Advertisement

                     அத்தியாயம் 9

கல்லூரி தொடங்கி இதோடு இரண்டு வாரம் கடந்திருந்தது, இந்த இரண்டு வாரத்தில் அக்னி ஆத்ரேயனிடம் பெரிய மாற்றம் ஏதும்  நிகழ்ந்திருக்கவில்லை. இருவரும் பெரிதாக சண்டைப்போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் எப்போதும் விறைப்பாக தான் சுற்றிக்கொண்டிருந்தனர்.

அன்று மதிய உணவு இடைவேளையின் போது கதிர் மரத்தில் சாய்ந்துக்கொண்டிருக்க, நேஹா வண்டியில் அமர்ந்திருந்தாள், அக்னியும் ஆருவும் ஒரு மேசையில் அமர்ந்து அவனை பார்த்துக்கொண்டிருந்தனர்.
கதிர் “ஏன் மச்சா.. இந்த காலேஜ்ல ராகிங் தான் இல்லன்னு பார்த்தா, பிரஷ்ஷர்ஸ் டே கூட இல்ல போல டா.. ஒருவேளை நம்ம சீனியர்ஸ்லாம் செத்துட்டானுங்களோ” என விளையாட்டை கேட்க, அதுவே அவர்களுக்கு வினையாகி போனது.

கதிர் பேசிக்கொண்டே இருக்கும் போது ஒரு குரல் காட்டமாக கேட்டது அது வேறு யாருமில்லை ஜீவா.
ஜீவா மெக்கானிக்கல் இறுதியாண்டு மாணவன். மாணவர்களின் மத்தியில் நாயகன் என்றால் பேராசிரியர்களின் மத்தியில் வில்லன். ஜீவாவின் நண்பர்கள் ஜோஷ்வா, சலீம் மற்றும் வீரா.

ஜீவா ஆறடி உயரம், கம்பீரமான குரல், கூர் நாசி, எப்போதும் வேங்கையின் சீற்றத்துடன் காணப்படுபவன், சற்றே முரடன்.
ஜீவா இப்படியென்றால் அவனுக்கு நேரெதிர் மற்றொருவன் அஷ்வின் (அவனை பற்றி பின்னர் பார்ப்போம்).

தன் சட்டையின் கையை மடித்துக்கொண்டே வந்த ஜீவா “என்னடா ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு” என்று கோபமாக கேட்க,
கதிர் “ஒன்னுமில்லையே ப்ரோ” என்று தோளை உலுக்கினான்.

ஜீவா அனாவசியமாக யாரிடமும் வம்பு வளர்ப்பவனல்ல, ஆனால் கதிரின் கேட்ட நேரம் போலும் முன்னரே கடுப்பிலிருந்த ஜீவாவின் காதில் அவன் பேசிய வார்த்தைகள் விழுந்து தொலைத்தது.

சலீம் “சீனியர்ன்னு ஏதோ அடிப்பட்டுதே”
வீரா “எந்த டிபார்மெண்ட்டா நீங்க” என்று அவர்களை பார்க்க,
நேஹா “சிவில் 1st இயர் ண்ணா” என்றாள் அவனை பார்த்து.
ஜோஷ்வா “இங்க நின்னு என்ன அரட்டை வேண்டி கிடக்கு” என்று அதட்ட,
ஆரு  “சும்மா தான்” என்றவள் அவர்களை பார்த்து “ஆமா நீங்கயெல்லாம் எந்த டிப்பார்ட்மெண்ட் ண்ணா” என்று ஆர்வமாக கேட்க,
வீரா “அது எதுக்கு நாங்க உன்கிட்ட சொல்லனும்” என்று முகத்தில் அறைந்தார் போல் கேட்டுவிட, அவள் முகம் மாறிவிட்டது, அதன் பிறகு அவள் அமைதியாகிவிட, அக்னியும் ஜீவாவும் அதை கவனித்துவிட்டனர்.

ஏனோ ஜீவாவிற்கு அவள் முகவாட்டத்தை காண முடியவில்லை, ஆருவை பார்த்தவன் “நான் மெக்.. இப்போ நீங்க ரெண்டு பேரும் கிளாஸுக்கு போங்க” என்று பெண்கள் இருவரிடமும் அவன் கூற,
நேஹாவும் ஆருவும் அக்னியை பார்த்தனர். அக்னியும் போகும் படி தலையசைக்க, இருவரும் அங்கிருந்து அகன்றனர்.

அவர்களின் சம்பாஷனைகளை கவனித்த ஜீவா “என்னடா ஹீரோ போல,  நீ சொன்னவுடனே போறாங்க” என்று கேட்க,
அக்னி “அப்படியெல்லாம் இல்லண்ணா” என்றான்.
ஜீவா கதிரை பார்த்து “சரி என்ன கேட்ட சீனியர்ஸ் செத்துட்டாங்களானா” என்று புருவமுயர்த்த,
அக்னி “அது ஏதோ சும்மா விளையாட்டுக்கு சொன்னான்.. தப்பா எடுத்துக்காதீங்க ண்ணா” என்று ஜீவாவிடம் தன்மையாக பேச,
வீரா “டேய் அவன் கேட்டது அவனை.. நீ என்ன அவன் மௌத் பீஸா” என்று எகிற,
கதிர் “சும்மா தான் ண்ணா சொன்னேன்” என்று வீராவின் முகம் பார்க்க,
வீரவோ “பேசுறது பேசிட்டு சும்மான்னு சொல்றியா.. அப்போ உன்ன போட்டுட்டு நாங்களும் செத்துட்டான்னு சொல்லிடட்டுமா” என்று எகத்தாலாமாக  வார்த்தைகளை கொட்டி விட, அக்னி கோபத்தில் வீரவின் சட்டையை பிடித்திருந்தான்.
அக்னி கண்கள் சிவக்க “அதான் தெரியாம சொல்லிட்டேன்னு சொல்றான்ல காதுல விழல..  அவனை கொல்றதுக்கு முதல நீ உயிரோட இருந்தா தான” என வார்த்தைகளை கடித்து துப்பு,
கதிர் பதறி “மச்சா.. டேய்.. விடு டா.. யாராவது பார்க்க போறாங்க.. அக்னி.. டேய்” என கத்த,
ஜீவா “அக்னி கைய எடு.. அக்னி” என்று கர்ஜிக்க, அப்போது தான் அக்னி தன் பிடியை தளர்த்தினான் ஆனால் அவன் கண்களோ நெருப்பை கக்கியது.

ஜீவா அவனை தள்ளி நிறுத்தி “டேய் என்ன வயசாகுது உனக்கு.. இவ்ளோ கோபம் வருது.. இப்படி கோபப்பட்டு தான் நான் இன்னும் மாறாம இருக்கேன்…  அவன் பேசுனது தப்பு தான், அந்த ஒரே காரணத்துக்காக தான் அமைதியா போறேன்.. இல்லனா என் நண்பன் மேல கை வச்சதுக்கு பல்ல உடச்சிருப்பேன்.. கிளாஸுக்கு போங்க” என்று அறிவுரையாக பாதியையும் மிரட்டல்லாக மீதியையும் கூறிவிட்டு செல்ல,
அக்னி ஜீவாவை பார்த்தபடி “அதே தான் நானும் சொல்றேன்.. என் பிரண்ட் மேல கைய வச்சா நானும் சும்மா இருக்க மாட்டேன்” என்றுவிட்டு கதிரை இழுத்துக்கொண்டு செல்ல, ஜீவா அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு மூன்று வருடங்களுக்கு முன் தன்னை பார்ப்பது போலவே இருந்தது.

சலீம் “டேய் ஜீவா, ஏன்டா அவனை சும்மா விட்ட, வீரா மேல கை வச்சிருக்கான்டா”
ஜோஷ்வா “ஆமா இப்படியே விட்டா அவனுங்களுக்கு நம்ம மேல ஒரு மரியாதையே இருக்காது” என்று பொரிய, ஜீவா மௌனித்தான்.
வீரா “யாரும் எதுவும் பண்ண தேவையில்ல, அவனை நான் பார்த்துக்குறேன்” என்றான் அடக்கப்பட்ட வெறியுடன். இதை இப்படியே விட்டால் சரிவராது என்றுணர்ந்து, ஜீவா “வீரா சும்மா இரு.. ஏதோ சின்ன பையன் தெரியாம பண்ணிட்டான்.. தேவையில்லாத பிரச்சனை வேண்டாம்… புரிதா”
“ம்ம்” என்று தலையாட்டியவனின் மனமோ வன்ம தீயில் கொழுந்துவிட்டு எரிந்தது.

ஜோஷ்வா பேச்சை மாற்றும் பொருட்டு “மச்சா எனக்கு அவனை பார்க்க உன்னோட மினி வர்ஷனைப் பார்க்குற மாதிரி இருக்க டா.. ஆமா தானடா பாய்” என்று சலீமை துணைக்கு இழுக்க,
சலீம் “ஆமா மாப்பி.. இவனும் இப்படி தான் முத வருஷமே சீனியரை அடிச்சான்” என்று பழைய நினைவில் கூற,
ஜீவா “சும்மா இருங்க டா.. அவனாச்சு உருப்படட்டும்”
ஜோஷ்வா “ஏன் ஏன்.. உனக்கென்ன குறைச்சல் இப்போ.. டாப்பர் டா நீ”
“ஹான் ஹான்.. ஸ்டாஃப் கிட்ட சொல்லி பார்.. அப்போ தெரியும்” என்று நடக்க,
சலீம் “அதான் இவனுக்கு ஈக்குவளா ஒருத்தன் பிறந்து இருக்கானே.. அவன் டிப்பார்ட்மெண்ட் தாண்டி, காலேஜ்ல இருக்க எல்லா ஸ்டாஃப்பும் அவனை பார்த்து இளிக்கிறாங்க” என்று பொறும,
ஜோஷ்வா “ஓ.. நம்ம ஜிவாவோட ஆளு அஷ்வின்னா.. ஹாஹா” என்று சிரிக்க,
“அட ச்சீ மூடிட்டு நடங்க” என்று அவர்களை அழைத்துக்கொண்டு சென்றான்.

இவர்கள் கூறுவது போல் அஷ்வின் மற்றும் ஜீவாவின் இடையே கேங் வார் எதுவுமில்லை. இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்களே ஒழிய இருவருக்குள்ளும் பகையெல்லாம் இல்லை, இருவரும் கல்லூரியின் நாயகன்களே. அஷ்வின் ப்ரெசிடெண்ட் என்றால் ஜீவா ஸ்டுடெண்ட் மென்டர்.

______________

கதிரை இழுத்துக்கொண்டு சென்ற அக்னியிடம் கதிர், “மச்சா எதுக்குடா ரிஸ்க்”
“…..”
“டேய் உன்கிட்ட தான் பேசுறேன்”
“இப்போ என்னடா.. அவன் என்ன பேசுனாலும் மூடிட்டு கேட்க சொல்லுறியா”
“அப்படி இல்லடா ஆனா அவன் ஏதாவது ரிவேன்ஜ் எடுக்குறேன்னு எதாவது ஏடாகுடமா பண்ணா”
“திருப்பி கொடுக்க வேண்டியது தான்”
“வீம்புக்கு பேசாத அக்னி” என்று கதிர் முறைக்க,
அக்னி “இருக்குற கோபத்துல நீ வேற ஏதாவது சொல்லி வாங்கிக்கட்டிக்காத புரிதா.. நான் கிளம்புறேன்”
“எங்க கிளம்புற.. இன்னும் மதிய கிளாஸ்லாம் இருக்கே” என கதிர் கேட்க,
அக்னி “நான் ஆருவை கூட்டிட்டு போக வரேன்.. இப்போ போறேன்” என்று முன் செல்ல,
கதிர் “வாட்ச்மேன் விட மாட்டாரு டா” என்று கத்த, அக்னி அவனை முறைத்துவிட்டு “எனக்கு போக தெரியும்” என்றவன் காவலாளி இல்லாத நேரம் பார்த்து வெளியில் சென்றிருந்தான்.

வகுப்பில் அமர்ந்திருந்த  ஆரு கதிர் தனியாக வருவதை பார்த்து புருவம் சுருக்க, நேஹா “டேய் அவன் எங்க.. நீ மட்டும் ஏன் தனியா வர” என்று கேட்டாள்,
கதிர் “அவன் வீட்டுக்கு போய்ட்டான்”
“வீட்டுக்கா.. ஏன்.. இப்போ ஏன் போனான்.. லூசா அவன்” என்று திட்ட,
நேஹா “அவன் மூட் ஆஃப் ஆகி போற அளவுக்கு என்ன நடந்தது” என்று சந்தேகமாக பார்க்க,
கதிர் நடந்தவற்றை கூறினான்.

அவன் கூறியதை கேட்டு ஆரு “இருக்குற பேக் ஸ்டோரி, ஹிஸ்டரி எல்லாம் போதாதா அவனுக்கு.. ஆனா அவன் பண்ணதும் தப்பில்ல” என்று அக்னியின் புறமிருந்த நியாயத்தை நினைத்து கூற,
நேஹா அவளை முறைத்துவிட்டு “என்ன தப்பில்ல, வாயில சொன்னா போதாதா அவனுக்கு.. அது என்ன கை நீட்டுற பழக்கம்” என்று அர்ச்சிக்க,
ஆரு “அதுக்குன்னு வாங்க செல்லம்ன்னு நீங்க சொன்னது தப்புன்னு அவனை கிளாஸ் எடுக்க சொல்லுறியா.. போடி”
“நீ இப்படி சொல்றதால தான் அவன் திருந்தவே மாட்றான்” என்று நேஹா முறைத்துக்கொண்டே கூற,
ஆரு “பே..” என்றவள் கதிரிடம் “என்னடா என்ன கூப்பிட வரேன்னு சொல்லிட்டு போய்ட்டானா” என்று கேட்க, அவனும் ஆம் என்றான்.

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, சிவா “கைஸ் எல்லாரும் ஆடிட்டோரியம் வந்திடுங்க” என்றுவிட்டு செல்ல,
மூவரும் அரங்கம் நோக்கி சென்றனர்.

முதலாம் ஆண்டிலிருந்து இறுதியாண்டு வரையிலான மாணவர்களால் அந்த அரங்கமே நிறைந்திருந்தது. மேடைக்கு வந்த நெல்சன் நடக்கவிருக்கும் நிகழ்வை பற்றின ஒரு சிறு அறிமுகம் கொடுத்தார். நெல்சன் பேசி முடித்தவுடன் வந்த குமரன் “தங்கங்களா.. அடுத்ததா நம்ம காலேஜ் ப்ரெசிடெண்ட் கம் சிவில் டிப்பார்ட்மெண்ட்டின் தலை பிள்ளை அஷ்வின் உரையாற்றுவான் அவனை தொடர்ந்து ஸ்டுடெண்ட் மென்டர் கம் மெக் டிப்பார்ட்மெண்ட்டின் தலை பிள்ளை ஜீவா உரையாற்றுவான்” என்றுவிட்டு இறங்க, அஷ்வின் சிறு தலையசைப்புடன் மேடையேறினான்.

அஷ்வின் சிவில் இறுதியாண்டு மாணவன், மாணவர்களின் மத்தியில் அதிக செல்வாக்கை பெற்றவன். அஷ்வின், பார்ப்போரை தன் வசீகரத்தினால் கட்டிப்போடும் திறன் படைத்தவன். அவனுக்கு தனி ரசிகை கூட்டமே உண்டு ஆனால் அவன் ரசிக்கும் ஒரே பெண் ஷக்தி (அவனவள்).
அஷ்வினின் பால்ய மற்றும் உயிர் நண்பன் பிரபு, அதே துறையில் படிப்பை மேற்கொண்டுள்ளான். இவர்களின் கூட்டாளிகள் அன்பு மற்றும் தீனா.

அஷ்வின் மேடையேறியவுடன் கரகோஷங்கள் காதை கிழித்தது. தன் இரு கைகளையும் விரித்து அமைதியாகும் படி செய்கை புரிந்தவன் “ஹெலோ கைஸ்” என்று ஆரம்பிக்க மீண்டும் கரகோஷங்களும் கூச்சல்களும்  தொடங்கியது. அஷ்வின் “டேய் டேய் கொடுத்த காசுக்கு கத்துங்க டா போதும்.. ரொம்ப வேண்டாம்” என்றவன் ஜீவா வரும் முன் பேச தொடங்கினான்.

கல்லூரியில் இருக்கும் விளையாட்டுகள், கலை குழுக்கள், பிற குழுக்கள், NSS என்று அனைத்தை பற்றியும் கூறி முடிக்கவும் ஜீவா வரவும் சரியாக இருந்தது.

ஜீவா வருவதை கவனித்த பிரபு “அஷ்.. ஜீவா வரான்.. அவன் பேசட்டும் வா” என்றழைக்க, அஷ்வினும் தன் பேச்சை முடித்துக்கொண்டு தள்ளி சென்று நிற்க,
பிரபு “கைஸ் இப்போ ஸ்டுடெண்ட் மென்டர் ஜீவா பேசுவார்” என்றிட, அஷ்வினுக்கு கிடைத்த அதே வரவேற்பு அவனுக்கும் கிடைத்தது. அது எதையும் கண்டுக்கொள்ளாது
ஜீவா, “சோ.. எல்லாரும் நிறைய எதிர்பார்ப்போடு வந்திருப்பீங்க.. இல்லையா”
“ஆமா ண்ணா” என மாணவர்கள் ஒருசேர் குரல் கொடுக்க,
ஜீவா “ஒன்னும் விளங்காது” என்றான். அவன் கூறியதை கேட்டு ஒரு பக்கம் மாணவர்கள் சிரிக்க, மறுபக்கம் பலத்த அமைதி.

அஷ்வின் “நல்லா பேசுறான் டா டேய்.. ஆரம்பத்துலயே இப்படியா” என பிரபுவிடம் கேட்க,
பிரபு “அவன் கம்மியா பேசுறான் அஷ்..” என சிரிக்க,
தீனா “ஆமா ஆமா இல்லனா ஏதோ நாளைக்கே எல்லாருக்கும் பால் ஊத்துற மாதிரி பேசுவான்”
அன்பு “சங்கு நான் தான் ஊதுவேன்னு வேற அவனே சொல்லுவான்” என்று கலாய்க்க, அஷ்வின் அவர்களை லேசாக முறைத்துவிட்டு “அவன் பிரேக்டிக்கலா தான் பேசுறான் டா.. அவன் இப்படி பேசுறதால தான் பசங்க கொஞ்சமாச்சு பிரச்சனைய பேஸ் பண்றாங்க.. அதுல குறை சொல்ல முடியாது” என்று அவனுக்கு சாதகமாக பேச, தீனவும் அன்புவும் ‘இவன் நிஜமாவே எதிர் கட்சி தானா’ என முழித்தனர்.

ஜீவா பேச பேச கதிர் திருட்டு முழி முழித்தான். மேடையில் ஜீவாவுடன் சலீம் ஜோஷ்வா வீரா நின்றுக்கொண்டிருந்தனர். மற்ற மூவர் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை ஆனால் வீரா மட்டும் கதிரை பார்வையாலே பஸ்பமாக்கிக்கொண்டிருந்தான்.

ஜீவா “ஸி.. நீங்க ஒன்னு நினைச்சு இங்க சேர்ந்திருக்கலாம் ஆனா அது மட்டும் தான் நடக்கும்ன்னு எதிர்பார்க்காதீங்க.. எது நடந்தாலும் அதை ஏத்துக்கோங்க.. நிறைய  கலைகள் கத்துக்கோங்க.. திறமைய வளர்த்துக்கோங்க..
முக்கியமா உங்களுக்காக நீங்க போராடுங்க” என்று அவன் கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டான். இது தான் ஜீவா சற்றும் முரடன் தான் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசிவிடுவான், அதனால் தான் பேராசிரியர்கள் மத்தியில் அவனுக்கு அத்தனை வரவேற்பு இருக்காது. ஆனால் அதை அவன் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.

ஜீவா பேசியதை கேட்ட ஆரு, “நல்ல அண்ணே தான்.. அந்த குருவி கூடு வீரா தான் சைத்தான்” என்று முகம் சுருக்க,
நேஹா “ஆமா எனக்கும் அப்படி தான் தோணுது” என்றாள்.

மேடையில் பேசியவர்களை ஆத்ரேயன் கவனித்துக்கொண்டிருக்க, கிஷோர் ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தான்.
கிஷோர் “ரேயா இந்த அஷ்வின் அண்ணனை எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கு டா”
“நம்ம ஸ்கூல் சீனியர்”
“ஹே ஆமா.. அவர் SPLஆ இருக்கும் போது தான நீ ஹவுஸ் கேப்டன் ஆன.. அப்போ கண்டிப்பா அவருக்கு உன்ன தெரியும்”
“ம்ம் தெரியும்.. என் புட் பால் கிரவுண்ட் பிரண்ட்”
“வாவ்… செம்ம மச்சா.. வா போய் பேசுவோம்.. எப்படியோ ப்ரெசிடெண்ட் நம்ம பிரண்ட்னா கேன்டீன்ல எல்லாம் ப்ரீயா கிடைக்கும்” என கனவு காண,
ஆத்ரேயன் அதில் கல் எறியும் வண்ணம் “தேவையில்ல” என்றான்.
கிஷோர் “இதுல என்னடா இருக்கு.. உனக்கு அவரை தெரியும் தான”
“தெரியும் தான் ஆனா அதுக்குன்னு ப்ரெசிடெண்ட்ன்னு சொல்லி பிரண்ட் பிடிக்க தேவையில்ல எனக்கு” என்றான் முடிவாக.
கிஷோர் தான் அவனை முறைத்துவிட்டு “நீ இருக்குற வரை ஒரு பன்னை கூட என்னால ஓசில வாங்க முடியாது” என அலுத்துக்கொண்டான், ஆனால் மனதில் எப்படி இவர்களை சந்திக்க வைப்பது என ஒரு சிந்தனை ஓடிக்கொண்டு தான் இருந்தது.

_________

ஆரு நேஹாவிடம்  “ஆன கிட்டி இந்த அஷ்வின் சீனியரும் செம்மல.. கெத்து.. ஹேண்ட்ஸம்.. நல்லா பேசுறாங்க வேற.. ஐ லைக் ஹிம்” என்று அவனை பார்க்க,
நேஹா “யாரையும் விட்டுவைக்க மாட்டியா டி” என தலையில் அடித்துக்கொண்டாள்,
ஆரு “ச்ச ச்ச.. கிரஷ்லாம் இல்ல கிட்டி.. ஆனா ஒரு அட்மிரேஷன் தான்” என்றவள் அருகே அமர்ந்திருந்த சீனியர் மாணவியிடம் “அக்கா அஷ்வின் ப்ரோக்கு ஆள் இருக்கா” என்று ஆர்வமாக கேட்க,
அந்த மாணவியோ “என்னமா இப்படி கேட்டுட்ட.. அவங்க லவ் ஸ்டோரி காலேஜ் பேமஸ்.. இப்போ ஒருத்தங்க வருவாங்க பாரு மாஸா” என்றிட,
ஆரு “வாவ் கிட்டி.. பாரேன்.. எனக்கு ஒரே ஆர்வமா இருக்கு.. யாருன்னு தெரியலையே” என அங்கும் இங்கும் பார்க்க,
நேஹா “யாருன்னு பார்ப்போம் இரு” என்று அமர்ந்திருந்தாள். இவர்கள் பேசுவது அவர்களுக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த ஷக்தியின் காதுகளில் தெளிவாக விழுந்தது. அவர்கள் பேசியதை கேட்டு அவள் இதழ் அழகாக விரிந்திருந்தது.

மேடையில் அஷ்வின் “ஒகே கைஸ் இப்போ டான்ஸ் அண்ட் மியூசிக் கிளப் சார்பா  இந்த ப்ரோக்ராமை சிறப்பிக்க வருவது டான்ஸ் அண்ட் மியூசிக் கிளப் ப்ரெசிடெண்ட் மிஸ். ஷக்தி பிரபாகரன்” என்று தன்னவளுக்கு அழகாக ஒரு அறிமுகத்தை கொடுத்தவன் அவளை பார்க்க, அவளோ சிறு புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.

ஜீவா அஷ்வினிற்கு கிடைத்த வரவேற்பை விட ஷக்தியின் பெயருக்கு இரு மடங்கு கிடைத்தது. ஆரு நேஹா கதிர் ‘யாருடா அது’ என்று பார்க்க, எப்போதும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத ஆத்ரேயன் கூட சிறு ஆர்வத்தோடு அவளை பார்த்தான்.

ஷக்தி எழுந்ததை பார்த்த அந்த சீனியர் மாணவி ‘ஐயோ இங்க தான் இருக்காங்களா’ என நினைத்துக்கொண்டு, ஆருவிடம் “கேட்டியே யாரு அவங்கன்னு.. அதோ அவங்க தான் ஷக்தி, அஷ்வினோட ஆளு” என ஷக்தியை நோக்கி கண்ணைக்காட்டினாள்.
நேஹா “அடியே பக்கத்துல வச்சிகிட்டே பேசிருக்கோமா”
“ஆமா கிட்டி.. அதை விடு, சமூகம் ரெண்டும் பெரிய இடம் போல.. ஆண்டவன் இப்படி தான் டிசைனே பண்ணுவான் போல”
“எப்படி” என்று நேஹா கேட்க,
ஆரு “பெஸ்ட் + பெஸ்ட்”
“தே க்ரோ அப் டு பி தி பெஸ்ட் டி ( They grow up to be the best)” என்று கூற,
ஆரு “ஐயோ இவளும் இந்த அகி கூட சேர்ந்து தத்துவம் பேசுறாளே” என நக்கலடித்தவள்
“இருந்தாலும் நீ சொல்றது சரி தான்” என்று ஆமோதித்தாள்.

ஷக்தி கல்லூரியின் சிங்கப்பெண், Ms. Bold and beautiful, கல்லூரியில் பாதி ஆண்களின் கனவு நாயகி. அவளிடம் வம்பிழுத்து அடி வாங்கியவர்களும் பலர், அதே போல் அவள் உதவி செய்தவர்களும் பலர் ஆனால் எவ்வித கர்வமும் இல்லாமல் பழகுவாள். சிவில் துறையின் டாப்பார். படிப்பில் மட்டுமில்லாது பிற கலைகளிலும் சிறந்து விளங்குபவள்.
(இவர்கள் காதல் கதையை பிறகு பார்ப்போம்). இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் அவள் ஜீவாவின் உயிர் தோழி.

மேடை ஏறிய ஷக்தி “ஹே ஆல்.. பேசுறதெல்லாம் ரெண்டு பெரியவங்க பேசிட்டாங்க சோ நம்ம டைரக்ட்டா ப்ரோகரம்க்கு போகலாம்” என்றுவிட்டு
பாட தேவையானவற்றை மேடையில் வைக்க பிரபுவிடம் கூற, அஷ்வின் மேடையேறினான்.
அஷ்வினை பார்த்து மாணவர்கள் கூட்டம் “ஓஓஓஓஓஓ” என கூச்சலிட, அஷ்வின் மைக்கை கையிலெடுத்து “டேய் கொஞ்சம் சும்மா இருங்க டா.. உங்க அக்காகிட்ட ப்ரோக்ராம் பத்தி தான் பேசுறேன்டா எப்பா..” என்று கைகூப்ப, ஷக்தி சிரித்துவிட்டாள். அவள் சிரிப்பதை பார்த்து “போதும் போதும் சிரிச்சது..”
ஷக்தி “சரி ஒகே.. யூ க்நோ ஒன் திங்.. அந்த அண்ணா செம்மையா இருக்காருன்னு ஒரு பொண்ணு சொன்னா” என்றிட, அஷ்வின் போலி ஆர்வத்துடன் “வாவ்.. யார் அது..” என்று கேட்க, அவனை முறைத்தவள் “ஸீன் போடாத.. அந்த பொண்ணு அண்ணான்னு தான் சொல்லுச்சு.. நல்ல பிள்ள.. அதான் அமைதியா விட்டேன்” என்றிட,
“இல்லனா” என்று அஷ்வின் குறும்பாக  கேட்க,
அவளும் “ஹால்ல பட்டாசு சத்தம் கேட்டிருக்கும்” என்றாள் கண்களில் குறும்பு மின்ன,
“அடிப்பாவி.. கொஞ்சம் சும்மா இரு தாயே” என்றவன் “சரி ஒகே டா டூ வெல்” என்று வாழ்த்து கூற,
“ஐ வில்” என்றாள் உறுதியுடன்.
“இந்த கான்பிடென்ஸ் இல்லனா ஷக்தி இல்லையே”
“ஹாஹா.. ஜீவா எங்க” என்றாள் அவனிடம்.
அஷ்வின் “உன் பிரண்ட் பத்தி என்கிட்ட ஏன் கேட்குற”
“ஆமால.. சரி நானே கேட்குறேன்” என்றவள் ஜீவாவை அழைக்க, அடுத்த சில நிமிடங்களில் அவன் அரங்கத்தினுள் நுழைந்தான்.
அவள் ஜீவாவை பார்த்துவிட்டு நிமிர, அஷ்வின் முகம் சிறிதாக  மாறியிருந்தது.

அஷ்வின் அருகே நெருங்கியவள் “அஷ்”
“ஆன்”
“ப்ரெசிடெண்ட்” என்று அவள் கத்த,
அஷ்வின் சிரித்துவிட்டு “என்னடி” என்றான், ஷக்தி அவன் கையை பிடித்து மேடையின் பின்பக்கம் அழைத்து செல்ல, மாணவர்கள் “ஓஓஓ” என்று மீண்டும் கூச்சலியிட்டனர். அஷ்வின் திரும்பி அவர்களை ஒரு பார்வை பார்க்க, அந்த இடமே அமைதியானது.
பிரபு இவர்கள் கூத்தில் சிரித்துக்கொண்டே பாட தேவையானவற்றை எடுத்து வைக்க,
அஷ்வினை தனியே அழைத்து வந்தவள் அவன் கையில் ஒரு கான் மேட் சாக்லேட்டை திணித்தாள்.
அஷ்வின் “இதை அங்கையே கொடுத்திருக்கலாம்” என்று கூற, அவனை இறுக அணைத்தவள் “இதை அங்க பண்ணா என் ப்ரெசிடெண்ட் மானம் என்ன ஆகுறது” என்று கேட்க, அஷ்வின் அவளை அணைத்து “இதுல எனக்கு பெருமை தான்” என்றான். அவனைவிட்டு விலகி நின்றவள் “இதுல என்ன மேன் உனக்கு பெருமை”
“ஆமா.. என் ஷக்தி எவ்ளோ போல்ட் எவ்ளோ திறமையானவ.. இப்படி ஒரு பொண்ணு என் ஆளுன்னா எனக்கு பெருமை தான”
“ப்ரெசிடெண்ட் இதை நான் சொல்லனும்”
“சரி டா.. லேட் ஆகுது வா”
“ஆன் ஆமா பை” என்றவள் சென்றுவிட, அவனும் மேடையிலிருந்து கீழிறங்கினான்.

நேர்த்தியாக கீ போர்ட் வாசித்துக்கொண்டே பாடியவளை அஷ்வின் காதலாக பார்த்துக்கொண்டிருந்தான் என்றால் மற்றவர்களோ அவள் குரலின் இனிமையில் மெய் மறந்திருந்தனர்.

ஷக்தி பாடி முடித்தவுடன் அந்த இடமே கரகோஷத்தில் அதிர்ந்தது. ஷக்தி அஷ்வினை பார்க்க, அவன் கண்களை மூடி திறந்தான், அடுத்ததாக அவள் ஜீவாவை பார்க்க, அவனோ விசில் அடித்துக்கொண்டிருந்தான். ஷக்தி அமைதியாய் இருக்கும் படி கண் காட்டியவள், மேடையிலிருந்து இறங்கிட பிரபு அடுத்தடுத்த மாணவர்களை கலை நிகழ்ச்சிக்கு அழைத்தான்.

அன்றைய நிகழ்ச்சி இனிதே முடிய, அஷ்வின் ஒவ்வொரு வரிசையாக மாணவர்களை அனுப்பிக்கொண்டிருந்தான். ஆரு கிஷோர் நேஹா அஷ்வின் ஷக்தி ஜோடியை பற்றி பேசிக்கொண்டிருக்க, கிஷோர் எப்படி இவனை பேச வைக்கலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தான். சரியாக ஆத்ரேயனின் வரிசை வரும் போது கிஷோர் ஆத்ரேயனை லேசாக தள்ளி விட, அவன் அஷ்வினை இடித்துவிட்டான்.

ஆத்ரேயனை பார்த்த அஷ்வின் “ஹே ரேயா.. எப்படி இருக்க.. இந்த காலேஜ் தானா நீயும், சொல்லவே இல்லை” என்று ஆச்சிர்யமாக கேட்க,
ஆத்ரேயன் கிஷோரை முறைத்துவிட்டு “இல்லண்ணா நீங்க பிஸியா இருந்தீங்க அதான்” என்று சமாளிக்க,
கிஷோர் “நான் போக சொன்னேன் ண்ணா, அவன் தான் கேட்கல” என்றான்.
அஷ்வின் “அவன் வரமாட்டான்னு எனக்கு தெரியும்.. ஹீரோ சார் பத்தி எனக்கு தெரியாதா”
‘இவனை பத்தி எல்லாருக்கும் தெரியுது’ என நினைத்துக்கொண்டவன் அஷ்வினிடம் “எல்லாம் தெரியுது ப்ரோ உங்களுக்கு”
“உன்னையும் தெரியும்.. கிச்சா தான நீ”
“ப்பா.. தலைவா எப்படி” என்று கிஷோர் கேட்க,
“இவன் வாய்ல வர ஒரே பேர் கிச்சா.. அப்போ தெரியாதா என்ன” என்று ரேயனை பற்றி கூற, கிஷோர் நெகிழ்ந்து “மச்சான்” என்று ரேயனின் புறம் திரும்ப, அவனோ கிஷோரை தீயாக முறைத்துக்கொண்டிருந்தான், கிஷோர் ‘ஆத்தி கொலை வெறில இருக்கான் போலவே’ என நினைக்க,
அஷ்வின் “சரிடா எதுனாலும் கால் பண்ணுங்க, நம்பர் இருக்குல” என்று ரேயனிடம் கேட்க,
ரேயன் “இருக்கு ண்ணா” என்றிட, அஷ்வின் அவனை அணைத்து விடைக்கொடுத்தான்.
இந்த கண்க்கொள்ளா காட்சி ஆருவின் கண்ணில் பட்டுவிட, அவளோ “கிட்டி” என்று வாயை பிளந்தாள்.
கதிர் “வாய்ல டைனோசர் போக போகுது.. மூடு டி” என்று நக்கலடிக்க,
ஆரு “ஹே பே.. கிட்டி நீ பாரு.. எனக்கு அப்படியே டுவின்ஸ்ஸ பார்க்குற மாதிரி இருக்கு” என்க, நேஹாவும் அதை ஆமோதித்தாள்.

ஆரு ஆத்ரேயனையே பார்த்துக்கொண்டிருக்க, சரியாக அவள் பக்கம் திரும்பினான் அவன்.   ஆத்ரேயன் அவளை பார்த்துவிட, அவளோ உடனே முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அவள் பார்த்ததை கிஷோரும் கவனித்தான், அவள் அருகில் சென்றவன் “ஹாய் பார்ட்னர்” என்றிட,
அவளும் “ஹே ஹாய் பார்ட்னர்” என்றாள். அதற்குள் ஆத்ரேயன் அவனை அழைத்துக்கொண்டு சென்றிட, செல்லும் வரை அவனை பார்த்தவள் அதன் பின் நேஹாவுடன் வெளியில் சென்றாள்.

வாசலில் அக்னி இவர்களுக்காக காத்துக்கொண்டிருக்க, ஆரு அவன் அருகே வந்து “அகி இப்போ ஒகே வா” என்று கேட்க,
அக்னி “இப்போ ஒகே தான்.. வா ஏறு.. அப்பறம் இன்னிக்கி எப்படி போச்சு” என்று கேட்க,
ஆரு “அதை ஏன் கேட்குற, இன்னிக்கி செம்ம ஜாலி.. இரு கிட்டி வரட்டும்”
“ஆமா எங்க அவ”
“கால் வலிக்கிதுன்னு நான் அப்படியே இறங்கிட்டேன், அவ உன் பேக் எடுக்க போயிருக்கா” எனும் போதே அவள் வந்துவிட, அக்னி அவளை தான் பார்த்தான் ஆனால் அவளோ அவனை கண்டுக்கொள்ளாமல் அவன் பையை மட்டும் ஆருவிடம் கொடுத்துவிட்டு செல்ல,
அக்னி “ஹே என்ன.. எதுக்கு இப்படி போற” என்று நேஹாவிடம் கேட்க, அவனை முடிந்த வரை முறைத்தவள் “கதிர் வண்டிய எடு” என்றாள்.

ஆரு அக்னியிடம் “அவளுக்கு நீ பண்ணது பிடிக்கில”
“தெரியும்” என்று அவன் கூற, நேஹா அவனை இன்னும் நன்றாக முறைத்துவிட்டு வண்டியில் ஏறினாள். அவள் ஏறியவுடன் கதிர் கிளம்பி விட, அக்னியும் அவர்களை தொடர்ந்தான்.

ஆருவை வீட்டில் இறக்கிவிட்டவன் வண்டியை திருப்ப,
ஆரு “அவளை சமாதானப்படுத்து.. பயப்படுறா”
“தெரியும்” என்று அவன் கூற, ஆரு ஒரு மாதிரி சிரித்தாள்.
“எதுக்கு இப்போ இப்படி சிரிக்கிறா”
“கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க
யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லை” என பாடி காட்ட,
அக்னி “ஹே என்னடி உலறிட்டு போற”
“மிஸ்டர்.. நான் பாடுறேன்..”
“சொல்லிட்டு செய்.. நீ ஏதோ முத்திப்போய் உலறுறியோன்னு நினைச்சேன்”
“போடா டேய் போய் உன் வேலைய பாரு”
“எங்களுக்கு தெரியும்” என்றான் சிலிப்பிக்கொண்டு,
“போடா போ.. பிராடு” என்று நக்கலாக கூறிவிட்டு அவள் வீட்டினுள் சென்றிட, அக்னி தான் திருட்டு முழி முழித்தான்.

பின் நேஹாவின் வீட்டிற்கு வண்டியை விட்டவன், அவளுக்கு அழைப்பை விடுக்க, அவளோ அதை ஏற்றாள் இல்லை. அப்போது சரியாக நேஹாவின் தமையன் அருண் வர,
அக்னி “ஹாய் பாஸ்..”
“டேய் நல்லவனே.. என்ன அவளை பார்க்க நிக்குறியா”
“ஆமா ஆமா.. நீ என்ன லேட்டா வர”
“கொஞ்சம் வேலை அதிகம் டா” என்றவன் நேஹாவை வெளியே அழைத்தான்.

வீட்டின் வெளியே வந்தவளிடம் அருண் “என்னடி.. நல்லவன் கூட சண்டை போல”
“உன்கிட்ட வாங்கிட்டு வர சொன்னேன்ல அதை கொடு.. சும்மா வெட்டியா பேசாத”
“ரௌடி பயபுள்ள.. இந்தா” என்று குலாப் ஜாமுன் டப்பாவை கொடுத்தான்.
அக்னி அவனை பாவமாக பார்த்து “எனக்கும் பிடிக்கும் டா.. எனக்கு”
“அவகிட்ட கேட்டுக்கோ.. சரி நேஹா எனக்கு ஒருத்தரை பார்க்கனும், அம்மாகிட்ட சொல்லிடு”
“ஒகே.. சீக்கிரம் வா முடிஞ்சா”
“ஆன் ஒகே.. பை” என்று நேஹாவிடம் கூறியவன் அக்னியிடம் “பை டா நல்லவனே”
“போயிரு” என்றான் அவன்.

நேஹா உள்ளே செல்ல திரும்ப,
அக்னி “நேஹா ஒரு நிமிஷம்.. சொல்றத கேளு.. கதிர அப்படி சொல்றப்போ என்ன பண்ண சொல்லுற” என்று கேட்க, நேஹா கோபமாக திரும்பி “அப்போ அவன் உன்கிட்ட பிரச்சனை பண்ணா நாங்க என்ன பண்றது” என்று கேட்டாள்
அக்னி “தேவையில்லாம யோசிக்காதமா.. அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது.. நான் பார்த்துக்குறேன்” என்றான்.
நேஹா அறிவாள் அவன் மனநிலை சரியாக இல்லையென்றால் தான் இப்படி பேசுவான் என்று
நேஹா “ம்ம்ம்” என்றிட
அக்னி “என்ன ம்ம்ம்”
“சரி கிளம்பு” என்றாள்,
“சரி” என்றவன் திரும்பி நடக்க, நேஹா “வேண்டாம்.. வா ஒரு வாக் போலாம் . வீட்ல யாருமில்ல.. போர் அடிக்கிது… அருண் வேற போய்ட்டான்” என்று அழைக்க,
அக்னியும் சிரித்துக்கொண்டே அவளை அழைத்துச்சென்றான்.

நேஹா ஏதேதோ பேசிக்கொண்டு வர, அக்னி அவள் பேசுவதை கவனித்துக்கொண்டு வந்தானே தவிர எதுவும் பேசவில்லை.
நேஹா திரும்பி “அகி வாய காட்டு”
“ஏன்” என்று அவன் புரியாமல் கேட்க,
“இல்ல நான் ஏதோ மரம் செடி கொடி கூட பேசுற பீல் அதான்” என்றிட,
அக்னி சிரித்துக்கொண்டே “கேட்டுட்டு வரேன் டி.. அது தப்பா”
“தப்பில்ல தப்பில்ல”
“சரி நான் இனி ரொம்ப கோபப்படல” என்று சரண்டராக,
நேஹா “என்ன உலறுற”
“சொல்லனும்ன்னு தோணுச்சு” என அவன் தோளை உலுக்க,
நேஹா “உன்ன கோபப்பட வேண்டாம்ன்னு சொல்லல ஆனா எல்லாத்துக்கும் கோபப்படாதான்னு தான் சொல்றேன்.. கோபம் தான் உன் பியூட்டி அதுவே இல்லனா எப்படி” என்று அவள் கேட்க, அக்னி அவளையே தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
நேஹா “சரி வா வீட்டுக்கு போலாம்” என்று திரும்ப, அக்னி அவள் கையை பிடித்தான்.
நேஹா திரும்பி என்னவென்று பார்க்க, அக்னி அவளிடம் ஒரு சாக்லேட்டை நீட்ட, அவளும் புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள்.

Advertisement