Advertisement

  அத்தியாயம் 14

வந்திருந்த சிறப்பு விருந்தினரை பார்த்து விழி விரித்து நின்றவளை நிகழுக்கு கொண்டு வந்தது அருகிலிருந்த பெண்ணின் ஆர்பரிப்புகள் தான். சாஹி தான் விழி விரித்து நின்றாள் என்றால் மாயாவும் அதே நிலைமையில் நின்றாள்.

“ச்சா.. என்னமா இருக்காங்க ரெண்டு பேரும்”

“போத் ஆர் சோ மேன்லி”

“செம்ம பாடி அவங்களுக்கு”

“ஹீரோ தான் அவங்க” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வந்திருந்தவர்களை புகழ சாஹிக்கும் மாயாவிற்கும் காதிலிருந்து புகை வந்துவிட்டது. ஏனென்றால் வந்திருந்தது சாக்ஷாத் ஹர்ஷவர்தனும் அபிவர்தனுமே.

அரங்கத்தில் இவர்கள் பேச்சுக்கள் ஒருபுறமிருக்க அங்கு மேடையில் பேராசிரியர்களோ அவர்களை புகழ்ந்து தள்ளினர். ஹர்ஷா அரங்கத்தினுள் நுழைந்தவுடனே இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த சாஹியை கண்டுகொண்டான் இருப்பினும் எப்போதும் போல் எதையும் காட்டிக்கொள்ளமல் மேடையேறினான்.

விழா தொடங்க ஆடல் பாடல் நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தது. அடுத்து நிகழவிருந்தது சாஹியின் பாடல் நிகழ்ச்சி. சாஹியின் குரல்வளத்திற்கு அக்கல்லூரியில் தனி ரசிகர் மன்றமே உண்டு, கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக சாஹியின் பாடல் இடம்பெறும்.

சாஹி பாடுவதற்கு மேடை ஏற மாணவர்கள் கூட்டம் ‘சாஹி சாஹி’ என்று கூச்சலிட தொடங்கியது , அப்போது தான் ஹர்ஷா அவளை கவனிப்பது போல் பார்த்தான். அவனின் அந்த பாவனையில் அவனுக்கு ஒரு அவசர முறைப்பை வழங்கிவிட்டு பாட தொடங்கினாள்.

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே

மனம் இன்று நனையுதே

இது என்ன காதலா சாதலா பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ

உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்

நீ எங்கே எங்கே என்று

உன்னை தேடி தேடிபார்க்கிறது உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்

நீ எங்கே என்று என்னை

கேட்டபின்பு வாடிடுதே

அறியாதொரு வயதில் விதைத்தது ஓ ஓ அதுவாகவே தானாய் வளர்ந்தது ஓ ஓ  புதிதாய் ஒருபூவும் பூக்கையில் ஓ ஓ

அட யாரதை யாரதை பறித்தது ஓ ஓ ஓ

உன் கால்தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேன் அது பாதியில் தொலைந்ததடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஓ ஓ

யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஓ

நான் கேட்டது வானவில் மாயங்கள் ஓ ஓ

யார் தந்தது வழிகளில் காயங்கள் ஓ

இந்த காதலும்ஒரு வகை சித்ரவதை தானே அது உயிருடன் எரிக்குதடா

தன் மனதை பாடலின் வரிகளில் அவனுக்கு உணர்த்திவிட்டாள் அவள்.

சாஹியின் கண்களும் ஹர்ஷாவின் கண்களும் ஒரே நேர்கோட்டில் நிற்க இருவரும் பார்வை வழியே மற்றவருக்கு தங்கள் மனதில் இருந்தவற்றை புரியவைக்க முயற்சி செய்தனர். இருவரின் நிலையையும் கலைத்தது மாணவர்களின் கரகோஷங்களே.

சாஹி அமைதியாக தன் இடத்தில் வந்து அமர்ந்திட சத்யாவும் பிரபுவும் “அடிப்பாவி சந்தடி சாக்குல சாரை டான்னு சொல்லிட்ட”

“டேய் அமைதியா போய்டுங்க டா” , சத்யா அவளை விசித்திரமாக பார்த்துவிட்டு ” வா டா பிரபு நம்ம அந்த பக்கம் போலாம்” என்றபடி அங்கிருந்து சென்றான். 

சாஹி அமைதியாக தன் இருக்கையில் அமர்ந்திருக்க . இன்னும் அவள் அருகிலிருந்த பெண்கள் ஹர்ஷாவை வர்ணிப்பதை நிறுத்தவில்லை. அதில் பொறுமை இழந்தவள் சஜிதாவிடம் கூறிவிட்டு வெளியே செல்ல மாயா அவளை தடுத்து “சாஹி அமைதியா இரு”

“நீ வேணும்னா இதெல்லாம் பாரு என்னால முடியாது என்று எழுந்து வெளியில் செல்ல ஹர்ஷா அவளை கவனித்துவிட்டு என்ன என்று முரளியிடம் கேட்க  அவன் “மேம் உங்க மேல கோபமா இருக்காங்க சார்.. ஏன்னு தெரியல”

“ம்ம்” என்றுவிட்டு அழைப்பை துண்டிதவன் மாயாவிடம் கண் கட்ட அவளும் அதை புரிந்துகொண்டு வெளியில் சென்றாள்.

வெளியில் மரத்தடியில் போட பட்டிருந்த இருக்கையில் தலையை கைகளில் தாங்கியபடி அமர்ந்திருந்தாள் சாஹித்யா. மாயா சென்று அவள் அருகில் அமர சட்டென கண் திறந்து பார்த்தவள் எதுவும் கூறது மீண்டும் முகத்தை மூடிக்கொண்டாள். மாயா அவளையே பார்த்துக்கொண்டிருக்க அவளிடம் பதிலில்லை. பின் மெதுவாக அவள் ஏதோ பேச வாயெடுக்க,  அரங்கத்தில் பலத்த கரகோஷ சத்தம் கேட்டது அப்போதும் சாஹியிடமிருந்து ஒரு அசைவுமில்லை. மாயா மெல்ல சாஹியின் தோள்களில் கைவைத்து “சாஹி என்ன ஆச்சு.. வா உள்ள போகலாம்” என்று அழைக்க வந்தவள் சாஹியின் பார்வையில் கப்சிப் என்றாகினாள். 

சாஹி சஜிதாவிற்கு அழைத்து வீட்டிற்கு கிளம்பவேண்டும் என்று கூற இரண்டே நிமிடத்தில் முரளியும் சஜிதாவும் அவள் முன் நின்றனர். மாயா எவ்வளவு கூறியும் சாஹி கேட்கவில்லை , அடமாக வீட்டிற்கு கிளம்பி சென்றாள். ரேணு அவளிடம் என்னவாயிற்று என்று கேட்க எதுவும் கூறாமல் அறைக்கு சென்றாள். ரேணு மகேஸ்வரனிடம் “நீங்க கொடுக்குற செல்லம் தான் இதெல்லாம்.. என்னன்னு கேட்டுக்குட்டே இருக்கேன் ஏதாவது பதில் சொல்றாளா பாருங்க.. அழுத்தகாரி” என்று அவளை திட்டிவிட்டு தன் வேலைகளை கவனிக்க தொடங்கினார்.

மகேஸ்வரன் எவ்வளவு வற்புறுத்தியும் இரவு உணவை மறுத்துவிட்டாள். பொறுத்து பொறுத்து பார்த்த ரேணு மாயாவிற்கு அழைக்க அவளோ “அம்மா உங்க பொண்ணு அண்ணா மேல கோபமா இருக்கா.. இன்னும் கொஞ்ச நேரத்துல அண்ணனே வந்து சமாளிச்சிக்குவாரு நீங்க போய் படுங்க” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தாள். ரேணு தன் கணவரிடம் “மாப்பிள்ளை கூட சண்டாயாம்.. உங்க பொண்ணு தான் ஏதாவது பண்ணிருப்பா அதுக்கு அவரு திட்டிருப்பாரு” என்றிட உள்ளறையிலிருந்து சாஹி “ஆமா ஆமா உங்களுக்கு எப்போவும் என்மேல தான் தப்பு கண்டுபிடிக்க தெரியும்” என்று கத்த ரேணு “உள்ள வந்தேன் அம்புட்டு தான் சொல்லிட்டேன்.. என்னடி வாய் நீளுது”

“அப்படி தான் கத்துவேன்.. என்ன பண்ணுவீங்க” என்று அவளும் எகிற மகேஸ்வரன் ரேணுவிடம் “ரேணும்மா என்ன இது அவ கூட மல்லுக்கு நிக்கிற.. விடு நீ போய் தூங்கு” என்றபடி கதவை சாத்த வந்தவர் வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டு வெளியில் சென்றார். அங்கு ஹர்ஷாவும் அபியும் இறங்கி வர மகேஸ்வரன் இருவரையும் வரவேற்றார். 

மகேஸ்வரன் ரேணுவை அழைக்க அவரும் இவர்களை வரவேற்றுவிட்டு இரவு உணவு செய்ய ஹர்ஷா அவர்களிடம் வேண்டாம் என்றிட மகேஸ்வரன் “சரி மாப்பிள்ளை நீங்க அவ ரூம்க்கு போங்க அபி தம்பி வாங்க நான் உங்களுக்கு ரூம் காட்டுறேன்” என்று அவனை அழைத்து சென்றார் மகேஸ்வரன்.

ஹர்ஷா சாஹியின் அறைக்குள் நுழைய சாஹி ஆடை கூட மாற்றாமல் கால்களில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள். சத்தமில்லாமல் ஹர்ஷா அவளை நெருங்கி அமர சாஹி அவனை ஏறிட்டாள். வெண் நிற சட்டை சாம்பல் நிற கோட்டும் அதே நிறத்தில் பேண்ட்டும் அணிந்து வலது கையில் பிளாட்டினம் காப்பும் இடது கரத்தில்  ரோலெக்ஸ் கடிகாரமும் அணிந்து  கிரேக்க சிலை போல் அருகில் அமர்ந்திருந்தவனை தன்னை மீறி ரசித்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வையில் தன்னை தொலைத்தவன் அவளை நெருங்கி அமர சாஹி விழி விரித்து அவனை பார்த்தாள். ஹர்ஷா சட்டென்று அவள் இதழ் நோக்கி குனிய இதுவரை இருந்த மயக்க நிலை கலைந்து சாஹி அவன் பரந்த மார்பில் தன் தளிர் கரங்களை பதித்து நிறுத்தினாள்.

ஹர்ஷா அவளை கேள்வியாக பார்க்க சாஹி ஏளன புன்னகையுடன் “நீங்க எனக்கு தாலி மட்டும் தான் கட்டுனீங்க.. அதுக்குன்னு அட்வான்டேஜ் எடுத்துக்க பார்க்காதீங்க” என அன்று துணி கடையில் அவன் கூறியது போல் கூற ஹர்ஷா அவளை பார்வையால் சுட்டெரித்தான். ஏனோ அன்று அவன் பேசியபோது எழாத வலி இன்று அவள் அதேபோல் கூறும்போது எழுந்து அவனை இம்சித்தது..

ஹர்ஷா சலிப்பாக “என்ன வேணும் சாஹித்யா உனக்கு.. எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு.. ” என்று அவன் கேட்க அவனை புரியாமல் பார்த்தாள் அவள். பின் சாஹி அவனிடம் “உங்களுக்கு என்மேல காதல் இருக்கா” என்றாள் நேரடியாக அவன் அவளை உறுத்து விழிக்க சாஹி ஏளன புன்னகையுடன் “நான் சொல்லட்டுமா.. உங்களுக்கு என்ன பிடிக்கில ஆனா உங்க அம்மா அப்பா கல்யாணம் பண்ண சொல்லி உங்களை கேட்டுக்குட்டே இருந்ததால யாரோ தெரியாத பொண்ண கட்டிக்கிட்டு கஷ்ட படுறதுக்கு பதில என்ன கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு எதுத்தீங்க.. ஆமா தான” என்று அவனை பார்க்க ஹர்ஷா பொறுமையிழந்து “ஜஸ்ட் ஷட் அப் சாஹித்யா.. நான் ஒன்னும் குழந்தை கிடையாது புரிஞ்சிதா யாரோ சொல்றத அப்படியே செய்ய.. எனக்கு உன்ன பிடிக்கும் அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. தட்ஸ் இட்”

“அப்போ ஏன் நீங்க அந்த பொண்ண பத்தி என்கிட்ட இதுவரைக்கும் சொல்லல” , அவள் தவிப்பாக கேட்க

“இது தான் உன் பிரச்சனையா”

“இதுவும் ஒரு பிரச்சனை”  என்றாள் முகத்தை தோளில் இடித்து திருப்பிக்கொண்டபடி.

அவள் செய்கையில் அவன் முகத்தில் புன்னகை மலர அதை முகத்தில் பூசியப்படி தான் அவளை காதலித்த விஷயத்தை கூறி முடித்தான்.  சாஹி அவனையே பார்த்துக்கொண்டிருக்க அவனுக்கு என்ன புரிந்ததோ அவள் முன் சென்றவன் தன் கூர் பார்வையால் அவளை அளவெடுத்துக்கொண்டே “போய் தூங்கு” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சாஹி அமைதியாக படுத்துக்கொள்ள ஹர்ஷா மனதில் ‘ஏன் அவ கண்ணை பார்த்தா என்னால பேச முடியல.. ஏன் நான் ஒருவொரு வாட்டியும் அவளை பார்க்கும் போது தடுமாறுறேன்.. ச்சே இவ்ளோ வீக்கா இருக்கேன்’ என்று தன் தலையை மீண்டும் அழுந்த கொதிக்கொண்டான்.  அவன் ஆழ் மனமோ ‘இது தான் காதல் மடையா’ என்று அடித்து கூற அவன் மூலையோ அதை ஒத்துக்கொள்ள மறுத்தது.

இப்படி எண்ண வலையில் சிகிக்கி கிடக்கும் ஹர்ஷா சாஹிக்கு வரவிருக்கும் ஆபத்தை கண்டறிவானா???





Advertisement