹர்ஷா எங்க வீட்ல ரொம்ப மிரட்டுனாங்க அதான் நான் உங்ககிட்ட அப்படி சொன்னேன் மத்தப்படி எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்”

“யாரு நீ. எப்போ தான் உண்மை பேச கத்துக்க போற நீ… தர்ஷன் சொன்னான் பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கே நீ அவனுக்கு ஒகே சொன்னனு.  பொண்ணாச்சேனு பாக்குறேன் இல்லாட்டி பொய் சொன்னனதுக்கு பல்லை தட்டி கைல கொடுத்திடுவேன்”

“நீங்க என்னவென சொல்லுங்க ஆனா நீங்க எனக்கு தான்” என குருட்டு நம்பிக்கையில் அவள் சொல்ல

“ஹாஹா உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. உன் கண்ணு முன்னாடி நான் சாஹித்யாக்கு தாலி கட்டி காட்டுறேன்.. இப்போ” வாசலை நோக்கி அவன் கை காட்ட அவனை வன்மமாக பார்த்துக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.
இனி கீர்த்தியால் தன்னவளுக்கு வரவிருக்கும் ஆபத்துகளை அறிந்திருந்தால் அவன் சாஹியை இதில் இழுத்துவிட்டிருக்க மாட்டானோ என்னவோ.. மீண்டும் ஒரு முறை கீர்த்தியை பற்றி உணராமல் போனது விதியின் விளையாட்டு போல.

சாஹித்யா மாயாவுடன் பேசிக்கொண்டிருக்க கீர்த்தி அவளை தீயாய் முறைத்தாள் அதை சாஹி கவனித்தும் கண்டுகொள்ளவில்லை ஆனால் மாயா சாஹியிடம் “அடியேய் அவ உன்னை முறைச்சிட்டு போற நீயும் அமைதியா இருக்க”

சாஹி தோளை உலுக்கிக்கொண்டு “இங்க என்ன நடக்குதுனே எனக்கு புரியல இதுல அவ எதுக்கு முறைகிறான்னு எனக்கு எப்படி தெரியும்” என்று சலித்துக்கொள்ள அபிகிட்ட கேளு சாஹி என அவள் பெருந்தன்மையாக ஐடியா கொடுக்க அவளை கேவலமாக ஒரு லுக் விட்டவள் “எவன் செத்தா நமக்கு என்ன நம்ம ஜாலியா இருக்கணும் அப்படி தானா”

“சே சே நீ ஏதோ யோசனையா இருந்தியா அதான்”

“ஓ.. நம்பிட்டேன்” என்று அவள் கலாய்க்க ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தாள் அவளின் அன்பு தோழி.

சாஹியின் மனதில் ‘என் வாழ்க்கைல என்ன நடக்குதுனே தெரியலையே.. தம்பி என்னடான்னா நீ தான் அண்ணின்னு சொல்லிட்டு போறான் அண்ணன் என்னடான்னா நான் தான் பொண்டாட்டினு யருக்கிட்டாயோ சொல்றான் மொத்ததுல ரெண்டு பேரும் என்னோட விருப்பத்தை கேட்க மாற்றானுங்க’ என அன்று முழுவதும் சோக கீதம் வாசித்துக்கொண்டிருந்தாள். இரவு பசியில்லை என்று மாடிக்கு சென்று நிலாவை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க ஜான்வி அவளின் தோளை தொட்டு “என்ன லீடர் ஏன் இப்படி சோகமா இருக்க அதுவும் சாப்பிடாம இருக்க.. என்ன நடந்தாலும் நமக்கு சாப்பாடு தான் முக்கியம்னு சொல்லுவா இப்போ என்ன ஆச்சு”

“ஜானு நீ ஒரு கேள்வி கேட்டாலே எனக்கு பதில் தெரியாது இதுல இத்தனை கேக்குற”

அதில் கடுப்பான ஜானு “அப்படியா.. நிலாவை இருட்டுல தான் ரசிப்பாங்க நான் வேணும்னா லைட் ஆஃப் பண்ணட்டுமா”

அதில் கலவரமாக திரும்பியவள் “அட கொலைகாரி.. உனக்கு பதில் தான வேணும்”

“ஆமா” என்று வேகமாக தலையாட்ட

“நான் சோகமா இல்ல டையர்ட்டா இருக்கேன்.. அடுத்து நான் வரும்போதே சாப்பிட்டுட்டு வந்துட்டா அவ்ளோ தான்”

“ஏதோ சொல்ற நானும் நம்புறேன்”

“உன்னை சொல்லி குத்தமில்லை நான் தான் உனக்கு வாயாட கத்துக்கொடுத்தேன் அதுக்கு என்ன நானே சொல்லிகனும்” என்று தலையில் அடித்துக்கொண்டாள் நம் கதாநாயகி.

ஹர்ஷா தன் அறையில் எதையோ தேடிக்கொண்டிருக்க அபி “ஹாய் ஹர்ஷா.. என்ன ரொம்ப மிஸ் பண்ணியா” என்று ஆவலாக கேட்க அவன் பதிலேதும் கூறாமல் தன் தேடும் பணியை செய்துகொண்டிருந்தான். அவன் கோபமாக இருந்தால் தான் இப்படி மௌனம் காப்பான் என்று அறிந்திருந்தவன் “என்ன ஆச்சு இன்னிக்கி” என்று கேட்க அதற்கும் பதிலில்லை. அபி அமைதியாக சோபாவில் அமர்ந்து அங்கிருந்த நீரை அருந்த  ஹர்ஷா “எனக்கும் சாஹித்யாகும் இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம் நடக்கணும்” என்று கூற அதை கேட்டவனுக்கு புரையேற தன்னை தானே சமன் செய்தவன் “என் அருமை உடன்பிறப்பே நீ என்ன சொல்றனு தெரிஞ்சி தான் சொல்றியா” அவனுக்கு பதிலாக கிடைத்தது ஒரு பார்வை தான் அதன் அர்த்தம் புரிந்தவன் போல் “ஒகே நான் போய் பேசுறேன்” என்று அங்கிருந்து நகர்ந்தான்.

தன் பெற்றோரின் அறைக்கு சென்றவன் அவர்களிடம் “மம்மி ஹர்ஷாக்கு ஒரு பொண்ண பிடிச்சிருக்கு அவளை கல்யாணம் பணிக்கணும்னு ஆசை படுறான்” என மடமடவென கூறுபவனை தம்பதியர் இருவரும் பார்க்க திருட்டு முழி முழித்தவன் “நிஜமா அவனுக்கு பிடிச்சிருக்கு அந்த பொண்ணை.. ரொம்ப நல்ல பொண்ணு உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்” , ‘மீ பாவம்’ என்பதை போல் அவன் முகத்தை வைத்துக்கொண்டு கூற விமல் “ஏது ஹர்ஷாக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு இதை எங்களை நம்ப சொல்ற”

“இது என்னடா கொடுமை ..” என்று மனதில்  நினைத்தவன் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறேதும் இல்லை. என்னை நம்புலனா ஹர்ஷா கிட்ட நீங்களே கேட்டுக்கோங்க”

யசோதா “அட அவனே கல்யாணத்துக்கு ஒகே சொல்றான்ல அப்பறம் என்ன.. விமல் நம்ம நாளைக்கே பொண்ணு வீட்ல பேசிடலாம்”

“நீ சொன்னா அதுக்கு மறுபேச்சு இல்ல டா.. அபி அந்த பொண்ணு எங்க இருக்கா”

“பொண்ணு வீடு மதுரை ஆனா இங்க அவ மாமா வீட்ல இருக்கா நம்ம கம்பனில IT டிபார்ட்மெண்ட்ல ப்ரொஜெக்ட் பண்றா”

“போன் நம்பர் கொடு” என்று வாங்கியவர் சாஹியின் தந்தையிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அபியிடம் “நாளிக்கி நம்ம எல்லாரும் சாஹித்யாவோட மாமா வீட்டுக்கு போறோம் அதுனால நாளிக்கி வீட்டுக்கு சீக்கிரம் வந்திடுங்க”

தலை ஆட்டிக்கொண்டே “ஒகே பா”

யசோதா “இப்போ நல்லா பூம் பூம் மாடு மாதிரி தலையாடிட்டு நாளிக்கி அண்ணனும் தம்பியும் வேலை இருக்கு அது இதுன்னு நடு ராத்திரி வந்தீங்க அவ்ளோ தான்”

“அதெல்லாம் வந்திடுவோம்” என்று தன் உடன்பிறப்பிற்காக மகிழ்ந்தான் அவன்.

நாளை தன் வாழ்வின் இருள் நிறைந்த பக்கங்கள் வெளிவர போவதை அறியாது தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்தாள் அந்த இளம் பாவை.

Advertisement