Advertisement

அத்தியாயம் 17

மருத்துவர்கள் ICUவினுள் செல்வதும் வருவதுமாய் இருக்க அதுவரை அடங்கிருந்த பதட்டம் மீண்டும் தலை தூக்கியது.

சிறிது நேரத்தில் மருத்துவ குழு வெளியே வர ஹர்ஷா பரிதவிப்புடன் “டாக்டர் என்ன ஆச்சு”
“எங்களால இப்போதிக்கி எதுவும் சொல்ல முடியாது.. நார்மல்லா இதய துடிப்பு ரைஸ் ஆச்சுன்னா ஒன்னு அவங்க கண்ணு முழிப்பாங்க இல்லாட்டி கோமாக்கு போவாங்க ஆனா இவங்க கேஸ்ல அந்த மாதிரி நடக்கல அவங்க ஹார்ட் பீட் ரைஸ் ஆகுது திரும்ப நார்மல் ஆகுது.. ரொம்ப க்ரிடிகள்லா இருக்காங்க.. லேட்ஸ் வெய்ட் அண்ட் ஹோப் பார் தி பெஸ்ட்” என்றுவிட்டு அவர் நகர்ந்திட ஹர்ஷா தான் உடைந்து போனான்.

நாட்கள் அதன் போக்கில் விரைய இன்றோடு சாஹியை மருத்துவமனையில் சேர்த்து ஒன்றரை வாரம் ஆகிவிட்டது இன்னும் அவள் கண் திறக்கவில்லை. மருத்துவர்கள் அவள் கோமாவில் உள்ளதாக கூறிவிட ஹர்ஷா அவள் அறையின் முன்னே தவம் கிடந்தான். இரண்டு வாரமாய் சரியாக உண்ணாமல்  உறங்காமல் கண்ணில் கருவளையம் பூத்தும் சரவம் செய்யாத தாடியுடனும் ஆளே மாறிபோயிருந்தான். 

மதியம் எப்போதும் போல் ஹர்ஷா அவள் கைகளை பிடித்தவண்ணம் அமர்ந்திருந்ததான்.

வேண்டாம் என்ற போது
என்னுடனே இருந்தவள்..
வேண்டும் என்கிறேன்
கண் திறக்க மறுக்கிறாள்

என்று ஹர்ஷாவின் மனம் தன் போக்கில் எண்ணியது.

ஹர்ஷா சாஹியிடம் “ஏன் டி இப்படி வதைக்கிற.. ஒரு மாசம் உன்னை பார்க்க வரேல்னு இந்த ஒரு வாரம் ரொம்ப சோதிச்சிட்ட.. ப்ளீஸ் கண்ணு திற டி..” என்று  அவளுடன்  பேசிக்கொண்டிருக்க
ரேணு அவனிடம் “மாப்பிள்ளை சாப்பிட வாங்க எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பீங்க” என்று கேட்க பதிலேதும் கூறாமல் எழுந்தவனின் கைகளை தடுத்தது சாஹித்யாவின் கரம்.

ஹர்ஷா ஆவலுடன் அவள் கண்களை பார்க்க அதிலும் அசைவு தெரிந்தது. அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவள் கன்னம் தட்டி “சாஹித்யா கண்ணை திற டா.. என்ன பாரு”. கண்களை மெல்ல திறந்தவள் முதலில் கண்டது தன்னவனை தான். விழிகள் நீரால் தழும்பிட அவன் கைகளை பற்றி தன்னருகில் இழுத்தாள். ஹர்ஷா ரேணுவிடம் மருத்துவரை அழைக்க சொல்லிவிட்டு அவளை நெருங்கினான். முகத்தில் போடப்பட்டிருந்த சுவாச கருவியை எடுத்தவள் அவன் செவியில் “ரொம்ப பயந்துட்டேன்” என்றாள் கண்ணீருடன். ஹர்ஷா அவள் தலையை ஆதரவாக வருட மருத்துவர் நுழைந்தார்.

மருத்துவர் “சார் கொஞ்சம் வெளியே இருங்க” என்று கூற சாஹி அவன் கைகளை இறுக பற்றி கொண்டாள்.
மருத்துவர் சிரித்துவிட்டு ” சரி இருங்க” என்றபடி அவளை பரிசோதித்தார்.

சாஹியை பரிசோதித்த மருத்துவர் ஹர்ஷாவிடம் “டோன்ட் வரி மிஸ்டர் உங்க வைஃப் இப்போ ஆபத்தான நிலையை தாண்டிட்டாங்க இன்னும் சில டெஸ்ட் எடுத்துட்டு அவங்களை நார்மல் வார்ட்க்கு மாத்திடலாம்” என்றுவிட்டு நகர வீட்டினர் அனைவரும் வந்துவிட்டனர்.

ரேணு அவளை பார்த்து அழ சாஹி “மா நான் நல்லா இருக்கேன்” என்றாள். அவளால் பேச முடியவில்லை மிகவும் சிரமப்பட்டு தான் கூறினாள். யசோ அவளிடம் நலம் விசாரிக்க அவளும் பதிலளித்தால். சிறிது நேரம் கழித்து அவர்களுக்கு தனிமை கொடுக்கம் பொருட்டு அனைவரும் சென்றிட , ஹர்ஷா அவள் கைகளை பிடித்துக்கொண்டு “எதுக்கு பயந்த சாஹித்யா” என்றான் மிக மென்மையாக . அவன் கைகளை பற்றியவள் “எங்க உங்களை பார்க்காம உங்க கூட வாழாம செத்திடுவேனோன்னு” என்று அவள் கூறும் முன் ஹர்ஷா அவள் வாயின் மேல் கைவைத்து “என்ன பேச்சு இது..” என்று அதட்ட அதை சட்டை செய்யாதவள் அவன் கரங்கங்களை கன்னங்களில் வைத்து அழுத்தி “ஐ லவ் யூ ஹர்ஷா..” என்றாள் கண்களில் காதல் போங்க அவனும் கள்ள சிரிப்புடன் “தெரியும் அதுவும் ரெண்டு வருஷமா” என்றான்.
“எப்படி என்று அவள் விழிக்க உன்னோட டைரி நம்ம ரூம்ல தான் இருக்கு செல்லம்” என்றபடி அவள் நெற்றியில் முட்டினான் அந்த கள்வன்.

“சீட்டர்.. பேட் பாய்” என்று அவள் அவன் நெஞ்சை பிடித்து தள்ள அட்டகாசமாக சிரித்தவன் அவள் கைகளை தன் கைக்குள் அடக்கிவிட்டு “ஹே நான் இன்னும் எதுவும் பண்ணல டி அதுக்குள்ள பேட் பாய் சொல்ற” என்று கண்ணடித்து கூற, அவன் கூறியது புரியாமல் விழித்தவள் அதன் அர்த்தம் புரிந்து கன்னம் சிவக்க “ஹர்ஷு” என்று சிணுங்கினாள்,  அவனோ “வேண்டாம் செல்லம் நான் கொஞ்ச நாளுக்கு நல்ல பையனா இருக்க ஆசை படுறேன்.. என்ன பேட் பாய்யா மாத்தாத” என்று அவள் கன்னத்தில் முத்தமிட அவனை விலக்கியவள் “முதல ஷேவ் பண்ணுங்க ஹர்ஷா உங்க தாடி குத்துது” என்று மீண்டும் சிணுங்க, அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.  அவன் அணைப்பில் கட்டுண்டு கிடந்தாள் அவனின் அவள்.

நான்கு மாதங்களுக்கு பிறகு

            “அத்தை இந்த செயின் ரொம்ப ஹெவியா இருக்கு” என்று பெரிய மருமகள் ஒரு புறம் குறை கூற மறுபக்கம் “ஆமா அத்தை இதுகூட என் கழுத்தை அழுத்தி பிடிச்சிருக்கு”  என்றாள் சின்ன மருமகள்.
யசோ தலையில் அடித்துக்கொண்டு “என்ன பொண்ணுங்க நீங்க எந்த செயின் கொடுத்தாலும் ஏதாவது காரணம்  சொல்றீங்க.. உங்களுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன் , இருங்க ரேணுவை கூப்பிடுறேன்” என்று அவர் வெளியேற , அடுத்த இரண்டாவது நிமிடம் ரேணு நுழைந்தார்.

சாஹியும் மாயாவும் சமத்தாக தாயாராகிக்கொண்டிருக்க ரேணு “ரெண்டு பேரும் இன்னும் கிளம்பல”
“தோ மா ரெடி ஆகிட்டோம்” என்று தங்களின் திருமண வரவேற்பு விழாவிற்கு தாயாராகினர். அபி மாயாவின் திருமணம் காலையில் முடிந்த நிலையில் மாலை இரு பிள்ளைகளுக்கும் ஒரே மேடையில் வரவேற்ப்பை வைத்தார் விமல் வர்தன்.

நீல நிறத்தில் வெண்நிற கற்கள் பதித்த லெஹங்காவில் சாஹியும் பிங்க் நிற டிசைனர் லெஹங்காவில் மாயாவும் தேவதையென வர நாயகர்கள் இருவரின் கண்களும் அவர்களின் துணைவிகளின் மேல் தான் நின்றது. நீல நிற கோட் சூட்டில் ஹர்ஷாவும் பிங்க் நிற சூட்டில் அபியும் மேடையில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்க பெண்கள் இருவரும் தத்தம் துணையுடன் நின்றுகொண்டானர்.

ஹர்ஷா சாஹியின் காதுகளில் “கொல்ற டி” என்றான் காதல் போங்க , தன்னவனின் வெப்ப மூச்சு காற்று கன்னங்களை உரச அதுவரை எங்கோ சென்றிருந்த வெட்கம் அவளை ஆட்கொண்டது. ஹர்ஷா அவள் செவிகளில் ஏதோ கூறியதும் சாஹி அதற்கு வெட்கப்பட்டு நின்றதும் அழகாக படமாக்கப்பட்டது.
விருந்தினர்கள் நண்பர்கள் திரைப்பட பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என்று அவ்விழாவே கலைகட்டியது .

ஒரு வழியாக விழா முடிந்து ஹர்ஷாவும் சாஹியும் தனியே விடப்பட்டனர். ஹர்ஷா தன்னவளுக்காக காத்திருக்க அவன் எதிர்பார்ப்பை பொய்யாகாது பிங்க் நிற மைசூர் சில்க் புடவையுடுத்தி வந்தாள். அறையினுள் நுழைந்தவள் ஹர்ஷாவை காணாது தேட அவளை பின்னிருந்து அணைத்தான் அவளின் கள்வன்.

“ஹர்ஷா விடுங்க” என்று அவள் சிணுங்க அவளை மேலும் இறுக அணைத்தவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக்கொண்டு “நாலு மாசம் ஆடுன கண்ணாமூச்சி ஆட்டம் போதும் செல்லம்”
“என்ன மிஸ் பண்ணீங்களா ஹர்ஷா”
“ரொம்ப.. ரொம்ப மிஸ் பண்ணேன்.. உன்னை யாரு அவங்க சொல்ற எல்லாத்துக்கும் ஓகே சொல்ல சொன்னது”
“நான் என்ன பண்றது பெரியவங்க சொல்லும் போது.. அது சரி கீர்த்திக்கும் சமர்க்கும் என்ன ஆச்சு”
“அதெல்லாம் இப்போ பேசிய ஆகணுமா” என்றவனின் குரல் குழைய அவனை விட்டு விலகியவள் இடுப்பில் கைவைத்துக்கொண்டு “சொல்லியே தான் ஆகணும்”
“ஊப்” என்று பெருமூச்சை வெளியிட்டவன் அன்று நடந்தவற்றை கூற தொடங்கினான்.

ஹர்ஷா தீனாவிடம் அவர்களை போலீஸிடம் விட்டுவிட கூறியிருந்தான். அப்போது யசோதா ரேணுவிடம் சாஹி மதுரையிலேயே ஓய்வெடுக்கட்டும் என்றும் வரவேற்பு முடிந்து அழைத்துச் செல்வதாகவும் கூற சாஹி வேறு வழியில்லாமல் அமோதித்தாள் ஆனால் ஹர்ஷா அடம்மாக முடியாது என்றிட சாஹி தான் அவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள். ஆனால் பாவம் இருவரும் நேரில் சந்திக்க சந்தர்ப்பங்கள் அமையவில்லை.

  அந்த இடைப்பட்ட காலத்தில் தீனா அவர்கள் இருவரையும் போலீஸிடம் ஒப்படைத்திருந்தான். நீதிமன்றத்தில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பதை மட்டும் சாஹியிடம் கூறினான் , ஆனால் அவளுக்கு தெரியாத ஒன்று  அபி அவர்களை அவ்வளவு எளிதில் விட கூடாது என்று கூறியதால் தீனா அவர்களுக்கு போலீஸின் third degree ட்ரீட்மெண்ட் கொடுத்தான் என்பதை.

ஹர்ஷா கூறி முடிக்க சாஹி “பாவம் ஹர்ஷா அவங்க.. ஏன் இப்படி பண்ணீங்க ஹர்ஷா ஒரு சான்ஸ் கொடுத்திருக்கலாம்” .ஹர்ஷா அவளை தீயாய் முறைக்க அவன் தாடை பற்றி “என் செல்ல புருஷா.. என்ன இருந்தாலும் உங்களுக்கு என் மேல லவ் வர காரணமா இருந்தவங்க அவங்க அதுக்கு சொன்னேன்”  என்று கொஞ்ச அவளை சட்டை செய்யாமல் முகத்தை திருப்பிக்கொண்டு பால்கனிக்கு சென்றான்.

முழு நிலவின் ஒளியில் தென்றல் காற்று சுகமாய் தீண்ட அதை ரசிக்க மனமில்லாதவன் போல் எங்கோ வெறித்துக்கொண்டிருந்தவனின் பின்னிலிருந்து அணைத்துவள் அவன் பரந்த முதுகில் கன்னம் பதிக்க நின்று “சாரி ஹர்ஷா.. எனக்கு தெரியும் எனக்காக நீங்க எவ்வளவு துடிசீங்கன்னு.. அவங்களுக்கு சப்போர்ட் பண்ணது தப்பு தான்.. ஒரு பொண்ணோட சாபம் நமக்கு எதுக்குன்னு தான்..  சரி இனிமேல் பேசல சாரி” என்று அவனை கெஞ்ச அவளை இழுத்து முன் நிறுத்தியவன் சற்று காட்டமாக  “இங்க பாரு சாஹித்யா உன் விஷயத்துல தப்பு நடந்தா அது யாரா இருந்தாலும் சரி அவங்களுக்கு மன்னிப்பே கிடையாது அது பொண்ணோ பையனோ ஐ டோன்ட் கேர்… அதுவும் இல்லாமா அவங்களை என் கையாளையே கொன்னு புதைக்கணும்ன்ற அளவுக்கு கோபம் வந்துச்சி..  ஆனா அவங்க அவ்ளோ சீக்கிரம் சாக கூடாது.. ஏன்டா இவங்களை பகச்சிக்கிட்டோம்னு பீல் பண்ணனும் அதுக்கு தான் இதை பண்ணேன்.. ஆனால் நீ அவங்களை விட்டு இருக்கலாம்னு சொல்ற.. ஒருவேளை உனக்கு ஏதாவது ஆகிருந்தா.. நான் என்னடி பண்ணிருப்பேன்.. அது ஏன் உனக்கு புரியல” என்று அவன் பேசி கொண்டிருக்கும் போதே அவன் இதழை சிறை செய்தாள். அதை எதிர்பாராதவன் முதலில் சற்று திகைத்தாலும் சிறிது நேரத்தில் அந்த வேலையை தனதாக்கிக்கொண்டான். அவளை. விடுவித்தவன் அவளை கையிலேந்திக்கொண்டு கட்டிலை நோக்கி செல்ல தன்னவனின் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக்கொண்டு அவனை ரசித்துக்கொண்டிருந்தாள். அவளை கட்டிலில் கிடத்தியவன் அவள் மேல் படர்ந்து தன் தீரா தேடல்களை தொடங்கினான்.

இதுவரை கல்வியில் சிறந்த பாடத்தை கற்றுக்கொடுத்தவன் இன்று  காதல் பாடத்தை கற்றுக்கொடுக்க தொடங்கினான்…

அவர்கள் வாழ்வு நலமாக இருக்க வாழ்த்தி விடைபெறுவோம்..

*****சுபம்*****

Advertisement