Advertisement

                    அத்தியாயம் 5

அபி சாஹித்யாவை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு சென்றான். சாஹித்யா தன் வழக்கத்திற்கு மாறாக  அமைதியாக வர அபி “சாஹித்யா சாரி. .நீ இவ்ளோ பயப்படுவன்னு நான் நினைக்கில”

“பரவால்ல சார் விடுங்க”

“ஹே என்னமா சார்லாம் சொல்லி என்னை பெரிய ஆள் ஆக்கிடாத” என்று அவன் அலற  ஒரு கீற்று புன்னகையை பதிலாகினாள்.

அபி அவளுடன் பேசிக்கொண்டே வர அவளோ ஒரு வார்த்தை கூட மொழியவில்லை.  ஒரு வழியாக அவளை பேருந்தில் ஏற்றிவிட்டவன் அங்கிருந்த கிளீனரிடம் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு அவள் செல்லும்வரை காத்திருந்த பின்பே வீட்டிற்கு சென்றான். சாஹிக்கு மனதில் சஞ்சலம் இருந்துகொண்டே இருந்து. பதினைந்து வருடங்கள் கழிந்தும் கூட மறக்க முடியாத சில சம்பவங்கள் அவள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

வெகுநேரம் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தூக்கம் வர ஜன்னலின் புறம் தலை சாய்த்து படுத்துகொண்டாள். காலை 8 மணியளவில் மதுரையை அடைந்தவள் வீட்டிற்கு சென்று தயாராகிக்கொண்டு மீண்டும் கல்லூரி கிளம்பினாள்.

மாயா சத்யாவிடம் வாதாடிக்கொண்டிருக்க சாஹி அமைதியாக அவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள். பிரபு “சாஹி பேபி என்ன ஆச்சு உனக்கு.. ஏன் இவ்ளோ சோகமா இருக்க”

“அதெல்லாம் ஒன்னுமில்ல” என்று அவள் வாய் பொய் உறைத்தாலும் அவள் கண்களில் இருந்த பயம் அகலவில்லை.

மாயா ஆண்கள் இருவரையும் சில வேலைகள் கூறி அவர்களை அணுப்பிவிட்டு சாஹியின் தோள் பற்றி “என்ன ஆச்சு” என்று கேட்டது தான் தாமதம் அவளை கட்டியணைத்துக்கொண்டு “மாயா எனக்கு திரும்பவும் பயம் வருது டி”

“என்னடி சொல்ற”

“ஆமா” என்று நேற்று நிகழ்ந்தவற்றை கூறினாள். மாயா அவளை அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினாள் அவளுக்கு தெரியாதா இதனால் இவள் எவ்வளவு மனவுளைச்சலுக்கு ஆளானால் என்று.

ஒரு வழியாக சாஹியை தேற்றியவள் அவளை அழைத்துக்கொண்டு கேன்டீன் செல்ல சத்யா “சாஹி.. மாயா.. வர்தன் குரூப்ஸ் நமக்கு ப்ரொஜெக்ட் கொடுக்க ஒத்துகிட்டாங்க” என்று குதூகளிக்க அவர்கள் மகிழ்ச்சியில் சாஹியும் சேர்த்துக்கொண்டாள். இன்னும் ஒரு வாரம் கழித்து மீண்டும் சென்னை செல்ல வேண்டும் என்றும் ப்ரொஜெக்ட் முடியும் ஒன்றரை மாத காலம் வரை சென்னையில் தான் தங்க வேண்டும் என்றும் பிரபு கூறிவிட அனைவரும் அவனை ஆமோதித்தனர்.

காலை முதல் மாலை வரை கல்லூரியில் நேரம் கழித்தவளுக்கு அப்போதுவரை தன் தாயின் நியாபாகமே இல்லை. மாலை வீட்டினுள் நுழைந்தது தான் தாமதம் “ஏன் சாஹித்யா உன்னை மாப்பிள்ளை பார்க்க சொன்னா நீ எங்கே போன”

“அம்மா சாரிமா நான் மாப்பிள்ளை போட்டோ கூட பார்க்கல அதான்”

“என்ன பொண்ணு டி நீ” என்று அவர் தலையில் அடித்துக்கொள்ள அவரை சமாதானம் செய்யும் விதமாய் “டோன்ட் ஒர்ரி ரேணு எங்களுக்கு ப்ரொஜெக்ட் கிடைச்சிடுச்சி சோ திரும்பவும் சென்னை போவோம் அப்போ கண்டிப்பா அவரை பார்க்குறேன்” என்று தன் தாயை சமளித்துவிட்டு மீண்டும் சென்னை செல்வதை நேரடியாக கூறாமல் கூறினாள்.

அபி அவளை விட்டுட்டு வர ஹர்ஷா “அறிவில்லையா அபி அவ எவ்ளோ பயந்திட்டா பார்த்தியா.. ஐ திங்க் ஷி ஹாஸ் சம் இஸுஸ் அவளுக்கு ஏதாவது ஆகிருந்தா என்ன பண்ணிருப்ப” என்று பொறிந்து தள்ள அபி ஆவென வாயை போலந்து பார்த்துக்கொண்டிருந்தான் பின்ன தன் தமையன் முதல் முறையாக ஒரு பெண்ணிற்காக தன்னை கடிந்துகொண்டிருக்கிறான் என்றால் அவனும் என்ன செய்வான் பாவம்.

ஹர்ஷா அவனை பொறிந்துவிட்டு அங்கிருந்து சென்றான் ஆனால் மனம் முழுவதும் அவளே ஆட்கொண்டாள். இரவு வெகுநேரம் விழித்திருந்தவன் தாமதமாகவே உறக்கத்தை தழுவினான். மறுநாள் காலை முதல் வேலையாக அவர்கள் ப்ரொஜெக்டை செலக்ட் செய்தான். அவர்களுக்கு அது குறித்து மின்னஞ்சலும் செய்து முடித்தான்.

நாட்கள் இறக்கை கட்டி பறக்க சாஹி சென்னைக்கு வரும் நாளும் வந்தது. திங்கள் காலை எட்டு மணிக்கு அவள் அலுவலகம் செல்ல அங்கு மின்தூக்கிக்காக காத்திருந்த அபியை பார்த்தவள் “ஹாய் ஜி என்ன இங்க வந்திருக்கீங்க”

“ஹே சாஹித்யா..” என்று உற்சாகமாக வரவேற்றவன் அவளிடம் “நானும் இங்க வார்க் பண்றேன்”

“பார்ரா செம்ம.. அப்போ நம்ம அடிக்கடி சந்திப்போம்”

“டேபினிட்லி யா.. அப்புறம் மாயா வரல”

“வருவாங்க வருவாங்க..” என்று நக்கலாக கூற அதில் அசட்டு சிரிப்பை உதிர்த்தவன் “விடு யா.. பிரிண்ட்ஸ்” என்று அவன் கை நீட்ட சிறிது நேரம் யோசிப்பது போல் பாவனை செய்தவள் “ம்ம்ம்… பிரிண்ட்ஸ்” என்று அவன் கையை பற்றி குலுக்கினாள். பின் தன் நீண்ட நாள் சந்தேகத்தை அவனிடம் கேட்க எண்ணும் போது மின் தூக்கி வந்துவிட இருவரும் அதில் ஏறினார். அவர்களுக்கு பின் நின்றவர்கள் யாரும் ஏறாததை பார்த்து சாஹி அபியிடம் “என்ன ஜி யாரும் ஏற மாற்றங்க”

“அதெல்லாம் அப்படி தான்” என்று மட்டும் கூறியவன் தளத்தின் எண்ணை அழுத்தினான்.

சாஹி “ஜி நான் ஒன்னு கேட்பேன் உண்மையா சொல்லணும்”

“கேளு சாஹித்யா”

“சாஹி”

“சரி சாஹி..”

“ஜி அன்னிக்கி நீங்களும் என்னை மாத்தி பார்த்துட்டு போனீங்களா”

“ஆமா சாஹி உன்னை மாத்தி தான் பாத்தேன் ஆனா என் அண்ணாக்கு நீ தான் சரியாக ஜோடி” என்று அவன் கூறவும் மின்தூக்கியின் கதவுகள் திறக்கவும் சரியாக இருந்தது. சாஹி “என்ன ஜி சொல்றீங்க”

“ஆமா சாஹி எனிக்கா இருந்தாலும் நீ தான் என் அண்ணி” என்று அவளை ஹர்ஷாவின் அறைக்கு அழைத்து சென்றான்.

“சரி யாரு ஜி உங்க அண்ணா”

“ஓ சாரி.. அதை சொல்ல மறந்துட்டேன் பாறேன். கம்… ஹீ இஸ் ஹர்ஷா அண்ட் ஹி இஸ் மை ட்வின் ப்ரெதர்” என்று கூற அவள் விழி விரித்து இருவரையும் பார்த்தாள். ஹர்ஷா அவள் முன் சொடக்கு போட அதில் இவ்வுலகம் வந்தவள் அசடு வழிய ஒரு நிமிடம் அவள் அழகில் சொக்கி தான் போனான் அவளின் அவன்.

அபி சாஹியிடம் பேசிவிட்டு அங்கிருந்து செல்ல ஹர்ஷா அவளிடம் “எங்க உங்க டீம் மேட்ஸ்”

“வந்திடுவாங்க சார்” என்று அவனிடம் ப்ரொஜெக்ட் சம்மந்தமாக பேசிக்கொண்டிருக்க சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தது சாஹியின் வானர படை.

ஹர்ஷாவின் அறையில் அனைவரும் அமர்ந்திருக்க அவன் யாருக்கோ அழைப்பு விடுத்தான். அவன் அழைத்து மறு நொடி அங்கு வந்தான் சமர்.

ஹர்ஷா “காய்ஸ் ஹீ இஸ் சமர்.. உங்க ப்ரொஜெக்ட்க்கு இவன் தான் கைட்(guide). சமர் இனிமேல் அவங்க உன் பொறுப்பு” என்று கூறினான்.

சமர் அவர்களின் ப்ரொஜெக்டிற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தான். சாஹி சமரிடம் “சார் ஹர்ஷா சார் என்னவா இருக்காரு”
“சாரி சாஹித்யா அவரோட டீடெயில்ஸ் நாங்க யார்கிட்டயும் சொல்ல கூடாது.. காலைல அபி சார் கூட பார்த்தேன் உன்னை அவர்கிட்ட கேளுங்க” என்றுவிட்டு அவன் தன் வேலைகளை கவனிக்க சாஹித்யா “என்னடா இது இவ்ளோ பில்டப் தரான்” என்று மனதில் நினைத்துக்கொண்டு அவளும் தன் வேளைகளில் மூழ்கினாள்.

ஹர்ஷா தன் வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தாலும் சாஹித்யாவின் மீது ஒரு கண் வைத்தே இருந்தான். அவளின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் அவனை வெகுவாய் ஈர்த்தது என்றாலும் அது எதையும் அவன் காட்டிக்கொள்ளவில்லை. கட்டிக்கொண்டால் அது ஹர்ஷாவும் இல்லையே..

ஒரே நாளில் அங்கிருந்த அனைவரிடமும் நட்பு பாரட்டிருந்தாள் சாஹி. அவளின் குழந்தை தனமும் வெகுளியான வெளிப்படை பேச்சுகளும் சிலரை கவர்ந்தது என்றால் அவளின் மீன் விழிகளும் குழி விழும் கன்னங்களும் பூவிதழை விட மென்மையான செவ்விதழ்களும் பலரை ஈர்த்தது அந்த பலரில் சமரும் ஒருவன்.

மாலை தன் வேலைகளை முடித்துக்கொண்டு அபி வர சாஹி அவனை தனியாக “சொல்லுங்க அபி நீங்க யாரு.. இதுக்கு முன்னாடி எங்க இருந்தீங்க.. உங்களோட உண்மையான பெரு என்ன” என்று பாஷா பட ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்க அதில் அவளை ‘லூசா இவ’ என்பதை போல் பார்த்தவன் அவளிடம் “அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது அண்ணி அவர்களே.. சீக்கிரம் உங்களுக்கே தெரியவரும்.. அதுவரைக்கும் அது சஸ்பென்ஸ்” என்று அவன் அவளை இன்னும் குழப்பிவிட்டு செல்ல அவனை அர்ச்சனை செய்துகொண்டு தொப்பென்று தன் இருக்கையில் அமர்ந்தாள். அவன் விளையாட்டிற்கு சொல்கிறானா இல்லை நிஜமாகவே ஹர்ஷாவிற்கு அவளை பிடித்துவிட்டதா என்று அவளுக்கு இன்னும் குழப்பமாக தான் இருந்தது.

Advertisement