Advertisement

அத்தியாயம் 16

ரேணுவிடம் தகவல் தெரிவித்துவிட்டு ஹர்ஷாவுடன் மருத்துவமனை விரைந்தான் , போகும் வழியில் யசோவிற்கும் தகவல் தெரிவித்திருந்தான் அபி.  ஹர்ஷா எதுவும் பேசாமல் எங்கோ வெறித்துக்கொண்டு வந்தான். கோபமாக சோகமோ எதையும் எளிதில் வெளிக்காட்ட மாட்டான் ஹர்ஷா, அவனை பற்றி நன்கறிந்தவன்   “ஹர்ஷா கன்ட்ரோல் யூர்செல்ப்” என்றிட அதற்கு ஒரு பதிலுமில்லை. ஹர்ஷாவின் மனம் தன்னவளுக்கு எதுவும் நேர்ந்திருக்க கூடாது என்பதிலேயே லைத்திருக்க அபி கேட்டதெல்லாம் அவன் செவிகளை எட்டவேயில்லை.

இருவரும் மருத்துவமனைக்குள் நுழைய அபி அங்கிருந்த செவிலியரிடம் “இங்க சாஹித்யா அப்படின்னு…  ஆக்சிடெண்ட் கேஸ்” என்று இழுக்க அதை புரிந்துகொண்ட பெண் “ஆப்பேரஷன் தியேட்டர்ல இருக்காங்க” என்று வழி கூற இருவரும் விரைந்தனர். அங்கு சிகிச்சை நடக்கும் அறையின் வாசலில் மாயா முகத்தை மூடி கொண்டு அழுதுகொண்டிருந்தாள், அவள் ஆடையெங்கும் ரத்தம் காய்ந்து கிடைக்க. ஹர்ஷா பதட்டத்துடன் மாயாவிடம் “மாயா என்ன ஆச்சு ” என்று வினாவ மாயா விசும்பிக்கொண்டே “நாங்க காலேஜ்ல இருந்து வெளிய வரும் போது ஒரு பெரிய வண்டி அவளை இடிக்கிற மாதிரி வந்தது முரளி அண்ணா அதை பார்த்துட்டு சாஹிய பின்னாடி இழுதுட்டாரு ஆனா பின்னாடி இன்னோரு வண்டி வந்து இடிச்சிடுச்சி.. முரளி அண்ணனுக்கும் அடி பட்டுடுச்சி” என்றாள்.

ஹர்ஷா சிகிச்சை அறையின் கதவுகளை வெறித்தபடி அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர மாயா அழுது சோர்ந்த விழிகளுடன் அமர்ந்திருந்தாள்.  அபி இவர்களை எப்படி தேற்றுவது என்று தவித்துக்கொண்டிருக்க அந்த இடமே நிசப்தாமாக இருந்தது. ரேணுவும் மகேஸ்வரனும் அழுதுகொண்டே வர அபிக்கு அவர்களை சமாளிக்கவே முடியவில்லை.  மருத்துவர்களும் செவிலியர்களும் சிகிச்சை அறையிலிருந்து வெளியில் வருவதும் உள்ளே செல்வதுமாக இருக்க மணித்துளிகள் கரைந்தது..

நான்கு மணி நேரத்தில் யசோதவும் விமலும் வந்துவிட அபி “அம்மா ஹர்ஷா கிட்ட பேசுங்கம்மா.. அவன் ரொம்ப உடைஞ்சு போயிருக்கான்” என்று அபி கூற யசோ ஹர்ஷாவின் அருகில் அமர்ந்துகொண்டு அவன் தலையை ஆதரவாக தடவி கொடுத்தார். ஹர்ஷா கலங்கிய கண்களுடன் தன் அன்னையை ஏறிட அவன் கண்ணீர் அவரை மிகவும் வருத்தியது. அப்போ மருத்துவர் வெளியே வர விமல் அவரிடம் “டாக்டர் இப்போ சாஹி எப்படி இருக்கா. இஸ் ஷி ஆல்ரையிட்”

“சாரி சார் எங்களாக இப்போ எதுவும் சொல்ல முடியாது அவங்க தலைல பயங்கரமா அடி பட்டிருக்கு.. நிறைய பிளட் வேற லாஸ் ஆகிருக்கு அதுவும் இல்லாம மூலைக்கு போற நிரம்பு டேமேஜ் ஆகிருக்கு” என்று குண்டு மேல் குண்டு தூக்கி போட அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

ஹர்ஷா அம்மருத்துவரிடம் “டாக்டர் ப்ளீஸ் அவளை காப்பாத்துங்க.. எவ்ளோ செலவானாலும் பரவால்ல ப்ளீஸ்”

“நாங்க எங்களோட முழு effort போடுறோம் சார்… பட் எங்களாள உங்களுக்கு பொய்யான நம்பிக்கை கொடுக்க முடியாது” என்றுவிட்டு அகன்றிட மீண்டும் ஒருவித அமைதி நிலவியது.

அங்கு வந்த தாதி பெண் அவர்களிடம் “இங்க patient ஓட ரிலேஷன் யாரு.. இந்த பேப்பர்ல சைன் பண்ணனும்” , அபி ஹர்ஷாவை பார்க்க அவன் எழுந்து வந்து மையெழுத்திட்டான் , பின் அபியிடம் கூறிவிட்டு முரளியை பார்க்க சென்றான்.

கையில் கட்டுடன் படுத்திருந்த முரளி ஹர்ஷா வருவதை பார்த்து எழ முயற்சி செய்தான். அவனை தடுத்த ஹர்ஷா “என்ன ஆச்சு முரளி.. எப்படி இதெல்லாம்”

“சார் பிளான் பண்ணி தான் இந்த ஆக்சிடெண்ட் பண்ணிருக்காங்க.. நான் பார்க்கும் போது பின்னாடி வண்டியே இல்ல நான் முதல் வந்த வண்டிய பார்த்து மேமை இழுத்தேன் அப்போ எங்கிருந்தோ வந்த ரெண்டாவது வண்டி அவங்களை இடுச்சிடுச்சு. சாரி சார்” என்று அவன் தலைகுனிய “பரவால்ல முரளி.. நான் பார்த்துக்குறேன்” என்றுவிட்டு  தீனாவிற்கு அழைத்தவன் சில கட்டளைகளை பிறப்பித்துவிட்டு மீண்டும் சாஹி இருக்கும் அறைக்கு சென்றான்.

ஹர்ஷா வரவும் மருத்துவர் உள்ளிருந்து வரவும் சரியாக இருந்தது. மருத்துவர் “சார் அவங்க இன்னும் அபாய கட்டத்தை தாண்டல.. இன்னும் 48 மணிநேரம் ICUல தான் வச்சிருப்போம் அதுக்குள்ள அவங்க கண்ணு முழிச்சா சரி இல்லாட்டி” கையை விரித்து இடமும் வலமுமாக தலையசைத்தார். ஹர்ஷா “நான் அவளை பார்க்கலாமா”

“நோ சார். ICUக்கு உள்ள யாரையும் விட கூடாது” என்று மறுத்துவிட்டார். ரேணு தன் கணவர் தோள் மீது சாய்ந்துகொண்டு “ஒரு சின்ன ஊசிக்கு ஊரையே கூட்டுவா.. இப்போ இத்தனை ஊசி ஏறியும் பேச்சு மூச்சில்லாம கிடகுறாளே.. அவ போக மாட்டேன்னு தான் சொன்னா நான் தான் அனுப்பிட்டேன்.. ஐயோ என்னலையே என் பொண்ணு இப்படி படுத்துதிருக்காளே” என்று அவர் கதற மகேஸ்வரனும் கலங்கிவிட்டார். ஹர்ஷாவின் முகமோ பாறைபோல் இறுகியது.

விமல் அபியிடம் “அபி போலீஸ் கம்ப்லைன் குடுத்தீங்கள”

“இல்ல டாட்.. நான் போறேன்”  என்றபடி அபி கிளம்ப ஹர்ஷா இறுகிய குரலில்  “நானும் வரேன்” என்று அவனுடன் சென்றான்.

அபி எவ்வளவு மறுத்தும் ஹர்ஷவே காரை ஓட்டினான். ஹர்ஷா காரை வேறு திசையில் செலுத்திக்கொண்டிருக்க , அபி ” ஹர்ஷா தப்பான ரூட்ல போற”

“போக வேண்டிய இடத்துக்கு தான் போறேன்”. அதற்கு பிறகு அபி எவ்வளவு கேட்டும் பதில் வரவில்லை.

ஹர்ஷா ஒரு இடிந்த கட்டிடத்தினுள் வண்டியை விட அபி அவனை கூர்மையாக நோக்கினான். ஹர்ஷாவின் முகம் இறுகியிருக்க அபிக்கு புரிந்துவிட்டது இவன் ஏதோ விபரீதமாக செய்ய போகிறேன் என்று எனவே எதுவும் பேசாது அவனுடன் பயணித்தான்.

தீனா ஹர்ஷாவிற்காக வாசலில் நின்றுகொண்டிருந்தான். ஹர்ஷா “தெரிஞ்சிதா”

“எஸ் சார்.. பிடிச்சிட்டோம்”

“குட்” என்றவனின் முகம் இறுகி இருந்தது. அபி தீனாவிடம் கண்களால் என்ன என்று கேட்க தீனா “மேடமை ஆக்சிடெண்ட் பண்ணவங்க உள்ள இருக்காங்க” என்று வாயசைத்தான்.

உள்ளே நுழைந்த அபி அங்கு கட்டி போட்ட பட்டிருந்தவர்களை பார்த்து அதிர்ந்து நின்றான். அங்கு கீர்த்தியும் சமரும் இருந்தனர். கீர்த்தி இவ்வளவு கீழ் இறங்குவாள் என்று அபி சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சமரை பற்றியும் கேள்விப்பட்டிருக்கான் ஆனால் இவனும் கொலை செய்ய துணிவான் என்று அவன் எண்ணவில்லை. ஒரு பக்கம் அபி அதிர்ந்திருக்க அங்கு ஹர்ஷாவோ அவர்களை கொன்று புதைத்துவிடும் அளவிற்கு ருத்ர மூர்த்தியாய் நின்றான். அவன் முகத்தில் சிறு இளக்கமுமில்லை.

ஹர்ஷாவை பொறுத்தவரை சாஹியின் இந்த நிலை அவனால் உருவானது தான். அந்த குற்றவுணர்வு அவனை கொல்லாமல் கொன்றது.  நேற்று வரை பட்டாம்பூச்சு போல் சுற்றி திரிந்தவள் இன்று பேச்சு மூச்சற்று கிடக்கிறாள் என்றால் அதற்கு தான் தானே காரணம் என்று அவன் மனதிற்குள் மருகிக்கொண்டிருந்தான். அந்த கவலை தான் கோபமாக விஸ்வரூபம் எடுத்திருந்து.

மனம் சாஹியின் அருகாமைக்கு ஏங்க ஹர்ஷா தீனாவிடம் “தீனா.. எனக்கு மைண்ட் சரியில்ல இவங்களை என்ன பண்ணனும்னு உனக்கே தெரியும்ல.. பார்த்துக்கோ” என்றுவிட்டு நகர்ந்தான். அபி கீர்த்தியின் முன் வந்து “பொண்ணா டி நீயெல்லாம்.. ச்சீ.. சாஹிக்கு மட்டும் ஏதாவது ஆச்சு.. நீ செத்த.. டேய் சமர் உனக்கும் தான்” என்று அவர்களிடம் எகிறியவன் தீனாவிடம் “தீனா இவங்க அவ்ளோ ஈசியா சாக கூடாது , ஏன்டா ஹர்ஷவோட பகச்சிக்கிட்டோம்னு யோசிக்கும்” என்று சத்தமாக கூற தீனா “சரி” என்பதாய் தலையசைத்தான். கீர்த்தியும் சமரும் மிரண்டு விழிக்க அது எதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஹர்ஷாவும் அபியும் மீண்டும் மருத்துவமனை வர அங்கு அதே நிலவரம் தான் நீடித்தது. ஹர்ஷாவின் மனமோ அவள் மீண்டு வந்தால் போதும் என்று இறைவனிடம் மன்றாடியது. இதுவரை காதலில்லை பிடித்தம் மட்டும் தான் என்றிருந்தவனுக்கு ஒன்றுமட்டும் புரிந்தது இனி அவளின்றி தானில்லை என்று.

அனைவரும் அழுதழுது சோர்ந்து அமர்ந்திருக்க விமல் யாருடனோ பேசிவிட்டு ஹர்ஷாவிடம் “ஹர்ஷா நீ போய் சாஹிய பாரு” என்றது தான் தாமதம் ஹர்ஷா சாஹி இருக்கும் அறைக்கு விரைந்தான். எப்போதும் வளவளவென பேசுபவள் இன்று அமைதியே உருவாய் படுத்திருந்தாள். அவள் இதய துடிப்பை காட்டும் கருவியின் பீப் சத்தம் மட்டும் அந்த அறையில் எதிரொலித்தது. தலையில் கட்டுடன் படுத்திருந்தவளை நெருங்கியவன் சலைன் ஏறும் இடது கையை மென்மையாக வருடிவிட்டு அவளின் வலது கையை தன் கைக்குள் பொத்திக்கொண்டான்.

அவளின் இந்த கோலம் அவன் மனதை பிசைய அவள் தலையிலிருந்த கட்டை வருடியவன் “சாரி சாஹித்யாம்மா.. நான் உன்னை தனியா விட்டிருக்க கூடாது.. ரொம்ப சாரி.. ஆனா ஐ ப்ரோமிஸ் யூ இனிமேல் வாழ்க்கைல எந்த ஒரு சிட்டுவேஷன்லையும் உன்னை தனியா விட மாட்டேன்.. ப்ளீஸ் திரும்ப வந்திடு டி.. இப்போ சொல்றேன் சாஹித்யா என்னோட மீதி வாழ்க்கை வாழ நீ வேணும் டி.. என் துணையா , என் மூச்சு காற்றா , என் இதய துடிப்பா,  என் உயிரா நீ வேணும்..நீ இல்லாம நான் ஒன்னுமே இல்ல டி… அதை இப்போ உணர்ந்துட்டேன்…ப்ளீஸ் என்கிட்ட வந்திடு டி” என்று கரகரத்த குரலில் கூறியவனின் கண்ணீர் துளிகள் அவன் பிடித்திருந்த அவள் விரல்களில் பட்டு தெறிக்க அவள் உடல் சிலிர்த்து அடங்கியது. அவள் கைகளில் இதழ் பதித்துவிட்டு அவள் முகத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் என்று தெரியவில்லை ஒரு தாதி பெண் அவனை வெளியில் இருக்கும் படி கூற அதில் நிகழுக்கு வந்தவன் வெளியில் வர அனைவரின் முகமும் ஒருவித எதிர்பார்ப்புடன் அவனை ஏறிட்டது ஆனால் அவன் முகத்தில் கவலையின் சாயலே பூசியிருந்தது. ஹர்ஷா பித்து பிடித்தது போல் அமர்ந்திருக்க ரேணு அழுதழுது சோர்ந்து அமர்ந்திருந்தார். யசோவிற்கும் மருமகளின் நிலை கவலையாக தான் இருந்தது ஆனால் தானும் உடைந்துவிட்டால் யாரையும் தேற்ற முடியாது என்பதற்காகவே தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டார்.

சாஹியின் அறையிலிருந்த செவிலியர் பெண் அவசரமாக வெளியே சென்று மருத்துவரை அழைத்துவர மீண்டும் பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement