Advertisement

அத்தியாயம் 15

ஹர்ஷா பால்கனியில் நின்று ஏதோ யோசித்துக்கொண்டிருக்க சாஹி அறையில் ‘அடியே சாஹி அவரே மனசு மாறி கிஸ் பண்ண வந்தாரு அவரை போய்.. ச்சே.. இப்போ இந்த டைலாக் ரொம்ப முக்கியமா..’ என்று தன்னை தானே கண்டிந்துகொண்டவள் ஹர்ஷா உள்ளே நுழையும் வரை காத்துக்கொண்டிருந்தாள்.

நீண்ட நேரத்திற்கு பின் ஹர்ஷா உள்ளே நுழையவும் சாஹி உடை மாற்றி கொண்டு வரவும் சரியாக இருந்தது. ஹர்ஷா அறையை விட்டு வெளியேற நினைக்க சாஹி அவனை தடுத்து “நீங்க எங்கேயும் போக தேவையில்லை. இங்கயே படுங்க”
“இல்ல வேண்டாம்”
“ப்ச் சொல்றேன்ல.. சாரி.. நான் அப்படி பண்ணிருக்க கூடாது தான்.. ஆனா ஏதோ கோபத்துல அப்படி” என்று பேசும்போதே அவள் குரல் கம்மியது, ஹர்ஷா கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி அவள் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்தான்.

“நீங்க என்ன விட்டுட்டு போனதோட சரி.. ஒரு போனும் பண்ணல.. ஒரு டெக்ஸ்ட்டும் பண்ணல.. சரி பிஸியா இருப்பீங்கன்னு நினைச்சேன் ஆனா நீங்க முரளி அண்ணாகிட்ட மட்டும் டெய்லி பேசுனீங்க அதுதான்.. அப்புறம் நான் அன்னிக்கி உங்ககிட்ட டிவோர்ஸ் கேட்டப்ப கூட” என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஹர்ஷா அவள் இதழை சிறை பிடித்தான்.
சாஹியின் விழிகள் சாசர் போல் விரிய அது எதையும் பொருட்படுத்தாது தன் வேலையில் கண்ணாக இருந்தான் அவன்.

சாஹி மூச்சு விட முடியாமல் சிரமப்பட அவளை விடுவித்தவன் நேராக கட்டிலுக்கு சென்று படுத்துக்கொள்ள சாஹி அவன் விட்டு சென்ற நிலையிலே நின்றாள்.
ஹர்ஷா மனதில் ‘இப்போ தானாடா கன்ட்ரோல் பண்ணுன்னு சொன்ன.. அதுக்குள்ள.. அவ உன்ன பத்தி என்ன நினைச்சிருப்பா.. சரியான அவசரம் டா நீ’ என்று மனதில் தன்னை தானே திட்டிக்கொண்டான்.

மறுநாள் காலை  சாஹி அவசர அவசரமாக கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருக்க ஹர்ஷா இன்னும் எழுந்தபாடில்லை. சாஹி “ஹர்ஷா..”
“ம்ம்ம்”
” நான் காலேஜ் கிளம்புறேன்”
“ம்ம்ம்” என்று மீண்டும் உறங்கிட  சாஹி அவன் தலையை கொதிக்கொண்டே “எப்போவும் இதே மாதிரி என்கூட இருந்துடுங்க ஹர்ஷா… எங்கயும் போகாதீங்க.. எனக்கு உங்க காசு பணம் அந்தஸ்து இது எதுவும் வேண்டாம்.. நீங்க மட்டும் போதும்..  என்கூட இதே மாதிரி இருப்பீங்க தான” என்று உறங்கும் அவனிடம் பேசியவள் நேரம் ஆவதை உணர்ந்து கிளம்பி சென்றாள்.

ஹர்ஷாவும் அபியும் எங்கோ சென்றுவிட்டு வீட்டினுள் நுழைய அங்கு ஒரு கூட்டமே நின்றுகொண்டிருந்தது. அபி “என்ன டா ஏன் இவ்ளோ கூட்டமா இருக்காங்க”
“ப்ச் நானும் உன்கூட தான வரேன்” என்று இருவரும் உள்ளே செல்ல வாயிலில் நின்றிருந்த முரளி ஹர்ஷாவை பார்த்ததும் “சார் சாஹித்யா மேம் நல்லா தான் இருந்தாங்க திடீர்னு மயக்கம் போட்டுட்டாங்க.. எவ்ளோ எழுப்பியும் அவங்க எழல அதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம்” என்று கூற ஹர்ஷா அவனிடம் “அறிவில்லையா முரளி ஏன் என்கிட்ட இன்பார்ம் பண்ணல” என்று அடிக்குரலில் சீறியவன் வீட்டிற்கு உள்ளே செல்ல வாடிய கொடி போல் மாயாவின் தோள் மீது சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தாள்.

ஹர்ஷா பதட்டமாக மாயாவிடம் “மாயா என்ன ஆச்சு”
“தெரியல சார்.. நல்லா தான் இருந்தா திடீர்னு எப்படி மயங்கினானு தெரியல”.
ஹர்ஷா அவள் அருகில் அமர சாஹி வாகாக தன் கணவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவளின் இந்த உரிமையான செயலில் ஹர்ஷாவிற்கு சந்தோசமாக இருந்தாலும் அவளின் இந்த நிலை அவனை கவலை அடைய தான் செய்தது.

ஹர்ஷா அவள் பெயருக்கு வலிக்குமோ என்று மிக மென்மையாக “தியா” என்றழைத்தான்,  அந்த நிலையிலும் அவனை விட்டு விலகியவள் அவனை எட்டாவது அதிசயம் போல் பார்க்க அதில் அவன் மென்னகை பூத்து “படு டி உடம்பு சரியில்லாம எதுக்கு ஸ்ட்ரைன் பண்ற”
“அதெல்லாம் நல்லா தான் இருந்தேன் காலைல.. கேன்டீன்ல சாப்பிட்டது ஒத்துக்கல போல” என்று கூறி அவள் அவன் மார்பில் சாய்ந்துகொள்ள ஹர்ஷாவும் அவளை அணைத்துக்கொண்டான்.

ஹர்ஷா சாஹியின் தலையை வருடியவாறே “டாக்டர் என்ன சொன்னாங்க” , பிரபுவும் சத்யாவும் ஒரே நேரத்தில் “நீங்க அப்பா ஆக போறீங்க ஹர்ஷா சார்” என்று கத்த ஹர்ஷா சாஹியிடம் “உண்மையா டா”
“ம்ம்ம்” என்று வெட்கத்துடன் கூறியவளை உலுக்கினார் ரேணு அதில் திடுக்கிட்டு விழித்தவள் “சே கனவா..” என்று தலையில் அடித்துக்கொண்டு தன் தாயிடம் “ம்மா அவர் எங்க”
“மாப்பிள்ளை அப்பாவே எழுந்துட்டரு.. போய் குளி காலேஜ் போகணும் நேரம் ஆகுது”
“போறேன் போறேன்” என்று மெத்தையிலிருந்து எழுந்தவள் மனதிற்குள் “அதான் எங்களுக்குள்ள எதுவும் நடக்கலையே அப்பறம் எப்படி அந்த மாதிரி கனவு… கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா டா” என்று ஏதேதோ சிந்தனையில் அவள் தயாராகி வர ஹர்ஷாவும் அபியும் எங்கோ கிளம்பிக்கொண்டிருந்தனர்.

ஹர்ஷா ரேணுவிடம் அபி மாயாவின் காதல் விவரத்தை கூற ரேணு மகிழ்ச்சியாக “ரொம்ப சந்தோசம் மாப்பிளை.. மாயா ரொம்ப அமைதியான பொண்ணு.. சின்னவருக்கு ஏத்த பொண்ணு தான்.. நீங்க போய் பேசுங்க” என்றிட சாஹி “ஆமா ஆமா நானும் வரேன் ஹர்ஷா”
“அதெல்லாம் மாப்பிள்ளை பார்த்துக்குவாரு நீ காலேஜ் கிளம்பு” என்று ரேணு கூற சாஹி அவர்களை பாவமாக பார்த்துக்கொண்டே கல்லூரிக்கு சென்றாள். ஹர்ஷா அபியை அழைத்துக்கொண்டு மாயாவின் இல்லத்திற்கு சென்றான்.

மாயாவின் இல்லத்தில் ஹர்ஷாவும் அபியும் அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரில் மாயாவின் தந்தையும் மாமானும் அமர்ந்திருந்தனர். ஹர்ஷா “சார் நான் சுத்தி வலச்சு பேச விரும்பல. என் தம்பிக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு அதான் நாங்க பேச வந்திருக்கோம். நியாயபடி அம்மா அப்பா தான் வரணும் ஆனா உங்களோட விருப்பம் தெரியாம அவங்களை அலைய விடுறதுல எனக்கு உடன்பாடு இல்லை” என்று விளக்க மாயாவின் தந்தை “நீங்க சொல்றதெல்லாம் சரி தம்பி ஆனா எங்களுக்கு இவ்வளவு பெரிய வீட்டு சம்மந்தம் ஒத்து வராது” என்றார் இடக்காக ஹர்ஷா முயன்று பொறுமையை இழுத்து பிடித்து “எனக்கு புரியல சார். என்ன சொல்ல வரீங்க”
“இங்க பாருங்க தம்பி உங்க அளவுக்கு எங்களால சீர் செய்ய முடியாது அதுவுமில்லாம ராஜா வீட்டு கண்ணுக்குட்டி கேட்கவா வேணும்” என்று அவர் ஹர்ஷாவின் பொறுமையை சோதிக்க ஹர்ஷா “ஏன்டா ஊர்ல உனக்கு வேற பெண்ணே கிடைகலயா” என்பது போல் பார்க்க தன் தமயனின் மனதை உணர்ந்தவன் நன்கறிந்தவன் கண்களால் அவனை இறைஞ்ச அதை புரிந்துகொண்டு ஹர்ஷாவும் பேசினான்.

இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் மாயாவின் தந்தையும் மாமாவும் ஒத்துக்கொள்ள வெற்றி களிப்பில் இருவரும் வீட்டிற்கு பயணமாகினர். அபி ஏதோ யோசித்துக்கொண்டு வர ஹர்ஷா “என்னடா என்ன யோசிக்கிற”
“இல்ல ஹர்ஷா.. என்ன பார்த்து ஒரு காளைன்னு சொல்லலானாலும் பரவால்ல இப்படி கண்ணுக்குட்டின்னு சொல்லி அசிங்க படுதிட்டாங்களே அதான்”, ஹர்ஷா அவனை கேவலமாக பார்க்க அபி “ஹிஹிஹி.. விடு ஹர்ஷா.. விடு..” என்று சமாளித்தான்.

ஹர்ஷா அபியை வீட்டில் விட்டுவிட்டு வெளியில் சென்றான். இருபது நிமிட பயணத்திற்கு பிறகு அவன் ஒரு வீட்டின் முன் நின்றான். வண்டியை பார்க் செய்துவிட்டு அவ்வீட்டினுள் நுழைய அங்கு கீர்த்தியும் சமரும் அமர்ந்திருந்தனர் அவர்களை சுற்றி கருப்பு நிற ஆடை அணிந்த ஹர்ஷாவின் ஆட்கள். ஒரு ஏளன புன்னகையுடன் நுழைந்தவனை கண்ட இருவருக்கும் பயம் தொற்றிக்கொள்ள அமைதியாக அவன் செய்வதை எச்சில் விழுங்கி பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்களின் முன் போட பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவன் லேசாக குனிந்து தன் கைகளை தொடை மீது சாய்த்து கொண்டு “என்னப்பா இப்படி சீரியல் வில்லத்தனமெல்லாம் பண்ணா நான் பாயந்திடுவேன்னா.. ஹான்..” என்று கேட்க , அந்த குரலில் நக்கல் இருப்பதை இருவரும் உணர்ந்துகொண்டானர்.
கீர்த்தி அவனின் ஆளுமையில் ஆச்சிர்ய பட சமர் அவனை முறைக்க முடியாமல் அடக்கப்பட்ட கோபத்துடன் அமர்ந்திருந்தான்.

ஹர்ஷா “என்னடா வாயா திறக்க மாற்ற..” , சிறிது நேரம் அவர்களை பார்வையில் சுட்டெரித்தவன் அவர்களிடம் இறுகிய குரலில் “இதுக்கு மேல நீங்க என் வழில வர மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.. உங்களை பிடிக்க தெரிஞ்சா எனக்கு உங்களை கொல்ல ரொம்ப டைம் எடுக்காது.. புரியும்னு நினைக்கிறேன்…” என்றபடி தன் ஆட்களிடம் அவர்களை விட்டுவிட கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

வீட்டில் அபி அலைபேசியில் கேம் ஆடிக்கொண்டிருக்க ஹர்ஷா அவனை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான். அபி “எங்க போன ஹர்ஷா”
“ஒரு சின்ன வேலை டா”
“என்ன வேலை” என்று கண்களை சுருக்கி அவன் கேட்க ஹர்ஷா அவனிடம் மறைக்காமல் உண்மையை கூறினான். அபி தன் தமையனை ஆச்சிர்யமாக பார்த்து அவனிடம் “ஹர்ஷா பைனலி யூ ஆர் இன் லவ்” என்று கூச்சலிட ஹர்ஷா “உளராத அபி”
“ஹலோ நான் உளருல.. தெளிவா பேசுறேன்..”
“எப்படி லவ்ன்னு அவ்ளோ ஸ்ட்ரோங்கா சொல்ற”
“அட ஹர்ஷா… லவ் இல்லாமலா சாஹிக்கு இவ்ளோ பண்ண.. இதுவரை யாருக்கும் நீயா சொல்லி கொடுத்தது கிடையாது அப்படி பட்டவன் சாஹிக்கு ஒரு ஒரு சின்ன விஷயத்தையும் சொல்லி கொடுத்த.. அத கூட விடு அவ கொஞ்சம் மென்டல்லி டிஸ்டர்ப்ட்டா இருக்கான்னு தெரிஞ்சி அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செஞ்சியே அது.. ” , ஹர்ஷா ஏதோ இடைமறைக்க வர அவனை தடுத்தவன் ” ஒருவேளை நீ இதை கடமைன்னு சொன்னா நான் அதை கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன் ஹர்ஷா கடமைக்கு பண்றதா இருந்தா  சாஹிய டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிருப்பியே தவிர அவ கண்ணு முன்னாடியே அவங்கள கொன்னிருக்க மாட்ட.. எந்த பாங்க்ஷன்க்கும் கெஸ்ட்டா வர மாட்ட  ஆனா இப்போ நீயே கேட்டு மதுரை வர.. லாஸ்ட்டா அந்த கீர்த்தி சமரை இப்படி சாஹிக்காக மிரட்டி இருக்க மாட்ட” என்று சிரித்துக்கொண்டே கூற அப்போது தான் ஹர்ஷா தன் காதலை உணர ஆரம்பித்தான். (ஷப்பா ஒரு வழியா புரிஞ்சிக்கிட்டான்)

‘ஆம் அவளுக்காக நான் ஏன் இவ்வளவு செய்ய வேண்டும்.. இதுவரை யாருக்காகவும் இறங்கி வராதவன் எதற்கு அவளுக்காக மதுரை வரை வர வேண்டும்.. கீர்த்தியிடம் ஒரு நாளும் உணராத பல உணர்வுகள் இவளின் அருகாமை உணர்த்தியதே.. இவளுக்கு ஏதேனும் நேரிடுமோ என்று ஒவ்வொவரு நொடியும் நான் பயப்படுவதேன்.. அவளை விட்டு விலகியிருக்க நினைத்தாலும் மனம் அவள் அருகாமைக்கு ஏங்குகிறதே.. இதுதான் காதலா..  என்று யோசித்தவனுக்கு மனதிற்குள் அப்படி ஒரு நிம்மதி பரவ அதை கலைக்கும் எண்ணம் இல்லாதவன் போல் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்தான்.

முதல் முறை அவளை அலுவலகத்தில் பார்த்தது முதல் நேற்று தன் உணர்வுகளை பாடல் வழி உணர்த்தியது பின் இருவரின் நெருக்கம் முதலியவை தோன்ற தனக்குள்ளே சிரித்துக்கொண்டிருந்தான்.

அவன் சிந்தனையை கலைக்கும் வண்ணம் அலறியது அபியின் கைபேசி. அபி இளநகையுடன் “சொல்லுங்க மாயா மேடம்” என்று கேட்க அவ்ளோ “அபி.. அபி.. சாஹி.. சாஹிக்கு… ஆக்..ஆக்சிடெண்ட் ஆகிடுச்சி.. அபி வாங்க” என்று உடைந்து அழுக , அபி “மாயா எந்த ஹாஸ்பிடல்”
“DM ஹாஸ்பிடல்.. சீக்கிரம் வாங்க அபி எனக்கு பயமா இருக்கு” என்றிட அபி ஹர்ஷாவிடம் தயங்கி “ஹர்ஷா சாஹிக்கு..” என்று ஆரம்பிக்க அதுவரை இருந்த மாயவலை அறுந்து சிறு பதட்டத்துடன்
“சாஹிக்கு.. என்னடா” என்று அவன் தோளை உலுக்க அபி
“சாஹிக்கு ஆக்சிடெண்ட் டா” என்றான் உடைந்த குரலில். அவனை வெறித்த ஹர்ஷா “பொய் சொல்லாத அபி. அவளுக்கு  எதுவுமில்ல.. நீ பொய் தான சொல்ற” என்றான் அவனை நம்பாமல்
“ஹர்ஷா ப்ளீஸ்.. டென்ஸ் ஆகாத..” என்று அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். 

உயிரே உயிரேப் பிரியாதே
உயிரைத் தூக்கி எறியாதே
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே
ஓ ஹோ…
கனவே கனவேக் கலையாதே
கண்ணீர்த் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே
ஓ ஹோ…
பெண்ணே நீ வரும் முன்னே
ஒரு பொம்மை போலே இருந்தேன்
புன்னகையாலே முகவரி தந்தாயே ஓ…
ஆயுள் முழுதும் அன்பே
உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல் போலே சென்றாயே

புல் மேல் வாழும்…
பனி தான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம் ஆனால் பொற்காலம்
உன் அருகாமை…
அதை நான் இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்
நினைவே சந்தோஷம்
கடல் மூழ்கிய தீவுகளை
கண் பார்வைகள் அறிவதில்லை
அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்…. 

Advertisement