Advertisement

                      அத்தியாயம் 13

சாஹித்யா பேசியதை கேட்டு ஹர்ஷா அதிர்ந்திருக்க கீர்த்தி வெற்றி புன்னகையை சிந்தினாள். ஹர்ஷா சாஹிக்கு அழைப்பு விடுக்க இம்முறை அவள் அதை ஏற்கவில்லை.

கீர்த்தி ஹர்ஷாவிடம் “நான் தான் சொன்னேன்ல ஹர்ஷா அவ சமரை லவ் பண்றானு நீ தான் என்னை நம்பல”
“ஷட் அப் கீர்த்தி” என கர்ஜித்தவன் “அவ என்னை எவ்ளோ லவ் பண்றானு எனக்கு தெரியும்.. நீ எதையும் சொல்லணும்னு அவசியமில்லை சோ ஜஸ்ட் கேட் லாஸ்ட்” என்றுவிட்டு அவளை வெளியில் அனுப்பியவன் தன் மேசையின் இழுபறையிலிருந்த சாஹியின் டைரியை கையில் எடுத்து வருடினான்.

அங்கு சாஹி மெத்தையில் படுத்துக்கொண்டு காலையில் கல்லூரியில் நடந்தவற்றை அசைபோட தொடங்கினாள். சாஹி வகுப்பில் முதல் வரும் மாணவி என்பதால் சிலருக்கு அவள்மேல் வெறுப்பு. அதில் ஒருவள் தான் மித்தா. சாஹியை மட்டம் தட்டுவதே பிரதான வேலையாக வைத்துக்கொண்டு திரிபவள். அன்று காலை சாஹி எப்போதும் போல் தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருக்க அவளின் தோழிகளில் ஒருத்தி சாஹியிடம் “ஏன் சாஹி உங்க ஹஸ்பன்டை எங்களுக்கு இன்ட்ரோடுஸ் பண்ண மாட்டியா” என்று கேட்க அதற்குள் மித்தா நக்கலாக “ஹே அவருக்கு சாஹியவே நியாபகம் இருக்கானு தெரியல இதுல உன்ன எப்படி அவ இன்ட்ரோ பண்ணுவா” , சாஹி அவளை முறைத்துக்கொண்டே “வாயா மூடு மித்தா.. தேவையில்லாம ஏதாவது பேசி வாங்கிகட்டிக்காத”
“ஓ நான் தேவை இல்லாம பேசுறேனா சரி.. உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆகுது ஆனா இதுவரை உன்னோட சோ கால்டு புருஷன் ஏன் உன்ன வந்து பார்க்கல”
“ப்ச் அவரு என்ன வந்து பார்க்கலனு உனக்கு தெரியுமா.. என்னமோ நீ இருபத்தி நாலு மணி நேரம் என்கூடவே இருக்குற மாதிரி பேசுற”
“நான் இல்ல தான் ஆனா நான்  பொய் சொல்லல.. உன் ஹஸ்பண்ட்க்கு வேற பொண்ணு மேல இன்டெர்ஸ்ட் அவங்களுக்குள்ள ஏதோ சண்டை அதனால அவர் உனக்கு ஒகே சொல்லிட்டார்  அதுக்காக தான் அவர் மனசு மாறுறதுக்கு முன்னாடி அவசர அவசரமா கல்யாணம் பண்ணிடீங்க.. கல்யாணத்துக்கு அப்பறம் அவங்களுக்குள்ள சண்டை சரி ஆகிடுச்சு அதான் அவர் உன்னை அவாய்ட் பண்றாரு ” என்று அவள் முடிக்கும் முன் சாஹியின் கரங்கள் அவள் முகத்தில் பதிந்திருந்தது.

மாயா சாஹியை இழுக்க சாஹி மித்தாவிடம் இரு விரல் நீட்டி “மரியாதையா பேசு மித்தா.. இதுக்கு மேல ஏதாவது தப்பா பேசுன கொன்றுவேன்”.

மாயா சாஹியை தனியே அழைத்து சென்று “ஏன்டி இவ்ளோ கோபப்படுற. அவளை பத்தி தான் உனக்கு தெரியும்ல.. ஏதாவது உளருற அப்படின்னு விட வேண்டியது தானே”
“அதுக்குன்னு அவ அப்படி பேசுவாளா.. அவளை அடிச்சி யூஸ் இல்ல… அவகிட்ட எல்லாம் பேச்சு வாங்க வைக்கிறார்ல அந்த மனுஷனை சொல்லணும்.. இன்னிக்கி வீட்டுக்கு போய் இருக்கு அவருக்கு” என்று ஹர்ஷாவை மனதில் எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொண்டிருந்தாள்.  இதற்கிடையில் சஜிதா நடந்தவற்றை ஹர்ஷாவிடம் தெரிவித்திருந்தாள்.

இது அனைத்தும் யோசித்துக்கொண்டே படுத்திருந்தவள் எப்போது உறங்கினோம் என்பதே தெரியாமல் உறங்கிபோயிருந்தாள்.

ஹர்ஷா சாஹிக்கு பல முறை அழைத்தும் அவள் ஒரு அழைப்பையும் ஏற்கவில்லை. ஹர்ஷாவின் பொறுமையும் காற்றில் பறந்தது தான் மிச்சம். தன் உதவியாளரை அழைத்த ஹர்ஷா சில கட்டளைகளை பிறப்பித்தவன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சென்றான்.

மூன்று நாட்கள் கழிந்தது. சாஹி சொன்னது போல் அவள் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. ஹர்ஷாவும் அதன் பின் அவளுக்கு அழைக்கவில்லை. மூன்று நாட்களில் இரண்டு நாள் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினாள். அதன் பலனோ ரேணுவிடம் இருந்து வாங்கிய வசைகள் தான். 

நான்காம் நாள் காலை மாயா சாஹியின் இல்லத்திற்கு வருகை புரிந்தாள். சாஹி ஏதோ புத்தகத்தில் மூழ்கிருக்க மாயா அவள் தலையில் தட்டி “என்னடி பிரச்சனை உனக்கு. மூணு நாள் ஏன் காலேஜ் வரல”
“வர பிடிக்கல”
“சாஹி என்ன ஆச்சு” என்று அவள் அதட்ட மாயாவின் மடியில் தலைவைத்து படுத்துகொண்டாள்.  சாஹி சோகமாக இருந்தாலும் கோபமாக இருந்தாலும் அவள் ஆறுதல் தேடுவது மாயாவின் மடியில் தான்.

மாயா சாஹியின் தலையை வருடிக்கொண்டே “நீ காலேஜ் வரலனா எல்லாம் சரி ஆகிடுமா”
“எதுவும் சரியாகவேண்டாம்.. எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்”
“அடியே லூசு என்ன பேச்சு இது”
“இதுக்கே இப்படி சொல்ற நான் அவர்கிட்ட டிவோர்ஸ் கேட்டேன் அதுக்கு என்ன சொல்ற” . சாஹி சாதாரணமாக கூற மாயா அவளை அதிர்ந்து நோக்கினாள். பின் சாஹியை விலக்கி “அறிவிருக்கா சாஹி உனக்கு. இது ஒரு விஷமயா இதுக்கெல்லாம் டிவோர்ஸ் கேட்குற”
“நான் பண்ணதுல என்ன தப்பு.. அவர் என்னை கண்டுக்கவேயில்லனா எனக்கு கோபம் வராதா” , சிறுபிள்ளை போல் சாஹி வாயாட மாயா தலையில் அடித்துக்கொண்டு “கொஞ்சமாச்சு வளரு சாஹி.. கல்யாணம் அப்படின்றது சின்ன விஷயமா உனக்கு.. அம்மாக்கு மட்டும் இது தெரிஞ்சிது அவ்ளோ தான் உன்னை.. வாழ்க்கைல சண்டை வர தான் செய்யும்.. அதை கடந்து வழுறது தான் அங்க பெரிய விஷயம்.. புரிதா.. ஒழுங்கா அண்ணாக்கு கால் பண்ணி சாரி கேளு” , சாஹி முடியாது என்று முறுக்கிக்கொள்ள மாயா சற்று அழுத்தமாக “இங்க பாரு சாஹி அவருக்கு நீ முக்கியமில்லனா அவர் உனக்காக இவ்ளோ செய்ய மாட்டார் அதை நல்லா புரிஞ்சிக்கோ.. அவர் உன்கிட்ட பேசல அவ்ளோ தான் மத்தபடி உன்னைபத்தின ஒவ்வொரு விஷயமும் அவருக்கு அத்துபடி”
“நீயும் புரிஞ்சிக்காம பேசாத மாயா.. நான் அவர்கிட்ட சொல்றதும்.. யாரோ ஒருத்தங்க சொல்றதும் ஒன்னா” . இப்படி இவளிடம் பேசினால் சரி வராது என்பதை உணர்ந்தவள் பொறுமையாக
“கண்டிப்பா இல்ல சாஹிம்மா ஆனா இதுக்கெல்லாம் டிவோர்ஸ் அப்படின்ற முடிவு தப்பு.. அது மட்டுமில்லாம உன்னால அவரை பிரிஞ்சி இருக்க முடியுமா ” (சாஹி சில நாட்களுக்கு முன்பு , தன் காதல் கதையை மாயாவிடம் கூறியிருந்தாள் அதனால் எழுந்த கேள்வி தான் இது). சாஹி இல்லை என்பதாய் தலையாட்ட மாயா “அப்பறம் என்னம்மா”
“அது இல்லை மாயா நான் அன்னிக்கி ஒரு படம் பாத்தேன் அதுல அந்த ஹீரோயின் டைவர்ஸ் கேட்கும் அப்போ தான் ஹீரோக்கு ஹீரோயின் மேல லவ் வரும் அது மாதிரி ” என்று அவள் இழுக்க மாயா வெட்டவா குத்தவா என்று சாஹியை முறைத்துக்கொண்டிருந்தாள். பின் “இங்க பாரு சாஹி படமும் வாழ்க்கையும் ஒன்னு கிடையாது.. உன்னோட உண்மையாக காதலுக்கு அந்த கடவுள் உனக்கு கொடுத்த கிப்ட் தான் ஹர்ஷா அண்ணா அதை இழந்துடாத” என்று அழுத்தமாக முடிக்க சாஹிக்கு அப்போது தான் அவள் வார்த்தைகள் உரைக்க மாயாவின் முகத்தை பாவமாக பார்த்தாள்.

மாயா அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு  “சாஹி சொல்லவே மறந்துட்டேன்.. இன்னிக்கி நம்ம காலேஜ் culturals நியாபகம் இருக்கா”
“இருக்கு இருக்கு”
“சரி அப்போ கிளம்பு..”
“இல்ல நான் வரல”
“ஹே.. ஒழுங்கா கிளம்பு.. இது தான் நம்ம காலேஜ் லைஃப்போட லாஸ்ட் culturals நீ வேற பாட்டு பாடுறேன்னு சொல்லிருந்தல”
“இல்ல மாயா நான் வரல”
“ப்ச்ச் சாஹி.. நீ வர அவ்ளோ தான்” என்று அவளை கிளப்பினாள்.

அரை மணி நேரத்தில் அடர் நீல நிற அனார்கலி சுடிதாரில் வந்தவளை பார்த்த மாயா “இந்த ட்ரெஸ்ல மட்டும் அண்ணா உன்ன பார்த்தாரு.. அப்படியே உன்ன தூக்கிட்டு போய்டுவாரு” , சாஹி அவளை முறைத்துவிட்டு “ஆமா ஆமா.. இங்க பேசவே வக்கில்லையாம் இதுல தூக்கிட்டு போய்டுவாராம்” என்று சலுத்துக்கொண்டு மாயாவுடன் கல்லூரிக்கு கிளம்பினாள்.

மாயாவும் சாஹியும் வெளியில் வர அவர்களுக்கு முன்னமே சஜிதாவும் முரளியும் தயாராக இருந்தனர். சாஹி மாயாவை பார்க்க மாயா கண்களாலேயே பொறுமையாக இருக்கும் படி கூறிவிட்டு அவர்களையும் அவளுடன் அழைத்து சென்றாள்.

சாஹியின் கல்லூரி அரண்மனை போல் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சாஹி “ஏன் இவனுங்க இவ்ளோ அலங்காரம் பண்ணிருகாணுங்க” என்று மாயாவிடம் கேட்க “தெரியல யாரோ பெரிய ஆளு சீஃப் கெஸ்ட்டா வராங்க போல” என பேசிக்கொண்டே அந்த பெரிய ஆடிட்டோரியத்தினுள் நுழைந்தாள் சாஹி பாட பெயர் கொடுத்திருந்ததால் அவள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டாள். மாயாவும் அவளுடன் அமர்ந்துகொள்ள சஜிதாவும் முரளியும் அவள் இருக்கைக்கு பின்னிருகையில் அமர்ந்துகொண்டனர்.

நேரம் மாலை ஐந்தை தொட அரங்கமே பரபரப்பனது. சாஹியின் அருகில் வந்தமர்ந்து பெண் தன் தோழியிடம் “ஹே மேகி நம்ம கெஸ்ட் செம்ம ஹாண்ட்சம்மா இருந்தாரு தெரியுமா.. அப்படியே ஹீரோ மாதிரி இருந்தாரு.. என்று புகழ்ந்துகொண்டிருக்க ஏனோ சாஹிக்கு முதல் முறையாக ஹர்ஷாவை பார்த்தது தான் நியாபகம் வந்தது. அவள் தனி உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்க அதை கலைக்கும் வண்ணம் அரங்கத்தின்  சலசலப்பு அதிகமானது. பக்கத்திலிருந்த பெண்ணும் “அதோ அவரு தான் அவரு தான்” என்று துள்ள சாஹி மனதில் ‘கடவுளே இதுவரை பசங்களை பார்க்காத மாதிரி எப்படி பாக்குற பாரு என்று நிமிர அங்கு வந்த விருந்தினரை பார்த்து விழி விரித்து நின்றாள்.

Advertisement