Advertisement

                        அத்தியாயம் 12

சாஹி ஹர்ஷாவின் தோள் மீது சாய்ந்து கொண்டு தன் இனிய நினைவுகளில் மூழ்கிருக்க ஹர்ஷாவின் அழைப்பு அவளை கலைத்தது.

ஹர்ஷா ” ஹே கும்பகர்ணி” என்று அழைக்க   அதில் நிமிர்ந்தவள் ‘என்ன’ என்பது போல் பார்க்க ஹர்ஷா அவளிடம் “எப்படி டி எப்போ பாரு தூங்கிட்டே இருக்க”

“நான் எப்போ தூங்குனேன்”

“டெய்லி என்னை விட சீக்கிரம் தூங்குறா நைட் ஆனா காலைல லேட்டா எழுஞ்சிக்கிற.  இப்போவும் என் மேல் சாஞ்சு தூங்குற”

“எனக்கு தூங்க பிடிக்கும் அதான்.. அப்பறம் நீங்க என்னோட புருஷன் உங்க மேல சாஞ்சு தூங்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்று அவள் கூற ஹர்ஷா “அப்படின்னு யார் சொன்னது”

“யார் சொல்லணும்” , அவளும் விடாமல் கேட்க இறுதியில் இறங்கி வந்தது ஹர்ஷா தான்.

விடியற்காலையில் இருவரும் மதுரை சென்றடைந்தனர். சாஹி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க ஹர்ஷா அவள் உறக்கம் கலையாதவண்ணம் அவளை தூக்கிக்கொண்டு சென்றான். ரேணு ஹர்ஷாவிடம் “அவளை எழுப்பி விடுங்க மாப்பிள்ளை இன்னும் சின்ன பிள்ளையா அவ”

“இருக்கட்டும் அத்தை நைட் லேட்டா தான் தூங்குனா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. அவ ரூம்” என்று அவன் கேட்க அவனுக்கு அறையை காட்டிவிட்டு “மாப்பிள்ளை நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்றுவிட்டு அவர் செல்ல தன்னவளை தன் மீது போட்டுகொண்டு உறங்கினான். பயண களைப்பால் ஹர்ஷா உறங்கிக்கொண்டிருந்தான். அன்று அதிசயமாக வெகு சீக்கிரமே சாஹிக்கு முழிப்பு தட்டியது கண்ணை திறந்தவளுக்கு சில நிமிடம் ஒன்றும் விலங்கவில்லை. தன் அறையில் தன்னவன் கையணைப்பில் இருந்தவளுக்கு இவ்வுலகத்தையே வென்றுவிட்டது போல் ஒரு உணர்வு. அவன் உறக்கம் கலையாதவாறு எழுந்தவள் அவன் நெற்றியிலும் கன்னத்திலும் அழுத்தமாக இதழ் பதித்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள். ஹர்ஷா தினமும் அவளை தன் மீது போட்டுகொண்டு தான் உறங்குவான் ஆனால் சாஹிக்கு அது தெரியாததால் தான் இப்படி குதித்துக்கொண்டிருந்தாள்.

குளித்துவிட்டு கீழிறங்கி வந்த சாஹியிடம் ரேணு “சாஹி நீ இன்னும் திருந்தவே இல்லையா.. மணியா பார்த்தியா.. பத்து ஆகுது”

“ம்மா அத்தை கூட என்னை எதுவும் சொல்ல மாட்டாங்க நீங்க ஏன் இப்படி கத்துறீங்க”

“ஆமா கத்தாமா கொஞ்சுறேன் சரியா.. காலைல அம்மனியால எழுந்து நடந்து கூட வர முடியாதா பாவம் மாப்பிள்ளை தூக்கிட்டு வந்தாரு” , சாஹிக்கு இது மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்க தன் அன்னையிடம் அசடு வழிந்துவிட்டு மகேஸ்வரனுடன் ஹாலில் அமர்ந்துகொண்டாள்.

சிறிது நேரத்தில ஹர்ஷா இறங்கி வர சமையலறையில் ரேணு “அங்கேயும் இதே மாதிரி தான் லேட்டா எழுஞ்சிகுவியா”

“ம்மா நான் உன்கிட்ட என்ன சொன்ன.. நான் மட்டும் தூங்க மாட்டேன் அவரையும் சேர்த்து என்கூட தூங்க வச்சிக்குவ”

“போடி வாயாடி.. இப்படியே பேசிட்டு இரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் மாப்பிள்ளை கிட்ட வாங்கி கட்டிக்க போற”

“அதெல்லாம் அப்போ பார்த்துக்கலாம்” என்று பேசிமுடிக்கும் போது ஹர்ஷா ஹாலில் வந்து அமர்ந்தான்.

ரேணு அவனுக்கு காபி போட சாஹி அதை வாங்கிக்கொண்டு சென்றாள். ஹார்ஷாவிடம் காபி கொடுத்துவிட்டு அவனுடன் அமர்ந்துகொண்டாள். அன்று முழுவதும் அவர்களின் நாள் அப்படியே செல்ல இரவு ஹர்ஷா ஊருக்கு கிளம்ப ஆயுத்தமானான். கிளம்பும் முன் சாஹியின் அறையில் ஹர்ஷா யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருக்க சாஹி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஹர்ஷா அவள் கண்களின் ஏக்கம் அறிந்து கை விரித்து அழைக்க , அழைத்தது தான் தாமதம் என்பது போல் அவன் கைகளில் தஞ்சம் புகுந்தாள் அந்த ஐந்தடி தேவதை. ஒரு வழியாக அவளை சமாளித்தவன் அவளிடம் மூவரை அறிமுக படுத்தினான்.

சாஹி முழித்துக்கொண்டே நிற்க ஹர்ஷா அவளிடம் “சாஹித்யா இவங்க மூணு பேரும் இனிமேல் உன்கூட தான் இருப்பாங்க”

“ஏன்”

“ஏன்னா.. உன்னோட சேப்டிக்கு.. என்னால எல்லா நேரமும் உன்கூடவே இருக்க முடியாதுல அதான்.. ஷி இஸ் சஜிதா ஹீ இஸ் ஜகன் அண்ட் ஹீ இஸ் முரளி” , அவர்களை பார்த்து ஸ்நேகமாய் புன்னகைத்தவள் ஹர்ஷாவை கேள்வியாய் பார்க்க அவனோ அவளை சிறிதும் கண்டுகொள்ளாமல் அவர்களிடம் சில கட்டளைகளை பிறப்பித்துவிட்டு சாஹியின் தாய் தந்தையிடம்  சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

சாஹிக்கு அவன் செல்வதை பார்க்கும் போது கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. ஹர்ஷா அவளை விட்டு வெகு தூரம் சென்றது போல் மனது பாரமாக இருக்க அமைதியாக தன் அறையில் சென்று அடைந்துகொண்டாள்.

மறுநாள் மூவர் காவலுடன் மகேஸ்வரன் சாஹியை கல்லூரிக்கு அழைத்து சென்றார். கல்லூரியினுள் நுழைந்தவள் முதலில் தேடியது மாயாவை தான். அவள் எதிர்பார்த்தது போல் அவர்களின் வகுப்பறையில் சில தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள். சாஹி அவள் அருகே அமர்ந்துகொண்டு “என்ன மேடம் என்மேல செம்ம கோபத்துல இருக்கீங்க போல”

“இல்ல சாஹி எனக்கு உன்மேல கோபம் இல்ல வருத்தம் தான்”

“சாரி மாயா.. அபி ரொம்ப நல்லவர்”

“எனக்கு தெரியாதுன்னு நினைகிறியா”

“அப்பறம் என்னடி.. எதுக்கு அவரை இப்படி படுத்துற”

“சாஹி புரிஞ்சிக்கோ அப்பாக்கு பணக்காரங்கனாளே பிடிக்காதுன்னு உனக்கே தெரியும் தானா..”

“நான் பேசுறேன் மாயா” என்று அவள் மாயாவின் கையை தன் கைக்குள் வைத்துக்கொண்டு உறுதிகொடுக்க ஒரு தலை அசைப்பை மட்டும் கொடுத்தாள்.

ஒருவழியாக மாயாவை பேசி கரைத்தவள் ஹர்ஷாவை வைத்து மாயாவின் தந்தையிடம் பேச திட்டம் தீட்டினாள்.

நாட்களும் அதன் போக்கில் செல்ல அன்றோடு சாஹி மதுரைக்கு வந்து ஒன்றரை மாதம் ஓடிவிட்டது. சஜிதா கல்லூரியில் சாஹியை விட்டு ஒரு இன்ச் கூட நகர மாட்டாள் என்றால் வெளியில் முரளியும் ஜகனும் அவளை இரண்டடி இடைவெளியில் தொடர்ந்து வருவார்கள். அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஹர்ஷாவிற்காக அமைதி காப்பாள்.

அன்று சாஹித்யாவை வீட்டில் விட்டதோடு சரி இதுவரை ஒரு முறை கூட ஹர்ஷா அவளை அழைக்கவில்லை. யசோதா , விமல் அபி தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினாலும் அவள் ஏங்கியது ஹர்ஷாவின் அழைப்பிற்காக தான். இந்த குறுகிய காலத்தில் ஹர்ஷாவின் திருமண செய்தியே தமிழ்நாட்டின் ஹாட் நியூஸ்ஸாக மாறி இருந்தது. அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது வெளிவந்ததே தவிர அவன் யாரை திருமணம் செய்துகொண்டான் என்பது வெளியாகவில்லை. வெளியாகவில்லை என்பதை விட அவன் அதை வெளிவர விடவில்லை என்பதே சரியாக இருக்கும்.

இதற்கிடையில் சமரும் கீர்த்தியும் ஹர்ஷாவை பழி வாங்க ஒன்று கூடினர். சமரை பொறுத்தவரை அவனுக்கு சாஹி தேவை அவளின் அழகு அவனை அவள்மேல் பித்து பிடிக்க வைத்தது. கீர்த்திக்கு ஹர்ஷாவின் பணம் பெரிதாய் இருந்தது அதனால் தன் திருமணத்தை நிறுத்தியவள் ஹர்ஷாவை அடைவதற்கு சில திட்டங்களை தீட்டினாள் அப்போது தான் அவளுக்கு சமரை பற்றி தெரிய வர அவனுடன் கூட்டு சேர்ந்து அவர்களை பிரிக்க திட்டம் தீட்டினர்.

அன்று எப்போதும் போல் கல்லூரி சென்றுவிட்டு வீடு திரும்பும் போது சாஹியின் வீடிருக்கும் தெரு முனையில் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தான் சமர். அவனை அங்கு எதிர்பாராதவள் யோசனையுடன் செல்ல சமர் அவளை அழைத்தான். அவன் சாஹியை அழைத்த உடனே ஜகனும் முரளியும் வர அவர்களிடம் “எனக்கு தெரிஞ்சவர் தான் அண்ணா நான் பார்த்துக்குறேன்”

“இல்ல மேம் சாரோட ஆர்டர் நீங்க வெளியாளுங்க யார்கிட்டயும் பேச கூடாதுன்னு… தெரிஞ்சா திட்டுவார்” என்று ஜகன் மென்று முழுங்க அவர்களை முறைத்தவள் “இங்க பாருங்க அவங்களை எனக்கு தெரியும். டூ மினிட்ஸ்ல வந்திடுவேன்”

சஜிதா “இல்ல மேம் சொன்னா புரிஞ்சிக்கோங்க” , அவ்வளவு தான் எங்கிருந்து சாஹிக்கு அவ்வளவு கோபம் வந்ததேன தெரியவில்லை அவர்கள் மூவரையும் தீயாய் முறைத்தவள் “இங்க பாருங்க இதுக்கு மேல ஒருத்தரும் என்கூட வர கூடாது. மீறி வந்தா நான் மனுஷியா இருக்க மாட்டேன்” , மூவரும் தலை குனிந்து நின்றனரே தவிர அவளை அவனிடம் அனுபவில்லை சாஹிக்கு ரத்த அழுத்தம் ஏறிக்கொண்டே சென்றது.. அதற்கு மேல் பேசாமல் வீட்டிற்கு சென்றாள்.

வீட்டை சுற்றியும் சில காவலாளிகள் இருக்க  அமைதியாக வீட்டினுள் நுழைந்தவள் தன் பையை ஒரு மூலையில் வீசிவிட்டு “ம்மா.. ப்பா..” , அந்த வீடே அலறும் படி கத்தி கொண்டிருந்தாள். ரேணு அவள் அலறியதில் பயந்து வர சாஹி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க “என்ன பார்த்தா ஜெயில் கைதி மாதிரி இருக்கா. எப்போ பாரு என்ன சுத்தி யாராவது காவல் காத்துட்டே இருக்காங்க” , ரேணு சற்று கோபமாக

“சாஹி என்ன பேச்சு இது மாப்பிள்ளை அவங்கள உன் பாதுகாப்புக்கு தான் போட்டு இருக்காரு”

“யாரு கேட்டா பாதுகாப்புக்கு.. எனக்கு எதுவும் தேவையில்லை , அவங்க எல்லாரையும் போக சொல்லுங்க”

“சாஹிமா ஏன் டா இவ்ளோ கோபம்”

“ஹான் நான் யார்கூட பேச கூடாதாம்.. காலேஜ்ல கூட இப்படி தான் பண்றங்க” என்று மண்டியிட்டு அழ ரேணு அவள் முதுகை வாஞ்சையாக தடவி கொடுத்தார்.

சிறிது நேரம் அழுதவள் அங்கிருந்து தன் அறைக்கு சென்றாள். தன் அலைபேசியை எடுத்தவள் ஹர்ஷாவிற்கு அழைக்க அவனோ அவள் பொறுமையை இன்னும் சோதித்தான். பத்து முறைக்கு மேல் அழைப்பு விடுத்த பின் தான் அவன் அழைப்பை ஏற்றான். அவன் அழைப்பை ஏற்றவுடனே சாஹி அவனிடம் பெறிய தொடங்கினாள்.

சாஹி “எனக்கு யாரும் கார்ட்ஸ் வேண்டாம் அவங்க என்கூட வந்தா நான் எங்கயும் வெளியவே போக மாட்டேன். நான் என்ன ஜெயில் கைதியாக யாராவது பாதுகாப்புக்கு இருந்துகிட்டே இருக்குறதுக்கு” , இவள் பொறிந்துகொண்டிருக்க ஹர்ஷா சலிப்புடன் “இப்போ என்ன நடந்துதுன்னு இப்படி கத்துற..”
“என்ன நடக்கணும்.. எனக்கு கார்ட்ஸ் தேவையில்லை”
“இடியட் நீ இன்னும் சாஹித்யா மகேஸ்வரன் கிடையாது.. நீ சாஹித்யா ஹர்ஷவர்தன். என்ன கேட்ட எதுக்கு உனக்கு பாதுகாப்புன்னு தான… நல்லா கேட்டுக்கோ உன்ன வச்சு யாராவது என்ன பிளாக்மெயில் பண்ண நிறைய வாய்ப்பிருக்கு அதுக்கு தான்..”
“…”
” அந்த சமர் கூட பேச விடாததுக்கு உனக்கு ஏன் இவ்ளோ கோபம் வருது” , குரலில் ஏளனம் குடிக்கொள்ள

“அதான் நான் சொல்றதுக்கு முன்னாடி உங்களுக்கே எல்லா செய்தியும் வந்துடுதே..  அப்பறம் என்ன”

“என்ன பிரச்சனை உனக்கு”  , அவன் சற்று குரல் உயர்த்த சாஹி அழுகையை உதட்டை கடித்து கட்டுப்படுத்திக்கொண்டு

“ஹர்ஷா நீங்க என்னை இங்க விட்டுட்டு போனதோட சரி அதுக்கு அப்புறம் ஒரு கால் பண்ணிங்களா”

“இங்க பாரு சாஹித்யா.. நான் வெட்டியா இல்ல சரியா.  எனக்கு தலைக்கு மேல ஆயிரத்தேட்டு வேலை இருக்கு. என்னால உன் பின்னாடி சுத்திட்டு இருக்க முடியாது.. உனக்கு தேவையானதை செய்ய தான் கார்ட்ஸ் போட்டிருக்கேன்”


“நான் கார்ட்ஸ்ஸை கல்யாணம் பண்ணல ஹர்ஷா”
“சாஹித்யா”
“உங்களால பாத்துக்க முடியாலனா எதுக்கு கல்யாணம் பண்ணீங்க..”


” ஜஸ்ட் ஷட் அப் , என்னால யாருக்காகவும் இறங்கி வர முடியாது.. நான் வரவும் மாட்டேன்” என்றான் குரலில் கடினத்தை கூட்டி . அவன் வார்த்தைகளில் உடைந்தவள் உணர்ச்சிகள் துடைத்த குரலில் “ஹர்ஷா நான் இதுவரைக்கும் உங்ககிட்ட எதுவும் கேட்கள ஆனா இப்போ ஒன்னே ஒன்னு கேக்குறேன். எனக்கு டிவோர்ஸ் வேணும்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தாள். ஹர்ஷா அவள் பேசியதை கேட்டு அதிர்ந்திருக்க அவன் எதிரில் அமர்ந்திருந்த கீர்த்தி அவனை பார்த்து வெற்றி புன்னகை சிந்தினாள்.

Advertisement